சகித்தவர்கள்...

16 May 2012

தேவதை பிம்பங்கள் #2நாய்குட்டியையோ...
சிறு முயலையோ...
எதிர்வீட்டு மூன்று மாத
குழந்தையையோ...
சன்னமாக
தலை சாய்த்து
கண் சுருக்கி,
பல் கடித்து
இதழ்குவித்து
நீ கொஞ்சிடும்
சத்தத்தில்
முற்றிலுமாய்
முடிந்துவிடுகிறது
இந்த என் பிறவிக்கான
செம்மொழி தேடல்..உன் கைப்பேசிக்கு
எப்படி மனசு வருகிறது?

உன் குரலை
உன் சிரிப்பை
உன் சிணுங்கலை
உன் கொஞ்சலை
உன் முத்தங்களை
சிறு பருக்கைக்கூட
பதுக்கி வைக்காமல்
இப்படி என்னிடம்
மொத்தமாக
பறக்க விடுகிறது...ஆள்காட்டி விரல் மடித்து
தாடையில் வைத்து
உதடசைய ஏதோ
முனுமுனுத்து,
தீபாரதனையைத்
தொட்டு கும்பிடும்
முன்னான அந்த
உன் பத்து நொடி
பரிதவிப்பிலேயே
நிறைந்து போகிறது
எனக்கான தரிசனம்..

20 comments:

இரவு வானம் said...

மயிலன் கவித கவித நாய்க்குட்டி கொஞ்சறதே செம்மொழியாட்டம் இருக்கா உங்களுக்கு :-) சூப்பர் பாஸ்

Anonymous said...

vanakkam teacherrrrrrrrrrrrrrrrr .....mee n pallikoodam ... ll comment later.....

Anonymous said...

ellaa pimbamum supperrrrrrrr

மனசாட்சி™ said...

சிற்பத்தை வரிகளால் செதுக்கி இருக்கீங்களே

வீடு சுரேஸ்குமார் said...

நல்லாயிருக்கு மயிலன்!
பயபுள்ளைய யாராவது லவ்வித்தான் தொலையுங்களேன்!

Anonymous said...

ஹலோ காதல் வயித்தியரே...
நலமா?

உங்கள் கவிதைகள் என் வயதை பாதியாய் குறைத்து...குறைத்து...மறுபடி பிறக்க வைத்துவிடும் போல...

மலரும் நினைவுகள் தப்பாமல் தருகின்றன அவை...

என் மனைவி மேல் உள்ள காதல் புதுப்பிக்கப்படும் இடம் இது தான்...தொடருங்கள் உங்கள் சேவையை...

ராஜி said...

நாய்குட்டி, முயல் குட்டியை கொஞ்சுனதுக்கே கவிதை போடுறானே. இன்னும் இவனை கொஞ்சிட்டா?! அட ஆண்டவா! அந்த கொடுமைலாம் அனுபவிக்க விடாதே

விக்கியுலகம் said...

அடங்கப்பா...இந்த பொலம்பு பொலம்புதே...ஏம்மா யாரங்கே!

நிரூபன் said...

வணக்கம் நண்பா...
காதல் மொழி கொஞ்சும் அருமையான கவிதைகளை, தேவதையின் நினைவுகளை இனிமையாக தொகுத்திருக்கிறீங்க. அருமை.

நிரூபன் said...

http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

இந்த இணைப்பில் சென்றால் ஓட்டுப் பட்டைகளினூடாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை சீராக்க முடியும்.

நேரம் கிடைத்தால் முயற்சித்துப் பாருங்களேன்.

எஸ்தர் சபி said...

ம்ம்ம்ம் அழகான விம்பங்கள் மட்டுமல்ல
அழகான கவிதையும்தான்..
சூப்பர்ர் அண்ணா..

ananthu said...

கவிதையும் ,படங்களும் அருமை ...

ananthu said...

அழகான , சுருக்கமான , விமர்சனம் ...

சீனுவாசன்.கு said...

யார் அந்த தேவதை?

அரசன் சே said...

வணக்கம் அண்ணாச்சி ..
தேவதை பிம்பங்கள் தெவிட்டாத இன்பங்கள் எனக்கு ,..
சும்மா ரவுண்டு கட்டி விளையாடி இருக்கீங்க ..
அனைத்துமே இளமை பொங்கும் கலக்கல் வரிகள் ...
உங்களின் ரசணை வெளிப்படுகிறது கவிதை வரிகளில் ..

அரசன் சே said...

அண்ணாச்சி நான் கவிதை யை படிப்பதா இல்லை
அந்த மூன்று கன்னிகளை காண்பதா ஒரே குழப்பா இருக்குது ,,,

அரசன் சே said...

அந்த மூன்றாவது தரிசனம் கவிதை செம அருமை அண்ணாச்சி ..
அப்போ அண்ணாச்சியை காண தஞ்சை பெரிய கோவிலுக்கு வரலாம் போலிருக்கே ..

அரசன் சே said...

தமிழ்நாட்டுல என்ன பாத்து யாருன்னு கேட்ட மொதல் ஆள் நீங்கதான்...//

சும்மா டெரரா இருக்கு ... அப்போ பச்ச மஞ்ச சிவப்பு தமிழன் என்ன ஆனாரு ... சும்மா டவுட்டு ...

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - செம்மொழி தேடும் அழகினை - இவ்வளவு அழகாக காதல் இரசம் சொட்டச் சொட்ட யாரும் கூறியதில்லை. தலை சாய்த்து, கண் சுருக்கி, பல் கடித்து, இதழ் குவித்து - அட்டா என்ன வர்ணனை.

கைபேசியின் பெருந்தன்மை - குரல், சிரிப்பு, சிணுங்கல், கொஞ்சல், முத்தங்கள் அத்தனையும் அப்படியே கொடுக்கும் பெருந்தன்மை.

ஆள்காட்டி விரல் தவிர்த்து அத்தனை விரல்களும் மடித்துத்தான் தாடையில் வைப்பார்கள்.

காதல் சிந்தனையில் விளைந்த கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Seeni said...

mayilirakaal-

thadavi vittathu pol ullathu!