சகித்தவர்கள்...

29 Jul 2012

தேவதை பிம்பங்கள் # 7


உன் முத்தம் 
சேரா 
என் உதட்டோடு 
எப்படியோ 
மினக்கெட்டு 
இன்னமும் 
வாழ்ந்துகொண்டுதான் 
இருக்கிறேன் 
அநியாயமாய் 
நானும் 

உன் 
உலரா கூந்தல் 
பெய்யும் தூறல் 
உணர்த்திவிடுகிறது 
என் அறிவிற்கு 
இன்னதென்று 
இனம்பிரிக்க 
முடியா ஓர் 
காற்றழுத்த 
தாழ்வு மண்டலத்தை 
ஆடிகாற்றோ
ஐப்பசி மழையோ 
மார்கழி பனியோ 
அல்லது வேறேதோ  
ஒரு விவரிக்கமுடியா 
உன்னதமோ 
நீயென்
தோள்சாயும் 
கணப்பொழுதின் 
உயிருஷ்ணம்10 comments:

மனசாட்சி™ said...

வணக்கம்

படமும் உங்கள் கற்பனை திறனும் (அதாங்க கவிதை சொன்னேன்) ஆபாரம்

எஸ்தர் சபி said...

படத்துக்கேற்ற கவிதைகள் அழகு அண்ணா.....

Suresh Subramanian said...

nice sir..

இரவு வானம் said...

//உயிருஷ்ணம்//

Perfect, super dr ...

வரலாற்று சுவடுகள் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அந்த மூணாவது கவித சூப்பரு!

கோவி said...

ஒவ்வொன்றும் அருமை..

Uzhavan Raja said...

ம்ம்ம்.. சூப்பர் அண்ணா..

அரசன் சே said...

வணக்கம் அண்ணாச்சி ..
கவிதை இரண்டும் மூன்றும் மிகவும் ரசித்தேன் ..
திருமணம் நிச்சயம் ஆனதும் கவிதை ஆழம் கொஞ்சம் கூடியதாய்
உணர்கிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப ஃபீலிங்கா போகுதே கவிதை...?

அழகு....!

Seeni said...

adengappaaa!

kavithai !
arumai!