சகித்தவர்கள்...

30 Nov 2011

யதேச்சையான எழுத்துகள் #1அன்பிற்குரிய விருப்பதாரர்களே..

     கடந்த சில வாரங்களாய், நீண்ட நாட்களுக்கு முன் எழுத விரும்பிய தொகுப்பு கட்டுரைகள் எழுத தொடங்கவேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி என்னை  உந்த தொடங்கிவிட்டது.. எனவே 'சரி..முயற்சி பண்ணிப் பாப்போம்' என்று பேனாவை எடுத்துவிட்டேன்.. இதைத்தொடர்ந்து, மாதம் இருமுறை தொகுப்பு கட்டுரைகளுக்கான எனது இடுகை இதே தலைப்பில் மயிலிறகில் பதிவு செய்யப்படும்.. இவ்வித இடுகை எழுதமுனைவதில் பதிவுலக நண்பர் பிரபாகரன் அவரது தொடர்பதிவான 'பிரபா ஒயின் ஷாப் ' மூலம் (அவருக்கே தெரியாமல் ) என்னை அதிகம் பாதித்திருக்கிறார் என்பதை இவ்விடம் தெரிவித்துக்கொள்கிறேன்..இதுவரை என் பதிவுகளை சளைக்காமல் சகித்துக்கொண்டவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டி இங்கே சமர்ப்பிக்கிறேன்..

   #  பேராசிரியர் ஒருவருக்கு அறுவை சிகிச்சையில் துணை புரிய அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்..கொஞ்சம் மேலும் கீழும் பார்த்த ஊழியர் ஒருவர்.."யார பாக்கணும் பாஸ்..?", என்றதும் வந்த வேலையை சொன்னேன்..அதன் பின் அவரின் பதில்களில் 'பாஸ்' இடத்தில் நுழைந்துகொண்ட 'சார்'-இல் அவ்வளவாக உண்மை இல்லை..சரியாக நினைவிருக்கும் பட்சத்தில் சுமார் 18 வருடங்களுக்கு முன், அதே மருத்துவமனையில் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் வேலை, அப்போது அவ்விடத்தில் இருந்த படிக்கட்டில் ஒரு சிறுவனாய் விளையாடிக்கொண்டிருந்த ஞாபகம் வந்துவிட்டது..அந்த கட்டமைப்பு இப்போது நவீனமயமாக்கப்பட்டு இடையே ஒரு லிஃப்ட் வேறு செருகப்பட்டிருந்தது.. உடனே அம்மாவை  கைப்பேசியில் அழைத்து அங்கே நின்று கொண்டிருப்பதை சொன்னேன்... அவர் குரலில் ஒரு நெகிழ்ச்சி தெரியத்தான் செய்தது.. பேசிக்கொண்டே படியேறும் போது அங்கே ஒரு ஆறு வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான்...எதிரே திரியும் அந்த சிறுவனும்,காதில் கேட்கும் அம்மாவின் குரலும் என் கண்களை ஈரமாக்க தவறவில்லை...ஏனென்று யோசிப்பதற்கெல்லாம் அப்போது நேரமும் இல்லை...

   #  சென்னையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் வாரம் ஒருமுறையேனும்  பத்து ரூபாய்க்கு முன் வரிசை டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதில் "சத்யம் ல பத்து ரூபாய்க்கு பாத்தோம்ல..." என்ற விதத்தில் ஒரு தனி பெருமை.. (இடைவேளையில் பாப்கார்ன், black forest சாப்பிடும் செலவில் மற்ற திரையரங்குகளில் இரண்டு படங்கள் பார்த்துவிடலாம் )... இருந்தாலும் நண்பர்கள் கூடி அடித்துபிடித்து அந்த டிக்கெட்டை வாங்கிவிடுவதில் பண்ணையார் மகளுக்காக காளையை அடக்கிய வெற்றிக்களிப்பு ஒன்று சொட்டுவிடும்..ஆனால் இன்றோ கொசுவும் மூட்டைப்பூச்சியும் இடைவிடாது கொஞ்சி தீர்க்கும் தஞ்சை திரையரங்குகளில்,கட்டம் போட்ட கைலியை மடித்து கட்டிக்கொண்டு, அக்குளில் ஒரு தோல்ப்பையை வைத்துக்கொண்டு, "ஏழாம் அறிவு 200 ...வேலாயுதம் 150 " என்று கூவிக்கொண்டிருப்பவனிடம், ஏதும் பேசாமல் பொத்திக்கொண்டு டிக்கெட்டை வாங்கி செல்கிறேன்...( # டீசென்சி )

  #  இரசித்த புகைப்படம்:


தெய்வத்திருமகள் 

#  இரசித்த கவிதை :

facebook தளத்தில் தோழி திவ்யா என்பவர் பகிர்திருந்த மிக எளிமையான யதார்த்தமான வரிகள்..


பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி…
ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை
மதுவிலோ போதையிலோ..
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை
மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில்...
இவள் சோகத்தை மறந்ததில்லை
கானா மெட்டுக்கள் பாடி..
இவள் பழி சுமத்தியதில்லை
ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று..
இவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை..
இவளுக்கு தெரிந்தது, முடிந்தது,
அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தல்” மட்டுமே...!! 


#  இரசித்த இடுகை :ஐயா இரா.எட்வின் அவர்களின் அழுத்தமான பதிவுகளில் ஒன்று எனினும் இது அவரது நடையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதாய் தெரிந்தது.. நிகழ்கால அரசியலை ஒரு புனைவு அரசனை வைத்து நேர்த்தியாக சாடியிருந்தார்...கொஞ்சம் பொறாமைப்பட வைத்த பதிவு என்றே சொல்ல வேண்டும்...

( பின்குறிப்பு :  முதல் முயற்சி என்பதால் எட்டிப்பார்க்கும் அனைவரும் கருத்து சொல்லிவிட்டு செல்லுமாறு கட்டாயப்படுத்த படுகிறார்கள்..)
23 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் உங்கள் புது முயற்சிக்கு...
அனைத்தும் கலக்கல்..
உங்கள் டேம்ப்ல்லேட்டை மாற்றுவது குறித்து சிந்திப்பீர்களா? குறிப்பாக வெளிர் நிறமாய்...Just a random thought..-:)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Really super collections . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Your writing style super . . Continue . .

மயிலன் said...

இன்னொரு முக்கிய குறிப்பு...கடைசியில் எனது ஹைக்கூ-வில் இணையத்திற்கும் குட்டி பாப்பா 'தல' வீட்டு இளவரசி...அனோஷ்கா...:)

மயிலன் said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ரெவெரி...
டெம்ப்ளேட் மாற்றி ஒரு வாரம்தான் ஆகின்றது..ஓரிரு வாரங்கள் வைத்துவிட்டு மாற்றிக்கொள்கிறேனே....அறிவுறுத்தலுக்கு நன்றி...

மயிலன் said...

என் ராஜபாட்டை"- ராஜா said...
#Your writing style super . . Continue #.

நன்றி இராஜா 'சார்'...:)

Visu said...

"எதிரே திரியும் அந்த சிறுவனும்,காதில் கேட்கும் அம்மாவின் குரலும் என் கண்களை ஈரமாக்க தவறவில்லை."

" இருந்தாலும் நண்பர்கள் கூடி அடித்துபிடித்து அந்த டிக்கெட்டை வாங்கிவிடுவதில் பண்ணையார் மகளுக்காக காளையை அடக்கிய வெற்றிக்களிப்பு"

Tharumaru da!! :)

PS : soon will install app to comment in tamil!

'royal' LAWYER said...

SUPER WORK SIR...SRY....SUPER WORK BOSS...:)

thaenmozhi said...

*மயிலு.. மயிலு.. ஆத்தா ஆடு வளக்கல.. கோழி வளக்கல.. ஆனா ஒண்ணே ஒண்ணு வளத்தாலும் “ஒஸ்தி”யா வளத்திருக்கு...!!!
*மயில் நம் தேசிய பறவை என்று சொல்லிக்கொள்வதை விட, நான் மயிலிறகின் தொடர் வாசகி என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சியும்,பெருமிதமும்,கர்வமும் கொள்கிறேன்..!!!
*முயற்சி, இரசனைகள் இரண்டுமே அழகு.. விடைபெறுகிறேன், இரகசிய நன்றிகளோடு...!! 

ANANDKALAI said...

good work mayil..keep it up..

dr sinduja said...

what else to comment , simply superb as always doctor....

மயிலன் said...

@visu:

நன்றி நண்பா...
விரைவில் ஏன் வலைப்பூவிலேயே அவ்வசதியை நிறுவுகிறேன்...

மயிலன் said...

@ thaenmozhi:

தொடர் பின்னூட்டங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி தோழி...

மயிலன் said...

@ anand kalai:

வலைப்பூவில் இணைந்துள்ளீரென அறிகிறேன்..மிக்க மகிழ்ச்சி..

மயிலன் said...

@ sindhuja, 'royal' lawyer...

மிக்க நன்றி நண்பர்களே...

இரா.எட்வின் said...

அன்புத் தோழர்.

முதலில் அய்யா வேண்டாம். எட்வின் போதுமானது.

வலை கட்டமைப்பு அருமை. மருத்துவ மனை நிகழ்வு நெகிழ்ச்சி.

எங்கோ மாறிப் போகிறேன் பாருங்கள். ஆமாம் யாரந்த குட்டிப் பொண்ணு.அள்ளிட்டு போயிடலாம் போல இருக்கு.

என்னைப் பற்ரியது மிகை மதிப்பீடுதான் எனினும் நறிகள். பிந்தொடர்ந்துவிடுகிறேன்

இரா.எட்வின் said...

கவனக் குறைவால் சில எழுத்துப் பிழைகள். நண்பர்கள் தயவாய் மன்னிக்க வேண்டும்.

ஹ ர ணி said...

அன்புள்ள மயிலன்...

வாழ்த்துக்கள். நன்றாகத் தொடங்கியிருக்கிறீர்கள். மனதில் பட்டதையெலலாம் சிறகு கொண்டு விரித்து பறக்கலாம். காமமறியா என்பதுதான் சரி.. காமமரியா என்பது அல்ல. இது சிறுபிழைதான்.. தவறில்லை. தாங்கள் சிறுவனாய் உலவிய மருத்துவமனையில் தாங்கள் மருத்துவராய் செல்லும்போது இன்னொரு சிறுவனையும் மருத்துவனாய் பார்த்ததும் அதை அம்மாவிடம் பகிர்ந்ததும் நெகிழ்வாக இருந்தது. மருத்துவத்தில் மனிதநேயத்தைப் பின்பற்றுங்கள்.

எழுதுங்கள். தொடர்ந்து வருவேன். வாசிப்பேன்.

மயிலன் said...

இரா.எட்வின் said...
# என்னைப் பற்ரியது மிகை மதிப்பீடுதான் #

மிகையொன்றுமில்லை ஐயா..தங்களின் 'அருகம்புல்லே ஆயினும்' கட்டுரையை எப்படியும் ஒரு பதினைந்து முறையாவது வாசித்திருப்பேன்...
வருகைக்கு நன்றி ஐயா..(உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் அப்படிதான் கூப்பிடுவேன்)
நீங்கள் ஏன் வலைப்பூவைப் பின்தொடர்வது எனக்கு மகிழ்ச்சி கலந்த பொறுப்பை அளித்துள்ளது...மிக்க நன்றி...

மயிலன் said...

ஹ ர ணி said

# காமமறியா என்பதுதான் சரி.. காமமரியா என்பது அல்ல #

தவறைத் திருத்திவிட்டேன் ஐயா..

# மருத்துவத்தில் மனிதநேயத்தைப் பின்பற்றுங்கள். #

நிச்சயம் என்னால் முடிந்த வரை ஐயா..

# எழுதுங்கள். தொடர்ந்து வருவேன். வாசிப்பேன் #

தங்களின் வருகையில் பேருவகை...மிக்க நன்றி...:)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் ரசணை மிகவும் அமர்களப்படுத்துகிறது...

dushi said...

good keep it up.......

மயிலன் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
#தங்களின் ரசணை மிகவும் அமர்களப்படுத்துகிறது.#

நன்றி தோழரே...