சகித்தவர்கள்...

6 Oct 2011

திகட்ட திகட்ட-காதல்தாவணியின் ஒற்றை கீற்று 
மறைக்க தவறிய உன் இடையைப் 
பார்த்ததும் - அப்போதே எனக்கு 
பரிதாபம் தொற்றிக்கொண்டது...நம் குழந்தை மீது !
வழுக்காமல் எப்படி அதில் அமரப்போகிறது?

------------------------------------------------------------------------------------------

கோவில் வாசலில் விட்டுவந்த என் காலணிகள்
திரும்பிவந்து பார்க்கும்போது
உன்னவைகளோடு பின்னிக்கிடந்தன !
பத்திரமாய் இதயத்தில் இருக்கும் காதலை 
எப்படி நம் உள்ளங்கால் வழி 
உறிந்திருக்க முடிந்தது அவைகளால்?

--------------------------------------------------------------------------------------------

நேற்றுதான் படித்தேன்-
தாய்மை அடைந்ததும் 
பெண்கள் மேலும் அழகடைவார்களென்று!
படித்த தருணம் முதல் என்னை 
ஒரு ஓவியனாய் உணர்கிறேன்!

---------------------------------------------------------------------------------------------

கொடியில் காய்ந்து கொண்டிருந்த உன் தாவணி
மதில் தாண்டி பறந்து என் வீட்டில் விழுந்ததும்
எடுக்க முற்பட்டபோது முடியவில்லை!
அது சரி! அதற்குள் உன் அழகின் எடையும்  
ஒட்டிக்கொண்டு தானே திரிகிறது!

---------------------------------------------------------------------------------------------

உன்னை கால் கடுக்க சுற்றிவரும் நானே 
புத்துணர்ச்சியுடன் அலையும் போது 
நீ நித்தமும் சுற்றிவரும் 
உங்கள் வீட்டு துளசி மாடத்திற்கு 
எதற்கு தேவையில்லாமல் தண்ணீர் ஊற்றுகிறீர்கள்?

----------------------------------------------------------------------------------------------

ஏதாவது ஒரு பொருளைக் காட்டி 
'அழகா இருக்கா?'-என்று கேட்கும் நண்பர்களிடம் 
'இல்லை' என யோசிக்காமல் சொல்லிவிடுகிறேன்..
அழகு என்பதன் அர்த்தம் நீ என்று 
என்னையே கேட்காமல் 
பொருத்திக்கொண்டதுபோலும் 
என் மன அகராதி....

------------------------------------------------------------------------------------------------

என் வரிகளின் வழியே 
என் நண்பர்களும் 
உன் அழகை இரசிக்க நேரிடுமென்பதால் 
இங்கே இப்பதிவிற்கு 
கட்டாய முற்றுப்புள்ளி வைக்கிறேன்...
17 comments:

thaenmozhi said...

adutha jenmathil naanum oru paiyana porakanum..

மயிலன் said...

அச்சச்சோ...வேண்டாம் தோழி..இது அழகிகள் நடமாடும் பகுதி...ஆபத்துகள் அதிகம்...:):)

thaenmozhi said...

antha thaavaniyil irukum ungalin ennaval, ungal kavithaigaluku pathil koora vendumam.. aval thaan vetkathileye mooozhgi mutheduthaval aayitre, so thozhi ennai sollavitu, vambil maati vituvitaal.. solgiren kelungal.. antha thaavaniyai uduthum pothu,muzhuvathum maraithum vidamal,alavuku athigamai therinthum vidamal kattuvatharkul nan patta paadu, pennaga piranthal mattume unaku puriyum.. kaalanigalai pinnikolla vitaalavathu nee purinthu kolvaai endru ninaithen.. neeyo, nan maramandai enbathu unmai, unmaiyai thavira verondrum illai, endru sollamal sollivittai.. nee varaintha oviyam,indru uyir petru ennidam vinavukindrathu, appa ipalam oviyam varaivthilaiya ma endru.. naan thaavaniyai thoothu vitene, nee pathiluku oru kaikutaiyavathu anupinyaa.. ada makku, naan thulasi maadathai sutruvathe, nee ennai sutruvathai niruthi vida kudaathenbatharku than.. verennena arthangal vaithirukirai unathu agaraathiyil.. kuzhanthaiyai killi vituvittu, ipothu thottilaiyum aata vanthu vittaram.. vantha velai mudinthuvitathu, sendru varugiren..

மயிலன் said...

கவிதையாய் ஒரு கருத்து பகிர்தல்...:) ஆங்காங்கே மக்கு,மரமண்டை என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள்...:) கவிதையை உள்வாங்கி இரசித்தமைக்கும் என்னவளின் குரலாய் பதிலுரைத்தமைக்கும் மிக்க நன்றி தோழி...:)

thaenmozhi said...

adai mozhigaluku varunthugiren..:) enake uriya mozhi nadaigal avai.. aangaange eti parthu vitana.. pogatum.. avaigalum thamizhin pirathinithigal thaane..

மயிலன் said...

இது உங்களின் குரலில்லை...அவளது என்பதால் அவை ஆனந்த வசைகளே...:)

thaenmozhi said...

koduthu vaithaval thaan aval..(karuguginra vaasam vanthal,atharku naan porupalla..;)...)

மயிலன் said...

இல்லாத ஒருவளைக் கண்டு வயிற்றெரிச்சல் கொள்ளவைக்கவல்ல வன்மை தமிழ்மொழிக்கே..:)

NHTG said...

EKSI

thaenmozhi said...

aamam aamam.. illatha oruvalukaga, ipadi uyire karainthu vidum alavirku, ungalai urugacheithirukum thamizh mozhiyin vallamaiku eedu inai undaa..?!!!:)

மயிலன் said...

:):)

டாக்டர்.அ.முருகன் said...

அன்பரே,காதலை அனுபவித்து எழுதியிருப்பது தெரிகிறது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அற்புதமான காதல் கவிதைகள்...

என்னைவிட அழகாக எழுதியிருக்கிறீர்கள்..
ஒவ்வொன்றிலும் காதல் காதல் மட்டுமே குடிக்கொண்டிருக்கிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடர்ந்து தங்கள் தளத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்...

அனைவருடைய பதிவையும் வாசித்து கருத்திடுங்கள்...

அப்போது தாங்களும் கண்டுக்கொள்ளப்படுவீர்..

அழகிய படைப்புகள்
தொடர்ந்து எழுதுங்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் 10 ல் இணைத்திருக்கிறேன்..

தமிழ்மணத்திலும் கூடிசீக்கிறத்தில் இணைத்துவிடுங்கள் வாசகர்கள் கண்டிப்பாக அதிகரிப்பார்கள்..

மயிலன் said...

அழைப்பை ஏற்றமைக்கு நன்றி நண்பரே...
பாராட்டு மிகை என்றே நினைக்கிறன்...எனினும் மிக்க நன்றி...
தமிழ்மணத்தில் இணைத்தால் 'புதிய இடுகைகள் ஏதும் காணப்படவில்லை' என்றே சொல்கிறது...
தங்களின் கருத்து பகிர்தலுக்கும்,தலத்தில் இணைந்தமைக்கும் கனிவான நன்றிகள்...

இந்துமதி said...

kavithai matuminri karuthukalaiyum porumaiyodu padika thonukirathu sila nanbarkalathu karuthukkalum, thangalathu pathilkalum... :)