சகித்தவர்கள்...

4 Dec 2011

யதேச்சையான எழுத்துகள் #2அன்பிற்குரிய விருப்பதாரர்களே...

இதற்கு முந்தைய அகவலுக்கு  ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... இதோ இம்மாதத்திற்கான முதல் வருடல் உங்களுக்காக...(மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்று கிழமைகளில் அகவலாம் என உத்தேசம் ) #  சில நாட்களுக்கு முன்பு, தோழர் ஒருவரின் திருமணத்திற்காக பவானி சென்றுவிட்டு நண்பர்கள் நாங்கள் ஒரு எட்டு பேர் இரு கார்களில் திரும்பிக்கொண்டிருந்தோம்..வழியில் ஒரு லாரி தெருவோரம் நிறுத்தப்பட்டும், சிறு கூட்டமாய் மக்கள் கூடியிருந்தும் தெரியும் காட்சியிலேயே சாலை விபத்து ஒன்று அங்கே நிகழ்ந்திருப்பது விளங்கிற்று..நாங்களும் இறங்கி சென்று பார்த்தோம்..சுமார் ஒரு நூறு மீட்டர் தொலைவிற்கு ஒரு மனித உடல் நசுக்கி தேய்க்கப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது..நாங்கள் பார்க்கும்போது போர்த்தவும்பட்டிருந்தது..இடுப்பளவில் துண்டான கால் ஒன்று போர்த்தப்படாமல் அந்த உடல் நசுங்கி வந்த பாதையில் கிடந்தது.."என்ன வயசு இருக்கும்? எப்டி நடந்தது? லாரி டிரைவர் ஓடிட்டானா?" என பல கேள்விகள் சுற்றியிலும் காதில் விழுந்து கொண்டிருந்தன..திடீரென அங்கிருந்த ஒரு 'போதை'தர்மன் டிராஃபிக் போலீசாக மாறி கூட்டத்தைக் கலைத்துவிட்டு நெடுஞ்சாலை போக்குவரத்தை சீர்படுத்தினார்..காரில் கிளம்பி நாங்களும் திரும்புகையில்,அந்த ஊரின் நகராட்சி எங்களுக்கு நன்றி சொல்லும் முன்னரே வேறு எதையோ பற்றி பேசத்தொடங்கிவிட்டோம்... ( இயந்திர உலகமாம்.. )

# இளநிலை முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த வேலை, ஸ்பென்சரைத் தவிர சென்னையில் அப்போதைக்கு தெரிந்த இடமான இரெங்கநாதன் தெருவில் ஒரு மாலை மேய்ந்து முடித்துவிட்டு நானும் ஒரு நண்பனும் மாம்பலம் இரயில் நிலையத்தை நெருங்கினோம்..அந்த தெருமுனையில் விற்கப் பட்டுக்கொண்டிருந்த கோன்-ஐஸ் கிரீமை பார்த்ததும், "மச்சி மச்சி..ஐஸ் டா" என்று குஷியாகிவிட்டான்..சட்டைப்பையைத் துலாவிவிட்டு, 'இந்த பத்து ரூபாய விட்டா ஒரு ஐநூறு ரூபா நோட்டுதான் இருக்கு..அதப்போய் ticket counter ல கொடுத்தா கழுவி ஊத்திருவான்...சோ வேணாம்டா..கெளம்பலாம்" என்றேன்...'ஹே.. டிக்கெட்டுக்கு என்கிட்ட change இருக்குடா.." என்றான்..சரியென்று ஆளுக்கொன்று வாங்கி சப்பலாகினோம்..கடற்கரை நிறுத்தம் மார்க்கம் செல்லும் இரயிலும் வந்துவிட்டது..."ஓடு ஓடு...சீக்ரம் ஏறு..." என விரையத்தொடங்கினான்.. பதிலுக்கு "மச்சி...டிக்கெட் ரா?" என்றதும்..."எவனும் கேக்க மாட்டான்..fine போட்டா நா கட்டுறேன்..நீ மூடிட்டு ஏறு சீக்ரம்..." என்று ஓடிக்கொண்டே அந்த கோன்-ஐஸையும் சப்பி முடித்திருந்தான்... ( # ப்ளானிங்..)

# இரசித்த புகைப்படம் 


என் மதராசப்பட்டினம்... மெரினா ஞாபகங்கள்..


# இரசித்த கவிதை...

தோழர் இரமணா என்பவர், 'பழுப்பேறிய உப்பரிகை' என்ற தலைப்பில் வரைந்திருந்த வரிகள்...

சில ஆண்டுகட்கு பிறகு
பழைய காதலியின் வீட்டை
கடந்து போனேன் ...

கலையிழந்திருந்தது.
கதவுதாண்டி கேட்கும்
சிரிப்பொலி நிசப்தமாயிருந்தது.

வாசலெங்கும் நிறைந்திருந்தன
காய்ந்து சருகான
வில்வமரத்து இலைகள்..


மிச்சமிருந்தது 
காய்ந்து போன சில 
மாத்துண்டுகள் மட்டுமே.
வாசற் கூண்டில்
காதல் பறவைகள்
காணமல் போயிருந்தன.

எப்போதோ கட்டிய
வாஸ்து மணிமட்டும்
காற்றின் கெஞ்சலுக்கேற்ப
ஒரு சோககானம்
பாட,

ராமர்பானமும் , மல்லிகையும்
பூத்துக்குலுங்கிய
அவள் தோட்டத்தில்
காகிதப் பூக்கள்
கேட்பாரற்று வளர்ந்திருந்தன..

என் சிறு வயது
அரண்மனையின் உப்பரிகையில்
சுண்ணாம்பு சற்று பெயர்ந்து
பழுப்பேறியிருந்தது

அங்கே
பச்சை நிறவுடையில்
தேவதை போல்
அவளுமில்லை...
சற்று மேலே கொடியில் காயும்
அவள் உள்ளாடைகளுமில


#  இரசித்த ஒரு பகிர்வு:

facebook தளத்தில் கண்ட இந்த சென்னை தமிழின் தொன்மை பேசும் அறிவுப்பெட்டகம்...

# இரசித்த இடுகை  

தோழர் 'நாஞ்சில் மனோ'வின் உணர்வுப்பூர்வமான கட்டுரை..மரண தண்டனை 'சரி' என்று நினைப்பவர்களை சில நிமிடங்கள் யோசிக்கவைக்கிறார்..கட்டாயம் இந்த இணைப்பை சொடுக்கி வாசியுங்கள்... மரண தண்டனையின் வரலாறு  o+o=0 தான் 
நன்றியுடன்...சி.மயிலன்

24 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணமா அவ்வ்வ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை கலக்கல்....!!!

----நன்றி பகிர்வுக்கு----

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ் பத்து, இன்ட்லி இணைப்பும் கொடுத்துட்டேன்.

Anonymous said...

மஜாவா இர்க்கு நைனா, அடஹி, அந்த சென்னை தமிழ வாசிச்ச எபெக்ட்....

veedu said...

அருமையான தொகுப்புக்கள்....
சென்னை மொழி...சூப்பரா கீது மாமு..ஹிஹி

திவ்யா @ தேன்மொழி said...

“ஒரு பக்க வாரஇதழ்” படித்ததைப் போன்ற அனுபவம்..:)
டிஸ்கி: நாஞ்சில் மனோ அவர்களின் மொழி நடைக்கு ஒரு “பலே”..:)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super . . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Mano always king . . .

சி.கருணாகரசு said...

அந்த கவிதையை நல்லாயிருந்தது... மிக ரசித்தேன்.

மதுமதி said...

சிறப்பாய் இருந்தது தோழரே..நம் தளத்திற்கும் வாருங்கள்..

மயிலன் said...

MANO நாஞ்சில் மனோ said...

# அடப்பாவிகளா டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணமா அவ்வ்வ்வ்வ்....#

அவனிடம் காசு இல்லை...ஆனாலும் சென்னை புறநகர் இரயில்களில் பரிசோதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு..:)

வருகைக்கு நன்றி...

மயிலன் said...

மொக்கராசு மாமா said...
மஜாவா இர்க்கு நைனா, அடஹி, அந்த சென்னை தமிழ வாசிச்ச எபெக்ட்...

Dr.butti paul அண்ணனையும் வர சொல்லுங்க...:)

மயிலன் said...

veedu said...
#அருமையான தொகுப்புக்கள்..#

நன்றி தோழரே...

மயிலன் said...

திவ்யா @ தேன்மொழி said...
# “ஒரு பக்க வாரஇதழ்” படித்ததைப் போன்ற அனுபவம்..#

:) இதைத் தொடர முயற்சிக்கிறேன் தோழி...

# நாஞ்சில் மனோ அவர்களின் மொழி நடைக்கு ஒரு “பலே”..:#

அவரை நிச்சயம் பின்தொடருங்கள்...
எழிற்பதிவுகள் ஏராளம்...

மயிலன் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி சார்...

மயிலன் said...

சி.கருணாகரசு said...
#அந்த கவிதையை நல்லாயிருந்தது... மிக ரசித்தேன் #

தொடர்ந்து அதே போல் நான் இரசித்த அழகிய கவிதைகளைப் பகிர்கிறேன்...:)

மயிலன் said...

மதுமதி said...
#சிறப்பாய் இருந்தது தோழரே..நம் தளத்திற்கும் வாருங்கள்.#

அழைப்பிற்கு நன்றி தோழரே...

suppuni_+2 said...

hmm...suuuuperrrrrrrrrr...

மயிலன் said...

நன்றி suppuni

GOUSH said...

பகிர்ந்தவை அனைத்தும் நன்றாக உள்ளன .......

Anonymous said...

கவிதை.. ரசித்தேன்...
சென்னை மொழி..கலக்கல் நைனா...
தொடர்ந்து கலக்குங்கள்...

மயிலன் said...

நன்றி தோழரே...வழக்கமாய் முதலில் வருவீர்கள்..தங்களின் வேலைப்பளுவை தங்களின் வலைப்போவில் குறிப்பிட்டிருந்தீர்..

இராஜராஜேஸ்வரி said...

ராமர்பானமும் , மல்லிகையும்
பூத்துக்குலுங்கிய
அவள் தோட்டத்தில்
காகிதப் பூக்கள்
கேட்பாரற்று வளர்ந்திருந்தன..


"மயில் அகவும் நேரம்
ரசிக்கவைத்த பகிர்வுகள் .. பாராட்டுக்கள்..

மயிலன் said...

இராஜராஜேஸ்வரி said....//"மயில் அகவும் நேரம் ரசிக்கவைத்த பகிர்வுகள் .. பாராட்டுக்கள்//நன்றி சகோதரி..:)