சகித்தவர்கள்...

11 Apr 2012

தேவதை பிம்பங்கள்...



உன் சீருடை
சிறைபிடித்த
என் மனதை-
இதுவரை வேறெந்த
சுடிதாராலும்
தாவணியாலும்
ஜாமீனில்
மீட்டெடுக்க
முடியவில்லை..


கோவில் வாசலில் நிற்கும்
கருஞ்சாம்பல் நிற ஸ்கூட்டியும்
கிழவியின் அர்ச்சனைத்தட்டு
கடை எல்லைக்குள் கிடக்கும்
ஒரு சோடி வெள்ளிசரிகை செருப்பும்
தெய்வம் ஒன்று கோவிலுக்கு
வந்திருப்பதற்கான அறிகுறிகள்.



நீ சிக்கெடுத்துவிட்டு
வீசியெறிந்து செல்லும்
சீப்பினில்
கொத்து கொத்தாய்
பின்னிக்கிடக்கிறது
என் காதல்..




அஃறினை பொருளைக்
கண்டும் பொறாமைப்படும்
என் ஆற்றாமையை
எனக்கு உணர்த்தியது
உன்னுடைய அந்த
லாங்-சைஸ் நோட்டு
மட்டும்தான்..

22 comments:

மகேந்திரன் said...

காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது
நண்பரே..

ராஜி said...

இவன் இம்சை தாங்கலைப்பா. ஹலோ மிஸ்டர் ராஜா சார் வீட்டுல சொல்லி இவனுக்கு முதல்ல அந்த பொண்ணை கட்டி வைக்க ஏற்பாடு பண்ணுங்க சார்.

தினேஷ்குமார் said...

காதல் ரசம் சொட்ட அருந்தும் மருந்தும் அமுதமாய்........

வீடு சுரேஸ்குமார் said...

தம்பி! கோயிலுக்கு பேகிறது இதுக்குதானா......

வீடு சுரேஸ்குமார் said...

அடச்சே...! போகிறது இதுக்குத்தானா?ஹிஹி!

ரெவெரி said...

எப்பவாவது வரும் தென்றல் போல திடீரென்று வந்து போகின்றன மயிலரின் கவிதைகள்...

நலமா(?) மருத்துவரே...? (Oxymoron)

அது என்ன கருஞ்சாம்பல் நிற ஸ்கூட்டி...
உங்க ஊர்ல இருக்கிறதே ரெண்டு கருஞ்சாம்பல் நிற ஸ்கூட்டி தான்..ஆளை கண்டுபிடிக்க மாட்டோமா...-:)

மயிலன் said...

மகேந்திரன் said...
//காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது
நண்பரே..//

என்னைக்கு சுனாமி வர போகுதுன்னு தெரியல.. கல்யாணத்த சொல்றேன்...:)

மயிலன் said...

ராஜி said...
//இவன் இம்சை தாங்கலைப்பா. ஹலோ மிஸ்டர் ராஜா சார் வீட்டுல சொல்லி இவனுக்கு முதல்ல அந்த பொண்ணை கட்டி வைக்க ஏற்பாடு பண்ணுங்க சார்.//

என்னா ஒரு வில்லங்கம்...? சரி உங்க புன்னியத்துலயாவது அந்த சம்பவம் நடக்கட்டும்... :))

மயிலன் said...

தினேஷ்குமார் said...
//காதல் ரசம் சொட்ட அருந்தும் மருந்தும் அமுதமாய்........//

உடம்பு ஏதும் சரியில்லையா அண்ணே..? :))

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//தம்பி! கோயிலுக்கு பேகிறது இதுக்குதானா......//

பின்ன.. இருட்டுல யோக்கியனுக்கு என்ன வேல...? ஹி ஹி...

மயிலன் said...

ரெவெரி said...
//எப்பவாவது வரும் தென்றல் போல திடீரென்று வந்து போகின்றன மயிலரின் கவிதைகள்...//

மயிலர்ர்ர்ரர்ர்ர்ர் இல்லே அண்ணே...:)

//நலமா(?) மருத்துவரே...? (Oxymoron)//

இந்த கூற்று oxymoron வகையறா அல்ல நண்பரே.. மருத்துவர்களுக்குதான் அதிக நோய் ஏற்படும் வைப்பு உள்ளது.. :)) இன்றைய நிலையில் அடியேன் நலம்...

மயிலன் said...

//அது என்ன கருஞ்சாம்பல் நிற ஸ்கூட்டி...
உங்க ஊர்ல இருக்கிறதே ரெண்டு கருஞ்சாம்பல் நிற ஸ்கூட்டி தான்..ஆளை கண்டுபிடிக்க மாட்டோமா...-:)//

@ ரெவெரி : தல... யாரும் நோட் பண்ணாத மேட்டர நீங்க மட்டும் நோட் பண்ணிடிங்களே... விடுங்க... நாம சமாதானமா போயிருவோம்...:)

ராஜி said...

இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் தம்பி

அரசன் சே said...

உன் சீருடை
சிறைபிடித்த
என் மனதை-
இதுவரை வேறெந்த
சுடிதாராலும்
தாவணியாலும்
ஜாமீனில்
மீட்டெடுக்க
முடியவில்லை..//

உண்மையாக இருக்குமோ?
அப்படி இருந்தால் என் பெரிய வாழ்த்துக்கள்

அரசன் சே said...

கோவில் வாசலில் நிற்கும் கருஞ்சாம்பல் நிற ஸ்கூட்டியும் கிழவியின் அர்ச்சனைத்தட்டு கடை எல்லைக்குள் கிடக்கும் ஒரு சோடி வெள்ளிசரிகை செருப்பும் தெய்வம் ஒன்று கோவிலுக்கு வந்திருப்பதற்கான அறிகுறிகள். //

என்ன நடக்குது இங்கே...
தேவதை இங்கே தெய்வமா ?
நடத்துங்க எசமான் நடத்துங்க ,,

அரசன் சே said...

நீ சிக்கெடுத்துவிட்டு வீசியெறிந்து செல்லும் சீப்பினில் கொத்து கொத்தாய் பின்னிக்கிடக்கிறது என் காதல்.. //

நச்சென்ற வரிகள் ..
வாழ்த்துக்கள்

அரசன் சே said...

அஃறினை பொருளைக் கண்டும் பொறாமைப்படும் என் ஆற்றாமையை எனக்கு உணர்த்தியது உன்னுடைய அந்த லாங்-சைஸ் நோட்டு மட்டும்தான்.. //

நல்லா நோட் பண்ணிருக்கிங்க ...தல ...வாழ்த்துக்கள்

Ramasubramaniam said...

http://vazhithunai.blogspot.in/2012/04/blog-post.html

Nice post

மயிலன் said...

மிக்க நன்றி நண்பா...

//என்ன நடக்குது இங்கே...
தேவதை இங்கே தெய்வமா ?
நடத்துங்க எசமான் நடத்துங்க ,,//

நாத்திகனின் தெய்வம்...:)

மயிலன் said...

thank u ramasubramaniam :)

மாலதி said...

kaathalil puthiya konam sirantha kvithai parattukal

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - கவிதை அருமை. சுடிதார் தாவனீயால் முடியாததைச் செய்யும் சீருடையின் சிறப்பு - ஸ்கூட்டியும் செருப்பும் கொடுக்கும் சிக்னல்கள் - சீப்பில் பின்னும் காதல் - கொடுத்து வைத்த லாங் சைஸ் நோட்டின மீது பொறாமை - ஆகா ஆகா மிக மிக இரசித்தேன் - நட்புடன் சீனா