சகித்தவர்கள்...

25 Apr 2012

உன்னைத் தாண்டி வருவேனா?எதற்கெடுத்தாலும்
வியப்புதான் உனக்கு...!

மரத்தின் உறவறுந்த செவ்விலை
மண்ணைத் தொடும்வரை சுழல்வதும்,
வலுவில்லா கைகளுடன்
பாட்டி உடைத்திடும் பாக்குகொட்டையும்,
தேங்கிக்கிடக்கும் மழைநீரில்
தொட்டு குளிக்கும் சிறுகுருவியும்,
அகண்ட ஆலமரத்தின்
அசையாமல் தொங்கும் விழுதுகளும்,
மிதக்கும் பெருங்கப்பலும்
மூழ்கிடும் சிறு ஊசியும்,
இப்படியாக இன்னும் பல....

எதற்கெடுத்தாலும்
வியப்புதான் உனக்கு...!

உன்னைத் தாண்டிய ஒன்றை
எங்கும் காண முடியாத
ஏதுமற்ற நிலையில்
'நீ' எனும் உலகத்தோடு
முற்றிலுமாய்
முடிந்து போகிறது
என் அத்தனை வியப்பும்...26 comments:

Anonymous said...

கவிதை கவிதை !!!!


சுப்பரா இருக்கு அண்ணா

Anonymous said...

"உன்னைத் தாண்டி வருவேனா?"///////////


நீங்க என்னா ஸ்போர்ட்ஸ் மேனா?'

Anonymous said...

"உன்னைத் தாண்டி வருவேனா?"/////////


கண்டிப்பாய் தாண்டுவீங்க அண்ணா !!

வாழ்த்துக்கள்

PREM.S said...

ம்ம் உங்களுக்கு அவுங்க தான் வியப்பா அருமை

ரெவெரி said...

Too good Dr.Love...

Esther sabi said...

ம்ம்ம் அருமை நிச்சயமாய் தாண்டுவீர்கள் மயிலன் அண்ணா

விக்கியுலகம் said...

ஹாஹா..வியப்பு...நடத்துங்கோ!

ராஜி said...

எதற்கெடுத்தாலும்
வியப்புதான் உனக்கு...!
>>
உன்னைலாம் லவ் பண்ணா வியக்காம எப்படி இருக்க முடியும்?!

Muruganandan M.K. said...

"..மரத்தின் உறவறுந்த செவ்விலை
மண்ணைத் தொடும்வரை சுழல்வதும்,
வலுவில்லா கைகளுடன்
பாட்டி உடைத்திடும் பாக்குகொட்டையும்,.."
அருமையாக இருக்கிறது.
எனக்கு கவிதை வியப்பாக இல்லை
என்னோடு என் மனத்தோடு ஒன்றிய நினைவுகளாக பரவசமளிக்கிறது.

அரசன் சே said...

வணக்கம் அண்ணாச்சி...
திடு திப்புன்னு வந்து மனசை அள்ளிச்செல்லும் கோடை
மழையாய் உங்கள் கவிதை ..
ரொம்ப ரசித்தேன் ..என் வாழ்த்துக்கள்

அரசன் சே said...

'நீ' எனும் உலகத்தோடு முற்றிலுமாய் முடிந்து போகிறது என் அத்தனை வியப்பும்... //

நெஞ்சுக்குள் இறங்கும் நிதர்சன வரிகள் ,..
சொல்லாடல் சிறப்பு ..

மயிலன் said...

@ கலை
//கவிதை கவிதை !!!!
சுப்பரா இருக்கு அண்ணா//

நன்றி கலை..:)

//நீங்க என்னா ஸ்போர்ட்ஸ் மேனா?'//

ஒ...விட்டா டான்ஸ் லாம் ஆடசொல்லுவாங்க போலருக்குப்பா...

//கண்டிப்பாய் தாண்டுவீங்க அண்ணா !!//

இதில் தாண்டாமல் இருப்பதுதான் அழகு, தங்கச்சி...

மயிலன் said...

PREM.S said...
//ம்ம் உங்களுக்கு அவுங்க தான் வியப்பா அருமை//

தம்பி.. காதல்ல உண்மைய பேசனும்ன்னு தேவையில்ல.. அழகா புடிக்கிறமாதிரி பொய் சொன்னா போதும்...

மயிலன் said...

ரெவெரி said...
//Too good Dr.Love...//

thank u so much, Bro...

மயிலன் said...

Esther sabi said...
//ம்ம்ம் அருமை நிச்சயமாய் தாண்டுவீர்கள் மயிலன் அண்ணா//

கலைக்கு சொன்ன அதே பதில்தான் உனக்கும்

மயிலன் said...

விக்கியுலகம் said...
//ஹாஹா..வியப்பு...நடத்துங்கோ!//

இதுலயும் எதுவும் உள்க்குத்து இருக்கா மாம்ஸ்...:)

மயிலன் said...

ராஜி said...
//உன்னைலாம் லவ் பண்ணா வியக்காம எப்படி இருக்க முடியும்?!//

டோட்டல் டேமேஜ்... நெக்ஸ்ட் மீட் பண்றேன்...:)

மயிலன் said...

Muruganandan M.K. said...
//அருமையாக இருக்கிறது.
எனக்கு கவிதை வியப்பாக இல்லை
என்னோடு என் மனத்தோடு ஒன்றிய நினைவுகளாக பரவசமளிக்கிற//

ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு ஐயா இன்றுதான் வலைத்தளம் வருகிறீரென நெனைக்கிறேன்.. மிக்க நன்றி... உங்கள் வாழ்த்தில் நெகிழ்கிறேன்...

மயிலன் said...

அரசன் சே said...
//வணக்கம் அண்ணாச்சி...
திடு திப்புன்னு வந்து மனசை அள்ளிச்செல்லும் கோடை
மழையாய் உங்கள் கவிதை ..
ரொம்ப ரசித்தேன் ..என் வாழ்த்துக்கள்

நெஞ்சுக்குள் இறங்கும் நிதர்சன வரிகள் ,..
சொல்லாடல் சிறப்பு ..//

ரொம்ப நன்றிங்க அன்னாசி...சாரி.. அண்ணாச்சி... :)
என்னத்த எழுதி என்ன பண்ண... ஒன்னும் சிறப்பா நடக்க மாடேங்குதே... :)

வீடு சுரேஸ்குமார் said...

கவிதை ஆலமரத்தடியில படுத்து கிடக்கிற சுகம்!

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

நீண்ட நாளின் பின்னர் வந்திருக்கேன்.

அருமையான கவிதை கொடுத்திருக்கிறீங்க.

வியப்பில் மனம் தொலைக்கும் பெண்ணின் உணர்வுகளைப் பார்த்து வியக்கும் ஆணின் மன உணர்வுகள் இங்கே கவிதையாக பிரசவித்திருக்கிறது.

அருமை

மதுமதி said...

என்ன மயிலன் நலம்தானே..கவிதை பிடித்தது..ரசித்தேன்..

சிட்டுக்குருவி said...

ரசிச்சுப் படிச்சேன்....

Anonymous said...

கவிதை அற்புதம்
படம் கச்சிதம்
வாழ்த்துகள்.

Anonymous said...

கவிதை அற்புதம்
படம் கச்சிதம்
வாழ்த்துகள்.

திவ்யா @ தேன்மொழி said...

வெகு நாட்களுக்குப்பின்
மீண்டும் என்னவள்..

//உன்னைத் தாண்டி வருவேனா?//

“தாண்டிச் செல்லத்தான் விட்டு விடுவேனா..!!!”:)