சகித்தவர்கள்...

27 Aug 2011

வெட்கமெனும் கண்ணாடி!
உன் தோழியிடம் சொல்லி வைத்தேன்
சிவப்பு நிறம் எனக்கு விருப்பமென!
பொய்க்கவில்லை போய்சேரும் தூது உன்னிடம்
என்ற நம்பிக்கை மட்டும்!

விசித்திரமாய் சில வருடங்கள்
அன்றிரவு தொலைந்து செல்ல!
பிரசவ வலியினும் மோசமானது
காதலின் காத்திருப்புகள்!

அப்பாடா! உதித்து தொலைந்தது
சூரியன் ஒரு வழியாய்!
நிரம்பி கிடந்த வகுப்பறையில்
வெற்றிடமாய் உனதிருக்கை!

ஒரு தனி நடனம் அரங்கேறிக்கொண்டிருந்தது
பதற்றத்தை மறைக்க தெரியாத என் கால்களில்!
உனக்கு முன்பே தூக்கி வரமுடிந்தது
உன் மல்லிகை வாசத்தை தென்றலால் மட்டும்!

இரவில் தூக்கத்தை வெறுத்த கண்கள்
இமைப்பதையும் நிறுத்திக்கொண்டது அப்போது!
கடந்து சென்றாய் குறும்பாய் முறைத்து
கருப்பு தாவணியொன்றில்!!!

           மரபை மீறி
           ஒரு  தேவதை
           கருப்பு உடையில்!!!

உன் குறும்பின் குறிப்பறிந்த
என் அச்சங்கள் வெட்கி ஒளிந்துகொண்டன!!
வைத்திருந்த கடிதமொன்றை நீட்ட
அவசரமாய் பற்றி மறைத்துவைத்தாய்!

பதற்றம் குறைத்து பிரித்து பார்த்து
முகம் புதைத்தாய் வெட்கத்தில்
கடிதமாகிய வெருந்தாளில்!!!

           மரபை மீறி
           காதலுக்கு
           ஒரு மொட்டை கடிதம்!!!

குறும்பாய் மறைத்த உன் காதலை
வெளிப்படுத்தி கொன்றது
எனை உன் வெட்கம்!!!


9 comments:

சத்தியசீலன் said...

மரபை மீறி
ஒரு தேவதை
கருப்பு உடையில்!!!

Fantastic lines !

மயிலன் said...

நன்றி தோழா!

RevathiRajkumar said...

Very Nice :)

மயிலன் said...

காட்சியைக் கவியாக்கும் முயற்சி...நன்றி :)

thaenmozhi said...

muyarchiyum arumai.. varaipadathil, marabu meeraamal, umaku piditha 'sivapu' thaavaniyil amarnthirukum devathaiyum arumai..!

மயிலன் said...

:)வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி தோழி..

Shudha Ramesh said...

beautiful...

asha said...

best literary portrayal sir!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர், வணக்கம். மிகவும் அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

கீழே உள்ள இணைப்புக்கு தயவுசெய்து வருகை தாருங்கள். தங்களுக்கு ஓர் ஆச்சர்யம் அங்கு காத்துள்ளது:

http://gopu1949.blogspot.in/2015/07/34.html

அன்புடன் VGK