சகித்தவர்கள்...

3 Dec 2011

மனவாசம்...


இரவில் எனையறியாமல் 
படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டு 
அந்த ஈரத்தில் விழித்தெழுந்து 
தூக்கம் கலையாமல் சிணுங்கி அழுது 
அம்மாவைப் படுத்திய நாட்களின்றும் மறக்கவில்லை...


வீட்டில் வளர்ந்த 
செல்ல நாய்க்குட்டிக்கும்
சொறிகொண்ட தெருநாய்க்கும் 
கொஞ்சல் தழுவல்களில் 
வித்தியாசமேதும் காட்டவில்லை...


மாட்டுச்சாணத்தில் 
தவறிவிழுந்த பந்தை 
அலட்சியமாய் சுவற்றில் தேய்த்து 
கால்சட்டையில் துடைத்துவிட்டு
விளையாட்டைத் தொடரவும் தவறவில்லை..


அதிசயமாய் ஓர் 
அடைமழை பெய்யும்வேலை 
தெருவெனும் சேற்று தொட்டியில் 
மழைநீரும் சாக்கடையும் பிணைந்து கிடக்க 
அதில் நீச்சலிடிக்காமல் விட்டதில்லை...


ஆனால் அன்றெல்லாம் 
எப்போதும் எனக்கு தெரிந்ததில்லை... 


முழுக்கை சட்டை,
முக்கால் அங்குல புன்முறுவல்,
மேதாவித்தனமான மூக்குகண்ணாடி,
தினம் தவறாமல் சவரம் செய்யும் முகம்,
கச்சிதமாய் படிய வாரிய கேசம்...


என மிடுக்காய் திரியும் இன்று 
தனிமையில் இருக்கும்போது 
நான் உணர்ந்துவிடும் 
எனக்குள் உள்ள 
துர்நாற்றம்.... 22 comments:

சம்பத் குமார் said...

//என மிடுக்காய் திரியும் இன்று
தனிமையில் இருக்கும்போது
நான் உணர்ந்துவிடும்
எனக்குள் உள்ள
துர்நாற்றம்.... //

அருமை நண்பா..

சிறுவயதின் நினைவுகளை மீட்டெடுக்கிறது தங்கள் வரிகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என மிடுக்காய் திரியும் இன்று
தனிமையில் இருக்கும்போது
நான் உணர்ந்துவிடும்
எனக்குள் உள்ள
துர்நாற்றம்.... ///

குளிக்காம செண்ட்டு அடிச்சிக்கிட்டா அப்படித்தாண்ணே இருக்கும்.....!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super kavithai

மயிலன் said...

சம்பத் குமார் said...

#சிறுவயதின் நினைவுகளை மீட்டெடுக்கிறது தங்கள் வரிகள்#

உங்கள் வரிகளால் ஒரு நிறைவு...நன்றி...

மயிலன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

# குளிக்காம செண்ட்டு அடிச்சிக்கிட்டா அப்படித்தாண்ணே இருக்கும்.....#

பன்னிகுட்டியண்ணே...
இன்னிக்குதான் வந்தீக...வந்ததுமா...? :)
இந்த சின்னப்பயளையும் மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணே...

மயிலன் said...

நன்றி இராஜா சார்...:)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை படித்து முடிக்கும் போது உடைந்து போகிறேன்...


அத்தனை பேருக்குள்ளும் எது நூர்நாற்றம் என்று அழகுபடுத்தி காட்டியிருக்கிறீர்கள்.

நாரீகம் என்ற போர்வையில் நாம் நம்முடைய பழைய சந்தோஷங்களை இழந்துக் கொண்டிருக்கிறோம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய சிந்தனையுடைய கவிதை வாழ்த்துக்க்ள..

தொடர்ந்து கலக்குங்க மயிலன்..

திவ்யா @ தேன்மொழி said...

எழுத்து வரிகளின் மூலம், மனக்கண் முன்னே காட்சிகளுக்கு உயிரூட்டும் இந்த வித்தையை எனக்கும் சற்று கற்றுக்கொடுங்களேன்..!
ஆனால், துர்நாற்றம் மட்டும் எட்டவில்லை எனக்கு.. மூக்கடைப்பு போலும்..!!:)

மயிலன் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
#கவிதை படித்து முடிக்கும் போது உடைந்து போகிறேன்..#

சில உண்மைகள் கனமானவை...
வாழ்த்திற்கு நன்றி தோழரே...

மயிலன் said...

@ திவ்யா @ தேன்மொழி...

புனைப்பெயரிலிருந்து வெளிவந்திருக்கும் தோழிக்கு வணக்கத்துடன் கூடிய வரவேற்பு...
உங்களின் கவி பின்னூட்டங்கள் அனைத்திற்கும் சில இரசிகர்கள் சேர்ந்துபோனது தவிர்க்க முடியாதது...
மிக்க நன்றி...
தொடர்ந்து பின்பற்றவும்...

சத்தியசீலன் said...

Nice !

சிவகுமாரன் said...

மிகச் சரியாய் சொன்னீர்கள்.
வளர வளரத் தான் வளருகிறது வக்கிரங்கள்.

எனது "வாராதோ அந்த நாட்கள் " படித்தீர்களா?http://www.sivakumarankavithaikal.blogspot.com/2011_05_01_archive.html

MANO நாஞ்சில் மனோ said...

என மிடுக்காய் திரியும் இன்று
தனிமையில் இருக்கும்போது
நான் உணர்ந்துவிடும்
எனக்குள் உள்ள
துர்நாற்றம்....//

எல்லார்க்குள்ளும் இந்த துர்நாற்றம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா, கவிதை அருமை..!!!

மயிலன் said...

சிவகுமாரன் said...

# எனது "வாராதோ அந்த நாட்கள் " படித்தீர்களா#

தற்போதுதான் படித்தேன்..அழகு..:)
அழைப்பிற்கு நன்றி...

மயிலன் said...

MANO நாஞ்சில் மனோ said...

# எல்லார்க்குள்ளும் இந்த துர்நாற்றம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா, கவிதை அருமை..!! #

வருகைக்கு நன்றி நண்பரே...:)

விக்கியுலகம் said...

அட மாப்ள செமையா பின்னிட்டய்யா...நிதர்சனம்!

veedu said...

உண்மையை நிறைய பேர் ஒத்துகிட்டாங்க பார்த்தீர்களா? அதுதான்
கவிதையின் பலம், அந்த பலம் இந்த கவிதைக்கு உண்டு எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்....

மயிலன் said...

விக்கியுலகம் said...
# அட மாப்ள செமையா பின்னிட்டய்யா...நிதர்சனம் #

மயிலிறகில் இணைந்துள்ளீர் என அறிகிறேன்...
மிக்க நன்றி விக்கியாரே...:)

மயிலன் said...

veedu said...

# உண்மையை நிறைய பேர் ஒத்துகிட்டாங்க பார்த்தீர்களா? அதுதான்
கவிதையின் பலம், அந்த பலம் இந்த கவிதைக்கு உண்டு எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்...#

உணர்ச்சிவசப்பட வைத்த பாராட்டுக்களில் ஒன்று...
மிக்க நன்றி தோழரே..வருகைக்கும் வாழ்த்திற்கும் வலைப்பூவில் இணைந்தமைக்கும்...:)

ananthu said...

மயக்கும் கவிதை மனவாசம் ...

சென்னை பித்தன் said...

த.ம.4
ப்ரில்லியண்ட்!