சகித்தவர்கள்...

29 Jul 2012

தேவதை பிம்பங்கள் # 7


உன் முத்தம் 
சேரா 
என் உதட்டோடு 
எப்படியோ 
மினக்கெட்டு 
இன்னமும் 
வாழ்ந்துகொண்டுதான் 
இருக்கிறேன் 
அநியாயமாய் 
நானும் 

உன் 
உலரா கூந்தல் 
பெய்யும் தூறல் 
உணர்த்திவிடுகிறது 
என் அறிவிற்கு 
இன்னதென்று 
இனம்பிரிக்க 
முடியா ஓர் 
காற்றழுத்த 
தாழ்வு மண்டலத்தை 
ஆடிகாற்றோ
ஐப்பசி மழையோ 
மார்கழி பனியோ 
அல்லது வேறேதோ  
ஒரு விவரிக்கமுடியா 
உன்னதமோ 
நீயென்
தோள்சாயும் 
கணப்பொழுதின் 
உயிருஷ்ணம்24 Jul 2012

தேவதை பிம்பங்கள் # 6
உன் 
அரை கொயர்
நோட்டுக்குள்
ஒளித்துவைக்கப்படும்
கவிதை சீட்டுகள் 
வெட்கமாய் 
வெடித்து வெளிவரும் 
பொழுதுக்காய் 
ஒரு போதும் 
காத்திருப்பதில்லை 
உனக்கான என் 
அடுத்த கவிதை 

என் வீட்டின் 
மேற்கில் உன் 
அறை ஜன்னல் 
இருப்பதாலோ 
என்னவோ 
எத்தனை முறை 
படித்தும்
சூரியன் உதிக்கும் 
பூகோளவிதியின் 
மீதுள்ள 
குழப்பம் மட்டும் 
தீரப்போவதேயில்லை


கொடியில் உலரும்
நைட்டியின் 
கொக்கியில் 
சிக்கிக்கிடந்த 
உன் ஒரு தனி 
சுருள்முடியைக் 
கையில் உருவி 
நீவும் கணம் 
சுவடின்றி 
சுருங்கிபோகிறது 
இருபத்தியாறு வருட 
என் ஒட்டுமொத்த 
ஆணவமும்...


23 Jul 2012

சமந்தா- ஒரு சம்பா... ச்சீ... வெண்பா...அன்பிற்குரிய விருப்பதாரர்களே,


நான் எலக்கியவாதி அல்ல என்று நீண்ட நாட்களாய் இருக்கும் பேச்சை குறைக்கவும், திருக்குறளுக்கு நான் எழுதிய உரையை வாசித்த நண்பர் ஜேகே வெண்பா ஒன்று எழுத என்னை வலியுறுத்தியதாலும், சமீப காலமாய் நான் கவிதை எழுதுவது குறைந்துவிட்டது என்ற 'வீடு' சுரேஸ் அண்ணனின் பகிரங்க குற்றச்சாட்டை கருத்தில் கொண்டும், சில நாட்களுக்கு முன் ஒரு பாடாவதி திரையரங்கில் 'நான் ஈ' சமந்தாவிடம் மிக ரகளையாக ஜொள்ளிய பாதிப்பிலும்... இதோ இங்கே சில வெண்பாக்கள் வீறுகொண்டு வெடிக்கின்றன...

முன்குறிப்பு: ஒவ்வொரு பாவும் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட வகையில் புனையப் பட்டிருந்தாலும் எலக்கியஞானம் இல்லாதோரும் நிதானமாய் வாசித்தால் நிச்சயம் புரியும்..(தக்காளி ஒரு பய உசுரோட இருக்கக்கூடாது...)ஈயாகத வம்செய்யு மோர்கூட் டம்தனில் 
தீயாகமெல்ட் டாகும்மெ ழுகுநான்- நோயென 
சேதா ரம்செய்திட்ட நொடிமறப் பதுலேசோ
நாதாரி யாய்முகமறைத்த துப்பட்டா

துப்பட் டாபோடாத குர்த்திகுத் திகிழிந்து 
அப்பாட்டக் கர்ஆனதென் நெஞ்சம்-சப்பாணி 
நடைகொண்டு காதல்எண் ணெய்கிடைந் திடசதம் 
தடைசெய் யும்அழகுநீ  செக்கு  
செக்கி ழுத்துகரெக்ட் செய்தகா ஜலுக்கு

சக்கலத் தியானசிறு லட்டே-பக்கம் 
வந்துமுத் தமொன்று தாரா மல்நோக 
லந்துகொடுக் கும்வெண் மேகம் 

மேகம துசல்லை கொடுத்தா லுமென்
மோகம ழைநனைக் குமுனை-காகமென 
வடைதி ருடும்வே ளையினில் பதிவர்நரி 
படையெனபா டகேட்கும் வஞ்சம் 
வஞ்சகப்பு கழ்ச்சியென தெரியு மென்பிதற்றல் 
நெஞ்சத் தின்அடிதோன் றிவையாம்-ரஞ்சிநித்தி 
சோடிமீ துஆணை உன்னழ குபாடிட 
கோடிவார்த் தைமிச்சம் தமிழில் 

   பின்குறிப்பு 1 : சமந்தாவை நான் நோக்குவதால் காஜலை ஆட்டையப்போடலாம் என்று 'சென்னை கிளை' நப்பாசை கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்க படுகிறார்... multi-tasking நமக்கு ஜுஜுபி சமாச்சாரம்...

பின்குறிப்பு 2 :  இனிமேலும் யாரும் என் எலக்கியவாதத்தை சோதிக்க நினைத்தால் காஜலத்துபரணி, அசிநானூறு என டரியல் ஆரம்பமாகும் என்று தாறுமாறாய் மிரட்டிக்கொள்கிறேன்...

என்றும் நன்றியுடன்...சி.மயிலன்


முன்னர் எழுதிய திருக்குறள் ஜொள்ளுரை வாசிக்க இங்கே சொடுக்கவும் 

11 Jul 2012

தேவதை பிம்பங்கள் # 5


ஊர்கூடும் 
திருவிழா 
பொழுதில் 
என்னை 
நானே 
தொலைக்க 
ஏங்கும்
எனக்கான 
ஒரு 
தனி 
திருவிழா 
நீ...


மடிப்பு 
கலையாமல் 
உன் மேனி 
பொருந்திகிடக்கும்
காட்டன் சேலைதான் 
ஒரு கணத்தில்
எனை 
கன்னாபின்னாவென 
கசக்கி போடுகிறது...


உன்னால் 
தொலைந்து 
போய்விடும் 
எனை 
எங்கேனும் 
தேடி 
எனக்கே 
காட்டிவிடும் 
நின் விழிகள்..