சகித்தவர்கள்...

5 Dec 2011

புரிதலும் புரிதல் நிமித்தமும்...


தறிகெட்டு தலைகுனிய வைத்தபோது,
அப்பா,
"என்ன பாவம் செஞ்சேனோ தெரில..
நீ புள்ளையா பொறக்குறதுக்கு..."

எதிர்வாதம் செய்தபோது,
ஆசிரியை,
"நீயெல்லாம் எப்படித்தான் 
வாழ்க்கைல உருப்படபோறியோ.."

புரிதல் தவறி பிரிந்தபோது,
நண்பன்,
"உன்கூடல்லாம் பழகுனேன்னு
நெனச்சாலே அசிங்கமா இருக்குடா.."

வேண்டாமென்று விலகியபோது,
காதலி,
"ஒரே வார்த்தைல சொல்லனும்ன்னா
நீ ஒரு அரக்கன் டா...ச்சீ...."

மதுவருந்தி பின்னிரவில் வீடு சென்றபோது,
மனைவி,
"உனக்கெல்லாம் எதுக்கு...
கல்யாணம், பொண்டாட்டி, புள்ளையெல்லாம்.."

பள்ளி ஆண்டுவிழாவிற்கு செல்லமறந்தபோது,
மகள்,
"உனக்கு என்மேல அக்கறையே இல்லப்பா..
நீ அப்பாவா இருக்றதே வேஸ்ட்...போப்பா.."

பலமுனை வசைகள் 
அப்போதெல்லாம் 
வேதனையாய் வலித்தாலும் 
என் தனிமை 
அனைத்தையும் புரிந்தறிந்து
ஆமோதிக்கதான் செய்கிறது...! 15 comments:

கோகுல் said...

தனிமை நமக்கான நம்மை எப்போதும் புரிந்து வைத்து தேற்றும் சிறந்த நண்பன்.சில சமயம் ஆபத்தான நண்பனும் கூட.

திவ்யா @ தேன்மொழி said...

தனிமைக் கூட சுகம் தான்
நமக்கு நாமே தந்து கொள்ளும்போது..
மற்றவர்கள் கொடுக்கும் பொழுது தான்
தண்டனையாகிப் போகின்றது..!!

Philosophy Prabhakaran said...

அம்மாவை பத்தி சொல்லவே இல்லை... ஒருவேளை நீங்க தி.மு.கவா...?

மயிலன் said...

@ கோகுல்:ஆம் நண்பரே..:)வலைப்பூவில் இணைந்தமைக்கு நன்றி..

மயிலன் said...

@philosophy prabhakaran:
இப்டியெல்லாம் பேச சொல்லி உனக்கு யாருய்யா சொல்லித்தர்றது...?

மதுமதி said...

பலமுனை வசைகள் அப்போதெல்லாம் வேதனையாய் வலித்தாலும் என் தனிமை அனைத்தையும் புரிந்தறிந்துஆமோதிக்கதான் செய்கிறது...! முடிவு அருமை..நம் தளத்தில்''அடிக்க வர்றாங்க MY LORD''

Rathnavel said...

அருமை.

ஹ ர ணி said...

அன்புள்ள மயில்ன்

எளிமையும் புரிதலும்தான் கவிதைக்கு பலம். எதார்த்தம் மிளிரும் கவிதை. உணர்ந்த மனத்தின் வெளிப்பாட்டில் உன்னதம் தெரிகிறது.
பிழன்று என்பது என்ன சொல்? பிளந்து, பிறழ்ந்து சொற்கள் உண்டு. சரிசெய்துகொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

சீனுவாசன்.கு said...

திருந்தினா சரி!

மயிலன் said...

மதுமதி said...//..நம் தளத்தில்''அடிக்க வர்றாங்க MY LORD'..//

விடுங்க பாஸ்...அவிங்க எப்போவுமே இப்பிடித்தான்..இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா...?...:)

மயிலன் said...

Rathnavel said...//அருமை//

நன்றி தோழரே...

மயிலன் said...

ஹ ர ணி said...//அன்புள்ள மயில்ன்பிழன்று என்பது என்ன சொல்? பிளந்து, பிறழ்ந்து சொற்கள் உண்டு. சரிசெய்துகொள்ளுங்கள். வாழ்த்துக்கள்//

சரி செய்கிறேன் ஐயா..குறிப்பிட்டமைக்கு நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாம் செய்யும் செயல்கள் இப்படி மற்றவரை காயப்படுத்தும் என்று தனியாக யோசிக்காத வரை தெரியாமல் போகிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களிடம் இருந்து ஒரு அழகிய யதார்த்த கவிதை

மயிலன் said...

நன்றி நண்பரே...