சகித்தவர்கள்...

30 Aug 2011

மதிப்பிற்குரிய மணித்துளிகள்...வேர்க்கடல! ரெண்டு ரூவா வேர்க்கடல!
ரயில்வே டைம்டேபிள் பதினஞ்சு ரூபா சார்!
பத்தே ரூபாயில் ஒரே வாரத்துல  ஹிந்தி சரளமா பேசலாம்!
சப்போட்டா! தேன்ருசி சப்போட்டா..!
ஐயா! கொழந்த சாப்புட்டு மூணு நாளாச்சு ஐயா!
இருபத்திஆறு ஊசி கொண்ட பாக்கெட் வெறும் அஞ்சு ரூபா சார்!
ஜிலுஜிலுப்பான வாட்டர் பாக்கெட்டெல்லாம் ஒரு ரூவா!
சென்னை,தமிழ்நாடு மேப் பத்து ரூபா சார்!
என சில குடும்பங்கள் வாழ்கின்றன-ஓட்டுனரின்
அந்த தேனீர் இடைவேளையில் ...

27 Aug 2011

தனிமை
காவி;
விஷம்;
மது;
குரூரம்;
இரத்தம்;
கடவுள்;
இவைகளுக்குள் யுத்தம்
அவள் விட்டு சென்ற இடத்தை நிரப்ப!

வெட்கமெனும் கண்ணாடி!
உன் தோழியிடம் சொல்லி வைத்தேன்
சிவப்பு நிறம் எனக்கு விருப்பமென!
பொய்க்கவில்லை போய்சேரும் தூது உன்னிடம்
என்ற நம்பிக்கை மட்டும்!

விசித்திரமாய் சில வருடங்கள்
அன்றிரவு தொலைந்து செல்ல!
பிரசவ வலியினும் மோசமானது
காதலின் காத்திருப்புகள்!

அப்பாடா! உதித்து தொலைந்தது
சூரியன் ஒரு வழியாய்!
நிரம்பி கிடந்த வகுப்பறையில்
வெற்றிடமாய் உனதிருக்கை!

ஒரு தனி நடனம் அரங்கேறிக்கொண்டிருந்தது
பதற்றத்தை மறைக்க தெரியாத என் கால்களில்!
உனக்கு முன்பே தூக்கி வரமுடிந்தது
உன் மல்லிகை வாசத்தை தென்றலால் மட்டும்!

இரவில் தூக்கத்தை வெறுத்த கண்கள்
இமைப்பதையும் நிறுத்திக்கொண்டது அப்போது!
கடந்து சென்றாய் குறும்பாய் முறைத்து
கருப்பு தாவணியொன்றில்!!!

           மரபை மீறி
           ஒரு  தேவதை
           கருப்பு உடையில்!!!

உன் குறும்பின் குறிப்பறிந்த
என் அச்சங்கள் வெட்கி ஒளிந்துகொண்டன!!
வைத்திருந்த கடிதமொன்றை நீட்ட
அவசரமாய் பற்றி மறைத்துவைத்தாய்!

பதற்றம் குறைத்து பிரித்து பார்த்து
முகம் புதைத்தாய் வெட்கத்தில்
கடிதமாகிய வெருந்தாளில்!!!

           மரபை மீறி
           காதலுக்கு
           ஒரு மொட்டை கடிதம்!!!

குறும்பாய் மறைத்த உன் காதலை
வெளிப்படுத்தி கொன்றது
எனை உன் வெட்கம்!!!


23 Aug 2011

திரும்பி பார்க்கிறேன்

நாட்கள் பதினேழு கொடுக்க தயங்கிய முதல் கடிதம்;
தோழியோடு பேசியபோது கோபமாய் முறைத்த செல்ல கண்கள்:
எனக்கு விருப்பமென நீ அதிகம் உடுத்தும் சிவப்பு சுடிதார்;
உன் கூந்தலால் மணம் பெறும் அந்த மல்லிகை தொடர்;
அடிக்கடி குறும்பாய் சுழிக்கும் அந்த மலர் இதழ்கள்;
கடற்கரையில் கட்டி இடித்த மணற்கோயில்;
மின்சார ரயிலில் கைக்கோர்த்த ஒற்றை தாங்கி ;
கோயில்களில் தலைவகுட்டில் வைத்துகொள்ளும் குங்குமம்;
சுற்றுலா பேருந்தில் தந்த எதிர்பாரா முத்தம்;
இன்பங்களில் கட்டி அணைத்த குழந்தை தனம்;
இன்னல்களில் தோள்கொடுத்த தாய்ப்பாசம்-என
இறந்த காலத்தில் அமைக்கப்பெற்ற சொற்றொடர்கள்
மறைக்க முடியாமல் தவிக்கிறது
நம் இறந்துபோன காதலை...