சகித்தவர்கள்...

15 Jan 2012

யதேச்சையான எழுத்துகள் #5


அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

        வணக்கம்..அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.."இவன் ஒருத்தன்..பொங்கலும் அதுவுமா,இன்னும் சேவகூட கூவல..அதுக்குள்ள பதிவு போட வந்துட்டான்னு" என்று 'நண்பன்'கள் யாரும் திட்டவேண்டாம்..மூன்றாவது ஞாயிற்று கிழமை..நாங்க கடம தவற மாட்டோம்....ச்சொல்லிப்புட்டேன்...சரி வாங்க..சீக்கிரமா படிச்சுட்டு கெளம்பலாம்...

நமக்கு இரசிகைகள் இருக்க வேண்டியதுதான்...அதுக்குன்னு இப்புடியா? ஹிஹி..:)

# இளநிலை கல்லூரி நாட்களில் மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு இரயிலேறும் போதெல்லாம் அப்பா என் எதிர் படுக்கையில் இருப்பவரிடம்,"காலேல பையன எழுப்பிவிட்ருங்க.." என்று விண்ணப்பித்துவிடுவார்..(ஒரு முறை நான் மயிலாடுதுறையில் இறங்காமல் தூங்கிக்கொண்டே சென்று திருத்துறைப்பூண்டியில் இறங்கியதால் ஏற்பட்ட விளைவு அது)..அவ்வாறு அவர் கேட்பதை என் தன்மானம் (இருக்க கூடாதுதான்) அனுமதிப்பதில்லை.."எப்புடியா இருந்தாலும் ட்ரைன் சென்னையைத் தாண்டி போக போறதில்லப்பா..நா பாத்துக்குறேன்..நீங்க எறங்குங்க.." என்பது என் வாடிக்கையான பதில்..இதை ஒரு முறை கண்ட பெரியவர் ஒருவர்,அப்பாவை "நா பாத்துக்குறேன் சார்" என்று தேற்றி அனுப்பினார்..இரயில் புறப்பட்டதும் ஒரு ஜூ.வி யை எடுத்து கையில் வைத்த அந்த பெரியவர் வை.கோ வில் தொடங்கி, நந்திதா தாஸை தீண்டி, கங்குலியை கடித்து, ஜார்ஜ் புஷ்ஷையும் கடந்து என்னை கண் அயரசெய்தார்..வழக்கமாய் கனவில் வரும் அந்த மூன்றாவது பெஞ்ச் தோழி அன்றும் வந்தது நினைவில் இருக்கிறது..காலை தாம்பரம் இரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட எட்டு  மணியளவில் இரயில் நிலைய தொழிலாளி ஒருவர்,"இந்தாப்பா தம்பி, ட்ரைன் வந்து ரெண்டு மணி நேரமாவுவுது..எறங்கு எறங்கு.." என்று என்னை எழுப்பிவிட்டார்...கைப்பேசி சார்ஜ் இல்லாமல் உயிரற்று கிடந்தது..அழைக்க நிச்சயம் அப்பா பலமுறை முயற்சித்திருப்பார்..தொலைபேசி நிலையத்தை நோக்கி நடந்தபோது எனக்கு உரைத்ததெல்லாம்,"பெரியவர் ஏதோ பாடம் சொல்லி தந்துவிட்டார் " என்பதே..

# கூட்டம் இல்லாத சென்னை புறநகர் பேருந்து பயணங்கள் எல்லாமே கொஞ்சம் சுவாரஸ்யமானவைதான்..குறிப்பாக 15 B பயணங்கள்..கோயம்பேடு முதல் என் விடுதி இருக்கும் பாரிமுனை வரை அது ஓர் அலாதியான அனுபவம்.. பயணமொன்றில்,நிறுத்தம் கடந்த நூறு அடிக்கு அப்பால்,எம்ப்ராய்டரி போட்டும் ஆங்காங்கே கிழித்துவிடபட்டும் இருந்த பெல் பாட்டம் ஜீன்ஸ் அணிந்த ஒரு ஃபுட்-போர்ட் ரோமியோ திடீர் உதயமானார்..நான்கைந்து இருக்கைகள் இருந்தும் அவற்றை ஏளனம் செய்து, நடுத்துனரின் வசைகளை பெருமையுடன் ஏற்று, ஒரு கொரியன் இரக கைப்பேசியில் சென்னையின் போக்குவரத்து சப்தத்தையும் தாண்டி தளபதி பாடல்களை (மணிரத்தினம் தளபதி அல்ல) அலறவிட்டுக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தார்...ஒவ்வோர் நிறுத்ததிலும் இறங்கி ஏறினாரே தவிர இருக்கையில் வந்து அமரவில்லை..அருகில் இருந்த மைலாப்பூர்காரர்,"இவாளெல்லாம் இருந்து நாட்டுக்கு என்னத்த சாதிச்சிட போறாள் ..?" என்றதுபோல பேருந்தில் உள்ளவர் அனைவரும்  வெளிப்படையாய் ஏசும் அளவிற்கு அந்த ஹீரோவின் நடத்தை இருந்தாலும் நடைமேடையை ஒட்டிய கடைசிக்கு முதல் இருக்கையில், கொஞ்சம் மாநிறத்தில்,காதினிருகே திட்டுதிட்டாய் பவுடரும்,தலையினில் கனகாம்பர பூச்சரமும், கையில் ஒரு லாங்-சைஸ் நோட்டும் கொண்டிருந்த ஒரு வெள்ளந்தி பெண் மட்டும் அவனது கோமாளிதனங்களுக்கு தன் கீழ் உதட்டை மடக்கி கடித்து சிரித்துகொண்டிருந்தாள்...(# ரோமியோக்கள் பிறப்பதில்லை,உருவாக்கபடுகிறார்கள்..)

இரசித்த புகைப்படம்:

சேட்ட...


இரசித்த கவிதை:

தோழர் ஆர்.சி.மதிராஜ் கவிதைகளுள் ஒன்று...

கவனிக்கத் தவறிய அப்பா
---------------------------------------------------------
தாத்தா சொத்தென்று எதுவும் இல்லை
அப்பாவின் எழுபது வருட உழைப்புதான்
உருவாகி இருக்கிறது
வீடுகளாகவும் விளை நிலங்களாகவும்.

ஆறு பிள்ளைகளுக்கும்
ஆனது திருமணம்
ஏதும் பிரச்னையே இல்லை.

ஒரு சுபயோக சுபதினத்தில்
பைசா பாக்கி இல்லாமல்
பிரித்துக்கொண்டாயிற்று
சொத்துக்களையும்.

கடைசியாகத்தான் பேசிக்கொண்டோம்
அப்பா, அம்மா எங்கே இருப்பாங்க
யார் எவ்வளவு தரணும் என்று.

அப்பாவின் கண்கள்
கலங்கியதா என்றெல்லாம்
நான்
பார்க்கவில்லை!


இரசித்த ஒரு இடுகை:

            புத்தக கண்காட்சிக்கு செல்ல இயலவில்லை என்றாலும் சென்றிருந்த நண்பர்கள், சுஜாதா, கல்கி, ஜெயகாந்தன், வைரமுத்து, இறையன்பு, கோபிநாத், சில மருத்துவ இதழ்கள், காதல் கவிதை தொகுப்புகள் என பல்சுவைகளால் திணறடித்துவிட்டார்கள்.. எப்போதுமே சுஜாதா நமக்கு ஸ்பெஷல்தான்..தலைவரின் சிறுகதை தொகுப்புகள் நிறைய வாங்கிவந்ததில் நமக்கு தனி குஷி,,.வாசித்து சிலாகிக்கவே நேரமில்லாத இவ்வேளையில் நண்பர் chilled beers தான் வாசித்த கணையாழியின் கடைசிப்பக்கங்கள் என்ற புத்தகத்தில் அவர் இரசித்தவற்றை தொகுத்து ஓர் இடுகையை வரிக்கு வரி சுஜாதா சொட்ட சமர்ப்பித்துள்ளார்..சுஜாதா வெறியர்கள் கட்டாயம் சொடுக்க வேண்டிய இணைப்பு...அஞ்சலி அல்லது பவர்கட்  


பிரமித்த ஒரு பகிர்வு:

facebook தளத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த இந்த புகைப்படம்..

அடுத்த மார்கழி மாசத்துல நம்ம வீட்டு வாசல்லயும் முயற்சி பண்ணி பாத்துடவேண்டியதுதான்...


ஒன்னே ஒன்னு சொல்லனும்:

நண்பர் KS.சுரேஷ்குமார் கைவண்ணத்திற்கு நன்றிகள்..என்னுடைய வலைத்தளத்தில் மேலே இருக்கும் 'மயிலிறகு' தலைப்பின் புதிய தோற்றம் வடிவமைத்தமைக்கு..என்றும் நன்றியுடன்...சி.மயிலன்

---------------------------------------------------------------------------------------
வாசித்தீர்களா?
45 comments:

Philosophy Prabhakaran said...

நீங்க முரட்டுத்தனமா முட்டுக்கொடுத்து தூங்குவீங்கன்னு நல்லா தெரியுது... எப்படி முடியுதோ... எனக்கெல்லாம் பயணங்களில் நிம்மதியான தூக்கம் கிடைத்ததே இல்லை... மணிக்கு நான்கு முறை எழுந்து ஸ்டேஷன் வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன்...

Philosophy Prabhakaran said...

15B பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்பவர்கள் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களையும் அவர்கள் செய்யும் அக்கபோரையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது... ஒருவேளை நீங்களே பச்சையப்பாஸ்'ல தான் படிச்சீங்களோ....

ஆமினா said...

ரோமியோக்கள் பிறப்பதில்லை,உருவாக்கபடுகிறார்கள்..)//

ஒரே கதையில் சமூகசீர்த்திருத்த கருத்தை சொல்லிட்டீங்களே சகோ......
அட அட அட :-)

சி.கருணாகரசு said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இரா.எட்வின் said...

வணக்கம் தோழர்.

லாவகமான நடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. எதைப் பற்றியும் எழுதவும் வருகிறது. இதில் ஒன்றும் இல்லை. ஆனால் வாசிக்கிற மாதிரி எழுத வருகிறது உங்களுக்கு.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒன்றும் சும்மா எழுதவில்லை. எழுத்து என் தெய்வம் என்று நீங்கள் மிக விரைவில் வெளி வருவீர்கள். காத்திருப்பேன் தோழா.

பையனை அல்லது மகளை ரயிலேற்ரி விட போகும் போதுதான் முழுதாய்த் தெரியும் அப்பா யாரென்று.

விடுமுறை முடிந்து கிஷோர் கல்லூரி செல்லும் ஒவ்வொரு முறையும் அதிகாலை அவனை அனுப்ப பேருந்து நிலையம் போகும் போதுதான் அப்பான்னா ய்யருன்னே புரியுது மயிலன்.

மிக நெகிழ்ச்சியான பதிவு.

ராஜி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தம்பி.

veedu said...

முதல் படம் உங்களுக்கு...பொங்கல் உடையோ?

veedu said...

இச்சை...ஐந்து வார்ததையில் மனித இனத்தின் பிறப்பை பறைசாற்றுகிறது....அருமை

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

மயிலா அழகு உன் உடை.உன் அப்பாவை பற்றி சொல்லி என் அப்பாவை நினைக்க வைத்து விட்டாய்..உன் தந்தை உன்னை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.மதிராஜ் கவிதையை பகிரந்தமைக்கு நன்றி மயிலா. புகைப்படங்கள் அருமை.

சி.பிரேம் குமார் said...

பொங்கல் வாழ்த்துக்கள் அன்பரே

சி.பிரேம் குமார் said...

இச்சை கவிதையின் மீது எனக்கு இச்சையாகி விட்டது அருமை

மயிலன் said...

@philosophy prabhakaran:
//நீங்க முரட்டுத்தனமா முட்டுக்கொடுத்து தூங்குவீங்கன்னு நல்லா தெரியுது... //

ஹி ஹி...

//மணிக்கு நான்கு முறை எழுந்து ஸ்டேஷன் வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன்...//

எப்படி முடியுதோ...? :))

மயிலன் said...

@Philosophy Prabhakaran
//15B பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்பவர்கள் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களையும் அவர்கள் செய்யும் அக்கபோரையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது...//

வெளிப்படையா இப்படி காலேஜ் பேர சொல்லி எனக்கு அடி வாங்கி கொடுத்துடாதீங்க பிரபா...:)

//ஒருவேளை நீங்களே பச்சையப்பாஸ்'ல தான் படிச்சீங்களோ...//

அதே பூந்தமல்லி ஹைரோட்ல சென்ட்ரலாண்ட இருக்குற காலேஜ்ல மாமே..வசூல்ராஜா படத்துல கமல் சொல்லுவாப்லேல்ல.."காவாய்க்கு இந்த பக்கம்"ன்னு..அத்தேதான்...

மயிலன் said...

@ஆமினா
//ஒரே கதையில் சமூகசீர்த்திருத்த கருத்தை சொல்லிட்டீங்களே சகோ......
அட அட அட :-)//

என்ன ஓவரா புகழாதீங்கக்கா...:)

மயிலன் said...

@இரா.எட்வின்

வணக்கம் தோழர்.

//லாவகமான நடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. எதைப் பற்றியும் எழுதவும் வருகிறது. இதில் ஒன்றும் இல்லை. ஆனால் வாசிக்கிற மாதிரி எழுத வருகிறது உங்களுக்கு//

சரக்கில்லன்னாலும் ஒப்பேதிட்டேனா? ஹி ஹி..:)

//எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒன்றும் சும்மா எழுதவில்லை. எழுத்து என் தெய்வம் என்று நீங்கள் மிக விரைவில் வெளி வருவீர்கள். காத்திருப்பேன் தோழா.//

ஐயய்யோ :)

//பையனை அல்லது மகளை ரயிலேற்ரி விட போகும் போதுதான் முழுதாய்த் தெரியும் அப்பா யாரென்று//

ஒவ்வோர் முறையும் உணர்ந்திருக்கிறேன் ஐயா.

//மிக நெகிழ்ச்சியான பதிவு//

மிக்க நன்றி ஐயா..

மயிலன் said...

@ veedu:
//முதல் படம் உங்களுக்கு...பொங்கல் உடையோ?//

ஹ்ம்ம்...? அப்டிங்கிறீங்க? முயற்சி பண்ணி பாப்போம்...:)

மயிலன் said...

@ veedu...
//இச்சை...ஐந்து வார்ததையில் மனித இனத்தின் பிறப்பை பறைசாற்றுகிறது.//

எண்ணிடீங்களா? :) நன்றி நண்பரே..

மயிலன் said...

@தென்காசித் தமிழ்ப் பைங்கிளி
//உன் அப்பாவை பற்றி சொல்லி என் அப்பாவை நினைக்க வைத்து விட்டாய்..//

:))

//மதிராஜ் கவிதையை பகிரந்தமைக்கு நன்றி மயிலா//

அவர விகடன்லேந்தே வெரட்டிகிட்டு இருக்கேன்...

மயிலன் said...

@சி.பிரேம் குமார்
//இச்சை கவிதையின் மீது எனக்கு இச்சையாகி விட்டது //

ம்ஹ்ம்ம்....ஒன்னுஞ்சரியில்ல பிரேம்...:)

A.R.ராஜகோபாலன் said...

நானும் கூட உங்களை மாதிரித்தான் நண்பரே, காலை 9 மணிக்கு கூட அலாரம் வச்சிதான் தூங்குவேன், அருமையான பகிர்வு, வந்ததில் மகிழ்ச்சி

திவ்யா @ தேன்மொழி said...

* வலைப்பூவின் புதிய தோற்றம் நளினம்.. ஆனாலும் காஜல் இல்லாமல் போனது ஆச்சர்யம் கலந்த ஏமாற்றம்தான்..;)
* பிள்ளைகள் கவனத்திற்கு: அப்பாக்களின் trademark பரிதவிப்பு. (என் தந்தை என்னை பேருந்தில் விட்டுச்செல்லும் போது, பின் சீட் ஆசாமிக்கு கிடைக்கும் குரூர முறைப்பு, பக்கத்து சீட் பெண்மணியிடம் சிநேகச் சிரிப்பு, வாந்தி பண்ணாமலிருக்க polomint, இவையும் சேர்த்தி..)
* ரோமியோக்கள் பேருந்தின் தகரத்தில் வாசிக்கும் இசைக்கச்சேரியின் பரம விசிறி நான்..
* சுஜாதா அவர்கள் இவ்வளவு வெளிப்படையாக விமர்சிப்பவர் என்று, இங்கு தான் அறிந்தேன். பலே..!

கோவிந்தராஜ்,மதுரை. said...

வழக்கமாய் கனவில் வரும் அந்த மூன்றாவது பெஞ்ச் தோழி அன்றும் வந்தது நினைவில் இருக்கிறது..

தோழி நினைவில் பாரீன்ல இருந்த எப்பிடி சட்டுன்னு கல்யாணத்த முடிங்க!
நண்பா

ananthu said...

நல்ல பதிவு நண்பா ! சுஜாதா பற்றிய பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி !

இராஜராஜேஸ்வரி said...

படங்களும் பகிர்வுகளும் ரசிக்கவைத்தன். பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

மயிலன் said...

@A.R.ராஜகோபாலன்
//நானும் கூட உங்களை மாதிரித்தான் நண்பரே, காலை 9 மணிக்கு கூட அலாரம் வச்சிதான் தூங்குவேன்,//

ஹி ஹி..அது ஒரு வரம் சார்...

மயிலன் said...

@திவ்யா @ தேன்மொழி
//வலைப்பூவின் புதிய தோற்றம் நளினம்.. ஆனாலும் காஜல் இல்லாமல் போனது ஆச்சர்யம் கலந்த ஏமாற்றம்தான்..;) //

காஜல் படத்த இனிமே போட்டா நம்மை வலைப்பூவ புறக்கணிக்க போறதா ஒரு மிரட்டல் வந்துருக்கு...அதுக்குதான் இந்த ஜிகுணா வேல..


// பிள்ளைகள் கவனத்திற்கு: அப்பாக்களின் trademark பரிதவிப்பு. (என் தந்தை என்னை பேருந்தில் விட்டுச்செல்லும் போது, பின் சீட் ஆசாமிக்கு கிடைக்கும் குரூர முறைப்பு, பக்கத்து சீட் பெண்மணியிடம் சிநேகச் சிரிப்பு, வாந்தி பண்ணாமலிருக்க polomint, இவையும் சேர்த்தி..)//

ஆமாமா..என்னையும் கூட நெறைய அங்கிள்ஸ் மொறச்சுருக்காங்க...


// ரோமியோக்கள் பேருந்தின் தகரத்தில் வாசிக்கும் இசைக்கச்சேரியின் பரம விசிறி நான்..//

ரோமியோக்கள் உருவாவதில் உங்களுக்கும் பங்கு உண்டுன்னு சொல்லுங்க..


// சுஜாதா அவர்கள் இவ்வளவு வெளிப்படையாக விமர்சிப்பவர் என்று, இங்கு தான் அறிந்தேன். பலே..//

அடுத்த பதிவுகளில் நான் படித்த சுஜாதா புத்தகங்களைப் பற்றி பகிர்கிறேன்..

மயிலன் said...

@கோவிந்தராஜ்,மதுரை.

//தோழி நினைவில் பாரீன்ல இருந்த எப்பிடி சட்டுன்னு கல்யாணத்த முடிங்க!
நண்பா//கல்யாணம்லாம் முடிஞ்சுடுச்சு நண்பா...

அந்த தோழிக்கு..

அப்டின்னுதான் நெனைக்கிறேன்...:)

மயிலன் said...

ananthu said...
//நல்ல பதிவு நண்பா ! சுஜாதா பற்றிய பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி //

சுஜாதா பத்தி இன்னும் நெறைய வரும்பதிவுகளில் வரும்...:))

மயிலன் said...

@இராஜராஜேஸ்வரி
//படங்களும் பகிர்வுகளும் ரசிக்கவைத்தன். பாராட்டுக்கள்.//

நன்றி சகோதரி...

ஹ ர ணி said...

அருமையான முருகியல் இன்பம் கோர்த்த பதிவு மயிலன்.

ஹ ர ணி said...

அருமையான முருகியல் இன்பம் கோர்த்த பதிவு மயிலன்.

மயிலன் said...

மிக்க நன்றி ஐயா...

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
தூக்கம், ரயில் பயணம் பற்றிய நினைவு மீட்டல்கள் நன்று,
ரோமியோக்கள் பிறக்கப்படுவதில்லை! அவ்வ்வ்வ்
அப்புறமா கீழ் உதட்டை கடித்து ரசித்துக் கொண்டிருந்தாள் அடைமொழியும் கலக்கல்.

நல்லதோர் சுவையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

Gowripriya said...

nice mayilan :)

Rathnavel said...

அருமை.
வாழ்த்துகள்.

அம்பலத்தார் said...

மயிலிறகின் புதிய தோற்றம் அசத்தலாக உள்ளது.

Anonymous said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் Dr/ரோமியோ...

அம்பலத்தார் said...

பயணங்கள் எப்பொழுதும்
புதிய புதிய அனுபவங்களை தரும்.
உங்க மயிலிறகுடன் பயணிப்பதுவும்தான்!

மயிலன் said...

ரெவெரி said...
// Dr/ரோமியோ..//

நான் அவன் இல்லை...:))

மயிலன் said...

நன்றி நிரூ..& gowri அக்கா..

மயிலன் said...

தளத்திற்கு முதன்முதலாய் வந்ததோடு நில்லாமல் தளம் முழுதும் அலசி நிரூபனின் "நாற்று" தளத்தில் விமர்சித்துள்ள அம்பலத்தார் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..

ஹேமா said...

வணக்கம் மயிலன்.பெயரிலேயே ஒரு மென்மையான சுகம் உங்கள் தள அழகைப்போல.

நிரூவின் பதிவின் விமர்சனம் கண்டு இப்போதான் வருகிறேன்.
முதலாவதாய் இருக்கும் பதிவே கதம்பமாய்ப் பிடித்திருக்கிறது.
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.அப்பா கவிதை பெற்றோரை விட்டுப் பிரிந்திருக்கும் மனதைக் கொஞ்சம் கலக்கிவிட்டது !

மயிலன் said...

வருகைக்கு நன்றி அக்கா....

விக்கியுலகம் said...

இன்னா மாப்ள..நீங்களும் நம்ம கட்சி தான் போல..அதான்பா தூங்கறதுல ஹிஹி!