சகித்தவர்கள்...

7 Mar 2012

நீயும் நானும் கொஞ்சம் மழையும்..சைக்கிள் ரிக்ஷா 
தார்ப்பாய் ஒழுகும் போது
"ஏ..இந்த பக்கம் சாரல் அடிக்குதுடா..
நா அந்த பக்கம் ஒக்காந்துக்கவா?" 
என்று கெ(கொ)ஞ்சி 
சன்னமாக நனைத்துவிடுவாய்..

பள்ளிவளாகத்தில் ஓரமாய் 
மழைநீர் தேங்கியிருக்க 
என் நான்கு-கோடு நோட்டு முழுதும் 
உனக்கான கப்பல்களாக மாறிக்கொண்டிருக்க,
"உன்ன மிஸ் அடிக்கபோறாங்க" 
என்று சொல்லிக்கொண்டே கப்பல்விடுவாய்...

அடைமழை பொழியும் 
நாளொன்றில் அதிகாலை 
அலாரம்போல தொலைப்பேசிடுவாய்,
"நா ஸ்கூலுக்கு போகல..
நீ..?" நான் பதில் சொல்வதற்குள்,
"நீயும் போகாத டா.."

கோடை விடுமுறை பிரிவில் 
சொந்த ஊருக்கு செல்லும் நீ 
"எங்க ஊர்ல மழ பெய்துடா..அங்க?..."
என்றெனை காத்திருப்பில் 
ஏங்கவைப்பாய்,.. 
(மழைக்காக அல்ல..)

பருவம் எய்திய பின்னான 
மழை பருவங்களில் 
உன் துப்பட்டாவின் தலை துவட்டலுக்கென்றே
மழை நின்றால் வழியில் 
மரத்தடியில் காத்திருந்து,
தொடர்ந்ததும் பயணத்தை தொடர்ந்திருக்கிறேன்.. 

வாகனத்தில் என் பின்னமர்ந்து 
பறவை போல் காற்றில் கை விரித்து 
ஊசி ஊசியாய் தூறல் விழும் பொழுதொன்றில் 
"வேகமா ஒட்டு...இன்னும் " என 
நீ உசுப்பியதன் விளைவாய் 
கீழே விழுந்து காயங்கண்டு சிரித்திருக்கிறோம்..  

இப்போதெல்லாம் மழையின் அறிகுறியிலேயே
ஏனோ நான் தலைமறைவானாலும்
என் முனங்கால் தழும்பை 
பார்க்க தூண்டி ஒரு கணம்- மெலிதாய் 
புன்னகைக்கதான் செய்துவிடுகிறது
உன்னுடன் நனைந்த அந்த 
மழைகளின் வாசம்....


----------------------------------------------------------------------------------

காரணம் சொல்லாமல் சென்ற நான் காரணமின்றி திரும்பியிருக்கிறேன்..இடைப்பட்ட நாட்களில் மின்னஞ்சலிலும்,வலைப்பூவிலும்,தொலைப்பேசியிலும் நண்பர்களின் தொடர் அன்பில் உண்மையில் நெகிழ்ந்துதான் போய்விட்டேன்...அனைவருக்கும் நன்றி.. முன்பு போல தொடர்ந்து தொல்லை செய்யாமல், மாதம் ஓரிரு பதிவுகள் மட்டும் எழுத முயல்கிறேன்..

நன்றியுடன்...சி.மயிலன்
---------------------------------------------------------------------------------

 

35 comments:

ராஜி said...

ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள்

ராஜி said...

நா ஸ்கூலுக்கு போகல..
நீ..?" நான் பதில் சொல்வதற்குள்,
"நீயும் போகாத டா.
>>>
ஸ்கூல்லயே லவ்வா? வெளங்கிடும், ஆமா, உன்னை ”கவனிக்காம” உங்க ராஜா சார் என்ன பண்ணிக்கிட்டு இருந்தார்.

சத்தியசீலன் said...

U r always nice !

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//ராஜி said...
நா ஸ்கூலுக்கு போகல..
நீ..?" நான் பதில் சொல்வதற்குள்,
"நீயும் போகாத டா.
>>>
ஸ்கூல்லயே லவ்வா? வெளங்கிடும், ஆமா, உன்னை ”கவனிக்காம” உங்க ராஜா சார் என்ன பண்ணிக்கிட்டு இருந்தார்.

//

அதானே எப்படி கண்டுக்காம இருந்தேன் ? ஹீ ஹீ

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வருகைக்கு வாழ்த்துகள்

அரசன் சே said...

ம்ம்ம் .. வாங்க நண்பரே ,.,வாங்க ..
நல்ல காதல் கவிதையுடன் வருகை புரிந்திருக்கும் உங்களுக்கு என் நன்றிகள்

வீடு K.S.சுரேஸ்குமார் said...

மாதத்திக்கு ஒருமுறையாவது பதிவு போடுங்கள் மயிலன்.....வருகையல்ல எங்கள் காத்திருப்புக்கு பலன்!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

பழைய நினைவுகள்...
கவிதை
மழைநின்றபின்
வரும் மண்
வாசனையைப்போல்...
சுகமாய்...

PREM.S said...

அசத்தலான RE-ENTRY வாழ்த்துக்கள்

PREM.S said...

//பள்ளிவளாகத்தில் ஓரமாய்
மழைநீர் தேங்கியிருக்க
என் நான்கு-கோடு நோட்டு முழுதும்
உனக்கான கப்பல்களாக மாறிக்கொண்டிருக்க,
"உன்ன மிஸ் அடிக்கபோறாங்க"
என்று சொல்லிக்கொண்டே கப்பல்விடுவாய்...//கப்பல் விட்டதால் தான் மருத்துவர் ஆக முடிந்ததா கலக்கல்

திவ்யா @ தேன்மொழி said...

வற்றிவிட்ட அதிர்ச்சி
வற்றிக்கொண்டிருந்த எதிர்பார்ப்பு
வற்றாத நம்பிக்கை..
அனைத்திற்கும் சேர்த்து
நனைந்துவிட்டது மனம்
மழைக்காதலின் சாரலில்..

மகிழ்ச்சி ஆரவாரம்..! :)

ஆமினா said...

அழகான நட்பு

ரீ என்ட்ரிக்கு வாழ்த்துகள்

//ஸ்கூல்லயே லவ்வா?//
ரிப்பீட்டு!

NAAI-NAKKS said...

நான் இப்ப படிக்கல்ல...மைலன்,.....
wE LL TALK ABOUT IT

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

என்ன மயிலா தேர்வெல்லாம் முடிந்ததா ...ஏதோ நினைவுகள் வந்து தொல்லை கொடுக்கிறதோ...எழுத ஆரம்பித்துவிட்டாயே..

Suresh Subramanian said...

nice kavithai... http://www.rishvan.com

கோவை நேரம் said...

அருமை

விச்சு said...

நல்லதொரு கவிதையுடன் மறுபடியும் வந்துள்ளீர்கள். பள்ளி நாட்களை நினைவூட்டுகின்றன. நீங்கள் தொடருங்கள்...

விக்கியுலகம் said...

நல்லாயிருக்கு...

யோவ் மாப்ள அப்படி என்ன உமக்கு எங்க மேல கோவம்...ஏன் இப்படி முரண்டு பிடிக்கற..சீக்கிரம் வாரத்துக்கு ரெண்டாவது போடும்...சொல்லிபுட்டேன்!

மயிலன் said...

நன்றி ராஜி அக்கா..
வலையுலகுல இல்லாத நாள்ல அவாடெல்லாம் கொடுத்து இருக்கீங்க..நன்றி அக்கா
அப்புறம் நா பண்ண school romance எல்லாம் கவனிக்க ராஜா சாருக்கு நேரமில்ல.. ஏன்னா சார் ரொம்ப பிஸி..(வேற ரோமான்ஸ்ல...ஹி ஹி..)

மயிலன் said...

thank u sathya..:)

மயிலன் said...

நன்றி இராஜா சார்../ அரசன் :)

நீங்கள் இருவரும் இட்டிருக்கும் கருத்துரைக்கு அல்ல..பதிவுலகை கைவிட எண்ணியபோது தங்களின் அறிவுரைகளுக்கும் அன்பிற்குமே இந்த நன்றி...

மயிலன் said...

மிக்க நன்றி சுரேஸ் அண்ணே..
திரும்பவும் எழுத ஆரம்பிச்சதும் உங்களுக்கு முதல் குறுஞ்செய்தி அனுப்பினேன்..
ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க பாத்து கமென்ட் போட்டுட்டீங்க..:)

மயிலன் said...

நண்பா prem.. நன்றி..
அசிங்கமான கையெழுத்து தானே மருத்துவர் ஆக முதல் தகுதி.. அதுக்கு தான் 4 lines note-அ கப்பல் விட்டுட்டேன்...:)

மயிலன் said...

நன்றி தோழி திவ்யா..
கொஞ்சம் கடினமான பொழுதுகளை கடக்கும் இவ்வேளையில் "மகிழ்ச்சி" என்று சொல்வதற்காவது இந்த வலைத்தளம் பொறுப்பேற்பதில் உண்மையாய் பெருமை படுகிறேன்..

மயிலன் said...

நன்றி தோழி ஆமீனா..தோழர் suresh subramaniam

மயிலன் said...

நண்பர் naai-nakks..
என்ன சொல்றீங்கன்னு புரியலையே...

மயிலன் said...

@ தென்காசி தமிழ் பைங்கிளி..
தேர்வா? எனக்கா?
தேர்வு இருந்தா பதிவுகள் குறையாது கிளி..
அதிகம் ஆகியிருக்கும்...:)

மயிலன் said...

நன்றி விச்சு நண்பரே...
வலைசரத்தில் அறிமுக படுத்தியிருக்கிரீர்.. நன்றி..

மயிலன் said...

யாரு மேலயும் கோவமில்ல விக்கி மாமா... :)
ஏனோ தெரியல... பதிவுலகு மேல சின்ன கசப்பு..
சிலவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தீர்க்கமாய் இருக்கிறேன்...:)))

மயிலன் said...

நன்றி கோவை நேரம்- jeeva

Anonymous said...

Welcome back Dr Bro...

வரிக்கு வரி சுகம்...

வாழ்த்துக்கள் நண்பரே...

இரா.எட்வின் said...

வருக மயிலன்.

உண்மையசொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி உங்கள் வரவு கண்டுசொன்னால் உங்களது உரை நடை அலாதியானது.

கொஞ்சம் கூடுதலான கவனத்தை அதில் திருப்புங்கள்.

சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி உங்கள் வரவு கண்டு

ஹேமா said...

வந்தீங்களா....சந்தோஷம் !

Philosophy Prabhakaran said...

Welcome back மயிலன்...

உங்க பதிவை நேற்றே ஓடித்துவிட்டேன்... மொபைல் மூலம் படித்ததால் பின்னூட்டம் போட முடியவில்லை...

கொஞ்ச நாள் கேப் விட்டு எழுதுவதாலோ என்னவோ கவிதை வழக்கத்தை விட அருமையாக வந்திருக்கிறது...

சிலர் பதிவுலகில் இருந்து திடீரென விலகுவதும், பின்னர் சில நாட்கள் கழித்து வருவதும் சகஜம் தான்... Be cool...

tamiloviya said...

வணக்கம் அண்ணா ,
தாங்கள் மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி அதுவும் விரைவாக
நல்ல படைப்பாளனின் படைப்புக்களுக்கு ஓய்வு தர நினைக்கலாமா
படைப்புகள் குறைந்தாலும் பயணம் தொடரட்டும் , வாழ்த்துக்கள் .