சகித்தவர்கள்...

15 Dec 2011

அவள் அதுவாம்...!கலையாத மடிப்புடன் 
காட்டன் சேலை
கச்சிதமாய் பொருந்திகிடக்கும் 
கழுத்தோர வைர அட்டிகை சகிதம் 
காலை அலுவலகத்தில் 
காண்போர்க்கெல்லாம் 
செயற்கை புன்னகை 
வீச தெரியும் சகுந்தலாவிற்கு..


மஞ்சளும் மடிசாருமாய் 
மார்கழி காலையில் 
மணமாய் மலர்கோலமிட்டு
புகைமுட்ட பூசைசெய்து 
கோவில் பிரகாரங்களில்
ஆச்சார புரளிகள் 
அனைத்தும் மிச்சமில்லாமல்
பேச தெரியும் ஜானவி மாமிக்கு...


அக்குள் தெரியும் சுடிதாரும் 
முனங்கை மறைக்கும் கையுறையும் 
அரையடி உயர காலணியும் 
கண்டிப்பாய் ஆடம்பர ஆங்கிலமும் 
ஒருசேர அணிந்து 
துப்பட்டா கொண்டு முகம் மறைத்து 
இரகசிய சிநேகிதனைக் கட்டிபிடித்து 
ஊர் சுற்ற தெரியும் ரேஷ்மாவிற்கு...


என் 
உதட்டில் இருக்கும் 
பற்கடி பதிவும் 
முதுகில் நெளிந்தோடும் 
நகக்கீறல் வரைபடமும் 
மார்பில் முளைத்திருக்கும் 
சிகரட் தழும்புகளும் 
என் மகனுக்கு கிடைத்திருக்கும் 
'தேவிடியாள் பிள்ளை' பட்டமும் 
மனதால் கூனிக்குறுகி
உயிர்பிணமாய் நான் ஆனதும்...


முறையே அவர்களது 
மகன், 
கணவன்
காதலன் 
போன்றோர்களால்தான்
என்பது மட்டும் 
அவர்கட்கு தெரிந்திருக்க 
வாய்ப்பில்லை...

19 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சவுக்கடி கவிதை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த சமூகம் நாம் எல்லோரும் நல்லவர்கள் என்று நடித்துக் கொண்டிருக்கிறது...

இரவுகளில் அவர்கள் முகத்திரை கிழித்துவிட்டால் எல்லாம் ஒன்றுதான் இங்கு...

அடுத்தவரை குறைச்சொல்லியே பழகியிருக்கிறோம்..
நம் தவறுகளை மறைத்துவிட....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழமணத்திர் ஒரு 10 ஓட்டுகள் போட மனம் துடிக்கிறது என்ன செய்ய 1 மட்டுமே உள்ளது...

rajvel said...

சவுக்கடி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்
உதட்டில் இருக்கும்
பற்கடி பதிவும்
முதுகில் நெளிந்தோடும்
நகக்கீறல் வரைபடமும்
மார்பில் முளைத்திருக்கும்
சிகரட் தழும்புகளும்
என் மகனுக்கு கிடைத்திருக்கும்
'தேவிடியாள் பிள்ளை' பட்டமும்
மனதால் கூனிக்குறுகி
உயிர்பிணமாய் நான் ஆனதும்...//

ஒரு விலை மாதுவின் அவலம் கவிதையாய்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனதை நெகிழச் செய்த கவிதை..

கோவி said...

விலை மாதுவின் வேதனையை வெளிபடுத்தியிருக்கும் விதம் அருமை..

மதுமதி said...

மனதை நெகிழ வைத்தது தோழர்..அருமை..வாழ்த்துகள்..

கோகுல் said...

எழுதத்தயங்கும் கருவை எடுத்துக்கொண்டு கவியமைத்தமைக்கு சபாஷ்!சபாஷ்!சபாஷ்!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/மஞ்சளும் மடிசாருமாய்
மார்கழி காலையில்
மணமாய் மலர்கோலமிட்டு
புகைமுட்ட பூசைசெய்து
கோவில் பிரகாரங்களில்
ஆச்சார புரளிகள்
அனைத்தும் மிச்சமில்லாமல்
பேச தெரியும் ஜானவி மாமிக்கு...

//

அழகிய வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை .. தொடரட்டும்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என் வலையில் மாணவர்களுக்காக கைகோர்க்க வாருங்கள்

jemin said...

கனமான கவிதை நண்பா . . . .வாழ்த்த முடியவில்லை . . . வருத்தம் தான் மேலோங்குகிறது . . .

திவ்யா @ தேன்மொழி said...

அதுகளின் இச்சைக்காக தினம்தினம் சவமாகும் அவளை, ஜீவனற்ற ‘அது’வாகவன்றி வேறெதுவாகவும் பார்க்க இதுகளுக்கு வக்கில்லை.. எங்கிருந்து வைராக்கியம் வாங்கி வந்தாளோ, இப்படி ஒற்றை உயிரை வைத்துக்கொண்டு, ஓராயிரம் முறை சாவதற்கு.

மயிலன் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...//தமிழமணத்திர் ஒரு 10 ஓட்டுகள் போட மனம் துடிக்கிறது என்ன செய்ய 1 மட்டுமே உள்ளது.//.மொத்தமே மூன்றுதான் பதிவாகியுள்ளன தோழரே.. இன்னும் என் வரிகளுக்கு அந்த வீரியம் வரவில்லை..

மயிலன் said...

[si="5"][co="green"]வருகை தந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... [/co][/si]

MANO நாஞ்சில் மனோ said...

காலை வளைத்து பிடிச்சி வச்சி குடுக்கும் சவுக்கடி கவிதை சூப்பர்ப்....!!!!

Anonymous said...

எதிர் பாராத சவுக்கடி கவிதை நெருப்பு..

கோவை ஆவி said...

அருமை நண்பா!! பதிவர் சந்திப்புல உங்க கவிதை கேட்டப்புறம் இப்பதான் வர சந்தர்ப்பம் கிடைச்சுது. சூப்பரா கீது..