சகித்தவர்கள்...

15 Mar 2012

அடையாளம் தொலைத்து...அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

        [மீண்டும் பதிவுகளிட தொடங்கும் போது, எழுதாமல் இருந்த இடைவெளியில் நண்பர்கள் எச்சரித்து இருந்தது நினைவில் இருந்து உறுத்தியது..இடைவெளி விட்டால் பின்தொடர்பவர்கள் குறையலாம் என்று சொல்லியிருந்தார்கள்.. ஆனால் திரும்பியதும் எழுதிய முதல் பதிவிற்கு (நீயும் நானும்..கொஞ்சம் மழையும்) கிடைத்த அன்பில் நெகிழ்கிறேன்..நன்றி நண்பர்களே..]


       சமீபத்தில் நான் கடந்துவந்த இரு சம்பவங்கள் (அதிசயமாய்) கொஞ்சம் யோசிக்கத்தான் வைத்துவிட்டது..

சம்பவம் #1 :

        வங்கியொன்றிற்கு "net banking" குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள சென்றிருந்தேன்... வாசலின் அருகே இருந்த ஊழியரிடம் யாரை அணுக வேண்டும் என்று விசாரித்த போது மேலாளர் அறையை நோக்கி விரலை மட்டும் நீட்டினார்..வார்த்தை ஏதும் இல்லை..மேலாளர் சினிமாவிலோ விளம்பரங்களிலோ வருபவரை போல இல்லாமல் சட்டையை 'tuck in' செய்யாமல் மிக சாதாரணமாய் இருந்தார்...பார்க்க மட்டும்.. பென்சிலை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு தாளில் 'டிக்' செய்து கொண்டிருந்தவர் தலையை நிமிராமல் 'என்ன?' என்பது போல புருவம் உயர்த்தினார்.. 'சார், net banking..." என்று நான் இழுப்பதற்குள்..பென்சில் அறையின் கண்ணாடிவழியே வேறொரு counterஐ காட்டியது.. ஒரு "thank u" சொல்வதற்குள் மீண்டும் டிக் செய்ய ஆரம்பித்திருந்தார்.. 


        அவர் காட்டிய பகுதியில் ஒரு பெண் பணக்கட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தாள்.. அவள் நெற்றியின் சிறு சந்தனக்கீற்றை பார்த்ததும் கொஞ்சம் இலகுவான மனது, தலைவகுட்டில் இருந்த குங்குமத்தைப் பார்த்ததும் இறுகிப்போனது..இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த பணத்தையும் எண்ணுவதைப் போல முகத்தை சலிப்பாய் வைத்துக் கொண்டாள்..சில நிமிடங்கள் கடந்து,"உங்களுக்கு...?"என்றாள்.. மறுபடியும் அவளிடமும் நான் இழுக்க..'இங்க யாரு வர சொன்னாங்க..? மேனேஜர்ட்டையே clarify பண்ணிருக்கலாமே..அங்கேயே போய் கேளுங்க.." என்று அவள் சொல்லிமுடிக்கும் முன்பே எனக்கு எரிச்சல் வந்திருந்தது..


      மீண்டும் அந்த கண்ணாடி அறைக்குள் சென்று அந்த கண்ணாடிக்காரரி(னி)டம், "சார், but அவங்க இங்க கேக்க சொல்றாங்க..." என்றதும், "அவங்க section பக்கத்துல net banking பத்தின brochure இருக்கும்..போய் எடுத்து பாத்துக்கோங்க.." என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தார்..கொஞ்சம் நிதானித்துவிட்டு வெளியே வந்து அவ்வாறு எந்த brochure-உம் அங்கு இல்லாத வெறுப்புடன் மீண்டும் கொஞ்சம் வேகமாய்தான் உள்ளே நுழைந்தேன்..கதவின் 'க்ரீச்'சில் அவர் நிமிர்ந்ததும் "அங்க அப்படி ஏதும் இல்ல.."என்றேன்.."அந்த section ல உள்ளவங்ககிட்டயே கேளுங்க..."என்று அவர் பிதற்றுவதற்குள், "சார்..அங்க கேட்டும்... இல்லேன்னா?" என்று 'அன்பே சிவம்' கமல் போல நிதானமாக கோபப்பட்டேன்..கொஞ்சம் தீர்க்கமாய் "என்னவா இருக்கீங்க..?" என்றார்.. "டாக்டர்.. ஏன்?"


      அதன் பிறகு அவர்(ன்) உதிர்த்த வார்த்தைகள்தான் இப்போது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.. "கிளினிக் லாம் வந்தா பேஷண்ட்ட எப்படி அலைய வைக்குறீங்க...அப்படி நெனச்சுக்கோங்க..."


சம்பவம் #2 :


       சென்னையில் இருந்த காலங்களில் எப்போதும் வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதும், சாலை போக்குவரத்து விதிகளுக்கு உரிய அனைத்து தாள்களின் நகலையும் வாகனத்திலேயே வைத்திருப்பதும் வழக்கம்..காரணம் அங்கே பரிசோதனை அடிக்கடி (சமையங்களில் சிக்னலுக்கு சிக்னல்) நடத்தப்படும்.. தஞ்சையைப் பொறுத்தவரை பெரும்பாலும் போக்குவரத்து காவல் அதிகாரியையே பார்த்ததில்லை..தலைக்கவசம் அணியும் பழக்கத்தை விடுத்து வருடங்கள்  இரண்டு ஆகிவிட்டது..வாகன காப்பீடு புதுப்பிக்கப்படவில்லை.. சட்டங்களைக் கொண்டு பயமுறுத்தவில்லை என்றால் அலட்சிய/மெத்தன குற்றங்கள் செய்யும் தொண்ணூறு சதவிகித மனிதர்களில் நானும் ஒருவனே..


       ஒரு நாள் இரவு பதினொரு மணியளவில்,சாலையில் விரைந்து கொண்டு இருக்கும்போது இரண்டு அதிகாரிகள் மடக்கி வழிமறித்தார்கள்..ஒருவர் வண்டி சாவியை திருகி எடுத்துக்கொண்டு ஓரங்கட்ட சொன்னார்.. நான் அதனை செய்வதற்குள் மற்றவர், "பாக்காம, வண்டி நம்பர் சொல்லுங்க" என்றார்.. சொன்னேன்.. திருட்டு பைக்கா என்று கண்டுபிடிக்கிறார்களாம்.. இரண்டு வருடங்கள் நான் கேட்டிராத வார்த்தைகளை நினைவுப்படுத்தினார்கள்.. "லைசன்ஸ்...ஆர்.சி.புக்....இன்சூரன்ஸ்...." என்று அவர்கள் ஒவ்வொன்றாக சொல்ல,லைசன்ஸ் மட்டும் பர்சில் இருப்பது நினைவு வந்து எடுத்துக்கொடுத்தேன்..அதில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் திருட்டு லைசன்ஸ் என்று அவர்களுக்கு தோன்றினால் கூட ஆச்சர்யமில்லை.. 


         "ஹ்ம்ம்..மத்ததெல்லாம்..?" என்றதும், "சாரி சார்..கொண்டுவரல.." என்ற உடனடி பொய்யை சொல்லிவைத்தேன்.. (பழைய நகல்கள்  எங்கே இருக்கிறது என்றே அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்துதான் கண்டுப்பிடித்தேன்..) 


         "எந்த ஊரு registration இது..?" (இதுவரை இல்லாத ஒரு மாற்றம் அவர்கள் பேச்சில் தெரிந்தது...)


         "மயிலாடுதுறை சார்.." (கொஞ்சம் பவ்யமாக..)


         "இங்க எங்க தங்கியிருக்கீங்க..என்ன வேல பாக்குறீங்க?"


         "இங்கதான் GH ல..டாக்டரா இருக்கேன்.."


        "சார்..முன்னாடியே சொல்லக்கூடாதா..? கெளம்புங்க சார்.." அவர் சொல்லும் போதே அடுத்தவர் சாவியை கையில் தந்துவிட்டார்..


        "ரொம்ப தேங்க்ஸ் சார்.."


        "பரவால்ல சார்.. இதுக்கூட செய்யமாட்டோமா..? கெளம்புங்க சார்.." முகம் நிறைய சிரிப்புடன் சொன்னார்.. 


         சம்பவங்கள் இரண்டையும் அசைபோட விழைகையில்...இரண்டிலும் ஒரு துறையின் மீதுள்ள வெறுப்போ அல்லது நன்மதிப்போ தான் என மீது திணிக்கப்பட்டதே தவிர வேறொன்றும் நடந்துவிடவில்லை..அவர்களுக்கும் எனக்கும் இடையில் இதற்கு முன் தனிப்பட்ட முறையில் கசப்போ நல்லுணர்வோ ஏற்பட்டதில்லை.. முதலாமானவர் யாரை பழி தீர்க்கிறார்..?இரண்டாமானவர் யாருக்கு சலாம் போடுகிறார்..? இரண்டிற்குமே நான் உரிமையானவன் இல்லையே.. சாவியை திருப்பியளித்து என்னை அவர் வழியனுப்பிய போது அருகில் பிடிப்பட்டு இருந்த மற்ற மூன்று வாகன உரிமையாளர்கள் பார்வையாலேயே என்னைக் கொஞ்சம் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த தவறவில்லை...


         ஒரு தொழிலைக் கொண்டு ஒருவருக்கு ஒரு முத்திரை குத்துவதே சாதீயத்தின் அடிப்படை.. அதை நாம் இவ்வளவு வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறோமா? இது பகுத்தறிவு சிந்தனை என்பதெல்லாம் இல்லை.. பள்ளியில் படிக்கும் வரை நமக்கென்றே இருந்த அடையாளங்களை ஒரு தொழில் சார்ந்த கல்வியைத் தேர்ந்தெடுக்கும் போதே கொஞ்சமாய்  தொலைத்துவிடுகிறோம்.. கல்வி முடித்து அதற்கு சம்பதமாகவோ இல்லாமலோ ஒரு தொழிலைத் தொடங்கி இந்த சமுதாய சந்தைக்குள் நுழையும்போது ஒட்டு மொத்த தனி மனித அடையாளத்தையும் இழக்கிறோம்.. இந்த நிலை பொது சமுதாயத்தில் மட்டுமில்லை..என்னுடன் பள்ளியில் எட்டு வருடங்கள் ஒன்றாக படித்த நண்பன் ஒருவன்,நீண்ட நாட்களுக்கு பிறகு facebook உதவியுடன் கண்டுபிடித்து உரையாட முற்படும்போது,அவனிடம் இருந்து வந்த முதல் வரி..


          "hi mayilan,
           hru?
           shall i call u with 'da'? "


      அவ்வளவு நெருங்கி பழகிய நண்பன் என்னுடைய பழைய அடையாளங்களை ஒரே கேள்வியில் கிழித்துவிட்டு எதற்கோ ஒரு புது போர்வையை போர்த்த விழைகிறான்.. 
       இன்று நாம் அனைவரும் உண்மையான நாமாகவே உணரப்படுவதில்லை.. எங்கோ ஏதோ வாழ்வியலுக்கான ஒரு தேடலில் நாம் கடந்து வந்த வழிகளில் நமக்கான அடையாளங்களை தொலைத்துவிட்டு, நாம் மேற்கொள்ளும் கல்வியோ, செய்யும் தொழிலோ தரும் ஒரு போர்வையுடன் அடுத்தவர்கள் கண்ணில் மந்தை மந்தைகளாக தெரிகிறோம்.. எப்பேர்ப்பட்ட போர்வை நம்மை வகை படுத்தினாலும், நகையுணர்வு, முன்கோபம், ஆணவம், பொறாமையுணர்வு, அன்புள்ளம்...போன்ற பல கலவையான நமக்கே உரித்தான அடையாளங்களைத் தொலைத்து நிற்பதில் இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிர்வானமானவர்களே...


நன்றியுடன்..சி.மயிலன்

34 comments:

NAAI-NAKKS said...

உண்மைதான் மைலன்.....

PREM.S said...

எங்க பேங்க் வாங்க பாஸ் என்ன சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள்

வீடு K.S.சுரேஸ்குமார் said...

Net Banking ஓப்பன் செய்த போது நான் பட்ட பாடு இருக்கே....யம்மா!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
யோவ்! நக்ஸ் மயிலன் என்கிற அழகான பெயரை இப்படியாய்யா கொலை செய்வே....

Anonymous said...

avvvvvvvvvvvvvvv...

நல்ல எழுதிப் போட்டு இருக்கீங்க அண்ணா ...வாழ்த்துக்கள்

Anonymous said...

இரண்டு துறையிலுமே மிக நெருங்கிய சொந்தங்கள்...அவர்களை புண்படுத்தாமல்...

நல்ல பாடம் தரும் அனுபவங்கள் வைத்தியரே...

உங்களுக்கே இந்த நிலையா?

அபி said...

நீங்க சொல்றது சரிதான் இங்கு மனிதன் அவன் செய்யும் தொழிலை வைத்தே எடை போடபடுகிறார்கள் வீட்டு வாடகையில் தொடக்கி கையுட்டு வரை எல்லாம் தொழிலை வைத்தே நிர்ணயக்க படுகிறது

Visu said...

I agree with the incidents #1 & #2.. 100% true..

கோகுல் said...

ஒருத்தருக்கு ஒரு தொழிலின் மீது இருக்கும் விருப்போ,வெறுப்போ அவருக்கு சம்பந்தமில்லாத,அந்த தொழில் செய்பவரிடம் காட்டப்படுவது தவிர்க்க முடியாது தான்.நாம எல்லோருமே சுடுபாலை குடித்த தெனாலிராமனின் பூனையாகதான் இருக்கிறோம்.

விச்சு said...

என்ன செய்வது? நிறைய விசயங்களை சகித்துக் கொண்டுதான் போக வேண்டியுள்ளது.

விக்கியுலகம் said...

உண்மை முகம் தொலைந்து போய் வருடங்கள் பல ஆயிற்று!

suryajeeva said...

யார் மீது கோபமோ அவர்கள் மீது காட்டாமல் உள்ளுக்குள் பதுக்கி வைப்பதால் வரும் புகைச்சல் இது, முடிவில் யார் மீதோ உள்ள கோபம் யார் மீதோ பாய்கிறது... அதே போல் பாராட்டும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டாமல் கௌரவம் பார்ப்பதால் வரும் குற்ற உணர்வு, வேறு யாரையோ பாராட்ட தூண்டுகிறது... மனதில் உள்ளதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டாமல் யாருக்காக இந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று கேட்க தோன்றுகிறது...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

யாருக்காக வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்று ஒரு நிமிடம் யோசித்தாலே பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது. மற்றவர்கள் நமக்கென்ன மரியாதையை வழங்குகிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தால் வாழ்கை கசக்க ஆரம்பித்துவிடும்.முடிந்தவரை அனைவரையும் மதிக்கஎல்லோரும் தெரிந்து கொண்டாலே போதுமானது.நல்ல பதிவு மயிலா ..பதிவுகள் தொடரட்டும்..

அரசன் சே said...

மனிதன் என்ற தகுதியை வைத்து பாராமல் அவர்கள் சார்ந்த உத்தியோகத்தை வைத்து தரம் பிரிப்பதும் , அவர்களை போற்றுவதும் இந்த உலகத்தில் சர்வ சாதரணாமாக நடையில் உள்ளது நண்பரே ..இந்நிலை மாற வேண்டும் இல்லை மாற்ற வேண்டும் .. சக மனிதனை புண் படுத்தி வாழ்வதில் என்ன சுகம் உள்ளது ...

அப்புறம் அந்த வங்கி மட்டும் இல்லை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என்று மார்தட்டிக்கொள்ளும் பல வங்கிகள் இப்படி தான் செயல் படுகின்றன ..
சில வங்கிகளில் மட்டுமே சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் வேலை எளிதில் முடிகின்றது ...

உங்களின் பகிர்வுக்கு என் நன்றிகள் ..

ராஜி said...

பல இடங்களில் இப்படித்தான் இருக்குது. இதை நமக்கே தெரியாம சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

திவ்யா @ தேன்மொழி said...

தனது நிர்வாணத்தை (சுயரூபத்தை) பிறர் பழித்துவிடக்கூடுமென்று அஞ்சியே, பலர் தமக்குப் போர்த்தப்படும் போர்வையை விலக்க முற்படுவதில்லை..! பிறர் நமக்குப் போர்த்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். தனக்குத் தானே போர்வைகளும் (சால்வைகளும்) சுற்றிக் கொண்டு திரிகிறவர்களை எந்தப் குற்றப்பிரிவில் சேர்ப்பது..!

vicky said...

:-) ;-)

prasjeevs said...

மயிலன் அழகான பதிவு! வெளியில் மட்டுமல்ல நாம் உறவுகள் கூட நம் மீது ஒரு சாயத்தை பூசி, அதே வண்ணத்தில் நம்மை பார்க்க ஆசைப்படும்! அந்த வண்ணம் நமக்கு பிடிக்காதிருந்தாலும் !!! நமது நிஜமான நிறத்தை தொலைத்து வாழ்வதில் என்ன பயன்?

மயிலன் said...

<>

நன்றி NAKKS...ஆனால் நண்பர் சுரேஸ்குமார் சுட்டியது போல "மயிலன்" என்பதை வேறொன்றாய் திரித்துவிட்டீர்கள்...:)

மயிலன் said...

<>

இப்புடி ஒரு ஆளத்தான் தேடிட்டு இருக்கேன்.. சிக்கிட்டீன்களா? :)

மயிலன் said...

<>

ஆமா தல..

மயிலன் said...

கலை said...
<>

நன்றி தங்கச்சி...:)

மயிலன் said...

ரெவெரி said..
<>

இந்த போர்வைதான் வேணாம் ன்னு சொல்றேன்...:)

மயிலன் said...

அபி said...
<>

தனிமனித ஒழுக்கம் மேம்பட வேண்டுமெனில் இந்த தொழில் சார்ந்த பாகுபாடு ஒழிய வேண்டும்

மயிலன் said...

@visu..

thank u so much:)

மயிலன் said...

கோகுல் said...
//.நாம எல்லோருமே சுடுபாலை குடித்த தெனாலிராமனின் பூனையாகதான் இருக்கிறோம்//

மச்சி புதுசா கொழப்பாத.. அந்த கத என்னன்னு மொதல்ல சொல்லிடு...:)

மயிலன் said...

விச்சு said...
//என்ன செய்வது? நிறைய விசயங்களை சகித்துக் கொண்டுதான் போக வேண்டியுள்ளது//

சகிப்பு தன்மை தான் நம்மை இப்படி ஆக்கிவிட்டது...

மயிலன் said...

விக்கியுலகம் said...
//உண்மை முகம் தொலைந்து போய் வருடங்கள் பல ஆயிற//

ஆமாமா.. அதான் அம்பேத்கர் போட்டோவ பாத்தாலே தெரியுதே... ஹி ஹி,,,

மயிலன் said...

suryajeeva said...
// மனதில் உள்ளதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டாமல் யாருக்காக இந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று கேட்க தோன்றுகிறது.//

கேட்டால் மனங்களை வெல்லும் முயற்சி என்று எளிமையான பூசல் பதிலாய் வரும்...

மயிலன் said...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...
//யாருக்காக வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்று ஒரு நிமிடம் யோசித்தாலே பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது.//

அச்சச்சோ..

//முடிந்தவரை அனைவரையும் மதிக்கஎல்லோரும் தெரிந்து கொண்டாலே போதுமானது.//

இது நல்லா இருக்குதான் கிளி.. ஆனா நடுநிலைக்கு அப்பாற்பட்டது..

மயிலன் said...

அரசன் சே said...
//மனிதன் என்ற தகுதியை வைத்து பாராமல் அவர்கள் சார்ந்த உத்தியோகத்தை வைத்து தரம் பிரிப்பதும் , அவர்களை போற்றுவதும் இந்த உலகத்தில் சர்வ சாதரணாமாக நடையில் உள்ளது நண்பரே .//

சர்வசாதரணமாக அதனை நாம் ஏற்று கொண்டு விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும் நண்பரே...

மயிலன் said...

ராஜி said...
//பல இடங்களில் இப்படித்தான் இருக்குது. இதை நமக்கே தெரியாம சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம்//

அங்கதான் அக்கா தப்பு பண்றோம்..

மயிலன் said...

திவ்யா @ தேன்மொழி said...
// பிறர் நமக்குப் போர்த்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். தனக்குத் தானே போர்வைகளும் (சால்வைகளும்) சுற்றிக் கொண்டு திரிகிறவர்களை எந்தப் குற்றப்பிரிவில் சேர்ப்பது..//

நீ ஏதும் அரசியல் பேசலையே? ...:)

மயிலன் said...

vicky said...
//:-) ;-)//

??????

மயிலன் said...

prasjeevs said...
// அந்த வண்ணம் நமக்கு பிடிக்காதிருந்தாலும் !!! நமது நிஜமான நிறத்தை தொலைத்து வாழ்வதில் என்ன பயன்//

தனிப்பட்ட அனுபவம் எனக்கும் இருக்கிறது அண்ணா...