சகித்தவர்கள்...

30 Dec 2011

கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்...

அன்பிற்குரிய விருப்பதாரர்களே..
"ச்சேட்டா..ஒரு ச்சாயோ..", "ஹோ..இவ்விடே கரிமீன் உண்டோ", "குட்டியோ?...எவ்விடே"...இவ்வாறு இழுத்து இழுத்து ஐந்து நாட்கள் பேசியே வாய் ஒரு பக்கமாய் வலிப்பதையும் பொறுத்துக்கொண்டு இந்த பதிவினை எழுத தொடங்குகிறேன்..

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக காத்திருந்த ஒரு பயணத்தை முடித்துவந்த திருப்தி ஒரு ஓரமாய் இருந்தாலும், ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு கி.மீ. சாலைவழி பயணம் உடம்பை ஒருவிதமாய் பதம் பார்த்துவிட்டது....அகில இந்திய அளவிலான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாடு இம்முறை கேரளமண்ணில்...தமிழகம்-கேரளம் இடையேயான இந்த பதற்றமான சூழலில்,கண்டிப்பாக வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அனுமதி கேட்கவே இல்லை...தங்கை,சில நண்பர்கள் மற்றும் சில நலம்விரும்பிகளின் ஏகோபித்த எதிர்ப்புடன் ஒரு வழியாய் 24ஆம் தேதி இரவு நண்பர்கள் ஐந்து பேர் ஒரு காரில் கிளம்பிவிட்டோம்..


சலிப்பு தெரியாமல் இருக்க நண்பர்கள் மாறி மாறி காரை விரைந்துகொண்டிருக்க, இசைஞானி மட்டும் மாறாமல் தஞ்சை,திருச்சி,கரூர் என வழிநெடுக்க ஒலித்துக்கொண்டிருந்தார்..ஆங்காங்கே ஐயங்கார் பேக்கரி தேநீர்,நெடுஞ்சாலையோர திறந்தவெளி சிறுநீர் என்று ஒருவழியாக கோவையைக் கடக்கும் நேரம் வந்தது..கேரள எல்லை நெருங்க போகும் நேரம் வந்ததும் "பார்டர் வந்துருச்சா?" "வரலையா?இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு?" "தாண்டிட்டோமா?" என்று ஏதோ பாகிஸ்தான் எல்லையை தாண்டும் இரகத்தில் கேள்விகள் காருக்குள் கேட்ட வண்ணம் இருந்தது..போதிதர்மனை எத்தனை முறை யோசித்து பார்த்தாலும் அந்த இடத்தில ஏனோ தமிழன் என்ற திமிர் மட்டும் வர மறுத்தது..


பாலக்காட்டில் கிட்டத்தட்ட பத்து கி.மீ. கடந்த பின்னர் ஒரு தேநீர் அருந்தலாம் என்ற ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது..கடைக்குள் சென்றதும் எங்களுள் அதீத குசும்பு பிடித்த நண்பர் ஒருவர், "ச்சேட்டா, நாலு ச்சாய், ஒரு கோஃபி" என்று மலையாள இராகத்தில் கேலியாய் ஆர்டர் செய்ததும் மீதி நால்வருக்கும் சற்றே கிலியானது..தேநீரை கையில் வாங்கிய அவர் மீண்டும் தொடர்ந்தார்,"இது ச்சாய் அல்ல..ஆய்" என்று அவர் முடிக்கும் முன்னரே ,"தக்காளி...இவன் நமக்கு அடி வாங்கி தராம விடமாட்டான் போல" என்று நாங்கள் அவரசமாய் அவரை இழுத்துக்கொண்டு இடத்தை காலி செய்து கொச்சியை நோக்கி விரைந்தோம்..


ஐந்து நாள் மாநாடு கொச்சியிலுள்ள லீ-மெரிடியன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..என்னதான் கலை,பாரம்பரியம் என்றாலும் முகத்தில் சாயமிட்டுகொண்டு,கேப்டன் விஜயகாந்த் மாதிரி கன்னங்களை துடிக்கவிட்டு ஆடும் அந்த கேரள கதக்களி வேடம் எனக்கு அறவே பிடிக்காது..ஆனால் வரவேற்பில் திரும்பும் திசையெல்லாம் கதக்களி முகமே இளித்துகொண்டு எனக்கு கடும்வெறுப்பேற்றியது..அதையும் பொறுத்து உள்ளே சென்றால் பெரும்பாலான விரிவுரையாளர்கள் மலையாள நெடி கலந்த ஒரு மாதிரியான ஆங்கிலம் பேச உஷ்ணம் மேல்மண்டையில் ஆணியடித்தது..(நல்லவேளை,வாசலில் கொடுக்கபட்டிருந்த அன்பளிப்பு பொட்டலத்தில் சில விளம்பர தலைவலி மாத்திரைகளும் அடக்கம்)


மாலைநேரமானதும் கொச்சியில் உள்ள 'marinedrive' பகுதியில் ஒரு படகுசவாரி முடித்துவிட்டு,அரை/முக்கால் கால்சட்டை சகிதம் திரிந்த எங்களை வேஷ்டி கட்டிய சேட்டன்கள் முறைத்து பார்ப்பதுபோலதான் தோன்றியது..சாலையோரங்களில் உள்ள விளம்பர பலகைகள் அனைத்திலும் (அநேகமாக சுடர்மணி ஜட்டி மட்டும் தவிர்த்து) மோகன்லால்,மம்மூட்டி மட்டுமே...ஒரு துணிக்கடையை மட்டும் ஷாருக் திறந்து வைத்திருப்பார் போல..அந்த துணிக்கடைகாரன் கேரள சந்துபொந்துகள் முதற்கொண்டு பேனர் வைத்து அலப்பறை செய்திருந்தான்..ஏம்பா,மோகன்லால் இரசிகருக்கெல்லாம் சொரனையே கிடையாதா? (ஏதோ..நம்மளால முடிஞ்சது..)


சாலையோரமாய் புட்டு,ஆப்பம் வாசம் வீச அந்த கடைக்குள் அணிவகுத்தோம்..மீண்டும் அதே நண்பர்,"ச்சேட்டா..பத்து ஆப்பே" என்று தொடங்க  அவசரமாய் அவரைக் கட்டுபடுத்தி வைத்தோம்.. கண்ட கருமத்திற்கெல்லாம் தேங்காய் எண்ணையை ஊற்றி ருசிக்கும் அவர்களிடம் ஆப்பத்திற்கு தேங்காய் பால் கேட்டதும் என்னமோ அவர்கள் ஊர் அமலாபாலைக் கேட்டதுபோல கோவம் வந்துவிட்டது..போனால்போகிறது என்று புட்டை எடுத்து வாயில் வைத்தால் அதில் மருந்துக்குக்கூட சர்க்கரை இல்லை..கொஞ்சம் சர்க்கரை கேட்டதற்கு அந்த கடையின் பணியாள் கடை முதலாளியிடம் எங்களை ஏளனமாய் காட்டி சிரித்தானே தவிர சர்க்கரை தரவில்லை..அதைவிட கொடுமை கடைசிவரை குடிப்பதற்கு ஒரு குவளை தண்ணீர்கூட தரவில்லை..அந்த மலையாள கபோதியிடம் தண்ணீர் கேட்க ஐவரும் விரும்பாமல் வெளியேறிவிட்டோம்..கொஞ்சம் நடந்து,ஒரு பெட்டிக்கடையில் இரண்டு லிட்டர் தண்ணீர் புட்டியை வாங்கியதும் அந்த கடைக்காரர் அதிசயமாய் 'தேங்க்யூ' என்றார்..தண்ணீர் விஷயத்தில் தமிழர் மீது விசுவாசம் உள்ள மலையாளி போலும்..


அடுத்தநாள் விடியற்காலை மற்ற சுற்றுலா பயணிகள் தூக்கம் கலைக்கும் முன்னரே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வண்டியை கிளப்பிவிட்டோம்..ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், மணிரத்னமும் ஒரு பேட்டியில் அவ்விடத்தைப்பற்றி அளவிற்கு அதிகமாய் மெச்சியிருந்தார்கள்..அங்கே சென்றபிறகுதான் அவர்கள் கூற்றின் உண்மையுணர்ந்தோம்..அதிகாலையில் கூட்டம் இல்லாததால் தனிமையில் ஒரு தவம் போல் இருந்தது அந்த அனுபவம்..எந்த ஒரு புகைப்படமும் அவ்விடத்தின் எழிலை பிரதிபலிக்க முடியாது என்பதால் கட்டாயமாய் இங்கே புகைப்படத்தை தவிர்க்கிறேன்..மலை வழிகளில் உள்ள கடைகளில் பழங்களை அரிந்து புட்டிகளில் அடைத்திருந்த விநோதத்தை மட்டும் 'இவ்விட நோக்கும்..'
அன்று மாலை ஆலப்புழாவில் அடுத்த நாளுக்கான படகு-வீடு ஒன்றை முன்பதிவு செய்ய சென்றிருந்தோம்..இது கேரளத்தின் சுற்றுலா சமயமாம்..எனவே ஐவருக்கான இரண்டு படுக்கை அரை வசதியுள்ள படகு-வீட்டின் குறைந்தபட்ச அரசாங்க நிர்ணய கட்டணம் பதினைந்தாயிரம் ரூபாய் என்று விசாரித்திருந்தோம்..ஆனால் சென்ற நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்துமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தன..எனவே சில தனியார் சுற்றுலா தரகர்களை அணுகினோம்..முதல் தரகனிடம் ஆங்கிலத்தில் பேசிய வரை பதினெட்டாயிரமாக இருந்த பேரம் தவறி விழுந்த தமிழ் சொற்களால் இருபதுகளைக் கடந்தது..இரண்டாவது தரகர் நேரடியாக "நீங்கள் தமிழா?" என்றார்..சரி இதுவும் ஒத்துவராது என்று நாங்கள் முடிவு செய்யும்முன் "அல்ல,நான் கொறச்சு தமிழ் அறியும்,அதுக்குதான்" என்றார்..கொஞ்சம் நம்பிக்கை வந்தது..
'விண்ணைத்தாண்டி வருவாயா'வில் காண்பிக்கப்பட்ட ஆலப்புழாவின் அழகு கோடியில் ஒரு பகுதியே..படகு கடந்து செல்லும் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வோர் ஓவியம்..கரையோரமாய் வாழும் குழந்தைகளைப் பார்க்கும்போது நிச்சயம் பொறாமை படாமல் இருக்க முடியவில்லை..செல்லும் வழியில் எதிர்ப்படும் படகு-வீடுகளில் உள்ள வெள்ளைக்கார ஜோடிகள் கசமுசா நிலையில் கிடக்க,இங்கே ஒரு ஐந்து பேச்சுலர் மனங்கள் கருகி சாம்பலாகின..கருகும் வாசம் படகை செலுத்தும் சேட்டனுக்கு தெரியவர கரையோரம் உள்ள கள்ளுக்கடையில் நிறுத்திவிட்டார்..என் எட்டாம் வயதிலேயே,என் தாத்தா அவரது பனங்கொல்லையில் அவர் கண் பார்வையில் இறக்கிய சுத்தமான கல்லை என் அம்மாவை எதிர்த்து எனக்கு ஊட்டிவிடுவார்.."உடம்புக்கு ரொம்ப நல்லது" என்பது அவரின் வாதம்..முதல் அரை புட்டி அருந்தும்வரை மட்டும் தாத்தா ஞாபகம் நீங்கவில்லை.. 


கடைசி நாள் "கான்ஃபரன்ஸாவது ஒன்னாவது.." என்று ஆலப்புழாவிலேயே கடலோர குடிலொன்றில் குடியேறிவிட்டோம்..அன்றிரவு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கடற்கரையில் இசை நிகழ்ச்சியும் உணவு திருவிழாவும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..நன்றாக வயிறு முட்ட உண்டுவிட்டு கடற்கரையின் வெண்மணலில் சாய்ந்து இசை நிகழ்ச்சிக்கு ஆயத்தமானோம்..அரங்கேறியவை அனைத்தும் "என்னவளே,அடி என்னவளே..", "உயிரே..உயிரே.." இரக தமிழ் பாடல்களே...வழக்கமாய் கேட்பதைவிட அங்கே கேட்பதில் ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்தது..அடுத்த நாள் அதிகாலை கடற்கரை ஓரம் ஒரு ச்சேச்சி கடையில் ஒரு நல்ல தேநீருடனும், சிறு கடற்கரை நடையுடனும் குடிலை காலி செய்து ஊருக்கு தயாரிகிவிட்டோம்...


திரும்பும்போது இசைஞானிக்கு பதில் இசைப்புயல் எங்களுடன் இணைந்துகொண்டார்..மலையாள மண்ணில் இருந்த ஐந்து நாட்களும் நாங்கள் ஐவரும் தமிழர் என்பதால்மட்டும்,ஏதோ வேற்று கிரக வாசி போல ஒரு நெருடலுடனே சுற்றி திரிந்ததும், நாங்கள் எதிர்ப்படும் வேற்று நாட்டவரான வெள்ளைகாரர்களும் சில கருப்பர்களும் நம் தேசத்தின் ஒரு பகுதியான அங்கே சுதந்திரமாய் அலைவதும் மட்டும் திரும்பிவரும் வழிநெடுக்க ஏதோ ஒரு அழுத்தத்தை தந்துகொண்டே இருந்தது..


பின்குறிப்பு:
"யார்ரா இவன்?..கேரளாவ பத்தி பேசிபுட்டு மாநிலத்தின் அடையாளமான  ஓமனக்குட்டிய கண்டுக்கவே இல்ல.." என்று நினைத்து யாரும் அடியேனை ஏசவேண்டாம்...அடுத்த வாரம் "ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள்" என்று ஒரு தனி ஜொள்பதிவே எழுதிவிடலாம் என்று உத்தேசித்துவிட்டேன்...


நன்றியுடன்..சி.மயிலன்
                       
                   


                    

36 comments:

suryajeeva said...

சுவாரஸ்யமாக நகர்கிறது உங்கள் பயண அனுபவங்கள்

மரு.சுந்தர பாண்டியன் said...

இந்த பசங்கள படிக்க அனுப்பிச்சா இப்படி அலும்பு பண்ணிட்டு வந்திருக்காங்களே ஆண்டவா...

Anonymous said...

//.மலையாள மண்ணில் இருந்த ஐந்து நாட்களும் நாங்கள் ஐவரும் தமிழர் என்பதால்மட்டும்,ஏதோ வேற்று கிரக வாசி போல ஒரு நெருடலுடனே சுற்றி திரிந்ததும், நாங்கள் எதிர்ப்படும் வேற்று நாட்டவரான வெள்ளைகாரர்களும் சில கருப்பர்களும் நம் தேசத்தின் ஒரு பகுதியான அங்கே சுதந்திரமாய் அலைவதும் மட்டும் திரும்பிவரும் வழிநெடுக்க ஏதோ ஒரு அழுத்தத்தை தந்துகொண்டே இருந்தது..//

வேதனை தான்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இம்புட்டு ரணகளத்துலேயும் இப்படி ஒரு கிளுகிளுப்பா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அடுத்த வாரம் "ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள்" என்று ஒரு தனி ஜொள்பதிவே எழுதிவிடலாம் என்று உத்தேசித்துவிட்டேன்...///

மனசிலாயி.....!

மயிலன் said...

பன்னிக்குட்டி ச்சேட்டா...நீங்களும் ஏன் "மனசுல ஆய்" ன்னு சொல்றீங்க? ஹி ஹி .. .

MANO நாஞ்சில் மனோ said...

திகில் பயணம் ஹி ஹி அடிவாங்காமல் திரும்பியதுக்கு என் கண்டனங்கள் ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மயிலன் said...
பன்னிக்குட்டி ச்சேட்டா...நீங்களும் ஏன் "மனசுல ஆய்" ன்னு சொல்றீங்க? ஹி ஹி .. .////

நமக்குப் பல பாஷைகள் அறியும்.....

MANO நாஞ்சில் மனோ said...

கேரளா இந்தியாவில்தான் இருக்கா அல்லது தமிழ்நாடு இந்தியா கூட இருக்கா டவுட்டே...

MANO நாஞ்சில் மனோ said...

என்றே ஓமனகுட்டி எவிடே மோனே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
என்றே ஓமனகுட்டி எவிடே மோனே...?////

ஞான் பின்னே கண்டு....

மதுமதி said...

பயண அனுபவத்தை சுவைபட சொன்னீர்கள்..' அந்த கடைக்காரர் அதிசயமாய் 'தேங்க்யூ' என்றார்..தண்ணீர் விஷயத்தில் தமிழர் மீது விசுவாசம் உள்ள மலையாளி போலும்' ஆமாம்..நல்ல மலையாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. சொன்ன விதம் அருமை..புத்தாண்டு வாழ்த்துகள்..7த.ம-2த.10 .7

மயிலன் said...

MANO நாஞ்சில் மனோ said...
//அடிவாங்காமல் திரும்பியதுக்கு என் கண்டனங்கள்//

கூட வந்த பயபுள்ளைய இன்னும் கொஞ்சம் பேச விட்ருந்தா ஊறுகா போட்ருபாய்ங்கண்ணே..:)))))

மயிலன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஞான் பின்னே கண்டு...//


ஐயையோ இது ஒரு மார்கமா போயிடு இருக்கே...

மயிலன் said...

@suryajeeva,சுந்தரபாண்டியன்,எனக்கு பிடித்தவை,மதுமதி..

நன்றி நண்பர்களே..

இரா.எட்வின் said...

வணக்கம் மயிலன். அருமையாக, ஒருமுறை வா.மு.கோமு கதைகளைப் பற்றி எழுதும்போது அவரது நடையைப் பற்றி இப்படி எழுதினேன், “விளக்கெண்ணெய் ஊற்றிய மார்பிள் தரையில் வழுக்கிக் கொண்டே போவது மாதிரி என்று எழுதினேன். அது மாதிரி ஒரு நடை.

ராஜி said...

"ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள்" என்று ஒரு தனி ஜொள்பதிவே எழுதிவிடலாம் என்று உத்தேசித்துவிட்டேன்...
>>
ஜொள் விட்டதைலாம் வச்சு பதிவை தேத்துறியா? இரு இரு உன்னை உன் சார்கிட்ட போட்டு குடுக்குறேன்.

ராஜி said...

சின்ன பிள்ளைதானே கண்டுக்க மாட்டேன்னு நினைச்சு உன் பேரை விட்டுட்டேன். உரிமையுடன் சண்டையிடும் உன் பெயரையும் சேர்த்துவிட்டேன். வந்து பார்வையிட்டு செல்லவும்

மயிலன் said...

இராஜி அக்கா...அந்த பயம் இருக்கட்டும்...:))))

மயிலன் said...

[si="4"]இரா.எட்வின் said...

//“விளக்கெண்ணெய் ஊற்றிய மார்பிள் தரையில் வழுக்கிக் கொண்டே போவது மாதிரி ஒரு நடை//

கிடைத்த பாராட்டுகளில் மிகவும் மெய் சிலிர்க்க வைத்த ஒன்று ஐயா..மிக்க நன்றி...[/si]

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//அடுத்த வாரம் "ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள்" என்று ஒரு தனி ஜொள்பதிவே எழுதிவிடலாம் என்று உத்தேசித்துவிட்டேன்...
//

ஆவலுடன் அடுத்த வாரத்தை எதிர் பார்த்து

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

இன்று :

பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

மனசாட்சி said...

பயண கட்டுரையா....சுவை

"ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள்" என்று ஒரு தனி ஜொள்பதிவே எழுதிவிடலாம் என்று உத்தேசித்துவிட்டேன்..//.

ஆமா இது எப்பலா வர்ரும்...

மயிலன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//"ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள்"...ஆவலுடன் அடுத்த வாரத்தை எதிர் பார்த்து//

@ராஜி அக்கா: என்னமோ மட்டிவிட்றேன் ன்னு சொன்னீங்களே..ஹி ஹி..

மயிலன் said...

@மனசாட்சிஅடுத்த வாரம் ன்னு தான் சொல்லியாச்சுல்ல...அதுக்குள்ள அவ்வசரம்...:))))))))))))

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

நான் கூட என்னவோ ஏதோன்னு வந்து பார்த்தா..இவ்ளோதானா...அடிவாங்கிடீங்கன்னு நெனச்சேன் ...சப்புன்னு போயிருச்சு..

மயிலன் said...

@பைங்கிளி: அடடா எப்படி ஒரு சகோதரி...:)))!!!

அப்பு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அடுத்த பயணம் எங்கே?

மயிலன் said...

நன்றி தோழரே,..இன்னும் தீர்மானிக்க வில்லை...

ananthu said...

கேரளா அருமையான சுற்றுலா தளம் ... புத்தாண்டில் பதட்டமில்லாமல் பயணப்படுவோம் என நம்பலாம் ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Preetha Elangovan said...

அருமை! சுவாரசியம்....

Preetha Elangovan said...

அருமை! சுவாரசியம்....

எஸ் சக்திவேல் said...

>ஐந்து நாள் மாநாடு கொச்சியிலுள்ள லீ-மெரிடியன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..என்னதான் கலை,பாரம்பரியம் என்றாலும் முகத்தில் சாயமிட்டுகொண்டு,கேப்டன் விஜயகாந்த் மாதிரி கன்னங்களை துடிக்கவிட்டு ஆடும் அந்த கேரள கதக்களி வேடம் எனக்கு அறவே பிடிக்காது..

எனக்கும்தான். அத்தோடு நாங்கள் (இலங்கைத் தமிழர்) சிங்கள இடங்களில் அடக்கி வாசித்ததுவும் ஞாபகத்திற்கு வந்து தொலைக்குது.

சிட்டுக்குருவி said...

விகடன் பொருத்தமானதைத்தான் தெரிவு செய்துள்ளது....அருமை நண்பா அருமை.......

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - விக்டனில் வெளிவந்தமைக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். கட்டுரை அருமை - இளமை கொப்பளிக்கிறது. மருத்துவ மாநாட்டிற்குச் சென்று - மாநாட்டு நிகழ்வுகளை மறந்து - கேரளத்தின் அழகினை எழுதியது நன்று.

ஒவ்வொரு நிகழ்வினையும் விவரைத்த விதம் நன்று. பேச்சிலர்ஸின் மனம் கருகியது ..... பாவமே !

மிக மிக இரசித்தேன் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

ஒரு தமிழனின் உளம்கவர்ந்த ஓமனக்குட்டிகள் - இன்னும் வெளிவரவில்லையா - அல்லது இன்னும் மனம் கவர வில்லையா ?