சகித்தவர்கள்...

11 Jul 2012

தேவதை பிம்பங்கள் # 5


ஊர்கூடும் 
திருவிழா 
பொழுதில் 
என்னை 
நானே 
தொலைக்க 
ஏங்கும்
எனக்கான 
ஒரு 
தனி 
திருவிழா 
நீ...


மடிப்பு 
கலையாமல் 
உன் மேனி 
பொருந்திகிடக்கும்
காட்டன் சேலைதான் 
ஒரு கணத்தில்
எனை 
கன்னாபின்னாவென 
கசக்கி போடுகிறது...


உன்னால் 
தொலைந்து 
போய்விடும் 
எனை 
எங்கேனும் 
தேடி 
எனக்கே 
காட்டிவிடும் 
நின் விழிகள்..

24 comments:

வரலாற்று சுவடுகள் said...

சிவப்பு தாவணியில் ஒரு சிவப்பு ரோஜா..!

மனசாட்சி™ said...

வரிகள் தேவதை தேவதை போல இருக்கு

வெளங்காதவன்™ said...

பகிர்ந்து கொண்ட படங்கள் அருமை!

நன்றி!!

த.ம. 7 1/2.

மயிலன் said...

@வெளங்காதவன் :

//த.ம. 7 1/2. //

யோவ்... இந்த எழவுக்குதான் அந்த த.ம வே நா வைக்கல...

இரவு வானம் said...

ஹூம்ம் நானும்தான் நிறைய திருவிழாவுல தொலையனும்னு நினைச்சிருக்கேன், நடக்கலயே, சூப்பர் பாஸ் ஒவ்வொன்னும் நச்!

வெளங்காதவன்™ said...

//மயிலன் said...

@வெளங்காதவன் :

//த.ம. 7 1/2. //

யோவ்... இந்த எழவுக்குதான் அந்த த.ம வே நா வைக்கல...///

என் இனம்யா நீர்!
:))

வெளங்காதவன்™ said...

//சூப்பர் பாஸ் ஒவ்வொன்னும் நச்!///

வெளக்க்கவும்

Anonymous said...

நேயர் விருப்ப நிறைவேற்றலுக்கு நன்றி மயிலரே...

ஏற்கனவே சொன்னது தான்...என் வயது குறைந்து கொண்டே போகிறது...தேவதை பிம்பங்களால்...

BTW,PHONE BILL ஜாஸ்தி...? நம்ம DR நாஸ்தி...

Anonymous said...

Your posts nolonger showup on my dashboard...Did you change your id in the recent past..Love Dr?

Anonymous said...

த.ம. 16 (வயதினிலே/என்றும் பதினாறு...)

எஸ்தர் சபி said...

சமந்தா தேவதையின் விம்பம் அழகு தனி அண்ணா...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
மடிப்பு
கலையாமல்
உன் மேனி
பொருந்திகிடக்கும்
காட்டன் சேலைதான்
ஒரு கணத்தில்
எனை
கன்னாபின்னாவென
கசக்கி போடுகிறது...

//

திருமணம் நிச்சயமான பின் கவிதை எல்லாம் ரொம்ப ரகளையா வருது ...

ஜீ... said...

செமையா இருக்கு பாஸ்! அதுவும் சமந்தாவும் கவிதையும் அப்ப்ப்பிடி இருக்கு! :-)

Seeni said...

variakal!

rasanai!

Athisaya said...

மடிப்பு
கலையாமல்
உன் மேனி
பொருந்திகிடக்கும்
காட்டன் சேலைதான்
ஒரு கணத்தில்
எனை
கன்னாபின்னாவென
கசக்கி போடுகிறது...

இன்று தான் தளம் வருகிறேன்.அத்தனை கவிதையும் அழகு.மிக ரசித்த கவிதை இதுதான்.வாழ்த்துக்கள் சொந்தமே!

Sasi Kala said...

விரைப்பான சேலை உங்களை விரைவில் கசக்கியதோ?

வீடு சுரேஸ்குமார் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//
மடிப்பு
கலையாமல்
உன் மேனி
பொருந்திகிடக்கும்
காட்டன் சேலைதான்
ஒரு கணத்தில்
எனை
கன்னாபின்னாவென
கசக்கி போடுகிறது...

//

திருமணம் நிச்சயமான பின் கவிதை எல்லாம் ரொம்ப ரகளையா வருது ...
//////////////////////////
வாத்தி! உமக்கு ஓவர் குசும்புய்யா...!இதுக்கு முன்னாடி மயிலன் கவிதை நல்லாயில்லை அப்படித்தானே...!

வீடு சுரேஸ்குமார் said...

மடிப்பு
கலையாமல்
உன் மேனி
பொருந்திகிடக்கும்
காட்டன் சேலைதான்
ஒரு கணத்தில்
எனை
கன்னாபின்னாவென
கசக்கி போடுகிறது..
//////////////////////
பின்
உன் பார்வை சலவையால்
மீண்டும் பளிச்சிடுகிறது

எதிர் பாட்டும் பாடுவமில்ல...!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ரசனை...நன்றி...

அரசன் சே said...

வணக்கம் அண்ணாச்சி ...

அரசன் சே said...

ஊர்கூடும் திருவிழா பொழுதில் என்னை நானே தொலைக்க ஏங்கும்
எனக்கான ஒரு தனி திருவிழா நீ... //

இந்த ஏக்கம் எதிர்பார்ப்பை தூண்டும் .. அண்ணாச்சி அதிகம் தொலைந்து இருப்பிங்களோ ...

அரசன் சே said...

மடிப்பு கலையாமல் உன் மேனி பொருந்திகிடக்கும் காட்டன் சேலைதான் ஒரு கணத்தில் எனை கன்னாபின்னாவென கசக்கி போடுகிறது... //

ம்ம்ம்ம்... என்னமோ ஏதோ ....
நடத்துங்க நடத்துங்க ..

வரிகள் மிக மென்மை..
ரசித்தேன்..

அரசன் சே said...

இந்த படங்களை எல்லாம் யார் உங்களுக்கு எடுத்து தராங்க ..
கன கச்சிதம் ...

Uzhavan Raja said...

வணக்கம் அண்ணா...

ஒரே கல்லுல மூணு மாங்காவா..
சூப்பர் அண்ணா...மிகவும் ரசித்தேன்..