சகித்தவர்கள்...

21 Jan 2012

ஒரு காதலின் டைரி..
அண்ணா நகரிலுள்ள ஓர் ஆடம்பர காஃபி ஷாப்..முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவர்கள் இருவரையும் யாராலும் காதலர்களாக எண்ணிவிட முடியாது..சிலருக்கு அலுவலக நண்பர்களாக தெரியலாம்.. மற்றபடி, அவர்கள் அன்று கணவன் மனைவியாய் இருந்திருக்க வேண்டியவர்கள்..அவ்வளவே..

இருவரின் கோப்பையிலும் காஃபி பாதியாய் குறைந்திருந்தது..நிமிடங்கள் பலவற்றை மௌனம் விழுங்கிக்கொள்ள,அவன் எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச தொடங்கினான்..

"அப்றம்.." (எதுவும் பேச முடியாத நேரங்களில் மழுப்ப கிடைக்கும் ஒரு வார்த்தை..)

வந்தது முதல் அவன் கண்களை அப்போதுதான் நேரிடியாக பார்த்தாள்..நிதானிக்க முடிந்தது அவளால்... அதனால் பதிலேதும் இல்லை..இதே இடத்தில் ஆறு வருடங்களுக்கு முன்பு அவள்தான் நிறைய பேசியிருந்தாள்..

நினைவிருக்கிறது..கடையின் அமைப்பு அப்போது கொஞ்சம் சாதாரணமானதாய் இருக்கும்..இப்போது இவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் இடத்தில் அப்போது cash counter இருந்தது.. சர்வர்களில் பெண்களும் இப்போது உள்ளனர்.. ஏ.சி. இப்போதையவிட முன்பு நல்லாவே வேலை செய்தது...

ஆனால் இன்றுபோல் இல்லை.. அன்று அவள்தான் பேச்சைத் தொடங்கி இருந்தாள்..

"அப்றம்.."

"அப்றம்.. அப்றமென்ன? அதான் சொல்லவேண்டியது எல்லாத்தையும் நேத்து நைட்டே ஃபோன்ல சொல்லிட்டேனே.. வேறென்ன சொல்லணும் இப்போ?"

"ஹ்ம்ம்..நைஸ்..எப்போ அர்விந்த் உனக்கு இப்டி தோன ஆரம்பிச்சுது?"

"எப்டி..?"

"மை காட்(பல்லைக் கடித்துக்கொண்டு மனசுக்குள்..)....ஹ்ம்ம்..எதனால வேண்டாம்ன்னு நெனக்கிற? நா ஏற்கனவே கல்யாணம் ஆனவ.. அதானே..be frank.."

"............"

"பேசு அர்விந்த்..இங்க பாரு..ஏற்கனவே வாழ்க்கைல இந்த வயசுல எந்த ஒரு பொன்னும் படக்கூடாத வேதனை எல்லாத்தையும்..அனுபவிச்சுட்டேன்..என்னால தாங்கிக்க முடியும்..எதுனாலும் பட்டுன்னு வெளிப்படையா சொல்லிரு.."

"இது....... சரி வராது மீரா" 

"பட் ஒய்?"

"எத சொல்ல சொல்ற மீரா? ஒன்ற வருஷத்துக்கு முன்னாடி ஒனக்கு கல்யாணம் ஆனப்பவே எல்லாமே எனக்கு முடிஞ்சுப்போச்சுன்னு நெனச்சேன்...அதுக்கப்பறம் வாழ்க்கைல என்னனமோ நடந்துடுச்சு..ஒரு வழியா எல்லாத்தையும் மறந்துட்டு ஓரளவுக்கு எந்திரிச்சு நிக்கும்போதுதான்...நீ திரும்பவும் வந்த..."

"சோ...? நீ அனுபவிச்ச அந்த கஷ்டமெல்லாம் நா அனுபவிக்கலன்னு சொல்றியா..?"

"ஐயோ மீரா...ப்ளீஸ் மெதுவா பேசு..எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க..."

"கே....(கைக்குட்டை தேவைப்பட்டது..) பட் இந்த...ரெண்டு மாசம்? அவன் வேணாம்ன்னு நா வந்ததும் நீ என்ன ஏத்துக்கிட்டேல்ல?"

"ஹ்ம்ம்...அப்ப என் கண்ணுல நீ மட்டும்தான் தெரிஞ்ச...பட் இப்போ...."

"இப்போ உன் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரியற..? am i correct?"

"ப்ளீஸ் மீரா.. please try to understand.. இங்க பாரு.. நீ ஒன்னும் என்கிட்டேந்து break-up ஆகி போயி அவன கல்யாணம் பண்ணிக்கல... ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு misunderstanding ஆரம்பிச்சுது.. பேசியிருந்தா சரி ஆகிருக்கும்..ஆனா அப்போ எனக்கு என்னோட family problem.. பேசுற நெலமைல நா இல்ல...பேசியிருக்கனும்"

"ஹ்ம்ம்.."

"ஒரு மாசம் கழிச்சு வந்த உன்னோட இன்விடேஷன்தான் உன்ன எனக்கு ஞாபக படுத்துச்சு.. இருக்குற கவலைல பத்தோட பதினொன்னாதான் அப்ப அது தெரிஞ்சுது... ஆனா மத்த ப்ரெச்சன
எல்லாம் சரியானதும்தான் நா உன்ன மிஸ் பண்ண ஆரம்பிச்சேன்.. ரொம்ப நொந்துட்டேன்.. பட் நீ திரும்பி வந்ததும் ஏதோ எழந்தது திரும்பி கெடச்ச சந்தோஷம்.."

"i know all these Arvind...பட் இப்ப என்ன ஆச்சு உனக்கு..?"

"இப்பதான் மீரா நம்மள சொசைட்டியோட சேத்து பாக்க ஆரம்பிச்சுருக்கேன்.. தப்பா தெரியுது... யாருமே இத அக்செப்ட் பண்ணமாட்டாங்க மீரா.."

"மத்தவங்கள விடு அர்விந்த்..நீ என்ன நெனைக்குற..? நா கல்யாணம் ஆனவன்னு உனக்கு இன்னைக்குதான் தெரியுமா? நா திரும்பி வந்ததுமே என்ன அவாய்ட் பண்ணிருக்கலாமே...இந்த ரெண்டு மாசம்..? ஏன் அர்விந்த்? "

"........."

"இல்ல நம்மள விட்டுட்டு போயி இன்னொருத்தன கட்டிக்கிட்டவதானேன்னு பழி வாங்க நெனச்சியா?"

"அய்யோ.. ப்ளீஸ் மீரா.."

"ஹே..நா அவன்க்கூட வாழ்ந்தது ஒரு பொய்யான வாழ்க்க அர்விந்த்..lots and lots of worries.. அவனப்பத்தி பேசக்கூட எனக்கு புடிக்கல.. உன்க்கூட அவன ஒவ்வொரு ஸ்டெப்லையும் கம்பேர் பண்ணி பாக்காம இருக்க முடியல..அதனாலையோ என்னமோ அவன சுத்தமாவே எனக்கு புடிக்கல.."

"......."

" என்னோட வாழ்க்கைல அந்த ஒரு வருஷம் மூணு மாசமும் ஒரு accident.. வீட்ல தங்கச்சிக்கு கல்யாண வயசு..நீயும் என்னைவிட்டு போயிட்ட... திரும்பி வருவேங்குற நம்பிக்க சுத்தமா இல்ல.. சோ, எனக்கு அப்போ வேற வழி இல்ல...என்னோட familyக்காக நா அதுக்கு ஒத்துகிட்டேன்..i had no other go.."

"தெரியும் மீரா"

"அப்றம் வேறென்ன அர்விந்த்..? ஏன் திடீர்னு...வேற எதாவது யோசிக்கிறியா? அவன்க்கூட...நான்....ஹ்ம்ம்? "

"ஹே..shut up idiot..."

"ப்ளீஸ் அர்விந்த்...புரிஞ்சுக்கோ...i know,u love me lots..பட்..ஏதோ..ஏதோ ஒன்னு உன்ன தடுக்குது....என்னன்னு சொல்லு அர்விந்த்..."

(கொஞ்சம் வேகத்துடன்..) "இதுல இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்கு மீரா? இந்த உலகத்துல இருக்குற கடைசி ரெண்டு பேர் நாம மட்டும்ன்னா தான் இது சாத்தியம்.. எந்த ஒரு மூணாவது மனுஷனும் இத ஏத்துக்கமாட்டான்... moreover என்னோட family ,என் தங்கச்சின்னு யோசிச்சா எனக்கு தலையே சுத்துது.. இது நிச்சயமா சரி வராது..."

"என்ன பத்தி யோசிக்கவே இல்லையா அர்விந்த்? you are rude.. இவ்ளோ selfish -ஆ பேசுற..?"

"YES....HAVE IT LIKE THAT...I AM SELFISH..." (மேஜையைத் தட்டி சொல்லிவிட்டு எழுந்து நடந்து சென்றான்...)

அவன் விலகி,சீற்றமாய் வெளியே சென்ற பாதையைமட்டும் வெறித்து அன்று அமர்ந்திருந்தாள்..இன்று இருவரும் அந்த பாதையை மௌனமாய் பார்த்துகொண்டிருந்தனர்..இரண்டு காஃபியும் காலியாகி இருந்தது... அவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்...

"அப்றம்.."

அவள் கொஞ்சம் ஆசுவாசபடுத்திகொண்டு பேசுவதற்கு தயாராகி இருந்தாள்...

"then.....how is life Arvind?"

"ஹ்ம்ம்..good..ஆறு வருஷம் எப்டி எப்டியோ போயிருச்சு..உன்ன திரும்பவும் மீட் பண்ணுவேன்னு நெனைக்கவே இல்ல..."

"ஹ்ம்ம்..ஏதோ..திடீர்ன்னு உன் மெயில் அட்ரஸ் கெடச்சது.. just like that.. mail பண்ணேன்..and we are back here now.." (மிகவும் மெலிதாய்தான் புன்னகைத்தாள்..)

"அப்றம்..." 

"சொல்லு அர்விந்த்...எதாவது சொல்லு...என்ன பண்ணே..? என்ன பண்றே? something like that.."

"ஹ்ம்ம்..என்ன பண்ணேன்..? என்னனமோ பண்ணேன்.. lifeல எந்திரிக்கவே முடியாத அளவுக்கு அடி மேல அடி.. அப்பாவோட health ,அவருக்கு ஸ்ட்ரோக் வந்தது உனக்கு தெரியாதுல்ல..,"

"ஹோ.. இப்ப எப்டி இருக்காரு..?"

"ஹ்ம்ம்..நடக்குராறு...அப்றம் பிருந்தா கல்யாண கடன், என்னோட பிசினஸ் லாஸ்.. எல்லாம் stabilse பண்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு...எல்லாத்தையும் தாண்டி உயிரோட இருக்கறதே பெருமையா இருக்கு.. பட் இப்போ பரவால்ல..ஹ்ம்ம்....ஆமா நீ?"

"நான்..? ஹ்ம்ம்..சிம்பிள்....HCL.. project leader...monotonous...but anyways,nice job...போயிட்டு இருக்கு..."
"ஹோ.. thats nice..."

"அம்மா எப்டி இருக்காங்க.. பிருந்தா இப்ப எங்க இருக்கா?......"
கேட்டுகொண்டே credit card ஐ பில் கொடுத்த சர்வரிடம் கொடுத்து அனுப்பினாள்...

"எல்லாரும் நல்லா இருக்காங்க..பிருந்தா இங்க சென்னைலதான் இருக்கா..அவ husband இங்கதான் real estates business..அவருக்கும் இப்பதான் கொஞ்சம் நல்லா போய்ட்டு இருக்கு"

"அப்றம் உன்னோட family..i mean your wife, கொழந்தைங்க...?"

அவனால் அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை..கொஞ்சம் நிதானித்து பேச தொடங்கினான்...

"ஹ்ம்ம்..எப்ப life ல எல்லாமே முடிஞ்சுடுச்சு நெனச்சேனோ அப்பதான் ஹரிணி வந்தா... எல்லாத்துலையும் தோத்துபோயி விரக்தில இருக்குற ஒருத்தன ஏத்துகிட்டு வாழ்றதுக்கு ஒரு தனி அழுத்தம் வேணும்...அவகிட்ட அது நெறையாவே உண்டு..இன்னைக்கு நான் நானா இருக்கேன்னா அதுக்கு முழு காரணமும் அவதான்..."

".......கொழந்தைங்க?"

"நாலு வருஷமாச்சு.. இன்னும் இல்ல....."

"ஹே..i am sorry.."

"...its ok.. எல்லாமே பழகிடுச்சு...பட் அதையும் அவ எப்டி தாங்கிக்கிட்டு இருக்கான்னுதான் தெரியல...வேற யாராலையும் இதெல்லாம் தாங்கிருக்க முடியுமான்னும் தெரியல....simply an angel"

சிறிது மௌனத்திற்கு பிறகு...  "........thats good"

"அப்றம் உன்னோட family..?"

credit card வந்துசேர்ந்தது...தலையை குனிந்து அதை handbagக்குள் வைத்துவிட்டு நிமிர்ந்து அவன் கண்ணோடு கண் நேரே சில நாழிகை பார்த்து...பொறுமையாய் அதே நேரம் தீர்க்கமாய் பதிலளித்தாள்...

"வேற யாராலையும் உன்ன என் அளவுக்கு நேசிக்க முடியுமான்னு தெரில அர்விந்த்...this is all i can say...and yes, i am still in love with u arvind"


மறுபடியும் மௌனம் நேரத்தை விழுங்க தொடங்கியது...  
அதே பாதையில் அவன் இப்போது கொஞ்சம் மெதுவாய் தளர்ந்துபோய் வெளியேறினான்.. அவள் ஏனோ அந்த பாதையை இம்முறை பார்க்கவில்லை...

முற்றும்..


*************************************************
இத படிச்சிங்களா இல்லையா?

32 comments:

ராஜி said...

ஐ ஜாலி தம்பி பிளாக்குல வடை எனக்கே

ராஜி said...

திருமணம் ஆன பெண்ணின் காதல் நம்ம ஊருல எப்பவுமே கொச்சையாதான் பார்க்கப்படுது. அது எவ்வளவு உண்மையா இருந்தாலும்...,

ஹேமா said...

ஒரு பெண்ணின் மனமும் தட்டிக்கழிக்கும் ஒரு ஆணின் மனமும் அப்பட்டமாகத் தெரிகிறது கதையில்.எங்காவது விதிவிலக்காகத்தான் ஆண்கள் உண்மையான அன்போடு காதலிக்கிறார்கள்.பெண்கள் இல்லையென்றில்லை.கூடுதலான பெண்கள் நிதானித்து உண்மையாகக் காதலிக்கிறார்கள்.நடுவில் குடும்பம்,சமூகம் என்று அந்தக் காதல் மாற்றப்பட்டாலும் மனதால் மறக்கமுடியாமல் மாறாமாலே இருக்கிறாள் !

கோவிந்தராஜ்,மதுரை. said...

கதையை முழுதும் படித்தேன் அருமை
வித்தியாசமான சிந்தனை

மயிலன் said...

ராஜி said...
//ஐ ஜாலி தம்பி பிளாக்குல வடை எனக்கே//

:))
என்னக்கா சின்ன புள்ள மாதிரி...?

மயிலன் said...

ராஜி said...
//திருமணம் ஆன பெண்ணின் காதல் நம்ம ஊருல எப்பவுமே கொச்சையாதான் பார்க்கப்படுது. அது எவ்வளவு உண்மையா இருந்தாலும்...//

"அது எவ்வளவு உண்மையா இருந்தாலும்"...அதுதான் வேதனை...

மயிலன் said...

ஹேமா said...
//எங்காவது விதிவிலக்காகத்தான் ஆண்கள் உண்மையான அன்போடு காதலிக்கிறார்கள்//

கசந்தாலும் உண்மை...

மயிலன் said...

கோவிந்தராஜ்,மதுரை. said...
//கதையை முழுதும் படித்தேன் அருமை
வித்தியாசமான சிந்தனை//

என்னடா...ஒரு வேல ஆம்பளைங்க இந்த கதைய நிராகரிச்சுட்டாங்களோன்னு நெனச்சேன்..
நன்றி தோழரே...:)

மரு.சுந்தர பாண்டியன் said...

பெண் தனக்கு சிறந்தவனை தேடிகிறாள் ஆண் தன் சூழ்நிலைக்கு உகந்தவளைத் தேடுகிறான்... நல்ல கதை சார்...

திவ்யா @ தேன்மொழி said...

முதல் முறை படித்துவிட்டு, ஒருவேளை தவறாக படித்துவிட்டோமோ என்ற சந்தேகத்தில் மீண்டும் வாசித்தேன். காரணம் தற்போதெல்லாம், முதல்காதலை மறவாத ஒண்டிக்கட்டைகள் அரவிந்த்-கள் தானென்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணத்தால் மனதளவில் மறுமணம் புரிந்துகொள்பவர்கள் மீராக்கள் தானென்பதும் பரவலான கருத்து. காதலில் நாம் மீராவா அரவிந்தா என்பதை விட, காதலிப்பதற்கும் காதலிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதே, கசக்கும் உண்மை. உண்மைக்கு உயிரோட்டதுடன் குரல்கொடுத்தமைக்கு சபாஷ்..:)

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

இப்போதெல்லாம் காலச் சூழல்கள்தான் காதலை நிர்ணயிக்கின்றன.15 வயதுக் காதல் 40 வயதில் தொடருகிறது நிஜத்திலே.. அருமையான சிந்தனை.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லதோர் கதை,
மௌனங்களோடு சிந்திக்க வைக்கும் முடிவு,

சந்தர்ப்ப சூழ் நிலைகளினால் நிறம் மாறிய ஆணின் மன உணர்வினையும், நிறம் மாறாத பெண்ணின் மன உணர்வினையும் இணைத்துப் புனையப்பட்ட கதை, இறுதியில் மீண்டும் அவனோடு சேர்வது போன்ற உணர்வுடன் இருக்கும் பெண்மையின் குணத்தினை வெளிப்படுத்தி முடிந்திருக்கிறது.

எழுத்து நடை, கதை நகர்த்திய விதம்,
கால இடைவெளியின் அடிப்படையில் காட்சிகளை வேறு பிரித்துக் காட்டியது அனைத்தும் சுபம்!

நிரூபன் said...

முழுக் கதையினையும் bold ஆன எழுத்துருவினால் எழுதுவதனை தவிர்த்து, உரையாடல்களை மாத்திரம் வேறுபடுத்திக் காட்டலாம்.

வாழ்த்துக்கள்.

கோகுல் said...

டைரி காதலின் சில பக்கங்களை எடுத்துக்காட்டுகிறது.கதை உரையாடல் நடையுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது.

மயிலன் said...

மரு.சுந்தர பாண்டியன் said...
//பெண் தனக்கு சிறந்தவனை தேடிகிறாள் ஆண் தன் சூழ்நிலைக்கு உகந்தவளைத் தேடுகிறான்...//

ஹ்ம்ம்...மிகச் சரி...

மயிலன் said...

திவ்யா @ தேன்மொழி said...
//முதல் முறை படித்துவிட்டு, ஒருவேளை தவறாக படித்துவிட்டோமோ என்ற சந்தேகத்தில் மீண்டும் வாசித்தேன்.//

:))

// காரணம் தற்போதெல்லாம், முதல்காதலை மறவாத ஒண்டிக்கட்டைகள் அரவிந்த்-கள் தானென்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணத்தால் மனதளவில் மறுமணம் புரிந்துகொள்பவர்கள் மீராக்கள் தானென்பதும் பரவலான கருத்து.//

ஹ்ம்ம்..பெரும்பாலும் அப்படிதான் வெளிக்கொணர படுகிறது..
அஞ்சலையும் யம்மா யம்மா வும் ஏற்ப்படுத்தும் விளைவு அது...

// காதலில் நாம் மீராவா அரவிந்தா என்பதை விட, காதலிப்பதற்கும் காதலிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதே, கசக்கும் உண்மை. உண்மைக்கு உயிரோட்டதுடன் குரல்கொடுத்தமைக்கு சபாஷ்..:)//

பாலின வேறுபாடு காதலுக்கும் சற்று அதிகம் உண்டு...
நன்றி தோழி..

மயிலன் said...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...
//இப்போதெல்லாம் காலச் சூழல்கள்தான் காதலை நிர்ணயிக்கின்றன//

பெரும்பாலும்..

மனங்களால் நிச்சயிக்க பட்டாலும்
மணங்களாய் முடிவது சொற்பமே..

மயிலன் said...

நிரூபன் said...
//வணக்கம் நண்பா,
நல்லதோர் கதை,
மௌனங்களோடு சிந்திக்க வைக்கும் முடிவு,//

நன்றி நிரூ..


//சந்தர்ப்ப சூழ் நிலைகளினால் நிறம் மாறிய ஆணின் மன உணர்வினையும், நிறம் மாறாத பெண்ணின் மன உணர்வினையும் இணைத்துப் புனையப்பட்ட கதை, இறுதியில் மீண்டும் அவனோடு சேர்வது போன்ற உணர்வுடன் இருக்கும் பெண்மையின் குணத்தினை வெளிப்படுத்தி முடிந்திருக்கிறது.//

கதையிலும் பெண்மையைக் கையாள்வது கொஞ்சம் கடினமே...to be handled with utmost care..


//எழுத்து நடை, கதை நகர்த்திய விதம்,
கால இடைவெளியின் அடிப்படையில் காட்சிகளை வேறு பிரித்துக் காட்டியது அனைத்தும் சுபம்//

கருவை பற்றி மட்டுமே வந்த கருத்துக்களுக்கு மத்தியில் நடையைப் பற்றி கருத்துரை இட்டமைக்கு ஒரு தனி நன்றி,..

மயிலன் said...

நிரூபன் said...
//முழுக் கதையினையும் bold ஆன எழுத்துருவினால் எழுதுவதனை தவிர்த்து, உரையாடல்களை மாத்திரம் வேறுபடுத்திக் காட்டலாம்//

இனிமேல் சரிசெய்கிறேன் நிரூ..

veedu said...

சந்தர்ப்பமும்....சூல்நிலையும் சில காதல்களை கசக்கி எறிந்து விடுகிறது நாம் எழுதிய பழைய கவிதையைப் போல...பிரிதொரு சந்தர்ப்பத்தில் படிக்கும் போது ஏனோ மனம் கனக்கிறது...

மயிலன் said...

கோகுல் said...
//டைரி காதலின் சில பக்கங்களை எடுத்துக்காட்டுகிறது.கதை உரையாடல் நடையுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது//

உரையாடல் வழி இதை எழுதுவதே சரி எனப்பட்டது.. சரியாகவும் வந்துள்ளது என்று நினைக்கிறேன்...

மயிலன் said...

veedu said...
//சந்தர்ப்பமும்....சூல்நிலையும் சில காதல்களை கசக்கி எறிந்து விடுகிறது நாம் எழுதிய பழைய கவிதையைப் போல...பிரிதொரு சந்தர்ப்பத்தில் படிக்கும் போது ஏனோ மனம் கனக்கிறது..//

உங்கள் உவமை அருமை..
நன்றி நண்பா..

NAAI-NAKKS said...

:)))))))))))))

ஹ ர ணி said...

எழுததாளர் மயிலனின் முதல் கதையை வாசித்தேன். தொடர்பணிகளர்ல் தாமதமாக வாசித்தாலும் நல்ல கதைசொல்லும் திறனைப் பார்க்கிறேன். 1992 இல் ஆனந்தவிகடனில் நான் எழுதிய காதல் பிரதேசம் எனும் சிறுகதை நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட இதே பொருண்மை என்றாலம் அது இயங்கியது வேறுதளம். இந்த வயதில் மாறுபட்ட சிந்தனை மயிலன். ஆனாலும் ஆண்கள் விதிவிலககாக இல்லை உண்மையான நேசம் கொண்ட ஆண்கள் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இருக்கிறார்கள். அவர்களின் விழுக்காடு நேசம் மறந்துபோகிற ஆண்களில் விழுக்காட்டின் பரவலில் மறைந்துபோகிறது என்பதுதான் உண்மை. எப்படியாயினும் அருமையாக கதை சொல்லுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். முடிந்தவரை அதிகம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இது வேண்டுகோள் மயிலன். வாழ்த்துக்கள்.

மயிலன் said...

ஹ ர ணி said...
//எழுததாளர் மயிலனின் முதல் கதையை வாசித்தேன்.//
நீங்கள் சொல்வது புரிகிறது ஐயா...:)

// 1992 இல் ஆனந்தவிகடனில் நான் எழுதிய காதல் பிரதேசம் எனும் சிறுகதை நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட இதே பொருண்மை என்றாலம் அது இயங்கியது வேறுதளம். இந்த வயதில் மாறுபட்ட சிந்தனை மயிலன். //
மிக்க நன்றி ஐயா..நெகிழ்கிறேன் நிஜமாய்...

//ஆனாலும் ஆண்கள் விதிவிலககாக இல்லை உண்மையான நேசம் கொண்ட ஆண்கள் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இருக்கிறார்கள். அவர்களின் விழுக்காடு நேசம் மறந்துபோகிற ஆண்களில் விழுக்காட்டின் பரவலில் மறைந்துபோகிறது என்பதுதான் உண்மை. //
ஒப்புக்கொள்கிறேன் ஐயா...இது ஆண் பெண் சமுதயாங்களை வெளிபடுத்தும் பாத்திரங்களாய் நான் சொல்ல நினைக்கவில்லை..இரு பாத்திரங்கள் அவ்வளவே ஐயா ..

//எப்படியாயினும் அருமையாக கதை சொல்லுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.//
முயற்சிக்கிறேன் ஐயா..தொடர்ந்து வாருங்கள்...

// முடிந்தவரை அதிகம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். //
நடைமுறையோடு பிணைய முயன்றதால் ஏற்பட்ட விளைவு அது ஐயா..மன்னிக்கவும்.. இனி திருத்தி கொள்கிறேன்..

அம்பலத்தார் said...

மயிலன் Realy great.. நல்ல படைப்பு. இதுபோன்று வித்தியாசமான கருப்பொருளை கையிலெடுக்கவும் தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்கு முதல் வாழ்த்துக்கள். உங்க முன்னைய கதைகளிற்கும் இதற்குமிடையில் நிறைய வித்தியாசம் தெரிகிறது.

அம்பலத்தார் said...

வலைப்பூ டிசைன் ரொம்ப நல்லா இருக்கு.

அம்பலத்தார் said...

குறுகிய சிலநாட்கள்தான் உங்க வலைப்பூ பக்கம் வரவில்லை. அடேங்கப்பா அதற்குள் பதிவுகளில் வடிவமைப்பில் இனிய மாற்றங்கள். மிகவும் சந்தோசமாக இருக்கிறது.வலையுலகில் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள்.

மயிலன் said...

அம்பலத்தார் said...
//மயிலன் Realy great.. நல்ல படைப்பு. இதுபோன்று வித்தியாசமான கருப்பொருளை கையிலெடுக்கவும் தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்கு முதல் வாழ்த்துக்கள். உங்க முன்னைய கதைகளிற்கும் இதற்குமிடையில் நிறைய வித்தியாசம் தெரிகிறது//

மிக்க நன்றி ஐயா...:)

மயிலன் said...

அம்பலத்தார் said...
//குறுகிய சிலநாட்கள்தான் உங்க வலைப்பூ பக்கம் வரவில்லை. அடேங்கப்பா அதற்குள் பதிவுகளில் வடிவமைப்பில் இனிய மாற்றங்கள். மிகவும் சந்தோசமாக இருக்கிறது.வலையுலகில் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள்//

வலையின் அமைப்பை பற்றி தாங்கள் விமர்சித்த பின்னரே மாற்றம் செய்தேன்...ஆனால் அதுவரை சொல்லாமல் இருந்தவர்கள் அப்போதுதான் வரவேற்றார்கள்..
சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா..

அரசன் said...

ஒரு அழகிய உணர்வுகள் நிறைந்த சினிமா பார்த்த அனுபவம் உங்களின் இந்த பதிவை படித்ததும்...
அவ்வளவு நேர்த்தியாக மிகவும் உயிர்ப்பான ஒரு சோக இழையையும் அவ்வளவு இனிமையாய் சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ..
உலகில் நடந்து கொண்டிருக்கும் பலரது காதல்களின் முடிவு இப்படியும் இருக்கும் ...
வாழ்த்துக்கள் நண்பரே

அரசன் said...

ஒரு அழகிய உணர்வுகள் நிறைந்த சினிமா பார்த்த அனுபவம் உங்களின் இந்த பதிவை படித்ததும்...
அவ்வளவு நேர்த்தியாக மிகவும் உயிர்ப்பான ஒரு சோக இழையையும் அவ்வளவு இனிமையாய் சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ..
உலகில் நடந்து கொண்டிருக்கும் பலரது காதல்களின் முடிவு இப்படியும் இருக்கும் ...
வாழ்த்துக்கள் நண்பரே