சகித்தவர்கள்...

6 May 2012

வழக்கு எண் :18/9... தயவு செஞ்சு பாருங்க...அன்பிற்குரிய விருப்பதாரர்களே,
அவ்வபோது முகநூலில் சின்ன சின்னதாய் விமர்சனம் எழுதி இருபது முப்பது 'like' வாங்குவதையும், ஒரு மிக சாதாரண சினிமா இரசிகன் என்பதையும் தாண்டி விமர்சன பதிவு எழுத எந்த அருகதையும் இல்லாதவன்தான் நான்.. "சினிமால்லாம் தியேட்டரோட முடியனும்டா.. வீட்ல வந்தெல்லாம் ஏன் அத பத்தி பேசிக்கிட்டு இருக்கே?" என்ற அப்பாவின் கருத்தில் எப்போதும் எனக்கு உடன்பாடு இல்லை.. சரியோ தவறோ திரைப்படங்கள் சமுதாயத்திலும் தனிமனித வாழ்விலும் மாற்றங்கள் உண்டுசெய்யும் வன்மை உடையவை.. அப்படியொரு அழுத்தம் ஏற்படுத்தும் திரைப்படங்கள் ஆனால் வெகு சிலவே...

அவ்வாறான வெகு சில திரைப்படங்கள் ஒன்று மனித மனங்களைப் பேசும்...(தேவர் மகன், சுப்ரமனியபுரம், ஆடுகளம்..) இல்லையேல் இலகுவாகவோ, வன்மையாகவோ ஒரு கருத்தை சொல்லும் (வாகை சூட வா...) இதில் மூன்றாமானது இவ்விரண்டுடன் சற்று உரசி அழுத்தமாய் யதார்த்தத்தை பதிவு செய்யும்...(அங்காடி தெரு...) இதில் மூன்றாம் வகையறாவில் இன்னோர் இணைப்பு இந்த வழக்கு எண்: 18/9... இயக்குனர் பாலாஜி சக்திவேலின் முந்தய மூன்று படைப்புகளில் பேசப்பட்ட ஒரே படம் "காதல்" மட்டுமே...அதுவும் உண்மைக்கதை என்று அச்சேற்றப் படவில்லை என்றால் அவ்வளவான யதார்த்தம் இல்லாத படைப்பே... பேருந்து எரிப்பு என்ற முடிவை கையில் எடுத்து அதிலிருந்து பின்னோக்கி அவர் நெய்த கதையான "கல்லூரி", தமன்னாவிற்கு ஒரு சுற்று தமிழில் வர உதவியதைத் தாண்டி எதுவும் செய்துவிடவில்லை.. அதோடு பதுங்கிய அவர் இந்த வெள்ளி கிழமை சற்று வீறுகொண்டு பாய்ந்திருக்கிறார்...ஒரு அடித்தட்டு இளைஞன், அவனை நித்தமும் கடந்து செல்லும் அவனது காதல், அவள் வேலை செய்யும் வீட்டு பெரிய இடத்து பெண், அவளை இச்சைப் பொருளாய் மட்டும் நோக்கும் அதைவிட பெரிய இடத்து பையன்...இவர்கள் நால்வருக்கும் பொதுவாய் ஓர் சம்பவப்புள்ளி... படம் அந்த புள்ளியில் இருந்துதான் விரிகிறது.. ஐந்தாவது கதாபாத்திரமாய் அங்கிருந்து கதையை நகர்த்துபவர் ஓர் காவல் துறை அதிகாரி.. ஐவரும் அறிமுகம்...ஆனால் கிடைத்திருப்பது ஓர் ஒப்பற்ற உலக தமிழ் சினிமா...

மூவருக்கு தான் நடிப்பதற்கு வேலை.. முதலில் நாயகன் வேலு..இவரின் இடத்தில் அறிமுகம் அல்லாத ஒருவரை வைக்க வேண்டுமென்றால் தனுஷை வைத்திருப்பார்கள்... நிச்சயம் பொருந்தியிருக்கும்.. ஆனால் இந்த பாதிப்பு சத்தியமாய் இருந்திருக்காது...சில கதாபாத்திரங்களைப் பிராதான படுத்த அறிமுகங்களால் மட்டுமே முடியும் (கற்றது தமிழ்- ஆனந்தி போல) இரண்டாவது, போலீசாக வரும் துரைசாமி.. கிட்டத்தட்ட காதல் திரைபடத்தில் வரும் அந்த சித்தப்பா கதாபாத்திரம் போன்ற நயவஞ்சகம்.. மனிதர் நின்று ஆடியிருக்கிறார்...அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.. மூன்றாவது, பணக்கார பெண்ணாக வரும் ஆர்த்தி...உடன் வரும் தோழிகளை விட அழகில் பிரமாதம் என்றெல்லாம் இல்லை...படத்தில் கொஞ்சம் சாதாரணமான நடிப்பு இவருடையதுதான் என்றாலும் தங்களுடைய நூறாவது படத்தில் ஹன்சிகாவும்,தமனாவும் நடிப்பதைவிட சிறப்பாகவே நடித்துள்ளார்,,, நடிப்பு என்று பெரிதாய் வேலை இல்லையென்றாலும்,பார்த்ததும் மனதில் பதிந்துவிடும் பேரழகி இல்லையென்றாலும், படத்தில் சொற்ப காட்சிகளே வந்து போனாலும் நம் மனதில் நாற்காலி போட்டு உட்காருபவர் படத்தின் நாயகி ஜோதி... அதுதான் இயக்குனரின் வெற்றி...
பாடல்கள் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியவில்லை என்று சொல்லும் மூத்த இயக்குனர்கள் பலருக்கு இந்த படம் ஒரு பாடம்.. (தயாரிப்பாளருக்காக சமரசமாய் மைனா பாணியில் ஓர் கனவு பாடல்) மற்றபடி பின்னணி இசை மட்டுமே படத்திற்கு..அதில் யுவன் ஷங்கரின் பக்குவம் தெரிகிறது புதுமுகம் பிரசன்னாவிடம்.. ட்ரைலரில் ஓடும் இசையற்ற அந்த இரு பாடல்வரிகள் படம் முடிந்து வரும் போது அனைவரின் மனதில் ஓடி கொண்டிருக்கும்.. விஜய் மில்டன் இம்முறை HandyCam உடன்.. நிறைய இடங்களில் tripod standஐ வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள்.. புது அழகான ஒளி அனுபவம்...இவ்வளவு விசாலாமான கதையை இரண்டேகால் மணி நேரத்திற்குள் அடக்கியது எடிட்டரின் சாமர்த்தியம்.. யாருப்பா அது?

திரைக்கதை "ராம்" படத்தின் அதே பாணி.. ஓர் சம்பவம்.. சாட்சிகளின் பார்வையில் கிளைக்கதைகள்.. அதில் ஓர் முடிவு.. அங்கிருந்து நிதர்சனங்களைப் பேச வேறு திசையில் திரும்பும் கதைக்களம்..கதையில் ஒன்றுமே புதிது இல்லை. தியேட்டரில் உங்களுக்கு பின் சீட்டிலோ, முன் சீட்டிலோ,பக்கத்து சீட்டிலோ இருப்பவர் அடுத்த காட்சியை ஊகித்து அடிக்கடி சத்தமிடலாம்...உங்கள் சீட்டில் இருப்பவர்கூட அதை செய்யலாம்.. ஆனால் ஊகிக்க முடிவதாலோ திரும்ப திரும்ப சொல்லப்படுவதாலோ யதார்த்தம் மரத்துபோகிவிடாது.. சட்டம் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்ற கருவில், விவசாய வறட்சி, கந்துவட்டி கடன், குழந்தை தொழிலாளி, அழியும் கூத்துக்கலை, பாலியல் தொழிலாளி மீதான பார்வை, தனியார் பள்ளிகளின் அத்துமீறல், ஆண் பெண் விடலைப் பருவத்து சபலங்கள், குழந்தை வளர்ப்பு என்று பலவான கருத்துக்கள் எதையும் வலிந்து திணிக்காமல் கதையோடு பொருத்தியிருப்பது திரைக்கதையின் பலம்...தவிர ரோசி அக்கா, சின்னசாமி கதாபாத்திரங்கள், பவர்ஸ்டாரை கலாய்க்கும் காமெடி போன்ற சபாஷ் இடங்கள் ஏராளம்..இவற்றை படம் நெடுக்க சுமந்திருப்பது ஓர் அழகான காதல்..

"தள்ளுவண்டி பிரியாணி கடையில வேல பாக்குற பயலுக்கு எதுக்கு லவ்வு...?" என்று அலட்சியமாய் ஒரு வன்முறை சொல்லைத் தொடுத்தார் என் பக்கத்து சீட்டில் இருந்தவர்.. "அடுத்த வேல சோத்துக்கே வழியில்ல.. அவளுக்காக ஜெயிலுக்கு போறானாம்" இது இன்னொருவர் வண்டி எடுக்கும் இடத்தில்... எத்தனை மேதாவித்தனமும் முதலாளித்துவமும் நிறைந்துவிட்டது நம் மனதில் எல்லாம்.. இந்த சாக்கடை சட்டத்தை சட்டை பையில் வைத்திருக்கும் காசுப்பணம் தனி மனித குணமான காதலையும் உரிமை கொண்டாடுகிறதா? சுஜாதா தன்னுடைய "கை" சிறுகதையில் ஒரு ஏழை தம்பதியரை விளக்கும்போது இவ்வாறு சொல்லியிருப்பார்...

"உடல், இளமை, படுக்கை குறும்புகள் இவற்றையெல்லாம் எந்த ஏழ்மையும் ஒன்றும் செய்துவிட முடியாது"

ஆனால் முதலாளி முதலைகளை பொருத்தமட்டில் காதலுக்கு ஏழ்மை தீண்டத்தகாத ஓர் தீட்டு...படம் நெடுக்க தன் தோளில் சுமந்த யதார்த்தத்தை இப்பேர்ப்பட்ட இரசிகப்பதறுகள் திரையரங்குகளில் கைத்தட்ட வேண்டுமென்பதற்காகவே இறுதி காட்சியில் தொப்பென்று கீழே போட்டுவிட்டு தயாரிப்பாளருக்கு வணக்கம் வைக்கிறார் இயக்குனர்..

  • வேலு தீர்ப்பு வந்து சிறைக்கு செல்வது,
  • துரைசாமி வீடு கிரகபிரவேசம் நடப்பது,
  • ஜோதி முக்காடு போட்டுக்கொண்டு தன் வீட்டிலேயே பாத்திரம் கழுவுவது

என்று திரையை மூன்று ஃபிரேம்களாக பிரித்து ஓடவிட்டு, இருள செய்து, எழுத்து-இயக்கம்: பாலாஜி சக்திவேல் என்று டைட்டில் கார்டு போட்டிருந்தால் என்னையும் சேர்த்து ஒரு இருபது பேர் மட்டுமே கைதட்டியிருப்போம்...அதை தவிர்ப்பதற்காக படம் நெடுக்க இல்லாத சினிமாத்தனத்தை கிளிமாக்சில் வலிந்து திணித்துவிட்டார் இயக்குனர்...அவருக்கே பிடிக்காத கிளைமாக்ஸ் வைத்திருப்பார் போலும்.. அதனாலோ என்னவோ "a film by..." என்று டைட்டில் கார்டு போடவில்லை....

பசங்க & காதலுக்கே ஐம்பது போட்டாங்க..
இது நிச்சயம் அதவிட பெட்டெர்...

வருஷத்துக்கு ஒரு படம்தான் பார்ப்பேன் என்று சொல்லுபவர்களுக்கு, 2012-க்கான படம் வெளியாகியுள்ளது.. தயவு செய்து தியேட்டருக்கு சென்று பாருங்கள்.. மிக முக்கியமாய் பெண் குழந்தை வளர்ப்போர்...

நன்றியுடன்...சி.மயிலன் 

37 comments:

மயிலன் said...

முதன் முறையாக ப்ளாகரில் சினிமா விமர்சனம் எழுதுறேன்.... (கடைசி முறையாகவும் இருக்கலாம்)
வாசித்த நண்பர்கள் நிச்சயம் கருத்துரைக்கவும்...:)

கோவை நேரம் said...

நன்கு அலசி இருக்கிறீர்கள்.ரசிகனின் மன ஓட்டம் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதுக்கு அந்த கிளைமாக்ஸ் சரியான காட்சி.

PREM.S said...

நல்ல விமர்சனம் மார்க்குலாம் போடுறீங்க கலக்கல் உங்கள் விமர்சனத்தில் யாருடைய பாணியிலோ தெரிகிறது அது அவரின் எழுத்தின் பாதிப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன்

Esther sabi said...

காதலுக்கு அப்புறமா சக்திவேல் சார் கொடுத்த நல்லதொரு படம். நானும் பார்த்தேன் டிவிடியில்தான் என் கணடகள் கலங்கிவிட்டன. ஆனால் 100 க்கு 75 கொடுத்திருக்கலாம் போல..

Anonymous said...

ஹாய் அண்ணா ,

என்னாது முதல் முறையா ....எதுக்கு இப்போ இந்த அவசர முடிவு ..எதுக்கும் கொஞ்சம் யோசிச்சி செய்து இருக்கலாம் ....அப்புடி எல்லாம் சொல்லுவேன் எண்டு நினைக்கதிங்கள் ....


நல்ல எழுதி இருக்கீன்கள் ...முதல் தரம் என்று மாறித் தெரியல ....ஆனாலும் இன்னும் கொஞ்சம் ஏதோ மிஸ்ஸிங் மாறி கொஞ்சம் தெரியுது ..முதல் தரம் என்றோதொலோ எனக்குள்ள அப்புடி இருக்கலாம் ...
அடுத்தப் படம் விமர்சனம் தாருங்கள் ...

மனசாட்சி™ said...

53 ஆ - சரி சொல்றீங்க பார்ப்போம்

அரசன் சே said...

நடுநிலையான விமர்சனம் தான் அண்ணாச்சி...
உங்களின் திரைக்கண் எப்படி உள் வாங்கி இருக்கு என்பதை அழகான வரிகளில்
கூறி இருக்கின்றீர் .. நல்ல படத்தை பாராட்டும் உங்க மனசுக்கு என் நன்றிகள் .,..

அரசன் சே said...

இடையில் ஹன்சிகாவையும், தமன்னாவையும் நடிக்க தெரியல என்ற உண்மையை பகீரங்கமாக கூறிய உங்களுக்கு
என் கண்டனங்கள் .. (உண்மையாக இருந்தாலும் எப்படி சொல்லலாம் ஹீ ஹீ )

அரசன் சே said...

படத்துக்கு நீங்க மட்டும் தான் போயிருந்திங்களா... அண்ணி வரலையா அண்ணாச்சி ...

Philosophy Prabhakaran said...

// வேலு தீர்ப்பு வந்து சிறைக்கு செல்வது, துரைசாமி வீடு கிரகபிரவேசம் நடப்பது, ஜோதி முக்காடு போட்டுக்கொண்டு தன் வீட்டிலேயே பாத்திரம் கழுவுவது என்று திரையை மூன்று ஃபிரேம்களாக பிரித்து ஓடவிட்டு, இருள செய்து, எழுத்து-இயக்கம்: பாலாஜி சக்திவேல் என்று டைட்டில் கார்டு போட்டிருந்தால் என்னையும் சேர்த்து ஒரு இருபது பேர் மட்டுமே கைதட்டியிருப்போம்...அதை தவிர்ப்பதற்காக படம் நெடுக்க இல்லாத சினிமாத்தனத்தை கிளிமாக்சில் வலிந்து திணித்துவிட்டார் இயக்குனர்...அவருக்கே பிடிக்காத கிளைமாக்ஸ் வைத்திருப்பார் போலும்.. அதனாலோ என்னவோ "a film by..." என்று டைட்டில் கார்டு போடவில்லை.... //

இந்த கடைசி பத்தி அருமை... சின்னசாமி பயலின் நடிப்பை பற்றி எதுவுமே சொல்லவில்லையே...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நான் படம் பார்க்கும் வரை விமர்சனம் படிக்க கூடாது என முடிவில் உள்ளேன் .. ஆனால் நீ விமர்சனம் எழுதுவதை நிறுத்தாதே ....

Anonymous said...

திரையரங்குகளில் கைத்தட்ட வேண்டுமென்பதற்காகவே இறுதி காட்சியில் தொப்பென்று கீழே போட்டுவிட்டு தயாரிப்பாளருக்கு வணக்கம் வைக்கிறார் இயக்குனர்..///எனக்கும் கைதட்டலுக்கான காரணமாக இதுதான் தோன்றியது தியேட்டரில்.அது ஒருவிதமான சுயதிருப்திதான். அப்பாடா நீதி கிடைச்சுடும் என்பதானது.ஆனால் நிஜம் சுடும்....நல்லாத்தான எழுதறீங்க..தொடருங்கள் விமர்சனத்தை.

மரு.பிரகாஷ் said...

Nice review for a very good movie. Hats off mayilan. I feel the climax is not very much deviating from reality. Now a days the ordinary people have started showing anger against the powerful (slapping of Sharad Powar).
The climax reminded me the immortal lines of Bharathi
"பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!"

மயிலன் said...

கோவை நேரம் said...
//நன்கு அலசி இருக்கிறீர்கள்.ரசிகனின் மன ஓட்டம் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதுக்கு அந்த கிளைமாக்ஸ் சரியான காட்சி//

நன்றி கோவை நேரம்..

மயிலன் said...

PREM.S said...
//நல்ல விமர்சனம் மார்க்குலாம் போடுறீங்க கலக்கல் //

ஹி ஹி.. நன்றி பிரேம்..

//உங்கள் விமர்சனத்தில் யாருடைய பாணியிலோ தெரிகிறது அது அவரின் எழுத்தின் பாதிப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன்//

யாருடையது என்றும் சொன்னீர்கள் என்றால் புண்ணியமா போவும்...:)

மயிலன் said...

Esther sabi said...
//காதலுக்கு அப்புறமா சக்திவேல் சார் கொடுத்த நல்லதொரு படம். நானும் பார்த்தேன் டிவிடியில்தான் என் கணடகள் கலங்கிவிட்டன//

அச்சுச்சோ... அழ கூடாது....:)

//. ஆனால் 100 க்கு 75 கொடுத்திருக்கலாம் போல..//

சார் ரொம்ப ஸ்ட்ரிக்டு .......ஸ்ட்ரிக்டு............... ஸ்ட்ரிக்டு

மயிலன் said...

கலை said...
//ஹாய் அண்ணா ,

என்னாது முதல் முறையா ....எதுக்கு இப்போ இந்த அவசர முடிவு ..எதுக்கும் கொஞ்சம் யோசிச்சி செய்து இருக்கலாம் ....அப்புடி எல்லாம் சொல்லுவேன் எண்டு நினைக்கதிங்கள் ....//

நீ அப்புடி நெனச்சாலும் கவலை இல்ல தங்கச்சி.. எப்போவாவது இந்த நல்ல படம் வரும் போது மட்டும்தான் எழுதுவேன் கவலை படாத...:)


//நல்ல எழுதி இருக்கீன்கள் ...முதல் தரம் என்று மாறித் தெரியல ....//

இப்பதான் ஓட்ற மாதிரி தெரியுது...//ஆனாலும் இன்னும் கொஞ்சம் ஏதோ மிஸ்ஸிங் மாறி கொஞ்சம் தெரியுது ..முதல் தரம் என்றோதொலோ எனக்குள்ள அப்புடி இருக்கலாம் ...

அடுத்தப் படம் விமர்சனம் தாருங்கள் ...//

ஹ்ம்ம்...எனக்கே தோணுது.. இன்னும் சுருக்கமா அழுத்தமா எழுதணும்.. பாப்போம்...

மயிலன் said...

மனசாட்சி™ said...
//53 ஆ - சரி சொல்றீங்க பார்ப்போம்//

பாக்காம விட்ராதீங்க...

மயிலன் said...

அரசன் சே said...
//நடுநிலையான விமர்சனம் தான் அண்ணாச்சி...
உங்களின் திரைக்கண் எப்படி உள் வாங்கி இருக்கு என்பதை அழகான வரிகளில்
கூறி இருக்கின்றீர் .. நல்ல படத்தை பாராட்டும் உங்க மனசுக்கு என் நன்றிகள் .,..//

நல்ல படம்.. அதுதான் முக்கியம்...

//இடையில் ஹன்சிகாவையும், தமன்னாவையும் நடிக்க தெரியல என்ற உண்மையை பகீரங்கமாக கூறிய உங்களுக்கு
என் கண்டனங்கள் .. (உண்மையாக இருந்தாலும் எப்படி சொல்லலாம் ஹீ ஹீ )//

தக்காளி அந்த ஒல்லிச்சியும் குண்டச்சியும் படுதுன பாடு கொஞ்ச நஞ்சமா ...?

//படத்துக்கு நீங்க மட்டும் தான் போயிருந்திங்களா... அண்ணி வரலையா அண்ணாச்சி ...//

வெளங்கிரும்..:)

மயிலன் said...

Philosophy Prabhakaran said...

//இந்த கடைசி பத்தி அருமை... //

நன்றி பிரபா..

//சின்னசாமி பயலின் நடிப்பை பற்றி எதுவுமே சொல்லவில்லையே...//

//தவிர ரோசி அக்கா, சின்னசாமி கதாபாத்திரங்கள், பவர்ஸ்டாரை கலாய்க்கும் காமெடி போன்ற சபாஷ் இடங்கள் ஏராளம்.. \\ இங்க சொல்லியிருக்கேனே...

மயிலன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//நான் படம் பார்க்கும் வரை விமர்சனம் படிக்க கூடாது என முடிவில் உள்ளேன் .. ஆனால் நீ விமர்சனம் எழுதுவதை நிறுத்தாதே ....//

ஓகே சார்.. நீங்க படம் பார்த்துட்டுவந்து விமர்சனம் படிங்க.. எப்புடி இருக்குன்னு சொல்லுங்க...

மயிலன் said...

Chilled Beers said...
//எனக்கும் கைதட்டலுக்கான காரணமாக இதுதான் தோன்றியது தியேட்டரில்.அது ஒருவிதமான சுயதிருப்திதான். அப்பாடா நீதி கிடைச்சுடும் என்பதானது.ஆனால் நிஜம் சுடும்...//

உண்மை.. அந்த நேரத்திற்கு ஒரு தற்காலிக இன்பம்.. அது பொய்யாயினும் நமக்கு தேவை...

//.நல்லாத்தான எழுதறீங்க..தொடருங்கள் விமர்சனத்தை//

:) இது போன்ற படங்களுக்கு மட்டும் எழுதலாம்ன்னு இருக்கேன்...

மயிலன் said...

மரு.பிரகாஷ் said...
//Nice review for a very good movie. Hats off mayilan.//

thank u so much prakash..

//I feel the climax is not very much deviating from reality. Now a days the ordinary people have started showing anger against the powerful (slapping of Sharad Powar)//

only wen things deviate from reality, it becomes a headline... wat u ve just quoted (sharad pawar incident) is one such deviation... :))

வீடு சுரேஸ்குமார் said...

ஆனால் முதலாளி முதலைகளை பொருத்தமட்டில் காதலுக்கு ஏழ்மை தீண்டத்தகாத ஓர் தீட்டு...படம் நெடுக்க தன் தோளில் சுமந்த யதார்த்தத்தை இப்பேர்ப்பட்ட இரசிகப்பதறுகள் திரையரங்குகளில் கைத்தட்ட வேண்டுமென்பதற்காகவே இறுதி காட்சியில் தொப்பென்று கீழே போட்டுவிட்டு தயாரிப்பாளருக்கு வணக்கம் வைக்கிறார் இயக்குனர்..
///////////////////////////
உண்மைதான்....மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா .இப்படிப்பட்ட வலிய கமர்சியல்களுக்கு ஒத்துழைக்காததால் இன்றும் நம் நெஞ்சில் இருக்கிறார்கள்.....

ராஜி said...

தம்பி சொன்னா சரிதான். படம் பார்த்துட்டா போச்சு.

ராஜி said...

டிக்கட்டுக்கு உண்டான பைசாவை மணி ஆர்டர் பண்ணவும் சகோ

Anonymous said...

இந்த படத்தால நம்ம தமிழ் சினிமாவுக்கே பெருமை. நல்லா analyse செய்து எழுதி இருக்கீங்க. நேர்மையான நல்ல விமர்சனம். strictஆ மார்க் போட்டதால மட்டும் இல்ல, விமர்சிக்கும் தன்மையில கூட அங்கங்கே விகடன் சாயல் தெரியிற மாதிரி இருக்கு. இருந்தாலும் அதைவிட விரிவா அழகா ரசனையா எழுதியிருக்கீங்க. :)

Anonymous said...

இந்த படத்தால நம்ம தமிழ் சினிமாவுக்கே பெருமை. நல்லா analyse செய்து எழுதி இருக்கீங்க. நேர்மையான நல்ல விமர்சனம். strictஆ மார்க் போட்டதால மட்டும் இல்ல, விமர்சிக்கும் தன்மையில கூட அங்கங்கே விகடன் சாயல் தெரியிற மாதிரி இருக்கு. இருந்தாலும் அதைவிட விரிவா அழகா ரசனையா எழுதியிருக்கீங்க. :)

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//உண்மைதான்....மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா .இப்படிப்பட்ட வலிய கமர்சியல்களுக்கு ஒத்துழைக்காததால் இன்றும் நம் நெஞ்சில் இருக்கிறார்கள்...//

இன்றைய தலைமுறையில் வசந்தபாலன் மட்டும் இதிலிருந்து தப்பிப்பார் என்று நினைக்கிறேன்.....

மயிலன் said...

ராஜி said...
//தம்பி சொன்னா சரிதான். படம் பார்த்துட்டா போச்சு.//

ஐயையோ இது என்ன வம்பா போச்சு....

//டிக்கட்டுக்கு உண்டான பைசாவை மணி ஆர்டர் பண்ணவும் சகோ//

அஸ்கு புஸ்கு... பட்டு புடவைக்கும் இதுக்கும் கணக்கு சரியா போச்சு...:)

மயிலன் said...

jaya said...
//இந்த படத்தால நம்ம தமிழ் சினிமாவுக்கே பெருமை. நல்லா analyse செய்து எழுதி இருக்கீங்க. நேர்மையான நல்ல விமர்சனம்//

மிக்க நன்றி ஜெயா

// strictஆ மார்க் போட்டதால மட்டும் இல்ல, விமர்சிக்கும் தன்மையில கூட அங்கங்கே விகடன் சாயல் தெரியிற மாதிரி இருக்கு. இருந்தாலும் அதைவிட விரிவா அழகா ரசனையா எழுதியிருக்கீங்க. :) //

விமர்சனம்ன்னு விவரம் அறிந்த நாட்களில் இருந்து படித்தது விகடனில் மட்டும்தான்.. அந்த பாதிப்பு இருப்பது மறுக்க முடியாது.. :)) அந்த சாயலில் இருந்தால் நிச்சயம் மகிழ்கிறேன்... நன்றி :)

ஹ ர ணி said...

அன்புள்ள மயிலன்..

தொடர்பணிகள். வரயியலவில்லை. நல்ல விமர்சனம். உங்களுக்கு விமர்சன இலக்கியம் நன்று வருகிறது. அப்படியே பழகுங்கள். தொடர்ந்து நல்ல படங்களை உங்கள் விமர்சனம் மூலம் மேலும் தரப்படுத்துங்கள். வாழத்துக்கள். தொடர்ந்து வருவேன் இனி.

காட்டான் said...

விமர்சனம் அருமை நீங்கள் போட்ட மார்க்குக்கு அருகில்தான் விகடன் மார்க். 

வாழ்த்துக்கள்.!

ஜீ... said...

உங்கள் விமர்சனத்தின் இறுதிப்பத்தி மிகக் கவர்கிறது!
தீயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான விருப்பத்திற்காக யாதார்த்தத்திலிருந்து முற்றிலும் விலகி...
அருமையான விமர்சனம் பாஸ்! தொடர்ந்து (அது கஷ்டம்தான் நல்ல படம் வரணுமே!) இப்படி எழுதுங்க!

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - விமர்சனம் அருமை. இறுதியில் கூறியது நன்று. படத்தின் வெற்றிக்குக் காரணமான நிகழ்வுகளை விமர்சனத்தில் குறிப்பிட்டிருப்பது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

AK said...

I just saw this movie online here today..and the next thing i did was to read this review..I definitely agree that it is one of the best movies of the yr and especially the characters were all carefully chosen with their accent body language everythin' suiting their roles exactly..! And a very good review too..Thanks for the suggestion on the first place, bcoz this is probably the first new release I watched in almost a yr now.:) But, I also felt the screenplay could have been cut a lil less especially in the middle, I saw it saggin'..compared to hollywood flicks which convey a brilliant story in 90 mins, I understand it requires a lil more detail n emotions in tamil cinemas, but still at the best our directors can try for a movie in 2 hrs (without songs)..!

srimathi said...

superb and fantastic comment about the film and peoples thought about the film. Director has bought real life event into a story, but u have reflected peoples thought even after seeing the film . I liked the instances u quoted from the film to a great extent... very nice........