சகித்தவர்கள்...

1 Jan 2012

யதேச்சையான எழுத்துகள் #4

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

          வணக்கமும்,புத்தாண்டு வாழ்த்துக்களும்... தொண்ணூறு நண்பர்கள்,முக்கி திணறி ஐம்பது பதிவுகள்,இவைகளால் ஒரு இதமான மனநிறைவு-இவற்றுடன் புத்தாண்டில் காலடி வைக்கிறது மயிலிறகு..முதல் நாளே ஞாயிற்று கிழமையாய் போக கொண்டாட்டகளுக்கு நடுவே அகவவேண்டிய கட்டாயத்தில் முதற்பதிவை எழுதுகிறேன்...

பில்லாக்கு மட்டும் அந்த இடம் எழுதியா வெச்சுருக்கு..:))


# பயிற்சி மருத்துவனாய் பணியேற்ற முதல் நாள் முடநீக்கியல் துறையில் தொடர்ச்சியாக 48 மணி நேர பணி நிர்ணயிக்கப்பட்டது..காலையிலேயே இரயில் விபத்தில் மிக கோரமாக அடிப்பட்டு பல எலும்புகள் நொறுங்கிய நிலையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்..வயது 55 இருக்கும்..ஏற்கனவே சர்க்கரை மற்றும் சிறுநீரக கோளாறு வேறு உண்டாம் அவருக்கு..பேராசியர்கள் பணித்தபடி அவருக்கு வெவ்வேறு இரத்த பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளவேன்டியிருந்தது..மதிய உணவிற்கு நேரம் இல்லாததால் மாலை சில ரொட்டிகள் மட்டும் வயிற்றுக்கு ஈயப்பட்டது..ஆனாலும் முதல்நாள் ஆர்வமிகுதியில் பசி தெரியவில்லை..மணிக்கொரு முறையேனும் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு பணித்தபடி இரத்த பரிசோதனை செய்யும்போதும் அவரின் மனைவி எந்த ஒரு உணர்ச்சியும் முகத்தில் காட்டாமலும் வார்த்தை ஏதும் பேசாமலும் உறைந்து இருந்தார்..சிகிச்சை பலனின்றி மாலை ஏழு மணியளவில் அந்த நோயாளி இறந்துவிட்டார்..அதை முன்பே கணிக்கும் பக்குவம் அப்போதைக்கு இல்லாததால் அங்கிருந்த மருத்துவர்களில் எனக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது..அதுவரை பேசாமல் நின்றிருந்த அவர் மனைவி ஒப்பாரியை இப்படிதான் ஆரம்பித்தார்,"இரத்தத்த உறிஞ்சு உறிஞ்சே இந்த ஆள கொன்னுப்புட்டானே..." என்று அவர் என்னை நோக்கி தலையில் அடித்துக்கொள்ள,காலையில் இருந்து ஒளிந்திருந்த பசி வலியாய் வயிற்றில் தெரிந்தது...

# முதற்மாத சம்பளம் வாங்கிய நாளில் (அட stipendதாங்க..) வீட்டில் உள்ளவர்வர்களுக்கு துணிமணிகள் வாங்கலாம் என்று சென்னையில் உள்ள அந்த  ஆறடுக்கு ஆடம்பர ஆடைமாளிகைக்கு சென்றிருந்தேன்..அம்மாவிற்கு புடவை எடுத்துக்கொண்டிருக்கும் போது சுற்றியிலும் கண்களை மேயவிடும்போதுதான் சில 30-40 வயது பெண்கள் என்னையே "இவனுக்கு இங்க என்ன வேல?" என்ற தொனியில் பார்ப்பது புரிந்தது..புடவையைக் கடந்து அக்காவிற்கு சுடிதார் எடுக்கும் பிரிவிற்கு சென்றால் 18-25 வயது ஃபிகர்கள் மத்தியில் கூனிகுருகி ஒரு பணிப்பெண்ணை அணுகி "காட்டன் சுடிதார் எங்க இருக்கும்?" என்றதற்கு அவள் ஒரு மார்க்கமாய் சிரித்துக்கொண்டு ஒரு அழகான பணிப்பெண்ணை நோக்கி விரலை நீட்டினாள்..ஆச்சர்ய பரிசாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆலோசனை தோழி ஒருவளிடம் கேட்கவேண்டிய கட்டாயம் வேறு ..தொலைப்பேசியில் தோழி சொல்லும் சுடிதார் நுணுக்கங்களை விவரித்தால் அந்த அழகியும்,அருகில் இருந்த சில வாடிக்கையாள ஃபிகர்களும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்..ஒரு வழியாய் சுடிதாரை எடுத்துக்கொண்டு வெளியேறும்போதுதான் உள்ளுணர்வு "தனியாக சென்று ஒரு ஆண்மகன் சுடிதார் வாங்கினால் ,கடிதம் எழுதி வைக்காமல் செய்யும் தற்கொலை போல அதற்கு ஆயிரம் காரணங்கள் உணரப்படும்", என்று ஓர் ஓரமாய் உரைத்தது..


இரசித்த புகைப்படம்:

பள்ளிப்பருவ கோடை விடுமுறை நினைவுகள்..


இரசித்த கவிதை:

தோழர் கே.எஸ்.சுரேஷ் குமார் தன்னுடைய "வீடு" வலைப்பூவில் கசிந்துருகியிருந்த, முதல் காதல் என்ற உணர்ச்சிப்பெருக்கு...

[தோழர் philosophy பிரபாகரன் கவனத்திற்கு: பாஸு,அங்கேயும் காஜல் படம்தான்..ஹி ஹி..(எப்புடியோ கோத்துவிட்டாச்சு..) ]


இரசித்த இடுகை:

மீண்டும் ஐயா இரா.எட்வின் அவர்களின் இடுகைகளில் ஒன்றான .கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி .. சற்றே நீண்ட பதிவு எனினும் ஒவ்வோர் வரியும் ஆணித்தரம்..குறிப்பாக ஐயா அப்துல் கலாம் அவர்களை அவர் தோலுரிக்கும் வரிகளில் அத்தனை நேர்த்தி..கட்டாயம் இணைப்பை சொடுக்கி வாசியுங்கள்..

இரசித்த பகிர்வு:

facebook தளத்தில் தோழர் ஒருவர் பகிர்ந்திருந்த இந்த ஓர் எழிற்படம்..

'தல'மகள்..

கடந்த ஆண்டின் நன்மைகள் இவ்வாண்டிலும் தொடர வாழ்த்துக்கள்..

நன்றியுடன்... சி.மயிலன்

32 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனைக்கு ஒரு சபாஷ்.......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மற்றும் தங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என் தளத்தில் பதிவேறும் அத்தனைக்கவிதைகளும்
குப்பைத்தொட்டியால்
நிராகரிக்கப்பட்ட கவிதைகளே...

எப்பூடி...

மதுமதி said...

உங்கள் அனுபவம்,நீங்கள் ரசித்தவை,கடைசியில் ஒரு கவிதை..அருமை..இவ்வாண்டில் சிறந்து விளங்க வாழ்த்துகள்..


அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

Muruganandan M.K. said...

வாழ்வினில் துன்பங்கள் அகலும்நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்ஆண்டிது பிறக்கிறது 2012.அனைவருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

மயிலன் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
\\என் தளத்தில் பதிவேறும் அத்தனைக்கவிதைகளும்குப்பைத்தொட்டியால் நிராகரிக்கப்பட்ட கவிதைகளே..//
செம்ம செம்ம..கொன்னுட்டீங்க..:)வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

மயிலன் said...

@மதுமதி: நன்றி நண்பரே...தங்களின் தொடர்கதைக்கு அழைத்தமைக்கு நன்றி..bookmark செய்து வைத்துள்ளேன்..கொஞ்சம் நிதானமாக வந்து படிக்கிறேன்..

veedu said...

மருத்துவ சேவையில் இப்படியும் நடக்க வாய்ப்புள்ளதா....அறியாமையே காரணம்!

பனைமரத்துக்கு...கீழே பால் குடித்தாலும் கள் என்று தான் நினைப்பார்கள்.

என் கவிதையை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி!பிலாசபிக்கும் எனக்கும் வாய்க்கா தகறாறு காஜல் விவகாரத்துல...ஹஹ

கவிதை வீதி...
என் தளத்தில் பதிவேறும் அத்தனைக்கவிதைகளும்
குப்பைத்தொட்டியால்
நிராகரிக்கப்பட்ட கவிதைகளே...
உண்மைதாங்க மாம்ஸ்....shift+ delete கொடுத்திருவிங்க போல...ஹஹ
அருமை கூடங்குளம் அனுஉலையை பற்றி வார்த்தைகள் சவுக்காய் வீசுகின்றன அவருடைய கட்டுரை அரசியல் வாதிகளுக்கு உரைக்குமா?

மயிலன் said...

@Muruganandan M.K.: புத்தாண்டில் தளத்தில் இணையும் முதல் நண்பரை வாழ்த்துக்களுடன் அன்புடன் வரவேற்கிறேன்..நன்றி தோழரே..

மயிலன் said...

\\veedu said...மருத்துவ சேவையில் இப்படியும் நடக்க வாய்ப்புள்ளதா....அறியாமையே காரணம்!//

இன்னும் நிறைய இதுபோல் உள்ளது தோழரே..பொருள் தேடும் உலகில் இந்த அறியாமையை அகற்ற கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும்..முயற்சிக்கிறேன்..

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா,

நோயாளி இறந்ததும், சுடிதார் எடுக்கச் சென்றதும் இரு வேறுபட்ட வித்தியாசமான உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது.

வீடு சுரேஷின் கவிதையினை ஏலவே படித்து விட்டேன்.
எட்வின் ஐயாவின் பதிவிற்கும் சென்றேன்.

ரசித்த புகைப் படம் சூப்பராக இருக்கிறது.

சுவையான ஒரு தொகுப்பினைத் தந்திருக்கிறீங்க.

நிரூபன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

பிரேம் குமார் .சி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பில்லா க்கு மட்டும் சொந்தம் அல்ல அவ்விடம் மயில் தோகை அழகு

சீனுவாசன்.கு said...

எப்பா உங்கவிதை(?)யை
விடாம பொறுமையா
படிக்கவா?வேணாவா?

இரா.எட்வின் said...

அன்பின் தோழர்
வணக்கம்.இந்த ஜூன் வந்தால் 50 தொடங்குகிறது.

“இறந்த பின்னே வரும் அமைதி” கூட வசப்படத் தொடங்கிவிட்டது. என்றாலும் உங்களைப் போன்ற இளைய பிள்ளைகளின் துடிப்பும் துள்ளலும் சமூக அக்கறையுமே என் போன்றோரை இயக்கும் சக்தி என்ற வகையில் உங்களுக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

என்னையும் ஒரு பொருட்டென பாவித்து அங்கீகரிக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உங்களது ஜவுளிக்கடை அனுபவம் சிலாகிப்பிற்குரியது.முதல் சம்பளம், அம்மாவுக்கும் சகோதரிக்கும் துணி வாங்கும் பிள்ளை.

அதேவேளை அங்கு தாவி குதூகளிக்கும் மனசு. இந்தக் கலவைதான் எழுத்தில் ஜெயிக்கும்.

உங்கள் முதல் அனுபவம் ஒரு சிறுகதை. அவசியம் எழுதுங்கள். நிச்சயம் உடைசலைத் தரும்.

suryajeeva said...

மரண அவஸ்தை அனுபவத்துடன் புது வருட வரவேற்ப்பா?
வித்தியாசமான பகிர்வு
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

ராஜி said...

அந்த பொறுமைசாலியில் நானும் ஒருத்தி தம்பி

ராஜி said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி

ராஜி said...

சகோதரிக்கு சுடிதார் எடுத்ததெல்லாம் ஓக்கே. இந்த வருடம் “அவங்களுக்கு” சுடிதார் எடுக்க வாழ்த்துக்கள்.

sasikala said...

மிகவும் அருமை

என்றும் இனியவன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மயிலன்

சத்ரியன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘தோகை’மயிலன்.
”ரத்தம் உறிஞ்சி கொன்னுட்டான்” - சிரிச்சிட்டேன் போங்க.

சுடிதார் - அனுபவம் இங்கும் உண்டு.

மற்ற பகிர்தல்களும் அருமை.

மயிலன் said...

@நிரூபன் //நோயாளி இறந்ததும், சுடிதார் எடுக்கச் சென்றதும் இரு வேறுபட்ட வித்தியாசமான உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது.// புத்தாண்டு நாளன்று தளத்தில் இணையும் நண்பர் அவர்களுக்கு நன்றியும் வரவேற்பும் வாழ்த்துக்களும்...

மயிலன் said...

நன்றியும் வாழ்த்துக்களும் ..

suryajeeva ,
பிரேம் குமார்.சி,
சீனுவாசன்,
என்றும் இனியவன்,
sasikala ,
சத்ரியன் ...

மயிலன் said...

இரா.எட்வின் said...
//என்னையும் ஒரு பொருட்டென பாவித்து அங்கீகரிக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.//

பெரிய வார்த்தைகள் ஐயா...

//உங்கள் முதல் அனுபவம் ஒரு சிறுகதை. அவசியம் எழுதுங்கள். நிச்சயம் உடைசலைத் தரும்//

ஏற்கனவே முயற்சித்துள்ளேன் ஐயா..நேரமிருப்பின் வாசியுங்கள்... .மரண அறிவிப்பு ..

மயிலன் said...

ராஜி said...

//சகோதரிக்கு சுடிதார் எடுத்ததெல்லாம் ஓக்கே. இந்த வருடம் “அவங்களுக்கு” சுடிதார் எடுக்க வாழ்த்துக்கள்//

ச்சீ போங்கக்கா..எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது...:))))))))

அரசன் said...

மிக இயல்பாய் கூறிய விதம் அருமை அழகு ...
அந்த ஒப்பாரி சொல்லவே வேண்டாம் .. என்ன கொடுமை அது ..

அப்புறம் அந்த துணிக்கடை அனுபவம் வாழ்வில் மறக்க இயலா நினைவுகளில் ஒன்றாக இருக்கும் ..
அதற்கு நீங்க கூறிய கருத்து கடிதம் இல்லா தற்கொலை கனக்கச்சிதம் நண்பரே ...

இறுதி கவிதை உயிர்த்துளி ...

வாழ்த்துக்கள்

மயிலன் said...

நன்றி தோழரே...

விக்கியுலகம் said...

"கடிதம் எழுதி வைக்காமல் செய்யும் தற்கொலை போல அதற்கு ஆயிரம் காரணங்கள் உணரப்படும்""

>>>>

இதுதான் டாப்பு!~

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

மயிலன் என்ன சுடிதார் அக்காவுக்குதானா....உண்மையா...நம்பலாமா...நான்...அம்மாph no குடுங்க நானே கேட்டுக்றேன்..

ஹ ர ணி said...

அன்புள்ள மயிலன்..

என்ன இப்படி என்மேல் குற்றச்சாட்டு? நான் எனது முந்தைய பதிவிற்குத் தங்களின் ஒரே கருத்துரை இருமுறை வந்திருந்தது அதைத்தான் அழித்தேன். இந்தப் பதிவிற்கான பதில்களை உங்களுக்கான இந்தப் பதிலை எழுதும்போதுதான் பார்க்கிறேன். நான் எந்த கருத்தையும் மதிப்பவன். உடனடியாக தாங்கள் நினைத்த கருத்தை மறுபடியும் அன்புகூர்ந்து எழுதுங்கள். நான் இந்தப் பதிவிற்கான தங்களின் எந்தக் கருத்தையும் அழிக்கவில்லை என உறுதியளிக்கிறேன். தொழில்நுட்பக் காரணமாக ஏதேனும் நிகழ்ந்ததா என்றும தெரியவில்லை. எனவே உடனடியாக உங்கள் கருத்துரையைப் பதியுங்கள். நன்றி.