சகித்தவர்கள்...

1 May 2012

அன்புள்ள சுகந்திக்கு...

1163 

மார்ச் 31
அன்புள்ள சுகந்திக்கு...

கடித சம்பிரதாயதிற்கான முதல் வரி.. நான் நலம்.. நலமறிய ஆவல் :) நீ எதிர்பாராத இந்த நொடியில் பேருந்தின் மந்தைகளுக்கு நடுவில் எதற்காக நான் இந்த கடிதத்தை தர வேண்டும்...? இத்தனை வருடங்கள் கல்லூரியில் ஒன்றாய் படித்த போதும் மனம்விட்டு பழகிய போதும் சொல்லிடாத ஒன்றை ஏன் கல்லூரியின் கடைசி நாளாம் இன்று இப்படி கிறுக்கி நீட்டவேண்டும்..? இதெல்லாம் உனக்கு தோன்றும் கேள்விகளாய் இருக்கலாம்.. எதற்காக நான் இந்த படிப்பை தேர்வு செய்தேன்? எதற்காக நீயும் இதே கல்லூரியில் சேர்ந்து தொலைத்தாய்? எதற்காக பதிவேட்டில் எனக்கு முந்தைய பெயராய் உன் பெயர் வந்தது? மிக முக்கியமாக எதற்காக கல்லூரியின் முதற்நாளன்று சிவப்புசுடிதார் அணிந்து வந்தாய்? என் கேள்வி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது..

நானும் என்னையே கேட்டுகொள்கிறேன்.. எதற்காக இத்தனை நாள் அல்லாமல் இன்று..? இந்த கடிதம்? இதற்கு முன் என் காதலை உன்னிடம் சொல்ல நான் முயற்சித்ததே இல்லையா? ஏன் இல்லை....

சிவப்பு சுடிதார் அணிந்து வந்துமூன்றாவது பெஞ்சில் நீ அமர்ந்த அன்றே, என் வாழ்கையின் கதாநாயகி நீதான் என்று முடிவு செய்த அன்றே, சொல்லியிருக்க வேண்டும்.. அன்றைய என்னிடம் எந்த ஒரு கதானாயகத்தனமும் இல்லாததாலோ இல்லை ஏதோ ஒரு கையாலாகாத தனத்தாலோ அன்று அந்த சுபகாரியம் அரங்கேற வில்லை...

நண்பர்கள் அறிவுரை என்ற பெயரில் அடுத்த இரண்டு மாதங்கள் எனக்கு சொற்பொழிவாற்றினார்கள்.. அவர்கள் அன்று என் மீது காட்டிய அக்கரையிலும், உன்னை நடுநிறுத்தி பெண்ணினத்தையே தூற்றிய வேகத்திலும், கூட்டமாய் இரவு குடித்த போதையிலும்..அவர்களுக்கு அப்போது உன் மீது இருந்த ஒரு கண்மட்டும் எனக்கு தெரியாமல் போனது..

அந்த இரண்டு மாதத்திற்குள் உன்னிடம் டான் பிரவுன், ஸ்பீல்பெர்க், ஷெல்டன் வகையறா பற்றி பேசி நான்கு சென்னை தயிர்சாதங்கள் நண்பர்களாகி இருந்தனர்.. உனக்கு அவற்றை பிடிக்கும் என்று எனக்கான வேலியை உடைக்க தாய்மொழி கடந்தேன்..அவ்வாறே இன்னும் ஆறு மாதங்கள் கடந்து போகையில் எனக்கு ஆங்கிலம் சரளமானதும் நீ சுஜாதாவையும் ஜெயகாந்தனையும் வாசிக்க தொடங்கியிருந்தாய்.. இப்படியாக சுஜாதா என்னையும் உன்னையும் பேசவைத்தார்.. ஒதுங்கியும் கொண்டார்...

முடிவு செய்தேன் முதலாம் ஆண்டு தேர்வு முடிந்ததும் உன்னிடம் சொல்லிவிடுவது என்று.. தேர்வறை உள்ளே செல்லும்முன் நீ தலையில் கொட்டிக்கொண்டு மாரில் கைவைத்து எதையோ மனப்பாடம் செய்வதை நான் இரசித்துகொண்டிருக்கும் போது நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை -உனக்கு தேர்வு கடினமாய் இருக்கும் என்றோ, உனக்கு முந்தைய இருக்கையில் இருந்த சுந்தர் உனக்கு உதவி செய்வான் என்றோ,தேர்வு முடிந்ததும் நீ அவனோடு மட்டும் சிரித்து பேசிக்கொண்டு வெளியே வருவாய் என்றோ... அன்றைய மாலை தேர்வறைக்கு பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் கசங்கிக்கிடந்த வினாதாள்களுக்கு நடுவே நொறுங்கி கிடந்தது என் காதலும்..ஆறேழு மாதங்களுக்கு பிறகு சுந்தர் உன்னிடம் காதலுரைத்து செருப்படி வாங்கிய அன்றுதான் மீண்டும் ஓடி வந்து ஒட்டிக்கொண்டது உன் மீதான என் காதல்..

சுந்தரை தொடர்ந்து வாசன், ஸ்ரீதர், நவீன், பயோகெமிஸ்ட்ரி பேராசியர் மற்றும் சில பேருந்து விஷமிகள் வரை நீளும் உன்னால் நிரகாரிக்கபட்டோர் பட்டியல் ஓர் அச்சம் கலந்த ஆறுதலை மட்டும் தர தவறியதில்லை.... சரியாக நினைவில்லை நீ யாரிடம் சொன்னாய் என்று.. உனக்கு குடிப்பவர்களை பிடிக்காதாமே.. தெரிந்த நாள் முதல் தண்ணீர் குடிக்கவும் தயங்கி இருக்கிறேன்...உனக்கானவனாய் என்னை மாற்றிக்கொண்டு ஒவ்வோர் முறையும் உன்னிடத்தில் காதல் சொல்ல வரும் போதும் உன் முட்டை கண்ணில் மோதி என் நம்பிக்கையோ, தைரியமோ, இல்லை காதல் சொல்ல தேவையான ஏதோ ஒன்றோ உடைந்து சுக்குநூறாகிவிடுகிறது..சுற்றுலா சென்றபோதும், நண்பர்படையுடன் கடற்கரை சென்ற போதும், ஒரு நாள் மின்தூக்கியில் இருவரும் தனியாய் செல்லும் போதும்..எப்போதும் வந்துவிடவில்லை அந்த வஸ்து..

அர்த்தமே இல்லாமல் நான் உன்னிடம் பேச முயற்சித்தவைகளும், அவ்வபோது யதேச்சையாய் நீ வகுப்பில் திரும்பும் போது உனையே நான் பார்த்துகொண்டிருப்பதை கவனித்துவிடுவதும், சிற்றுண்டியில் நீ விரும்பி உண்ணும் ஏதோ ஒரு கருமத்தையே நானும் வாங்கி உண்ணுவதும், வகுப்பறையில் நான் நுழையும் போது நண்பர்கள் உன் பெயரை கூச்சலிடுவதும் ஆங்காங்கே என்னைப் பற்றிய ஏதோ ஒன்றை உனக்குள் விதைத்திருக்கலாம்...இவன் என்னவன் என்றோ, யோசிக்கலாம் என்றோ, பைத்தியம் என்றோ ஏதோ ஒன்று... அது எதுவாயினும் நான் சொல்ல வேண்டும்.. உன்னை நேருக்கு நேர் பார்த்து முடிந்தால் உதட்டில் ஒரு முத்தமிட்டு உரக்க சொல்ல வேண்டும் நான் உனை விரும்புவதை..முடிவு செய்து கொண்டேன்..

இறுதியாண்டு கலை நிகழ்ச்சி முடிந்த இரவு உன்னிடம் சொல்ல நான் முன்வந்த நேரம் கைப்பேசி அழைப்பொன்றும் முன்வந்தது.. என் அண்ணனிற்கு மாரடைப்பென்று.. என்னைவிட மூன்று வயதே பெரியவன்.. ஊருக்கு வழியனுப்ப வந்த நண்பன் சொன்னான், "அவ உனக்கு இராசியில்ல மச்சான்..விட்ரு.." சரியாக அந்த நொடி உன் நினைவுகள் அங்கேயே அறுந்து விழுந்தது...இரண்டு வாரங்களில் அண்ணன் குணமடைந்து வீடு திரும்பும் போது மருத்துவர், "எந்த சாமியோட கிருபைன்னு தெரியல..." என்று சொல்லி வாக்கியங்களை அடுக்கிகொண்டிருந்தார்..ஆனால் அவர் சாமியென்று சொன்னதுமே உன் நினைவு வந்து என் காதடைத்தது.. கல்லூரிக்கு திரும்பும் வழியில் ஒரு வாரத்திற்கு முன்பு நீ அனுப்பியிருந்த "how is he?" என்ற குறுஞ்செய்தியில் என் உலகம் மொத்தமாய் சுழல தொடங்கியது..

தேர்வுகளை விட காதலுக்கு பெரிய இடைக்கால தடை ஏதுமில்லை.. எனக்கு தைரியம் வருவதற்குள் தேர்வு வந்துவிட்டது...நேற்றுடன் முடிந்தது நம் இறுதி ஆண்டு தேர்வுமட்டுமில்லை.. கல்லூரியில் என் காதலை சொல்வதற்கான கடைசி வாய்ப்பும்தான்.. இன்று காலை விழிக்கும் வரை தெரியாது இன்று farewell day ஏற்பாடு செய்யபட்டிருப்பது..ஒளியின் வேகமோ நியுட்ரினோவின் வேகமோ அனைத்தையும் கடந்தேன்..அதே மூன்றாவது பெஞ்சில் அதே சிவப்பு சுடிதாரில் நீ.. இதைவிட எனக்கு எப்படி ஒரு பொழுது கிடைக்கும்..? கேக் வெட்டி, முஸ்தபா பாடி, கொஞ்சம் கண்ணீர் விட்டு, நண்பர்கள் கையசைத்து கொண்டிருக்கும் வேளையில் நீ என்னைப் பார்த்து கொண்டிருப்பதை நான் கவனித்துவிட்டேன்.. நீயும் சிரித்துவிட்டாய்..

அந்த நொடி போதும் எனக்கு.. போதுமா? போதாது.. காதலை சொல்ல வேண்டும்.. நீ வெட்கப்பட வேண்டும்... முத்தமிட வேண்டும்..உன்னோடு கைக்கோர்க்க வேண்டும்.. இப்படியாக என் எண்ணங்கள் விரியதொடங்கும் முன்பே நீ புறப்பட ஆயத்தமாயிருந்தாய்.. எனக்கு என்னை தயார் செய்து கொள்ள எந்த ஒரு அவகாசமும் இல்லை.. இராட்சசிகளுக்கு நடுவே ஒரு தேவதை நடந்து செல்கிறாள்.. நான் பின் தொடர்வதை திரும்பி திரும்பி பார்த்து சிரித்து இந்த கடிதத்தை நான் கொடுக்க போகும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாய் நடக்கிறாய்.. எனக்கு தெரியாமல் வெட்கபடுகிறாய்...விடுவதாய் இல்லை நானும்...பின்தொடர்கிறேன்..ஒரு கட்டத்தில் உன் தோழியர் ஏனோ பதறி நின்றுவிட என்னை திரும்பிப்பார்த்த படியே சென்ற நீ மட்டும் ஒரு... ஒரு ... ஒரு பேருந்தோ லாரியோ விரைந்து வந்த வேறு ஏதோ ஒன்றோ மோதி அங்கேயே உயிரிழ....................
:
:
:
:
:
:
:
:
(கடிதம் கிழித்தெறியப்படுகிறது)


1164
மார்ச் 31
அன்புள்ள சுகந்திக்கு,

கடித சம்பிரதாயதிற்கான முதல் வரி.. நான் நலம்.. நலமறிய ஆவல் :).................


முற்றும்


45 comments:

PREM.S said...

அன்பரே என்ன இப்படி ஒரு முடிவு


//உனக்கு குடிப்பவர்களை பிடிக்காதாமே.. தெரிந்த நாள் முதல் தண்ணீர் குடிக்கவும் தயங்கி இருக்கிறேன்...//இதை மிகவும் ரசித்தேன்

Naren said...

Sir...athan internship irukave irunthuche...

அபி said...

தல சான்சே இல்ல போங்க ஆனா ஏன் உங்கள் எல்லா படைப்பும் பிரிவை சார்ந்தே உள்ளது.

அபி said...
This comment has been removed by the author.
தினேஷ்குமார் said...

கடிதம் கடிதமாக மட்டும் இருப்பின் நலம் நண்பரே ...

ஹாலிவுட்ரசிகன் said...

கிட்டத் தட்ட ஒரு மினி சினிமா பார்த்த ஃபீலிங். காதல் சொல்ல வந்தேன்னு ஒரு படம். கிட்டத்தட்ட இத மாதிரித் தான் இருக்கும்.

நல்லா எழுதியிருக்கீங்க.

Esther sabi said...

ஜயோ பாவம் அண்ணா இவ்வளவு கால் சோகமா??? பிரிவு என்பது நிரந்தரமில்லை அடுத்த ஜென்மத்திலாவது ஓன்று சேர வாழ்த்துக்கள்...

ராஜி said...

எதற்காக பதிவேட்டில் எனக்கு முந்தைய பெயராய் உன் பெயர் வந்தது?
>>
இதென்ன புது கதையா இருக்கு M க்கு அப்புறம் தானே S வரும்?!

வீடு சுரேஸ்குமார் said...

சார்! என்ன இந்தவாரம்? அழுவாச்சி காவியமா இருக்கு!

வெளங்காதவன்™ said...

கலைஞர் வாழ்க!!

#படிக்காமல் கமண்டு போடுவோர் சங்கம்...

:-)

Dr.Padmanaban.D.CH., said...

why this kolaveri mayilan

வே.சுப்ரமணியன். said...

பிரிவு உபச்சார நாளின் இறுதி தருணங்களில், காதலை சொல்ல ஏங்கி தவிக்கும்.... நிகழ்வுகளை தாங்கிய வரிகளை வாசிக்கும்போது என் நெஞ்சு திக்.. திக்...கென்று, சொல்லிவிடுவாயா?... என்ற ஆர்வம் கலந்த பயத்தில் அடித்துக்கொண்டது..

திவ்யா @ தேன்மொழி said...

/சென்னை தயிர்சாதங்கள்,/
/நிரகாரிக்கபட்டோர் பட்டியல் ஓர் அச்சம் கலந்த ஆறுதலை மட்டும் தர தவறியதில்லை..../
/எனக்கு தைரியம் வருவதற்குள் தேர்வு வந்துவிட்டது.../
/குறுஞ்செய்தியில் என் உலகம் மொத்தமாய் சுழல தொடங்கியது../
/நீயும் சிரித்துவிட்டாய்../
/1164/
மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டிய காட்சிகள்..!

1164-ஆம் கடிதத்திலும் அன்புள்ள சுகந்தி, அன்புள்ள வேறொருத்தியாக மா(ற்)றாமலிருப்பது,
ரசிப்பதற்கு மட்டுமே அழகு..
வாழ்வதற்கு..
நினைக்கக்கூட பதைக்கிறது மனது..

அன்புள்ள சுகந்தி –
(சிவப்பு சுடிதாரில் வந்த சென்ற) அழகான ராட்சசி..! :)

மயிலன் said...

PREM.S said...
//அன்பரே என்ன இப்படி ஒரு முடிவு //

அந்த முடிவுதான் கதைக்கான விதையே...அங்கிருந்துதான் தொடங்கியது...

நன்றி பிரேம்

மயிலன் said...

Naren said...
//Sir...athan internship irukave irunthuche...//

கதை மருத்துவ கல்லூரியில் நடப்பதாய் சொல்லவில்லையே.. கலை/அறிவியல் கல்லூரிகளிலும் பயோகெமிஸ்ட்ரி பேராசிரியர்கள் உண்டு :))

மயிலன் said...

அபி said...
//தல சான்சே இல்ல போங்க ஆனா ஏன் உங்கள் எல்லா படைப்பும் பிரிவை சார்ந்தே உள்ளது//


நன்றி அபி...
பிரிவிலும் தேடலிலும் உள்ள சுவாரஸ்யம் நிறைய...
அதனாலோ என்னவோ...:)

மயிலன் said...

தினேஷ்குமார் said...
//கடிதம் கடிதமாக மட்டும் இருப்பின் நலம் நண்பரே ...//

அதான் கிழிச்சாச்சே..:)

மயிலன் said...

ஹாலிவுட்ரசிகன் said...
//கிட்டத் தட்ட ஒரு மினி சினிமா பார்த்த ஃபீலிங்.//

:)மகிழ்கிறேன் நண்பரே...

//காதல் சொல்ல வந்தேன்னு ஒரு படம். கிட்டத்தட்ட இத மாதிரித் தான் இருக்கும்.//

திருட்டு விசிடி பார்க்க முயற்ச்சிக்கிறேன்...:)

//நல்லா எழுதியிருக்கீங்க.//

மிக்க நன்றி...

மயிலன் said...

Esther sabi said...
//ஜயோ பாவம் அண்ணா இவ்வளவு கால் சோகமா??? பிரிவு என்பது நிரந்தரமில்லை அடுத்த ஜென்மத்திலாவது ஓன்று சேர வாழ்த்துக்கள்...//

அடுத்த????????????
ஜென்மமா???????
அட போ தங்கச்சி............

மயிலன் said...

ராஜி said...
//எதற்காக பதிவேட்டில் எனக்கு முந்தைய பெயராய் உன் பெயர் வந்தது?
>>
இதென்ன புது கதையா இருக்கு M க்கு அப்புறம் தானே S வரும்?!//

எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு கெடைக்காம போவதில் உங்களின் பங்கு அலாதியானது....:)))

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//சார்! என்ன இந்தவாரம்? அழுவாச்சி காவியமா இருக்கு!//

ஒரு வெள்ள கலர் ஜிப்பா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல் :))

மயிலன் said...

வெளங்காதவன்™ said...
//கலைஞர் வாழ்க!!

#படிக்காமல் கமண்டு போடுவோர் சங்கம்...

:-)//

வெளங்காதவன்™ வாழ்க ...!!!

என்ன கமென்ட் போட்டாலும் பதில் எழுதுவோர் சங்கம்...:)

மயிலன் said...

Dr.Padmanaban.D.CH., said...
//why this kolaveri மயிலன்//

சும்மா,,,,ஒரு பீலிங்கு....:)

மயிலன் said...

வே.சுப்ரமணியன். said...
//பிரிவு உபச்சார நாளின் இறுதி தருணங்களில், காதலை சொல்ல ஏங்கி தவிக்கும்.... நிகழ்வுகளை தாங்கிய வரிகளை வாசிக்கும்போது என் நெஞ்சு திக்.. திக்...கென்று, சொல்லிவிடுவாயா?... என்ற ஆர்வம் கலந்த பயத்தில் அடித்துக்கொண்டது.//

அடப்பாவிகளா.. அந்த புள்ள அடிப்பட்டப்ப எந்த திக் திக்கும் இல்லையா?

:))) நன்றி நண்பரே....

மயிலன் said...

திவ்யா @ தேன்மொழி said...


//1164-ஆம் கடிதத்திலும் அன்புள்ள சுகந்தி, அன்புள்ள வேறொருத்தியாக மா(ற்)றாமலிருப்பது,
ரசிப்பதற்கு மட்டுமே அழகு.. //

சிலர் அந்த எண்களையும்,தேதியையும்,புகைப்படத்தில் இருக்கும் தேதியையும் கவனிக்கவில்லை...கடைசியில் புரியவில்லை என்றும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்...இறந்து போன நாளில் அவனது நேரம் நின்றுவிட்டது.. சொல்லாமல் விட்டுப்போன காதலை எண்ணி நினைவுதொகுப்பாய் எழுத தொடங்கிய கடிதத்தில்,அவள் உயிரிழந்த சம்பவம் வரும்போது மீண்டும் மீண்டும் கிழித்துபோட்டுவிட்டு புதியதாய் எழுத தொடங்குகிறான்.. என்ற ரீதியில்தான் அமைத்திருந்தேன்... விளக்கம் கேட்காமல் நீங்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...


//வாழ்வதற்கு..
நினைக்கக்கூட பதைக்கிறது மனது..//

:))

//அன்புள்ள சுகந்தி –
(சிவப்பு சுடிதாரில் வந்த சென்ற) அழகான ராட்சசி..! :)//

அவ்வளவு அழகிற்கு ஏற்ற புகைப்படம் கிடைக்கவில்லை...:)

Philosophy Prabhakaran said...

// இப்படியாக சுஜாதா என்னையும் உன்னையும் பேசவைத்தார்.. ஒதுங்கியும் கொண்டார்... //

ம்ம்ம்... மொத்ததுல சுஜாதா உங்களுக்கு மாமா வேலை பார்த்திருக்கார்...

அதென்ன சென்னை தயிர் சாதங்கள்... ங்கொய்யால குருப் மெயில் போட்டேன்னா கும்மிடுவாங்க ஜாக்கிரதை...

இனி சைக்கோ கதையமைப்புகள் கொண்ட தமிழ் சினிமா பார்க்காதீர்கள்... Yes, the situation is very critical...

மயிலன் said...

Philosophy Prabhakaran said...
//ம்ம்ம்... மொத்ததுல சுஜாதா உங்களுக்கு மாமா வேலை பார்த்திருக்கார்...//
ஹி ஹி...:)
யாரு பாத்து என்ன பண்றது...?

//அதென்ன சென்னை தயிர் சாதங்கள்... ங்கொய்யால குருப் மெயில் போட்டேன்னா கும்மிடுவாங்க ஜாக்கிரதை...//
ஜி சென்னைல தயிர்சாதங்கள் இல்லன்னு சொல்றீங்களா... ஏங்க ஏரியா பாட்டுல வர்ற இன்னொரு ஏரியா பசங்கள பத்தின ஸ்டேட்மென்ட் அது...:))

//இனி சைக்கோ கதையமைப்புகள் கொண்ட தமிழ் சினிமா பார்க்காதீர்கள்... Yes, the situation is very critical...//
ரைட்டு தல....நானும் அதான் யோசிக்கிறேன்... மொதல்ல இந்த தனுஷ்,செல்வராகவன்,கெளதம் இவிங்கள எல்லாம் தடை செய்யனும்...

விக்கியுலகம் said...

விட்டுப்போன பார்வை...இப்படி இருந்திருக்கனும் போல...பிரிவை எப்படி தாங்குவது...பழகிக்கொள்ள வேணும் மாப்ள!

அரசன் சே said...

அண்ணாச்சி வணக்கம் ..

நெசமா சொல்றேன் இறுதியில வரிகளை முடித்ததும் ஒரு நிமிடம் என்குருதி உறைந்து தான் போனது ..
அவ்வளவு பேரதிர்ச்சி ... இன்னைக்கு படம் எடுக்குறேன் என்கிற பேர்வழியில் கொலை செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கு நான் சவால் விடுவேன் ... இங்க பாருங்கையா எங்க பட்டுக்கோட்டை சிங்கம் ஒன்னு புறப்பட்டிருக்கு என்று ..

அரசன் சே said...

நான்கு சென்னை தயிர்சாதங்கள் நண்பர்களாகி இருந்தனர்.. உனக்கு அவற்றை பிடிக்கும் என்று எனக்கான வேலியை உடைக்க தாய்மொழி கடந்தேன்.//

ஹா ஹா ஹா...
சென்னை தயிர் சாதங்கள் எப்பவுமே இப்படிதான் பாஸ் ..
ஒண்ணுமே இல்லைனாலும் வெட்டி பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது ..
சரியாதான் சொல்லி இருக்கீங்க ..

அரசன் சே said...

ஆறேழு மாதங்களுக்கு பிறகு சுந்தர் உன்னிடம் காதலுரைத்து செருப்படி வாங்கிய அன்றுதான் //

உண்மையிலே இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு .. அதானால் வந்த வலியும் , மகிழ்வும் தெளிவா அறிந்தவன் ,..
அண்ணாச்சி இதை உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் .. யார்கிட்டயும் சொல்லிடாதிங்க ..

அரசன் சே said...

.அதே மூன்றாவது பெஞ்சில் அதே சிவப்பு சுடிதாரில் நீ.. இதைவிட எனக்கு எப்படி ஒரு பொழுது கிடைக்கும்..? கேக் வெட்டி, முஸ்தபா பாடி, கொஞ்சம் கண்ணீர் விட்டு, நண்பர்கள் கையசைத்து கொண்டிருக்கும் வேளையில் நீ என்னைப் பார்த்து கொண்டிருப்பதை நான் கவனித்துவிட்டேன்.. நீயும் சிரித்துவிட்டாய்.. //

அட்ரா சக்கை அட்ராசக்கை .. இது போதாதா ... நம்மாளுங்க தூள் கேளப்பிடுவாங்க இல்ல ..

அரசன் சே said...

உன்னை நேருக்கு நேர் பார்த்து முடிந்தால் உதட்டில் ஒரு முத்தமிட்டு உரக்க சொல்ல வேண்டும் நான் உனை விரும்புவதை..முடிவு செய்து கொண்டேன்..//

முடிந்தால் முத்தம் .. எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது முத்தத்தோடு தொடங்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்க ..

அரசன் சே said...

நீங்க எடுத்துக்கொண்ட கரு மிகவும் எளிமையானது என்றாலும் அதை நளினப்படுத்தி , மென்மை குறையாமல்
நிதானமாய் வரிகளை கோர்த்து எந்த இடத்திலும் தவறு செய்ய கூடாது என்ற பெருங்கவனம் இந்த படைப்பில் காண்கிறேன் .. உங்களின் இந்த படைப்புக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் , வணக்கங்களும் ...

Anonymous said...

ரொம்ப சுப்பரா இருக்கு அண்ணா கதை ...

Anonymous said...

எனக்கு நிறைய சந்தேகமா வருது .......avvvvvvvvvvvv அப்புடிலம் முறைக்காதிங்க ....நான் உங்களை சந்தேகப் படல ...கதையில சில சந்தேகம் இருக்கு நு சொல்லுறேன் .... கதையை விமர்சனம் பண்ணி உங்கட மானத்தை ஷிப் ல ஏற்ற்ற மாட்டினான் ...

Anonymous said...

வாணாம் கலை ...ப்ளீஸ் அமைதி அமைதி ...........

மயிலன் said...

விக்கியுலகம் said...
//விட்டுப்போன பார்வை...இப்படி இருந்திருக்கனும் போல...பிரிவை எப்படி தாங்குவது...பழகிக்கொள்ள வேணும் மாப்ள!//

என்ன மாம்ஸ் இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டீங்க...??

மயிலன் said...

அரசன் சே said...
//அண்ணாச்சி வணக்கம் ..//

வண்க்கம் வண்க்கம்

//நெசமா சொல்றேன் இறுதியில வரிகளை முடித்ததும் ஒரு நிமிடம் என்குருதி உறைந்து தான் போனது ..
அவ்வளவு பேரதிர்ச்சி ... இன்னைக்கு படம் எடுக்குறேன் என்கிற பேர்வழியில் கொலை செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கு நான் சவால் விடுவேன் ... இங்க பாருங்கையா எங்க பட்டுக்கோட்டை சிங்கம் ஒன்னு புறப்பட்டிருக்கு என்று ..//

ரைட்டு ரைட்டு... வழி விடு வழி விடு.. ஹலோ யாரு?? மணிரத்னமா? சார் நா பிசியா இருக்கேன்னு சொன்னா கேக்க மாட்டிங்களா? ஹி ஹி...

//சென்னை தயிர் சாதங்கள் எப்பவுமே இப்படிதான் பாஸ் ..
ஒண்ணுமே இல்லைனாலும் வெட்டி பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது ..
சரியாதான் சொல்லி இருக்கீங்க ..//

ஐயோ.. ஏற்கனவே பிரபா வேற வந்து மெரட்டிட்டு போயிருகாப்ள.. நானே ஏதோ சொல்லி சாந்த படுத்தி வெச்சுருக்கேன்... இதுல நீங்க வேற...

//உண்மையிலே இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு .. அதானால் வந்த வலியும் , மகிழ்வும் தெளிவா அறிந்தவன் ,..
அண்ணாச்சி இதை உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் .. யார்கிட்டயும் சொல்லிடாதிங்க//இ
இரகசியங்கள் பாதுகாக்க படும்....:) நான் கேரண்டி...

மயிலன் said...

அரசன் சே said...
.
//முடிந்தால் முத்தம் .. எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது முத்தத்தோடு தொடங்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்க ..//

எங்க ஆயாவும் இத சொல்லித்தான் என்னையும் வளத்துச்சு...
//நீங்க எடுத்துக்கொண்ட கரு மிகவும் எளிமையானது என்றாலும் அதை நளினப்படுத்தி , மென்மை குறையாமல்
நிதானமாய் வரிகளை கோர்த்து எந்த இடத்திலும் தவறு செய்ய கூடாது என்ற பெருங்கவனம் இந்த படைப்பில் காண்கிறேன் .. உங்களின் இந்த படைப்புக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் , வணக்கங்களும் //

மிக்க நன்றி நண்பரே ...உங்களின் வார்த்தைகளால் எனக்கோர் ஆர்த்மார்த்தமான நெகிழ்ச்சி...

மயிலன் said...

கலை said...
//ரொம்ப சுப்பரா இருக்கு அண்ணா கதை ...//

எங்கடா இந்த புள்ளைய காணுமே ன்னு பாத்தேன்... வா வா..
//எனக்கு நிறைய சந்தேகமா வருது .......avvvvvvvvvvvv அப்புடிலம் முறைக்காதிங்க ....நான் உங்களை சந்தேகப் படல ...கதையில சில சந்தேகம் இருக்கு நு சொல்லுறேன் ....//

என்ன ன்னு கேளு சொல்றேன்...

// கதையை விமர்சனம் பண்ணி உங்கட மானத்தை ஷிப் ல ஏற்ற்ற மாட்டினான் ..//.

இது வேறயா? விமர்சனத்த எதிர்நோக்கித்தான் இருக்கேன்..

பிரபா கிட்ட கூட கேட்டேன்.. அவரும் பாலிஷா கருத்து சொல்லிட்டார்...

நீயாவது நாலு வார்த்த குறையெல்லாம் சொல்லு...:)


//வாணாம் கலை ...ப்ளீஸ் அமைதி அமைதி ........//...

அவசர பட்டு கேட்டுடோமோ..

உஷாரு.... மயிலா உஷாரு....:))

Radhika said...
This comment has been removed by the author.
Radhika said...

மிகவும் அருமை..சினிமா பார்த்த feeling..

மயிலன் said...

நன்றி ராதிகா...:)

ஜேகே said...

மயிலன் .. உங்களின் தமிழ் .. அழகாக இருக்குது ...

நிறைய பொண்ணுங்கள கிழிச்சிட்டீங்க என்று புரியுது ... !!! இனி எழுதுற டைம் தல ;) .. சோ எழுதாம சொல்லிடுங்க!