சகித்தவர்கள்...

19 Nov 2011

தேவதை உண்டு பூமியில்...


முச்சத நாட்கள் கருவில் 
களிப்பாய் சுமந்து 
நிமிடங்கள் சில மூச்சடக்கி 
கிடைத்த முத்தாய் 
எனை  வெளிக்கொணர்ந்து 
கருப்பாய் இருந்தும் 
அழகனாய் அன்று ஆராதித்தாள் !

பிறர் கண்பட்டுவிடாமல் மையிட்டு 
பிஞ்சு பாதம்தனை தரையில் ஊன்றவும் 
கீழே சிந்தாமல் சோறுண்ணவும் 
தானாய் தலைவாரிக் கொள்ளவும் 
மாற்றிக்கொள்ளாமல் காலணி அணியவும் 
வலதுகை கொண்டு எழுதிடவும் 
கைக்குவித்து கடவுளை வணங்கவும் 
அழகு தமிழில் பேசிடவும் 
அக்கறையாய் கற்றுத்தந்து 
கரைசேர்ந்திட என்றோ ஒரு நாள் 
அனுப்பிவைத்தாள்...!

நண்பரென பலர் கொண்டும்  
நாகரீக கவசத்தில் கேசம் களைத்தும் 
சிறிதாய் சில களவு கற்றும்
பொய் நிறைய சொல்லியும்  
நரியென நயவஞ்சக பழியறிந்தும்
நாத்திகனாய் நியாயம் உரைத்தும் 
வன்மையாய் பகை சில வென்றும் 
காமமேறியக் காதலொன்று செய்தும் 
அதனில் ஆறாத காயமொன்றும் கண்டும் 
கற்ற தமிழில் சகிக்காத வார்த்தை பல பேசியும் 
மறக்காமல் மதுவெனும் மருந்துண்டும் 
உலகத்தின் கறையனைத்தும் 
ஒருசேர சேர்த்துவந்து இன்று....

'அம்மா'-என்று கதவைத் தட்டும்போது,
'என்னயா இப்புடி எளச்சுப்போய்ட்ட..."
என்றென் கன்னம் வருடி 
கலங்கிய மறுநொடியில் 
மீண்டும் அவள் மடியினில்
மனதில் வெளுத்த,நிறத்தால் கருத்த 
அதே பழைய குழந்தையாகி போகிறேன்..!

23 comments:

Tamilraja k said...

'அம்மா'-என்று கதவைத் தட்டும்போது,
'என்னயா இப்புடி எளச்சுப்போய்ட்ட..."
என்றென் கன்னம் வருடி
கலங்கிய மறுநொடியில்
மீண்டும் அவள் மடியினில்
மனதில் வெளுத்த,நிறத்தால் கருத்த
அதே பழைய குழந்தையாகி போகிறேன்..!

அருமை நண்பரே...
அம்மா என்றைக்கும் ஒரே உணர்வு இந்த சொல்லில், நேரமிருப்பின் என் வலைத்தளத்தையும் பாருங்கள்
http://tamilraja-thotil.blogspot.com/2007/12/blog-post_12.html

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Thats mother love

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Really super kavithai

அரசன் said...

அன்பின் பாசத்தை மிக மென்மையாய் கவிதை வடிவில் வழங்கிய உங்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

மயிலன் said...

Tamilraja k said...
#அருமை நண்பரே...
அம்மா என்றைக்கும் ஒரே உணர்வு இந்த சொல்லில்...#

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே...
தங்களின் வலைப்பூ முகவரி அளித்தமைக்கும் நன்றி...

மயிலன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
#Really super kavithai#


மிக்க நன்றி இராஜா 'சார்'...:)

மயிலன் said...

அரசன் said...
# அன்பின் பாசத்தை மிக மென்மையாய் கவிதை வடிவில் வழங்கிய உங்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் #

நன்றி நண்பரே-வருகைக்கும் வாழ்த்திற்கும்..

sathish said...

"karuppaai irunthum azhaganaai" - karumai enbathu niram, azhagu enpathu veru panbu. ivvirandaiyum inaithupaarpathu sari endru thonavillai...
"naagarigam"- 'ri' oru kuril ezhuthu...
matrapadi ungal muyarchikku vaazhthukkal..!

suryajeeva said...

//கருப்பாய் இருந்தும்
அழகனாய் அன்று ஆராதித்தாள் !//

கருப்பு தாங்க அழகு...

suryajeeva said...

தாமதமாய் வருகை தந்தமைக்கு என்னையும் மன்னிப்பீராக...
தோழர்..
இந்த மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் மன்னிப்பு கேட்டால் நல்லா இருக்காது...
உங்கள் வலை தளம் அருமை
சொல்லாடல் அருமை..

மயிலன் said...

suryajeeva said...
# கருப்பு தாங்க அழகு...#

அப்டிங்கிறீங்க?...சரி...:)

#தாமதமாய் வருகை தந்தமைக்கு என்னையும் மன்னிப்பீராக...
தோழர்..
இந்த மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் மன்னிப்பு கேட்டால் நல்லா இருக்காது...
உங்கள் வலை தளம் அருமை
சொல்லாடல் அருமை#

நீங்கள் தாமதிக்கவில்லை..ஏனெனில் என் வலைப்பூவின் வயது வெறும் மூன்று மாதங்களே...
வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழரே...

மயிலன் said...

sathish said...
#"karuppaai irunthum azhaganaai" - karumai enbathu niram, azhagu enpathu veru panbu. ivvirandaiyum inaithupaarpathu sari endru thonavillai...
"naagarigam"- 'ri' oru kuril ezhuthu...
matrapadi ungal muyarchikku vaazhthukkal..#

நடைமுறையை எடுத்து சொல்லும் வரிகளே அவை..

நெடில் வடிவும் அச்சொல்லுக்கு சரியே என்று கருதுகிறேன்..

கருத்து பகிர்விற்கு மிக்க நன்றி தோழரே..

shobana said...

no...wrds..romba romba.....azhagu...romba romba pidichuruku.....antha thai methu vaithirukum kadhaluku...kodi kodi vazhthukal....

shobana said...

thodaratum ungal tamil pani...vazzhthukla

மயிலன் said...

shobana said...
#no...wrds..romba romba.....azhagu...romba romba pidichuruku.....antha thai methu vaithirukum kadhaluku...kodi kodi vazhthukal...#

மிக்க நன்றி தோழி..

Anonymous said...

"ammavendru azhaikkatha urillaiye" paatukaparam am witnessing some truly emotions verses on a mom...
thak u so much...

மயிலன் said...

நன்றி தோழர்..
தயங்காமல் பெயரைக் குறிப்பிடுங்கள்...

Dr.C.Madhumitha said...

anna, ellorum sonna madri idu one of the best poetries ..idula ennaku pudichadu edhartham(reality) romba azhaga solirkeenga..unga appa english teacher but u write such a good tamil poem its amazing! not everyone can express their feel so effectively as yours..so u r blessed.i want your kavidaigal more and more..i want to type in tamil but i cant..so,pardon me for that.Thank you for ur sweet poem in the sweetest language!i ll show my mom too..all the best

மயிலன் said...

சரி டா.. :)
யதார்த்தம் என்பது என் கவிதையை விட உன் வாழ்த்தில் அதிகம்...
அதே குழந்தைத்தனம்...:)

ஹ ர ணி said...

மயிலன் உண்மை எப்போதும் வலிமையானது. உங்களின் கவிதையின் உண்மையில் உங்களைக் காண்கிறேன். இருப்பினும் தாயின் பெருமைகூறும் கவிதை என்பதினும் அந்தத் தாயின் மனது கெடுக்காத குழந்தையாய் மீண்டு வந்த தருணம் கசிவானது. வாழ்த்துக்கள்.

மயிலன் said...

மிக்க நன்றி ஐயா...
உங்களின் வாழ்த்து இந்த கவிதையை மறுமுறை என்னை வாசிக்க செய்தது...:)

மயிலன் said...

[box]இந்த வருடத்தில் நான் எழுதியவையில் எனக்கு பிடித்த இடுகை இதுவே..
கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே...[/box]

Anguraj Chelladurai said...

நான் கடந்துவந்த கவிதைகளில் மிக சிறப்பானது இதுவென கூறுவேன்.. வாசிக்கும்போதே கண்களும் நீரை வார்த்ததே.. 'என்னயா இப்புடி எளச்சுப்போய்ட்ட..." ‍இந்த ஒரு வாக்கியம் தான் இக்கவிதையின் உயிர்மூச்சு.. அருமை.. அதைவிட மேலானதொரு வார்த்தையிருப்பின் அதை வைத்துக்கொள்ளவும்..