சகித்தவர்கள்...

10 Dec 2011

குறும்(பு)படம்..

அன்பிற்குரிய விருப்பதாரர்களே..
பொதுவாக அரசியல் கூட்டங்கள், கட்சி தலைவர் வருகை, திருமணம், பிறந்தநாள் விழா, புதுமனை புகுவிழா, பெரிய ஹீரோக்களின்  திரைப்படம் வெளியாகும் நாள், அம்மனுக்கு கூழ் ஊத்தும் திருவிழா, தனுஷ் பாணியில்..'வளர்மதி வயசுக்கு வந்த நாள்' போன்ற பிரசித்தி பெற்ற திருநாட்களில் தெருவோரங்களில் வரிசையாய் ஃப்ளெக்ஸ்-போர்டுகள் விண்ணைநோக்கி வளர்ந்து நிற்கும்...அதுவும் புதுச்சேரி பக்கம் சென்று வந்தால் 'சூப்பரப்பு' இரகத்தில் நம்மை வியக்க வைப்பார்கள் NR அவர்களின் தொண்டர்கள்..பொதுவாக அதன் அமைப்பாளர்கள் கறுப்புகண்ணாடி மற்றும் கைப்பேசி சகிதமே புகைப்படம் சமர்பித்திருப்பர்...


இந்த கலாச்சாரம் வரவேற்க கூடியதா? இல்லை வெறுத்தொழிக்கப்பட வேண்டியதா என்ற ஆராய்ச்சி கட்டுரை சத்தியமாய் இதுவல்ல.. அவ்வாறு வைக்கப்படும் பேனர்களில் கையாளப்படும் சொல்லாடலை நான் அதிகம் இரசித்திருக்கிறேன்..பெரும்பாலானவை நகைப்புக்குரியவையே..


ஒரு கட்டத்தில் எங்கள் நண்பர்களுள் ஒருவருக்கு திடீரென திருமண ஏற்பாடுகள் அரங்கேறின...செய்தி கேள்விப்பட்டதும் 'நம்மக்கூட சுத்திட்டு இருந்த பயபுள்ளைக்கு கல்யாணமா? நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று எங்களில் கொஞ்சம் பேர் பொங்கியதன் விளைவு...நாங்களும் இந்த வேடிக்கை கலாச்சாரத்தை முதன்முறையாய் விளையாடிபார்த்தோம்...


அந்த விவேக முயற்சி உங்கள் பார்வைக்கு...
கல்லூரியின் பிரதான பகுதியான விடுதி வாயிலில் வைத்துவிட்ட இந்த பேனருக்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து சேட்டை தொடர்ந்து பல்லைக் காட்ட தொடங்கிவிட்டது...


சில மாதங்கள் கழித்து, 'திருமணம் ஆகிவிட்டது' என்றே ஒப்புக்கொள்ள முடியாத நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று அறிந்ததும் 'கடுப்பேத்றார் மை லார்ட்' என்ற வகையில் பெரும் சினங்கொண்டு எழுந்தோம்...அந்த விரக்தியை நாங்கள் வெளிப்படுத்துவதோடு இல்லாமல் 'இவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்த இருக்குங்குற மேட்டர எப்டியாவது எல்லா புள்ளைகளுக்கும் தெரிய வைக்கணும் '  என்று முடிவெடுத்ததும் மறுபடியும் பேனரே துணை..


ஆனாலும் எதிர்பார்த்ததை விட விஷயம் 'தீயா பரவிடுச்சு'... அதுக்கப்புறம் ஒரு புள்ள சீண்டலையே... 'சரி..நடந்தது நடந்துபோச்சு..' என்கிற வகையில் 'பசங்கள மன்னிச்சு ஏத்துகிட்டோம்..'  அவரவர் பழைய மாதிரியே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம்...


பயணம்,சினிமா,கூத்து,கும்மாளம் என்று வருத்தத்திற்கே வேலையில்லாத வாழ்க்கையை வழக்கம் போல் தொடர்ந்துகொண்டிருந்த வேளை..  திடீரென நண்பர்களுள் சிலர் "தம்பி நாங்கெல்லாம் final year ..இதுக்குமேல நாங்க படிக்க ஆரம்பிக்க போறோம்" என்று எங்கள் தலையில் ஒரு குண்டைத் தூக்கி போட்டார்கள்..வெகுண்டு எழுந்த சிங்கங்கள் பகிரங்கமாய் எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்க விழைந்து, வேறு வழியின்றி மறுபடியும் பேனர் கட்டிவிட்டோம்...எப்பூடி...?

இனிமேல் ஏதாவது புதுசா ஒரு காரியம் பண்ணனும்னா பயபுள்ளைகளுக்கு மனசுல ஒரு பயம் இருக்கணும்... ச்சொல்லிப்புட்டேன்...


பின்குறிப்பு -1 : நண்பர்கள் நாங்கள் அந்த கடைக்கு சென்றுவிட்டாலே, flex -டிசைனர் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்...இவ்விடத்தில் அவரின் சகிப்புத்தன்மைக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்...


பின்குறிப்பு -2 : அந்த கடையில் எங்கள் அருகில் படு சீரியசாக விழா காரியங்களுக்காக ஆர்டர் கொடுக்க வந்தவர்கள் கொஞ்சம் வித்தியாசமாய் எங்களைப் பார்த்துக்கொண்டிருப்பர்... அவர்களுக்கு என்ன புரியவா போகிறது..? "எங்க பேனரோ? அவிங்க பேனரோ? ஊரென்னவோ ரெண்டுக்கும் சிரிக்கத்தான் போகுது" என்பது...


37 comments:

மயிலன் said...

[ma][si="5"]கருத்து முக்கியம்[/si] அமைச்சரே [/ma]

மதுமதி said...

குறும்பு படம்தான்..பாவங்க உங்க தோழர்..அனைத்தும் ரசிக்க வைத்தது..
உங்களுக்கும் இதே மாதிரி ஃப்ளெக்ஸ் தானே..

கணேஷ் said...

இப்படில்லாம் கூட ஃப்ளெக்ஸ் வெப்பாங்களா? செம குறும்புதான்...

veedu said...

அரசியல்வாதிக இப்ப உங்க ஏரியாபக்கம்
இப்ப பேனரே வைக்க மாட்டாங்க...ஹஹஹ

stalin wesley said...

படங்கள் கலக்கல்

சம்பத் குமார் said...

வணக்கம் நண்பரே..

உண்மையில் குறும்(பு) படம் தான்

ஆனாலும் இன்றைய அரசியல்வாதிகளின் flex board பார்க்கும் போது உங்களின் ப்ளக்ஸ் கண்டிப்பாய் கல்லூரி கால நினைவுகளை மீட்டெடுக்கும்.

abirami said...

superlike....this reminds me ..my brother n all d galatta he used to do in his engg college...enjoy tc

மயிலன் said...

மதுமதி said...//உங்களுக்கும் இதே மாதிரி ஃப்ளெக்ஸ் தானே.//

அவிங்க சும்மா இருந்தாலும் நீங்க கெளப்பி விட்ருவீக போல..

மயிலன் said...

கணேஷ் said...// செம குறும்புதான்..//

என்ன ரொம்ப புகழாதீங்க...:)

மயிலன் said...

veedu said...//அரசியல்வாதிக இப்ப உங்க ஏரியாபக்கம்இப்ப பேனரே வைக்க மாட்டாங்க//

எனக்கு அரசியல் ஆசையெல்லாம் இல்லைங்க...( நா இத கேக்கவே இல்லையே ன்னு சொல்லிடாதிங்க அண்ணே..)

மயிலன் said...

சம்பத் குமார் said..//ஆனாலும் இன்றைய அரசியல்வாதிகளின் flex board பார்க்கும் போது உங்களின் ப்ளக்ஸ் கண்டிப்பாய் கல்லூரி கால நினைவுகளை மீட்டெடுக்கு//

பின்னொரு காலத்தில் நினைவுகளாய் பேசும் இந்த கேளிக்கைகள்...நன்றி நண்பரே...

மயிலன் said...

stalin wesley said...//படங்கள் கலக்கல்//
abirami said...//superlike..//

நன்றி நண்பர்களே...

! சிவகுமார் ! said...

ஒரே கண்ணாடியை எல்லாரும் போட்டுக்கிட்டு போஸ் குடுத்தது அருமை. 'நாடோடிகள்' பேனர் குழு நீங்கதானா?

Yoga.S.FR said...

வணக்கம்!அந்த மொத போட்டோ ரெண்டு கொழந்தைங்களும் செம கியூட்டு!செம குறும்புதான் உங்களுக்கு!

மயிலன் said...

! சிவகுமார் ! said...//ஒரே கண்ணாடியை எல்லாரும் போட்டுக்கிட்டு போஸ் குடுத்தது அருமை//

கண்டுபுடிச்சுடீகளே... .ஒஸ்தி எஃபெக்ட் முயற்சி பண்ணி பார்தோம் அண்ணே..

மயிலன் said...

Yoga.S.FR said...
//வணக்கம்!அந்த மொத போட்டோ ரெண்டு கொழந்தைங்களும் செம கியூட்டு!செம குறும்புதான் உங்களுக்கு//

அது நா இல்லீங்கோ...

மதுரன் said...

ஹா ஹா.. ஆமா உங்க கல்யாணத்துக்கும் பானர் தானா?

பானர் மூலமாவே காலாய்ச்சிடுறீங்க

மயிலன் said...

நன்றி நண்பரே வருகைக்கும்,வாழ்த்திற்கும் வலைப்பூவில் இணைந்தமைக்கும் ...மிக்க மகிழ்ச்சி...

suryajeeva said...

தீபம் பிளக்ஸ் ஓனர் எங்கிருந்தாலும் வாழ்க

ananthu said...

ஏன் இந்த கொலைவெறி ...? நல்லா இருக்கு ...!

arthi said...

நான் காலேஜ்ல இருந்தப்போ ஏன் அண்ணா இதெல்லாம் பன்னால? எல்லாமே சூப்பர்:)

மயிலன் said...

suryajeeva said...//தீபம் பிளக்ஸ் ஓனர் எங்கிருந்தாலும் வாழ்க//

:):) நம்மள பாத்தாலே அவருக்கு வயித்த கலக்க ஆரம்பிச்சுடும்...

மயிலன் said...

ananthu said...//ஏன் இந்த கொலைவெறி ...? //

ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்.......:):)

சீனுவாசன்.கு said...

தாங்கல!உங்க லொள்ளு!

மயிலன் said...

arthi said...//நான் காலேஜ்ல இருந்தப்போ ஏன் அண்ணா இதெல்லாம் பன்னல?//அததுக்கு ஒரு நேரங்காலம் இருக்குல்லடா...

மயிலன் said...

சீனுவாசன்.கு said...//தாங்கல!உங்க லொள்ளு//

:):) "செய்றோம்..காட்றோம்...தூக்றோம்.."இந்த மாதிரி உசுப்புற நண்பர்கள்தான் இதற்கு காரணம்...

ராஜா MVS said...

உண்மையில் அசத்தல்...

இனி ஃப்ளக்ஸ் உங்கபாணிலேயே அடிச்சுட வேண்டிதான்....

Philosophy Prabhakaran said...

பதிவர் சந்திப்பிற்காக கவுண்டமணி ரோஜாப்பூவோடு காட்சிதரும் பேனர் அடித்தோம்... இனி இதே பாணியில் வாசகங்களை போட்டு அசத்திவிட வேண்டியதுதான்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடக்க முடியாத சிரிப்போது கருத்திடுகிறேன்...


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...

மயிலன் said...

ராஜா MVS said...
//இனி ஃப்ளக்ஸ் உங்கபாணிலேயே அடிச்சுட வேண்டிதான்...:):) //

ஆமாண்ணே..நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணிறனும்..

மயிலன் said...

Philosophy Prabhakaran said...
//பதிவர் சந்திப்பிற்காக கவுண்டமணி ரோஜாப்பூவோடு காட்சிதரும் பேனர் அடித்தோம்..//

இது எங்களுக்கு தோணாம போயிருச்சே..:(

மயிலன் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
//அடக்க முடியாத சிரிப்போது கருத்திடுகிறேன்.//

.நாலு பேர் சிரிக்கிராங்கன்னா எதுவுமே தப்பில்ல..:)

NAAI-NAKKS said...

:)))))))))))))

திவ்யா @ தேன்மொழி said...

#மாப்பூ.. எனக்கும் வச்சிட்டாய்ங்கடா ஆப்பூ…!
#இனிமே என்ன யாராவது bachelor-னு கூப்டா, ச்சப்புனு அறைய சொல்லி ஆத்தா சொல்லுச்சி..!
#நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு…!!!
(கூடிய விரைவில் உங்களுக்கு இந்த போஸ்டர்லாம் தேவைப்படும்-னு நினைக்கிறேன்.. be prepared..)
ஏதோ நம்மலால முடிஞ்சது..;)

விக்கியுலகம் said...

மாப்ள ஸ் ஸ் அபா..சாமி பாசக்கார பய புள்ளைங்க போல ஹிஹி!

சமுத்ரா said...

interesting .:)

Anguraj Chelladurai said...

வயிறு வலிக்க சிரிச்சுட்டேங்க...