சகித்தவர்கள்...

20 Mar 2012

அந்த கிராமத்து செம்மண் சாலையில்...

இடைவெளி 
பல வருடம் கழித்து 
சொந்த கிராமத்திற்கு 
சென்றிருந்த பொழுதொன்றில்..

சிற்றுந்தில் இருந்து 
இறங்கியதும் 
அந்த பழைய செம்மண் சாலை 
தார் கம்பளம் விரித்து வரவேற்றது..
நடக்கலாகினேன்.. 

போர்செட்டு தண்ணீர் 
வாய்க்கால் வரப்பென இருந்த 
விளைநிலங்கள் பல 
மாடி வீடுகளைத் 
தாங்கி நின்றன..

சிறுவயதில் தாத்தா
தோளில் ஏறிச்சென்று 
தேநீர் அருந்தும் 
'மணி'கடை இப்போது 
மளிகை கடையாகிவிட்டது..

தேன்மிட்டாய் 
ஹார்லிக்ஸ் மிட்டாய் 
இலந்தவடை விற்கும் 
பாப்பாத்தி கிழவியை 
ஹை-ஸ்கூல் வாசலில் 
காணவில்லை...இறந்திருக்கலாம்...


அரைக்கால் சட்டையுடன் 
பார்த்த நண்பர்கள் 
அடர்மீசை, கரை வேஷ்டி 
துபாய் சென்ட் என 
வேறொரு வாசத்தில் இருந்தனர்..

கொடிமரத்து தெருமுனையில் 
மரத்தடியில் முடி திருத்தும்
'பக்கிரி'அண்ணன் 
பக்கிரி சலூன் 
ஆரம்பித்துள்ளார்..

வீரனார் கோவிலுக்கு 
வடக்கே இருக்கும் 
நாவல்மரத்தைக் காட்டி 
பெருசுகள் சொல்லியிருந்த 
முனிக்கதைகள் இப்போது 
சிரிப்பை வரவைத்தது..

குளித்தபின் 
துவட்டிய துண்டால் 
மீன் பிடித்து விளையாடிய 
குளத்தில் இன்று 
மீனல்ல..நீர்க்கூட இல்லை..

        தேடாமலே
        மாற்றங்கள் கண்டுப்பிடித்து
        கொண்டிருந்த மனதிற்கு..

வயதிற்கு வந்திருந்த 
அடையாளம் தவிர்த்து 
எவ்வளவு தேடியும் 
எந்த மாற்றமும் 
காணமுடியவில்லை..

வீட்டை நெருங்கியதும், 
எனைக்கண்டு 
"அத்தான்" என்று 
ஓடிவந்து கட்டிக்கொண்ட 
வெள்ளந்தி அத்தைமகளிடம் மட்டும்..


(புகைப்படம்- பிரபா ஒயின்ஷாப் 19032012 உபயம் )


37 comments:

NAAI-NAKKS said...

nice,,...
and also the still...

ராஜி said...

இந்த வார லீவுக்கு அத்தை வீட்டுக்கு போனீங்களா?!

ராஜி said...

நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்ல..அதனால திட்டனும்ன்னு தோனுனாலும் திட்டிடுங்க..
>>>
உங்களை திட்டுறதுக்கும் நாலு பேர்க்கு நல்லது நடக்குறதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.

gigily said...

mayilan has got talent....in excess:-)

gigily said...

mayilan has got talent.............in excess:-)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை .. (நான் போட்டோவை சொல்லல )

விமலன் said...

நல்ல ஈரமான பதிவு.என்ன மாறினாலும் சிலவிஷயங்கள் வாழ்க்கையில் மாறாமல்/

விச்சு said...

பாப்பாத்தி கிழவி போன்ற பழைய கிராமத்து நல்ல விசயங்களை இழந்துதான் விட்டோம்.

திவ்யா @ தேன்மொழி said...

நவீனமும், நாகரீகப் பூச்சும் புறத்திற்கு தானே..! அகத்திற்கு அல்லவே..!

Philosophy Prabhakaran said...

கவிதை பிரமாதமா இருக்கு...

போட்டோ நானே கூகிள்ல இருந்து சுட்டதுதான்... உபயம்னு என் பெயரை போட்டே ஆகணுமா...?

PREM.S said...

அத்தை மகள் மாறாமல் இருக்க சந்தோசம் தான் உங்களுக்கு

Esther sabi said...

mmmmm eatho nalla irukiringale athe santhosam

வீடு K.S.சுரேஸ்குமார் said...

பார்ரா இந்த ஆளு அத்தை புள்ளைய கரைக்ட் பண்ணிட்டாரு....

வீடு K.S.சுரேஸ்குமார் said...

மாற்றங்களில் காணமல் போவது இயற்கை மட்டுமே பாப்பாத்தி கிளவி போல....

அரசன் சே said...

நாளுக்கு நாள் மாற்றம் கண்டு கொண்டிருக்கின்றது ..
நகரத்தில் அசுர வேகம்..
கிராமத்தில் வேகம் குறைவு ..

உங்களுக்கு வாய்த்த அத்தை மகள் நல்லவங்க போலிருக்கு ..
எனக்கும் தான் ஒருத்தி இருக்கா ... !!!?? ]
கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பா

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

எனக்கு மாமா பையன்,உனக்கு அத்த பொண்ணா..நடத்து நடத்து..

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

எனக்கு மாமா பையன்,உனக்கு அத்த பொண்ணா..நடத்து நடத்து..

ananthu said...

ஆட்டோக்ராப் அருமை !

ananthu said...

கடவுளையும் கனக்க வைக்கும் கவிதை !

Anonymous said...

Sweet...

மயிலன் said...

NAAI-NAKKS said...
//nice,,...
and also the still..//

thank u..:))

மயிலன் said...

ராஜி said...
//இந்த வார லீவுக்கு அத்தை வீட்டுக்கு போனீங்களா?!//

அட போங்கக்கா.. சும்மா கடுப்பேத்தாம...:((

//உங்களை திட்டுறதுக்கும் நாலு பேர்க்கு நல்லது நடக்குறதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்//

திட்டுநிங்கன்னா கொஞ்சம் நல்லா எழுத முயற்சி பண்ணுவேன்.. அதான்..

மயிலன் said...

gigily said...
//mayilan has got talent....in excess:-)//

wondered who this gigily is...its u venky ji.. thank u:))

மயிலன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//அருமை .. (நான் போட்டோவை சொல்லல )//

நீங்கதான் நாடு போற்றும் நல்லவருன்னு ஊருக்கே தெரியுமே...ஹி ஹி...

மயிலன் said...

விமலன் said...
//நல்ல ஈரமான பதிவு..என்ன மாறினாலும் சிலவிஷயங்கள் வாழ்க்கையில் மாறாமல்//

அப்புடிங்க்றீங்க...???

மயிலன் said...

விச்சு said...
//பாப்பாத்தி கிழவி போன்ற பழைய கிராமத்து நல்ல விசயங்களை இழந்துதான் விட்டோம்//

ஆமா பாஸு.. கெழவி ஆனா கெட்ட கெட்ட வார்தையிலே திட்டும்..:))

மயிலன் said...

திவ்யா @ தேன்மொழி said...
//நவீனமும், நாகரீகப் பூச்சும் புறத்திற்கு தானே..! அகத்திற்கு அல்லவே..!//

ரைட்டு விடு...:)

மயிலன் said...

Philosophy Prabhakaran said...
//கவிதை பிரமாதமா இருக்கு...//

நன்றி நண்பா..

//போட்டோ நானே கூகிள்ல இருந்து சுட்டதுதான்... உபயம்னு என் பெயரை போட்டே ஆகணுமா...?//

ஆனா உன்னோட ஒயின் ஷாப்லதானே இந்த சரக்கு எனக்கு கெடச்சுது... அதான்...

மயிலன் said...

PREM.S said...
//அத்தை மகள் மாறாமல் இருக்க சந்தோசம் தான் உங்களுக்கு//

ஏதோ ஒரு பொகச்சல் தெரியுதே...:))

மயிலன் said...

Esther sabi said...
//mmmmm eatho nalla irukiringale athe santhosam//

nanri..:))

மயிலன் said...

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//பார்ரா இந்த ஆளு அத்தை புள்ளைய கரைக்ட் பண்ணிட்டா//

இந்த கல்யாணம் ஆன ஆளுங்கெல்லாம் நம்ம தளத்துக்கு வர்றத எப்புடி தட பண்றது...?

//மாற்றங்களில் காணமல் போவது இயற்கை மட்டுமே பாப்பாத்தி கிளவி போல....//

அப்போ என்னோட அத பொண்ணு செயற்கையா? ங்கொய்யால.. டென்ஸன் ஆயிடுவேன்...:))

மயிலன் said...

அரசன் சே said...
//நாளுக்கு நாள் மாற்றம் கண்டு கொண்டிருக்கின்றது ..
நகரத்தில் அசுர வேகம்..
கிராமத்தில் வேகம் குறைவு ..//

மிகச்சரி நண்பா..

//உங்களுக்கு வாய்த்த அத்தை மகள் நல்லவங்க போலிருக்கு ..
எனக்கும் தான் ஒருத்தி இருக்கா ... !!!?? ]//

அரசன் அத்தை மகள் எங்கிருந்தாலும் இந்த செய்தியை கேட்க ஓடோடி வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்...:))


//கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பா//

நன்றி நண்பா...

மயிலன் said...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...
//எனக்கு மாமா பையன்,உனக்கு அத்த பொண்ணா..நடத்து நடத்து..//

மாமா பொன்னுலாம் இருக்கு... ஆனா இஸ்கூல் படிக்கிற வயசு :))

மயிலன் said...

ananthu said...
//ஆட்டோக்ராப் அருமை !//

நன்றி நண்பா..

ரீ என்ட்ரி க்கு பிறகு உங்களின் முதல் கருத்துரை..மிக்க நன்றி...:)


//கடவுளையும் கனக்க வைக்கும் கவிதை !//

இப்புடி பெரிய வார்த்தையெல்லாம் பேசி என்ன கொழப்பாதிங்க...:)))

மயிலன் said...

ரெவெரி said...
//Sweet...//

thank u bro..:)

அபி said...

ஆமா தல எங்க ஊருகூட மாறிபோச்சு ஆனா பழைய நினைவுகள் மட்டும் அப்படியே இருக்கு.

vel said...

kavithail mann vaasanai veecu kerathu....boos ...All the best