சகித்தவர்கள்...

19 Jan 2012

வள்ளுவர் Vs ஜொள்ளுவர்

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

             பொதுவா பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் உள்ள ப்ரெச்சன இருக்கே இது இன்னிக்கு நேத்து வந்ததா தெரியல..கே டிவில பழைய படமெல்லாம் பாக்கும் போது எனக்கு தோணுறது எல்லாம் ஒண்ணுதான்..கிராபிக்ஸ் அது இதுன்னு எத்தன கழுத வந்தாலும் காதலும் காதல் சார்ந்த பகுதிகளும் மட்டும் மாறவே மாறாது..அடிப்படை மனித உணர்வு என்று பெரிய மனுஷங்க சொல்றாங்க..ஆனா தமிழ் பேசற பல கோடி மக்களுக்கு பொதுவான பெரிய மனுஷருன்னா அது நம்ம தலைவர் வள்ளுவர்தானுங்க..


              தலைவருக்கு சின்ன வயசுலேந்தே எங்க எரியா இரசிகர் மன்ற தலைவரா இருந்தும் இதுவரைக்கும் அவரு நம்ம இளவயசு பசங்களுக்கு சொன்ன கருத்துக்கள நம்ம பதிவுல சொல்லாம இருக்கிறது தப்புதேன்..மனுஷன் ஒன்னேமுக்கால் அடில சொல்லியிருக்கிற ஒவ்வொரு கருத்தும் நெத்தியடி..ஆனா அவர் என்னதான் சொல்லியிருந்தாலும் இன்னைக்கு பசங்களுக்கு அது புரியற மாதிரி எடுத்து சொல்ல (பாப்பையாவா? அண்ணே பசங்க பாவம்ண்ணே..) புதுசா வந்திருக்கிறவர்தான் இந்த ஜொள்ளுவர்..சரி இன்னைக்கு பாடத்துக்கு போவோமா? எல்லாரும் லைன்ல வந்து பெஞ்சுல ஒக்காருங்க...
திரு.ஜொள்ளுவர் ஐயா..


பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை 
தன்நோய்க்குத் தானே மருந்து.

அப்டின்னா என்னன்னா தம்பீ.., உனக்கு சளி,ஜுரம்ன்னு வெச்சுக்க..என்ன செய்வ? டாக்டர பாக்காம நேரா மெடிக்கல் ஷாப்க்கு போயி ஒரு மாத்திரைய வாங்கி லபக்குவேல்ல..? அதே மாதிரி ஒனக்கு காதல் ஜுரம் வந்தாலும் பண்ணிடாத..கொஞ்சம் மெடிக்கல் ஷாப்லேந்து வெளில வந்து பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்க்கு போயி உனக்கு புடிச்ச பொண்ண பாரு...சரியாயிரும்...எலேய்..நம்புலே..


யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.

இந்த புள்ளைங்க இருக்கே செம்ம டஃப்ப கொடுக்குங்க..நீ பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு வெறிக்க வெறிக்க அந்த புள்ளைய பாத்தேன்னா,அது பாட்டுக்கு அதோட ஓடாத வாட்ச்ச பாக்கும்,எதித்தாப்ல மூடி இருக்கிற சலூன பாக்கும்,பூ விக்குற ஆயாவ பாக்கும்,தரைய பாக்கும்...ஆனா கடைசி வரைக்கும் உன்ன பாக்கவே பாக்காது..உடனே ஃபீல் ஆயிடாத..டக்குன்னு சுதாரிச்சுக்கிட்டு வேற எங்காவது பாரேன்..அந்த புள்ள உன்னைய பாக்க ஆரம்பிக்கும்..எப்பூடி..?ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் 
கூடியார் பெற்ற பயன் 

அப்பறம்  தம்பீ..லவ் செட்டாகி நல்லா போயிட்ருக்குன்னு வெச்சுக்க..அதுல ஒரு சுவாரஸ்யமே இருக்காது..நீ என்ன பண்ணனும்ன்னா,அப்பப்ப சின்னசின்னதா சண்ட போடணும்..முடிச்சுட்டு அப்டியே கொஞ்ச நேரம் கோவமா சீன் போடணும்..அதுக்கப்றம்,"ஹே, என் மேலதான்ப்பா தப்பு..ரியல்லி வெரி சாரி டா.." அப்டின்னு அந்தர் பல்டி அடிச்சேன்னு வையி..அவ்வளவுதேன்..உன்னோட ரேஞ்சே வேற அதுக்கப்பறம்..யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் 
யாரினும் யாரினும் என்று.

அதே மாதிரி...பேசும்போது ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்..ஒவ்வொரு வார்த்தையும் 'பீ கேர்ஃபுல்லா'தான் ரிலீஸ் பண்ணனும்..ஒரு பேச்சுக்கு,ஐஸ் வெக்கறதா நெனச்கிட்டு,நீ பாட்டுக்கு "உன்னோட காதல விட உலகத்துல சிறந்த காதலே இல்ல.." அப்டின்னு பிட்ட போட முயற்சி பண்ணேன்னு வையி, அடுத்த செகன்டே கேப்பா,"உன்னோட காதல்ன்னா? அப்ப நீ எத்தன பேர காதலிச்சி இருக்கே"ன்னு.. சோ,அலார்ட்டா இருக்கணும் தம்பீ...


இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 
கண்நிறை நீர்கொண் டனள்.

முக்கியமா நீ கமல் மாதிரி பேசணும்..புரியாம பேசறத சொல்லல..நீ பாட்டுக்கு "இந்த சென்மத்துல நாம பிரியவே மாட்டோம்"ன்னு சொன்னேன்னா,உடனே அந்த புள்ள "ஓ"ன்னு அழ ஆரம்பிச்சு ரொமாண்டிக் சீன் தேவையில்லாம செண்டிமெண்ட் சீனாயிடும்..அந்த புள்ளையே அன்னலட்சுமி மாதிரி நூறு சென்மம் வேணும்ன்னு சாமிகிட்ட கேட்டாலும்,நீ விருமாண்டி கணக்கா வெறப்பா,"போதுமா?"ன்னு கேக்கணும்...என்ன புரியுதா?உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் 
புல்லாள் புலத்தக் கனள்.


அப்பறம் தேவையில்லாம வெட்டி சீன போட்டு மாட்டிக்காத..அந்த புள்ளைய பாத்ததும்,"ஹே, இப்பதான் உன்னபத்தி நெனச்சேன்..அதுக்குள்ள வந்து நிக்குற.." அப்படின்னு பீலா உட்டேன்னு வையி,உடனே அது,"இப்பதானா? அப்ப அதுக்கு முன்னாடி யார நெனச்ச?" அப்டின்னு கேட்டு உனக்கே ரிவீட் அடிக்கும்..


நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 
யாருள்ளி நோக்கினீர் என்று.


முக்கியமா நேர்ல மீட் பண்ணும் போது இந்த சைலன்சர் எஃபெக்ட் மட்டும் போடாத..மௌனகுரு மாதிரி பேசாமலே அவளையே இரசிச்சிக்கிட்டு உட்காந்தேன்னா,சிம்பிளா ஒரே ஒரு கேள்விதான் கேப்பா,"என்ன அப்படி பாக்குற,வேற எவ கூடயாவது மனசுக்குள்ள என்ன கம்பேர் பண்ணி பாக்குறியா?"..ஸ்ஸ்ஸ்ஸபா தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

சும்மா எந்நேரமும் துப்பட்டாவ வெச்சு முக்காடு போட்டு வண்டில அந்த புள்ளைய கூட்டிட்டு சுத்தறதவிட,தப்பே செயலேன்னாலும் அந்த புள்ளைய கோவபடுத்தி சும்மா சின்னதா ஒரு சண்டைய போட்டுட்டு,அது உட்கார்ற பெஞ்சுக்கு எதிர் பெஞ்சுல உட்காந்து கண்ணோட கண்ணு மொறச்சு மொறச்சு பாக்குற சுகம் இருக்கே..அடாடாடா..


உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

சேட்டுவீட்டு கல்யாணத்துல போயி நல்லா வயிறுமுட்ட சாப்டறத விட,சாப்ட்டு முடிச்சிட்டு வெளில வந்து ஒரு பன்னீர்சோடாவ குடிச்சிட்டு விடற ஏப்பம் எவ்வளோ சுகமோ,அதேமாதிரிதான் சும்மா எந்நேரமும் கட்டிப்புடி வைத்தியம் பண்றத விட அப்பப்போ அந்த புள்ளைகிட்ட ஒரண்டை இழுக்க சுகமும்...என்ன..புரியுதா?


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

அதே நேரம் தம்பீ... நீ ஈகோ புடிச்ச கழுதயா இருக்கவே கூடாது..ஏன் சொல்றேன்னா...தெரியாத்தனமா அந்த புள்ளையோட ஒரு பெரிய சண்ட போட்டுடறன்னு வையி..வெறப்பா மொறப்பா நீ சுத்திக்கிட்டே இருக்கறதவிட..டப்புன்னு போயி நீயாவே சரண்டர் ஆயிடு... அப்டி செய்யறதால நீதான் தோத்தாங்குலின்னு நெனச்சுக்காதே..நீ சாரி சொன்னதும் செல்லமா ஒரு சின்ன அற அறஞ்சு அப்புடியே ஒரு உம்ம்மா கொடுத்துரும்..அப்போ நீதானே ஜெய்ச்ச கணக்காச்சு? என்ன நாஞ்சொல்றது? 


சரி..இன்னைக்கு கிளாஸ் போதும்...எல்லாரும் பஸ் ஸ்டாப்புக்கு..ச்சீ..வீட்டுக்கு கெளம்புங்க.. போறதுக்கு முன்னாடி கிளாஸ் எப்டி இருந்துச்சுன்னு மறக்காம ஒரு வார்த்த எழுதி கொடுத்துட்டு போங்க..
பின்குறிப்பு 1: "திருக்குறளை அசிங்கப்படுத்திட்டான்" அப்படின்னு யாரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துடாதீங்க...ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே 1330 குறளையும் ஒப்பிச்ச வாண்டுதானுங்க நானும்..வள்ளுவரின் வரிகள் எந்த காலத்துடனும் பொருந்தும் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியே இது...


பின்குறிப்பு 2: அப்பறம் நல்லா இருக்குன்னு சொன்னீங்கன்னா நம்ம ஜொள்ளுவர அப்பப்ப கூப்பிட்டு பசங்களுக்கு அறிவுர வழங்கலாமுங்க..என்ன சொல்றீங்க..?


என்றும் நன்றியுடன்...சி.மயிலன்

69 comments:

veedu said...

வலைப்பதிவு மெருகேறியிருக்கே!உங்க கைவண்ணம்மா?

NAAI-NAKKS said...

Nice
:)
contineu....

veedu said...

திருக்குறளுக்கு பலவிதமா விளக்கம் கொடுத்திருக்காங்க...நீங்க புது முயற்சியா கூறியிருக்கிறீர்கள்..எப்படியிருக்துன்னு....பெரியவங்க...சொல்லுவாங்க நான் அப்பீட்டு.

மயிலன் said...

@veedu
கோத்துவிட்டு போறாப்ல தெரியுது...

ஹேமா said...

அட...அட...அட உங்களுக்குள்ள இவ்ளோ திறமை இருக்கும்ன்னு நினைக்கவேயில்ல மயிலண்ணே !

மரு.சுந்தர பாண்டியன் said...

வாழும் ஜொள்ளுவர் மயிலன் சார் வாழ்க...

வே.சுப்ரமணியன். said...

திருக்குறளுக்கு இப்படியும் விளக்கம் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும், காதலுக்கு விளக்கம் இப்படியும் சொல்லலாம் என்பதையும் தங்கள் பதிவு உணர்த்துகிறது. மாறுபட்ட முயற்சி, மிக மிக அருமை!

சி.பிரேம் குமார் said...

கண்ணை உறுத்தும் கருப்பு பின்புலத்தில் இருந்து புதிய தோற்றத்திற்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்

சி.பிரேம் குமார் said...

//டக்குன்னு சுதாரிச்சுக்கிட்டு வேற எங்காவது பாரேன்..அந்த புள்ள உன்னைய பாக்க ஆரம்பிக்கும்..எப்பூடி..?//கலக்கல் உண்மையும் கூட

A.R.ராஜகோபாலன் said...

மயிலனுக்கு மயிலாசனம் தரத் தூண்டும் பதிவு, வான் புகழ் வள்ளுவத்தை அதன் வளத்தை எளிமையாக தந்த விதம் அருமை நண்பா.

Philosophy Prabhakaran said...

செம கான்செப்ட்... மற்ற 132 பதிவுகள் எப்போ வரும்...

Anonymous said...

Dr.ஜொள்ளுவர் கொஞ்சம் ஓவர் தான்...வாழ்த்துக்கள்...

Dr.Dheep said...

அருமையான பதிவு. காதலித்து கரம்பிடித்தவன் என்கிற முறையில், தங்களின் மேல்விளக்கத்தை வழிமொழிகிறேன். :-)

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
வலைப் பதிவு டிசைனிங் நன்றாக இருக்கிறது.

அப்புறமா திருக்குறளுக்கு நம்ம தெருப் பசங்க (சும்மா ஜோக்கிற்கு சொல்றேனுங்க, கோவிச்சுக வேணாம்) விளக்கம் கொடுத்திருக்காங்களே.

நிரூபன் said...

புதுசா வந்திருக்கிறவர்தான் இந்த ஜொள்ளுவர்..சரி இன்னைக்கு பாடத்துக்கு போவோமா? எல்லாரும் லைன்ல வந்து பெஞ்சுல ஒக்காருங்க...//

எங்கே ஐயா.
பெஞ்சை காணலையே.

மேசை தான் இருக்கிறது போல புலப்படுகிறதே;-))))

நிரூபன் said...

அப்டின்னா என்னன்னா தம்பீ.., உனக்கு சளி,ஜுரம்ன்னு வெச்சுக்க..என்ன செய்வ? டாக்டர பாக்காம நேரா மெடிக்கல் ஷாப்க்கு போயி ஒரு மாத்திரைய வாங்கி லபக்குவேல்ல..? அதே மாதிரி ஒனக்கு காதல் ஜுரம் வந்தாலும் பண்ணிடாத..கொஞ்சம் மெடிக்கல் ஷாப்லேந்து வெளில வந்து பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்க்கு போயி உனக்கு புடிச்ச பொண்ண பாரு...சரியாயிரும்...எலேய்..நம்புலே..
//

யோவ்..பொண்ணை பார்த்திட்டா மாத்திரம் சரியாகிடுமா?
கொய்யாலே...மேலே சொல்லுவீங்க என்று நினைச்சா
இப்படி பாதியில பரிதவிக்க வைச்சிட்டீங்களே.

நிரூபன் said...

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்

அதே மாதிரி தம்பீ..லவ் செட்டாகி நல்லா போயிட்ருக்குன்னு வெச்சுக்க..அதுல ஒரு சுவாரஸ்யமே இருக்காது..நீ என்ன பண்ணனும்ன்னா,அப்பப்ப சின்னசின்னதா சண்ட போடணும்..முடிச்சுட்டு அப்டியே கொஞ்ச நேரம் கோவமா சீன் போடணும்..அதுக்கப்றம்,"ஹே, என் மேலதான்ப்பா தப்பு..ரியல்லி வெரி சாரி டா.." அப்டின்னு அந்தர் பல்டி அடிச்சேன்னு வையி..அவ்வளவுதேன்..உன்னோட ரேஞ்சே வேற அதுக்கப்பறம்..
//

இந்தக் குறளில் புணர்தலுக்கு அர்த்தம் சொல்லாத டாக்குட்டரை கண்டிக்கிறேன்.
அவ்வ்வ்வ்

நிரூபன் said...

வித்தியாசமான முயற்சியாக,
திருக்குறளிற்கு தெருப் பசங்க உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதனைப் படம் பிடித்து கவிதையாக்கி தந்திருக்கிறீங்க.

நிரூபன் said...

அப்புறமா மிகுதிக் குறளுக்கும் பொழிப்புரை வருமா வாத்யாரே?

மயிலன் said...

veedu said...
//வலைப்பதிவு மெருகேறியிருக்கே!உங்க கைவண்ணம்மா//

பின்னே..தலைப்புக்கு கொஞ்சமாவது ஈடு செய்ய வேனாவா?

மயிலன் said...

ஹேமா said...
//அட...அட...அட உங்களுக்குள்ள இவ்ளோ திறமை இருக்கும்ன்னு நினைக்கவேயில்ல மயிலண்ணே//

ஏது அண்ணனா?
திருக்குறளுக்கு அர்த்தம் சொல்றதால பாப்பையா மாதிரி ஆளுன்னு நெனசுட்டீங்களோ?
நா சின்ன பையன் அக்கா..(ஒரு வெளம்பரம்ம்ம்.. )

மயிலன் said...

நன்றி //NAAI-NAKKS// மரு.சுந்தரபாண்டியன்// வே.சுப்ரமணியன் //

மயிலன் said...

சி.பிரேம் குமார் said...
//கண்ணை உறுத்தும் கருப்பு பின்புலத்தில் இருந்து புதிய தோற்றத்திற்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்//

அடப்பாவி நண்பா, இத முன்னாடியே சொல்லிருக்க கூடாதா?

மயிலன் said...

A.R.ராஜகோபாலன் said...
//மயிலனுக்கு மயிலாசனம் தரத் தூண்டும் பதிவு, வான் புகழ் வள்ளுவத்தை அதன் வளத்தை எளிமையாக தந்த விதம் அருமை நண்பா//

ஹி..ஹி..இதுவரைக்கும் யாரும் அடிக்க வராததே பெரிய விஷயம்..

மயிலன் said...

Philosophy Prabhakaran said...
//செம கான்செப்ட்... மற்ற 132 பதிவுகள் எப்போ வரும்.//

புரிஞ்சு போச்சுய்யா நல்லா புரிஞ்சு போச்சு..அடி வாங்கி தரலாம்ன்னு ப்ளான் பண்ணிட்டே..ஹ்ம்ம்..

மயிலன் said...

Dr.Dheep said...
//அருமையான பதிவு. காதலித்து கரம்பிடித்தவன் என்கிற முறையில், தங்களின் மேல்விளக்கத்தை வழிமொழிகிறேன்.//

ஓ..இதுல இது வேறயா? :))
நன்றி நண்பரே..

மயிலன் said...

ரெவெரி said...
//Dr.ஜொள்ளுவர் கொஞ்சம் ஓவர் தான்..//

உங்க நேர்ம எனக்கு புடிச்சிருக்கு அண்ணே..

மயிலன் said...

நிரூபன் said...
//வலைப் பதிவு டிசைனிங் நன்றாக இருக்கிறது.//

அடிச்சுல்ல மாத்த வெச்சீங்க...:)

//சும்மா ஜோக்கிற்கு சொல்றேனுங்க, கோவிச்சுக வேணாம்//

நா செம்ம கோவத்துல இருக்கேன்...:)

மயிலன் said...

நிரூபன் said...
//எங்கே ஐயா.
பெஞ்சை காணலையே.

மேசை தான் இருக்கிறது போல புலப்படுகிறதே;-)))//வெளங்கலையே நண்பா...!!!???

மயிலன் said...

நிரூபன் said...
//யோவ்..பொண்ணை பார்த்திட்டா மாத்திரம் சரியாகிடுமா?
கொய்யாலே...மேலே சொல்லுவீங்க என்று நினைச்சா
இப்படி பாதியில பரிதவிக்க வைச்சிட்டீங்களே.//

யோவ்..நா வியாதிய போக்குற வழிய சொன்னா நீ வரவழைக்கிற வழிய கேப்ப போல...

நிரூபன் said...

மயிலன் noreply-comment@blogger.com
7:49 AM (2 minutes ago)

to me
மயிலன் has left a new comment on the post "வள்ளுவர் Vs ஜொள்ளுவர்":

நிரூபன் said...
//எங்கே ஐயா.
பெஞ்சை காணலையே.

மேசை தான் இருக்கிறது போல புலப்படுகிறதே;-)))//வெளங்கலையே நண்பா...!!!??? //

நண்பா நம்ம ஊரில பெஞ்சை மேசை என்று தமிழில் சொல்லுவாங்க
நீங்க தமிழ் வள்ளுவர் என்பதால்
தூய தமிழில் மேசை என்று எழுதினேன்.
அவ்வ்வ்வ்வ்வ்

மயிலன் said...

நிரூபன் said...
//ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்

இந்தக் குறளில் புணர்தலுக்கு அர்த்தம் சொல்லாத டாக்குட்டரை கண்டிக்கிறேன்.
அவ்வ்வ்//

இந்த மாதிரிலாம் பேச சொல்லி உனக்கு யாருய்யா சொல்லித்தர்றது? :)))

மயிலன் said...

நிரூபன் said...
//அப்புறமா மிகுதிக் குறளுக்கும் பொழிப்புரை வருமா வாத்யாரே//பொழிப்புரைதானே..பொழிஞ்சு தள்ளிருவோம்...

மயிலன் said...

நிரூபன் said...
//நண்பா நம்ம ஊரில பெஞ்சை மேசை என்று தமிழில் சொல்லுவாங்க
நீங்க தமிழ் வள்ளுவர் என்பதால்
தூய தமிழில் மேசை என்று எழுதினேன்.
அவ்வ்வ்வ்வ//

அடங்கொன்னியா...:))

கோவிந்தராஜ்,மதுரை. said...

" ஜொள்ளுவர்" க்கு வணக்கம் புதிய முயற்சி
தொடருங்கள்

கோவிந்தராஜ்,மதுரை. said...

வீடு சுரேஸ் அவர்களே எனது வேண்டுகோள்
"ஜொள்ளுவர்" நல்ல படமா உருவாக்கி தாருங்கள் (மயிலன் சாயல் வர்றமாதிரி)

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

காதலிப்பவர்களுக்கு திருக்குறள் மூலமா அறிவுரை சொன்ன ஒரே ஆள் நீங்கதான் பாஸ்.பசங்களுக்கு சொன்னீங்க...பொண்ணுங்களுக்கும் ஒரு 10 குறள் சொல்லுங்கப்பா

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

காதலிப்பவர்களுக்கு திருக்குறள் மூலமா அறிவுரை சொன்ன ஒரே ஆள் நீங்கதான் பாஸ்.பசங்களுக்கு சொன்னீங்க...பொண்ணுங்களுக்கும் ஒரு 10 குறள் சொல்லுங்கப்பா

விக்கியுலகம் said...

என்னய்யா இது எல்லாமே ஒரு மாதிரியா இருக்கு...எப்ப பாரு பல்ப் வாங்க முடியாது..ஜொள்ளுவரே!

veedu said...

@கோவிந்தராஜன்
//வீடு சுரேஸ் அவர்களே எனது வேண்டுகோள்
"ஜொள்ளுவர்" நல்ல படமா உருவாக்கி தாருங்கள் (மயிலன் சாயல் வர்றமாதிரி)//

எதுக்கு தமிழ் ஆர்வலர்கள் என்னை கும்மறதுக்கா....?

ராஜி said...

ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே 1330 குறளையும் ஒப்பிச்ச வாண்டுதானுங்க நானும்..
>>>.
தம்பி ஆதாரம் எங்கே?

ராஜி said...

புதிய முயற்சி நல்லாதான் இருக்கு. ஒருவேளை இதுப்போல வழக்குதமிழில் பொருள் சொன்னால் நம்ம பிள்ளைங்கள்லாம் நூத்துக்கு நூறு வாங்குவாங்களோ?!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

template அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

மயிலன் said...

நன்றி கோவிந்தராஜ் மதுரை//ராஜா சார்...

மயிலன் said...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...
//காதலிப்பவர்களுக்கு திருக்குறள் மூலமா அறிவுரை சொன்ன ஒரே ஆள் நீங்கதான் பாஸ்.//

காதலிக்கரவங்களுக்கு மொதல்ல அறிவுற சொன்ன ஆளு நம்ம தலைவர்தான்னு சொல்லாம சொல்லிட்டீங்க...

//பசங்களுக்கு சொன்னீங்க...பொண்ணுங்களுக்கும் ஒரு 10 குறள் சொல்லுங்கப்பா//

விரைவில்..
வெளக்கமாற எடுத்து ரெடியா வெச்சுக்கோங்க...:))

மயிலன் said...

விக்கியுலகம் said...
//என்னய்யா இது எல்லாமே ஒரு மாதிரியா இருக்கு...எப்ப பாரு பல்ப் வாங்க முடியாது..ஜொள்ளுவரே//

காதலின் மறுபெயர் பல்பு என்று வள்ளுவரும் ஃபீல் பன்னாரோ என்னவோ..? :))

மயிலன் said...

ராஜி said...
//ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே 1330 குறளையும் ஒப்பிச்ச வாண்டுதானுங்க நானும்..
>>>.
தம்பி ஆதாரம் எங்கே//என்னக்கா தம்பி மேல இப்புடி ஒரு டவுட்டு?

சாட்சியா ராஜா சார கூப்பிட்டா யாரும் நம்பமாட்டிங்க..(ஹி ஹி..)

அந்த கரையான் கடிச்ச சர்டிஃபிகேட்ட உங்க மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்..

மயிலன் said...

ராஜி said...
//ஒருவேளை இதுப்போல வழக்குதமிழில் பொருள் சொன்னால் நம்ம பிள்ளைங்கள்லாம் நூத்துக்கு நூறு வாங்குவாங்களோ?//

நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்ல..:))

ஹேமா said...

இப்பிடியெல்லாம் எழுதிட்டு இவர் சின்னப்பெடியனாம்.கேட்டுக்கோங்க மக்களே !

மோகன் குமார் said...

சுவாரஸ்யம் !

ஜேகே said...

திருக்குறளுக்கு உரைசேர்த்தவர் பட்டியலில் நிச்சயம் உங்கள் பேர்!! கூடிய சீக்கிரம் ஜெயமோகன் விமர்சனம் வந்தாலும் வரும்!!!

Rishvan said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

அரசன் said...

வள்ளுவரின் குறளை திறம்பட இன்றைக்கு ஏற்றவாறு மனதில் பதியும் படி அதுவும் குறிப்பாக நம்ம பசங்களுக்கு மண்டையில் ஏறும்படி காதலை கலந்து
சொல்லிய எங்களின் இளம் வள்ளுவர் , புதிய ஜோள்ளுவர் (ம்ம்ம்ம் இன்னும் இருக்கு மீதி அப்புறம்.. ஹி ஹி ஹி ) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ...
நீங்க தொடருங்க அப்பதானே என்னை மாதிரி சின்ன பசங்க புரிஞ்சிக்க முடியும் ...

கோகுல் said...

வணக்கம் ஜொள்ளுவரே,

கடைசி பெஞ்சு தான் எனக்கு வேணும் தருவீங்களா?

கோகுல் said...

கமல் ஸ்டையில் விளக்கம் அட அட.

மயிலன் said...

ஹேமா said...
//இப்பிடியெல்லாம் எழுதிட்டு இவர் சின்னப்பெடியனாம்.கேட்டுக்கோங்க மக்களே //பொறப்புலேந்தே அப்படிதான்க்கா... :)

மயிலன் said...

ஜேகே said...
//திருக்குறளுக்கு உரைசேர்த்தவர் பட்டியலில் நிச்சயம் உங்கள் பேர்!!//


குசும்பு...


//கூடிய சீக்கிரம் ஜெயமோகன் விமர்சனம் வந்தாலும் வரும்!!//


இதுல மிரட்டல் வேறயா?

மயிலன் said...

அரசன் said...
//எங்களின் இளம் வள்ளுவர் , புதிய ஜோள்ளுவர் (ம்ம்ம்ம் இன்னும் இருக்கு மீதி அப்புறம்.. ஹி ஹி ஹி//

ரைட்டு...

மயிலன் said...

கோகுல் said...
//வணக்கம் ஜொள்ளுவரே,

கடைசி பெஞ்சு தான் எனக்கு வேணும் தருவீங்களா//


தம்பி..
வந்ததே லேட்டு..இதுல இதுவேணும் அதுவேணும் கேக்கவேண்டியது...
attendance வேற சரியில்ல உனக்கு...
பொங்கலுக்கு நெறைய லீவு எடுத்துருக்க...
அப்பறம் பொண்ணுங்க பெஞ்சுல ஒக்கார வெச்சுருவேன்..சாக்கரத...(ஹி ஹி...)

மயிலன் said...

Rishvan said...
//சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது//

சாயங்காலம் clinic பக்கம் வந்துருங்க...freeதான்...பயப்படாதிங்க...:))

//... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com//

ஏற்கனவே உங்கள் தளத்தில் நான் இணைந்துள்ளேன் நண்பரே...அழைப்பிற்கு எனினும் நன்றி..

மனசாட்சி said...

திருக்குறளுக்கு இப்படி வியக்கம் சொல்லு மண்டையிலே ஏறும் அத விட்டுபுட்டு....நன்றி மருத்துவரே...மீதி குறளையும் சொல்லுங்க

மயிலன் said...

சொல்லிருவோம்...:)))))

veedu said...

"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி

சமுத்ரா said...

Nice
:)
continue...

Democrat said...

1330 குறள்களையும் படித்ததற்கு , படித்து ஒப்பிததற்கு, நல்ல சான்று கரயான் அரித்த சான்றிதழ் அல்ல; பொருத்தமான இடத்தில் பொருத்தமான குறளை எடுத்து இயம்பும் திறனே;
" அரங்கின்றி வட்டாடியற்றே , நிரம்பிய நூல் இன்றி கோட்டி கொளல்"

ஜீ... said...

தலைவா யூ ஆர் கிரேட்! :-)

Gobinath said...

இத இத இதத்தான் எதிர்பாத்தன். நல்ல ரிப்ஸ் பாஸ் அப்பிடியே use பண்ணிக்கிறன்.

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - குறள் விளக்கம் அருமை. ஜொள்ளுவர் எழுதிய விளக்கங்கள் அததனையும் இன்றைய பசங்களுக்குப் பொருந்தும். பெண்களுக்கும் எழுதப் போகிறீர்களா என்ன ? நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா