சகித்தவர்கள்...

25 Apr 2012

உன்னைத் தாண்டி வருவேனா?எதற்கெடுத்தாலும்
வியப்புதான் உனக்கு...!

மரத்தின் உறவறுந்த செவ்விலை
மண்ணைத் தொடும்வரை சுழல்வதும்,
வலுவில்லா கைகளுடன்
பாட்டி உடைத்திடும் பாக்குகொட்டையும்,
தேங்கிக்கிடக்கும் மழைநீரில்
தொட்டு குளிக்கும் சிறுகுருவியும்,
அகண்ட ஆலமரத்தின்
அசையாமல் தொங்கும் விழுதுகளும்,
மிதக்கும் பெருங்கப்பலும்
மூழ்கிடும் சிறு ஊசியும்,
இப்படியாக இன்னும் பல....

எதற்கெடுத்தாலும்
வியப்புதான் உனக்கு...!

உன்னைத் தாண்டிய ஒன்றை
எங்கும் காண முடியாத
ஏதுமற்ற நிலையில்
'நீ' எனும் உலகத்தோடு
முற்றிலுமாய்
முடிந்து போகிறது
என் அத்தனை வியப்பும்...11 Apr 2012

தேவதை பிம்பங்கள்...உன் சீருடை
சிறைபிடித்த
என் மனதை-
இதுவரை வேறெந்த
சுடிதாராலும்
தாவணியாலும்
ஜாமீனில்
மீட்டெடுக்க
முடியவில்லை..


கோவில் வாசலில் நிற்கும்
கருஞ்சாம்பல் நிற ஸ்கூட்டியும்
கிழவியின் அர்ச்சனைத்தட்டு
கடை எல்லைக்குள் கிடக்கும்
ஒரு சோடி வெள்ளிசரிகை செருப்பும்
தெய்வம் ஒன்று கோவிலுக்கு
வந்திருப்பதற்கான அறிகுறிகள்.நீ சிக்கெடுத்துவிட்டு
வீசியெறிந்து செல்லும்
சீப்பினில்
கொத்து கொத்தாய்
பின்னிக்கிடக்கிறது
என் காதல்..
அஃறினை பொருளைக்
கண்டும் பொறாமைப்படும்
என் ஆற்றாமையை
எனக்கு உணர்த்தியது
உன்னுடைய அந்த
லாங்-சைஸ் நோட்டு
மட்டும்தான்..