சகித்தவர்கள்...

13 Nov 2011

எத்தனை கண்ணீரடி தோழி?

புது பென்சில் தொலைந்தபோதும்
விடுமுறை கழித்து பள்ளி செல்லும்போதும்
கண்ணாடி வளையலன்று உடைந்தபோதும்
யாரேனும் பொய்யாய் நீ அழகில்லை எனும்போதும்
அமுதா டீச்சர் அதட்டியபோதும்
தொண்டையில் மீன் முள் சிக்கியபோதும்
விளையாட்டில் நானுனை ஏமாற்றும்போதும்
மதிப்பெண் கொஞ்சமாய் குறைந்தபோதும்
மிதிவண்டி பழக காயம் கண்டபோதும்
பள்ளியை விடுத்து கல்லூரி நுழைந்தபோதும்
பிறந்தநாளுக்கு முதல் வாழ்த்து நான் சொல்லமறந்தபோதும்
நீ கொண்டிருந்த கண்ணீருக்கெல்லாம்
ஆறுதல் சொல்ல எனக்குமட்டுமே முடிந்திருந்தது.!
ஆனால்,உன்
விவாக அழைப்பிதழ் கண்டு
சொல்லாமல் புதைந்த என் 
ஆசையை எண்ணி
எனக்குள் புழுங்கி
விதும்பி நான் நின்றபோது
சொல்லேதும் சொல்லாமல்
அக்கணம்,சிறிதாய் நீ சிந்திய
அதே உனது கண்ணீர்துளியால் 
மட்டுமே எனக்கு ஆறுதல் சொல்லமுடிந்திருந்தது ..!17 comments:

Anonymous said...

nice

Dr.senthil kumar.v said...

en manadil irunthu kangal vaziyaga unnai poomiku anupukiren,endrenum oru nal adu nee sindiya kannirodu sernthu, aruviyai, mazaiyai,saralai,serthiduvom....

Anonymous said...

Nice mayilan:) - laya akka

Anonymous said...

கண்ணோரம் ஈரம் மிச்சம் உள்ள காதலை சொல்லாமல் சொல்லிப்போனதோ...

நல்லாயிருந்தது...

மயிலன் said...

Dr.senthil kumar.v said...
#en manadil irunthu kangal vaziyaga unnai poomiku anupukiren,endrenum oru nal adu nee sindiya kannirodu sernthu, aruviyai, mazaiyai,saralai,serthiduvom...#

அழகாய் ஓர் வாழ்த்து...மிக்க நன்றி அண்ணா..

மயிலன் said...

Anonymous said...
#Nice mayilan:) - laya akka#

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அக்கா...

மயிலன் said...

ரெவெரி said...
#கண்ணோரம் ஈரம் மிச்சம் உள்ள காதலை சொல்லாமல் சொல்லிப்போனதோ...

நல்லாயிருந்தது..#

சொற்கள் பலவின் இடத்தில் ஓர் துளி கண்ணீர்...
வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழரே...

Philosophy Prabhakaran said...

இப்பதான் ஒரு காதல் கவிதைக்கு உஸ்ஸ்ஸ்ஸ் போட்டுட்டு வந்தேன்... மறுபடியுமா...?

மயிலன் said...

இன்னொனுதான் போட்டு தொலைங்களேன்...:)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super kavithai

மயிலன் said...

அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே..

ஷோபனா said...

azhagu..arumai..

அபி said...

ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதேற்சியாக மயிலிறகு விழியில் சிக்கிகொண்டது.
எல்லாமிட்டாயும் இனிக்கும் போது மிட்டாய்கடையில் எந்த மிட்டாய் வாங்குவது என்ன தெரியாமல் விழிக்கும் சிறுவனை போல எந்த பதிவை படிக்கலாம் என்று பரிதவிகிறது மனது. படைப்புகள் யாவும் அருமை வாழ்த்துக்கள்

மயிலன் said...

மிக்க நன்றி அபி...வருகைக்கும் வாழ்த்திற்கும்...:)

மயிலன் said...

ஷோபனா said...
#azhagu..arumai..#

நன்றி ஷோபனா...:)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Hi send your contact number to my mail rrajja.mlr@gmail.com

Anguraj Chelladurai said...

அழகு