சகித்தவர்கள்...

10 Nov 2011

மூணாவது மனுஷனும், அந்த நாலு பேரும்..

" வண்ணத்துப்பூச்சி எழிலுடன்
வெள்ளந்தியாய் விளையாடி திரிந்து
ஆண்-பெண் பேதம் மறந்து
வகுப்பறைக்கு நித்தமும்
கலகலப்பூட்டும் உனை
'வாயாடி' என்று சில வருடங்களும்
   
          வாழ்வாய் எனையேற்று
          சாதீயம் பேசி சவுக்கடியளித்த
          தந்தையை உதறி
          அதிகாலை ஐந்தேகால் மணிக்கு
          அவசரமாய் தாலி கொண்டு
          திருமதியான உனை
          'ஓடுகாலி' என்று சில மாதங்களும்


காதலில் திழைத்திருந்தும்
நாமாய் நமக்காக
முதற்கருவை
ஒத்திவைத்திருந்த வேளையில்
தவறாமல் முன்வந்து,உனை
'மலடி' என்று சில வாரங்களும்


விதவிதமாய்
பெயர் வைத்தழைத்த இந்த
'மூணாவது மனுஷங்க'


           குண்டை இருதயத்தில் சுவாசித்து
           இன்னும் நொடிப் பொழுதுகளில்
           இந்த குருதியோட்டமும் நின்று
           மரணித்த  பின்னராவது
           உனை அழைக்கட்டும்
           'ஓர் வீரத்தமிழனின் மனைவி' என்று "


என்று மயிர் கூச்சலுடன்
அவன் உயிர் துறந்த
கணப்பொழுதில்
பலநூறு நூறு மைல்களுக்கு
அப்பால் அவளருகிலிருந்த அந்த
'மூணாவது மனுஷங்க'
வக்கணையாய் சொன்னார்கள்..


           "போருன்னு போயி புருசனும் செத்துட்டான் !
             'வெதவையா' இருக்குற இவள, எனிமே
             நாலு பேரு நாலு விதமா பேசுவாங்களே..."
            

17 comments:

Anonymous said...

பிடியுங்கள் மலர்க்கொத்து...அட்டகாச சிந்தனை....நல்லா வந்திருக்கு மயிலன்...

மயிலன் said...

அதிவேக பின்னூட்டம்..
மிக்க நன்றி ரெவேரி..:)
என்றும் பொக்கிஷமாய் உங்கள் மலர்க்கொத்து...:)

mrithulla vani said...

romba azhaga sollirkeenga..pictures are apt..kudos..
(neenga kajal fan ah? using her pic fr 3rd time??)

மயிலன் said...

நன்றி மிரிதுல்லா..
காஜல்-கவிதை பேசும் அழகு..அதனால்தான் போலும்..:)

Philosophy Prabhakaran said...

யோவ் காஜலுக்கு காப்பி ரைட்ஸ் வாங்கி வச்சிருக்கேன்... யாராவது ஸ்டில் போட்டீங்கன்னா பிரச்சனை ஆயிடும் சொல்லிப்புட்டேன்...

thaenmozhi said...
This comment has been removed by the author.
thaenmozhi said...

mayiliragu sootiya "veerathamizhanin manaivi" endra uyarthiru pattathirku munnaal, intha arrpa pathargalaana moonavathu manithargaludaiya moolaiyattra vimarsanangal yemmaathiram.. avatrin piravi gunam athu,kuraithu vittu pogatum,nammakena vanthichu..

மயிலன் said...

#Philosophy Prabhakaran said...
யோவ் காஜலுக்கு காப்பி ரைட்ஸ் வாங்கி வச்சிருக்கேன்... யாராவது ஸ்டில் போட்டீங்கன்னா பிரச்சனை ஆயிடும் சொல்லிப்புட்டேன்..#

:):) அப்டியா..? நாம courtல மீட் பண்ணுவோம்..

மயிலன் said...

#thaenmozhi said...
mayiliragu sootiya "veerathamizhanin manaivi" endra uyarthiru pattathirku munnaal, intha arrpa pathargalaana moonavathu manithargaludaiya moolaiyattra vimarsanangal yemmaathiram.. avatrin piravi gunam athu,kuraithu vittu pogatum,nammakena vanthichu.#

கருத்து பகிர்தலுக்கு நன்றி தோழி...

Prasanna said...

மயில்! உன்னை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது!
இன்று தான் உன் பதிவுகளை படிக்க நேரம் கிடைத்தது!
அருமை!!
இதை விட சிறப்பான ஒரு சொல் தமிழில் இருந்தால் அதை வைத்துக்கொள்!!

மயிலன் said...

நன்றி அண்ணா..
தங்களிடமிருந்து இந்த வாழ்த்து வராவிடினும் நான் அறிவேன் நீங்கள் என்னை எப்போதும் அக்கறையுடன் கவனித்து கொண்டிருப்பீரென்று..:)

Anonymous said...

Very heartfelt commentary on the ever intrusive indian small town society, at your young age. I related to a lot of things on this verse. And coincidentally, i was just dreading about the' naalu per ' , as im planning a trip to my hometown... Laya ka

Gowripriya said...

good one mayilan ..

மயிலன் said...

Gowripriya said...
#good one mayilan .#

நன்றி அக்கா..

மயிலன் said...

Anonymous said...
#Very heartfelt commentary on the ever intrusive indian small town society, at your young age. I related to a lot of things on this verse. And coincidentally, i was just dreading about the' naalu per ' , as im planning a trip to my hometown... Laya ka#

நாம் நம்புவதும் செய்வதும் சரியே என்ற முடிவிற்கு நம்மை வராமல் பார்த்துக்கொள்ளும் அக்கரைவாதிகள் அவர்கள்...
கருத்து பகிர்விற்கு நன்றி அக்கா..

Dr.ராம் said...

அட்டகாசம் மயிலன்...

மயிலன் said...

நன்றி தோழரே..:)