சகித்தவர்கள்...

24 Jul 2012

தேவதை பிம்பங்கள் # 6
உன் 
அரை கொயர்
நோட்டுக்குள்
ஒளித்துவைக்கப்படும்
கவிதை சீட்டுகள் 
வெட்கமாய் 
வெடித்து வெளிவரும் 
பொழுதுக்காய் 
ஒரு போதும் 
காத்திருப்பதில்லை 
உனக்கான என் 
அடுத்த கவிதை 

என் வீட்டின் 
மேற்கில் உன் 
அறை ஜன்னல் 
இருப்பதாலோ 
என்னவோ 
எத்தனை முறை 
படித்தும்
சூரியன் உதிக்கும் 
பூகோளவிதியின் 
மீதுள்ள 
குழப்பம் மட்டும் 
தீரப்போவதேயில்லை


கொடியில் உலரும்
நைட்டியின் 
கொக்கியில் 
சிக்கிக்கிடந்த 
உன் ஒரு தனி 
சுருள்முடியைக் 
கையில் உருவி 
நீவும் கணம் 
சுவடின்றி 
சுருங்கிபோகிறது 
இருபத்தியாறு வருட 
என் ஒட்டுமொத்த 
ஆணவமும்...


14 comments:

Sasi Kala said...

முத்தான வரிகள்.

வரலாற்று சுவடுகள் said...

உங்க ரவுசு தாங்க முடியலையே! முன்னாடி காஜலையும் எடுத்துக்கிட்டீங்க.. இப்போ சமந்தாவையும் எடுத்துக்கிட்டீங்க..அப்ப நாங்க என்னதான் செய்யுறது? அப்ப தமிழ்நாட்டுல நாங்கெல்லாம் வெட்டியா பிறந்திருக்கோமா..நல்லால்லைனே இது கொஞ்சம் கூட நல்லால்லை!

வெளங்காதவன்™ said...

செமையா இருக்கு மச்சி!!!!

#போட்டோவப் பாத்தா மட்டும் ஒல்லிப் பிச்சான்களா இருக்குய்யா... குஷ்பு, நமீ.... இது மாதிரி வெரைட்டியா ட்ரைப் பண்ணுய்யா.... ஆங்....

:-)

ஜீ... said...

சூப்பர் பாஸ்! அதிலும் மூணாவது கவிதை செம்ம! :-)

வீடு சுரேஸ்குமார் said...

தம்பி நல்லாயிருக்கு...!ஆனால் என் கவிதையின் சாயல் வருவதை கொஞ்சம் தவிர்க்கவும்.....அவ்வ்வ்வ்

வீடு சுரேஸ்குமார் said...

வெளங்காதவன்™ said...
செமையா இருக்கு மச்சி!!!!

#போட்டோவப் பாத்தா மட்டும் ஒல்லிப் பிச்சான்களா இருக்குய்யா... குஷ்பு, நமீ.... இது மாதிரி வெரைட்டியா ட்ரைப் பண்ணுய்யா.... ஆங்....
//////////////
ஆமாம் மச்சி செம கட்டையா இருக்கும்.....!

N.Mani vannan said...

பாஸ் சூப்பர்

ராஜி said...

ரொம்ப முத்திதான் போய்டுச்சு போல.

PREM.S said...

பாஸ் அந்த நைட்டி கவிதை உச்சம் பாஸ் எப்டிலாம் பீல் பண்றீங்க போங்க

Seeni said...

kaathalu-
mmm pannunga...


nalla variakal nanpaa!

Anonymous said...

Sorry 2 late...Luved it...

Anonymous said...

வீடு சுரேஸ்குமார் said...
தம்பி நல்லாயிருக்கு...!ஆனால் என் கவிதையின் சாயல் வருவதை கொஞ்சம் தவிர்க்கவும்.....அவ்வ்வ்வ்
//
2 much..

சீனுவாசன்.கு said...

முடியல சாமி!வுட்ரு...

சீனுவாசன்.கு said...

முடியல சாமி!வுட்ரு...