சகித்தவர்கள்...

2 Jun 2012

தேவதை பிம்பங்கள் #3
சந்தனக் கீற்றும்
சரிகை மையும்
கண்ணருகில்
காற்றாடும் அந்த
சிறுகொத்து முடியும்
சீரழித்தது போதும்..
சிரித்துவேறு
தொலைக்காதே..
உன் குடை
செய்யும்
மறியலில்தான்
மழைநீரின்
சில துளிகள்
வேதியியல்
விதிகளை மீறி
கண்ணீராகி
மண் சேர்கின்றன..


நீ
அதிகாலை
கடந்து
செல்லும்
அந்த
தார்சாலையில்
நண்பகல்
கடந்தும்
பனித்துளியை
சுமந்து நிற்கின்றன
இலை நுனிகள்...
20 comments:

எஸ்தர் சபி said...

ஆகா அழகான கவி அண்ணா...
சூப்பர்ர்ர்ர்ர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

புகைப்படங்கள் அருமை .. அதைவிட கவிதை மிக அருமை ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

மாணவர்களே ! பெற்றோர்களே !

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...

Philosophy Prabhakaran said...

அடடடடா... முதல் கவிதை சான்ஸே இல்லை... சூப்பரா இருக்கு...

கடைசி கவிதை டபுள் மீனிங்கோ...???

hari prasath said...

நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா நமக்கும் நாளைக்கு உதவும்..!

மயிலன் said...

எஸ்தர் சபி said...
//ஆகா அழகான கவி அண்ணா...
சூப்பர்ர்ர்ர்ர்//

நன்றி எஸ்தர்.. :)

மயிலன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//புகைப்படங்கள் அருமை .. அதைவிட கவிதை மிக அருமை ..//

நன்றி சார்...


//மாணவர்களே ! பெற்றோர்களே !

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கி//

blog not foundன்னு வருது

மயிலன் said...

Philosophy Prabhakaran said...
//அடடடடா... முதல் கவிதை சான்ஸே இல்லை... சூப்பரா இருக்கு...
கடைசி கவிதை டபுள் மீனிங்கோ...???//

முதல் வரிய படிச்சதும் எங்கடா இந்த character திருந்திடுசோ ன்னு தப்பா நெனச்சுட்டேன்...

இப்புடியெல்லாம் யோசிக்க சொல்லி யாருல்லே உனக்கு சொல்லி தர்றது...?

மயிலன் said...

hari prasath said...
//நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா நமக்கும் நாளைக்கு உதவும்..!//

நாலு பேரு நாசமா போறாங்கன்னா எதுவுமே தப்பில்ல...

வீடு சுரேஸ்குமார் said...

நல்லா வாயில வருது...!அட நல்லாருக்கப்பா...அப்படின்னு வருது! சூப்பரப்பு!

மகேந்திரன் said...

துளித்துளியாய் சிந்தும்
பனித்துளியாய்
சில்லென்று இருக்கிறது
துளிப்பாக்கள்...

சீனுவாசன்.கு said...

அப்பூடியா?

ஜேகே said...

//கடைசி கவிதை டபுள் மீனிங்கோ...???//

ரிப்பீட்டு!

கோவி said...

அருமையான கவிதைகள்.

Anonymous said...

படங்களும்...வரிகளும் போட்டி போடுகின்றன...ஜெயிப்பது...காதல் வயித்தியரே...

Anonymous said...

அப்பப்பா மிகவும் சூடான (hot) காதல் கவிதை..முழுதும் அருமை. நலவாழ்த்து. (வலைச்சரமூலம் வந்தேன். கவிதை மிகப் பிடிக்கும்)
வேதா. இலங்காதிலகம்.

Seeni said...

inimaiyaana kavithai!

Sasi Kala said...

சிரித்து வேறு வைக்காதே அழகான வரிகள் . ரசிக்கும் படியாக இருந்தது .

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - கவிதைகளும் படங்களும் அருமை. மிக மிக இஅரசித்தேன். நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

Poornima Sundar said...

migavum arumai