சகித்தவர்கள்...

23 Jul 2012

சமந்தா- ஒரு சம்பா... ச்சீ... வெண்பா...அன்பிற்குரிய விருப்பதாரர்களே,


நான் எலக்கியவாதி அல்ல என்று நீண்ட நாட்களாய் இருக்கும் பேச்சை குறைக்கவும், திருக்குறளுக்கு நான் எழுதிய உரையை வாசித்த நண்பர் ஜேகே வெண்பா ஒன்று எழுத என்னை வலியுறுத்தியதாலும், சமீப காலமாய் நான் கவிதை எழுதுவது குறைந்துவிட்டது என்ற 'வீடு' சுரேஸ் அண்ணனின் பகிரங்க குற்றச்சாட்டை கருத்தில் கொண்டும், சில நாட்களுக்கு முன் ஒரு பாடாவதி திரையரங்கில் 'நான் ஈ' சமந்தாவிடம் மிக ரகளையாக ஜொள்ளிய பாதிப்பிலும்... இதோ இங்கே சில வெண்பாக்கள் வீறுகொண்டு வெடிக்கின்றன...

முன்குறிப்பு: ஒவ்வொரு பாவும் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட வகையில் புனையப் பட்டிருந்தாலும் எலக்கியஞானம் இல்லாதோரும் நிதானமாய் வாசித்தால் நிச்சயம் புரியும்..(தக்காளி ஒரு பய உசுரோட இருக்கக்கூடாது...)ஈயாகத வம்செய்யு மோர்கூட் டம்தனில் 
தீயாகமெல்ட் டாகும்மெ ழுகுநான்- நோயென 
சேதா ரம்செய்திட்ட நொடிமறப் பதுலேசோ
நாதாரி யாய்முகமறைத்த துப்பட்டா

துப்பட் டாபோடாத குர்த்திகுத் திகிழிந்து 
அப்பாட்டக் கர்ஆனதென் நெஞ்சம்-சப்பாணி 
நடைகொண்டு காதல்எண் ணெய்கிடைந் திடசதம் 
தடைசெய் யும்அழகுநீ  செக்கு  
செக்கி ழுத்துகரெக்ட் செய்தகா ஜலுக்கு

சக்கலத் தியானசிறு லட்டே-பக்கம் 
வந்துமுத் தமொன்று தாரா மல்நோக 
லந்துகொடுக் கும்வெண் மேகம் 

மேகம துசல்லை கொடுத்தா லுமென்
மோகம ழைநனைக் குமுனை-காகமென 
வடைதி ருடும்வே ளையினில் பதிவர்நரி 
படையெனபா டகேட்கும் வஞ்சம் 
வஞ்சகப்பு கழ்ச்சியென தெரியு மென்பிதற்றல் 
நெஞ்சத் தின்அடிதோன் றிவையாம்-ரஞ்சிநித்தி 
சோடிமீ துஆணை உன்னழ குபாடிட 
கோடிவார்த் தைமிச்சம் தமிழில் 

   பின்குறிப்பு 1 : சமந்தாவை நான் நோக்குவதால் காஜலை ஆட்டையப்போடலாம் என்று 'சென்னை கிளை' நப்பாசை கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்க படுகிறார்... multi-tasking நமக்கு ஜுஜுபி சமாச்சாரம்...

பின்குறிப்பு 2 :  இனிமேலும் யாரும் என் எலக்கியவாதத்தை சோதிக்க நினைத்தால் காஜலத்துபரணி, அசிநானூறு என டரியல் ஆரம்பமாகும் என்று தாறுமாறாய் மிரட்டிக்கொள்கிறேன்...

என்றும் நன்றியுடன்...சி.மயிலன்


முன்னர் எழுதிய திருக்குறள் ஜொள்ளுரை வாசிக்க இங்கே சொடுக்கவும் 

31 comments:

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் முதல்ல இங்கே பக்கத்துல மலை எங்கே இருக்கு சொல்லுங்கலேய் போய் குதிச்சுட்டு உயிரோடே அண்ணன் இருந்தால்......அல்லது திரும்பி வந்தால் காஜோலை என் கூட அனுப்பிருங்க...!

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு ஆன்மா ஆபத்தில் மாட்டிக்கொண்டது....

Seeni said...

venpaa
azhaku thaan!

antha ponna ninachaa. varanum...

வீடு சுரேஸ்குமார் said...

அய்யகோ...!என்ன பாடல்!என்ன பாடல்!ஆயிரம் பொற்காசுகளும் தாங்களுக்கே புலவரே!

வரலாற்று சுவடுகள் said...

எனக்கு தமிழ்ங்கிற ஒரே ஒரு மொழி தான் ஓரளவுக்கு நல்லா தெரிஞ்சிகிட்டு இருந்திச்சு.., இனிமே அதுவும் மறந்திரும்னு நினைக்கிறேன்!

வரலாற்று சுவடுகள் said...

இந்த வெண்பா கவிதை எழுதுற யாரும் இந்த பக்கம் வந்திரக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்.. தப்பித்தவறி வந்திட்டா நீங்க கொலை கேசுல உள்ள போக வேண்டியதிருக்கும் :D :D

எஸ்தர் சபி said...

சமந்தா என விருப்பத்துக்குரிய நாயகி அண்ணா இவர் தெலுங்கில் நடித்த விண்னை தாண்டி வருவாயா எனக்கு றொமடப பிடிக்கும் நானும் ஒரு பதிவு இட்டேன் பார்க்கலயா சமந்தா பற்றி....

அரசன் சே said...

கோடி கண்கள் வேண்டுமையா இந்த கவிதையை படிக்க ,ச்சே இந்த கவிதையை ரசிக்க (நான் சமந்தாவை சொன்னேன்)

அரசன் சே said...

அண்ணாச்சி வெண்பா எங்கே எழுதி இருக்கீங்க ...
பாக்கும் எடமெல்லாம் படமா கண்ண குளிரவைக்குது ...

அரசன் சே said...

காஜலின் பகுதி நேர கிளை ஒன்று திறக்க உங்களின் ஆதரவும் , அனுமதியும் தேவை ...

மனசாட்சி™ said...

எலக்கியம்.....ரொம்பவே எலகி ஓடுது

கோவி said...

அடடா.. இப்புடியும் கெளம்பியாச்சா.. சரித்தான்...

வெளங்காதவன்™ said...

குஷ்புவுக்குக் கோவில்கட் டிக்காத்த எம்தமிழன்
புஷ்டியின்றி பெண்கள்கண் செஞ்சீஈர்- பேணமாட்டார்
கச்சையின்றிப் பெண்களுண்டாம் சமந்தா போல
இச்சையில் லையிவ் வுலகே.

யாருகிட்ட? நாங்களும் எழுதுவம்லே!!!

வெளங்காதவன்™ said...

நீ நடத்து ராசா!!!! இதுமாதிரி ஜொள்ளுறது இன்னும் கொஞ்ச காலம்தான்!!! அதுக்கு அப்புறம்....
ஹூம்......

மயிலன் said...

MANO நாஞ்சில் மனோ said...
//எலேய் முதல்ல இங்கே பக்கத்துல மலை எங்கே இருக்கு சொல்லுங்கலேய் போய் குதிச்சுட்டு உயிரோடே அண்ணன் இருந்தால்......அல்லது திரும்பி வந்தால் காஜோலை என் கூட அனுப்பிருங்க...!//

எலக்கிய சோதனை...


//ஒரு ஆன்மா ஆபத்தில் மாட்டிக்கொண்டது...//

ஹ்ம்ம்.. இப்பதான் நீங்க நம்ம வழிக்கு வர்றீங்க....

மயிலன் said...

நன்றி seeni...

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//அய்யகோ...!என்ன பாடல்!என்ன பாடல்!ஆயிரம் பொற்காசுகளும் தாங்களுக்கே புலவரே!//

அண்ணன் சுரேஸ்குமார் மட்டுமில்ல... இனி எந்த கொமாரும் நம்மகிட்ட கவித கேக்கப்டாது....

மயிலன் said...

வரலாற்று சுவடுகள் said...
//எனக்கு தமிழ்ங்கிற ஒரே ஒரு மொழி தான் ஓரளவுக்கு நல்லா தெரிஞ்சிகிட்டு இருந்திச்சு.., இனிமே அதுவும் மறந்திரும்னு நினைக்கிறேன்!//

இதுக்கேவா? இன்னும் நம் எண்ண ஊற்று முழுதும் சுரந்தால்..? ஐயகோ...ஞானசூனிய கூட்டமே...//இந்த வெண்பா கவிதை எழுதுற யாரும் இந்த பக்கம் வந்திரக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்.. தப்பித்தவறி வந்திட்டா நீங்க கொலை கேசுல உள்ள போக வேண்டியதிருக்கும் :D ://

அவனுக கெடக்குரானுக பொறாம புடிச்ச பயலுக....

மயிலன் said...

எஸ்தர் சபி said...
//சமந்தா என விருப்பத்துக்குரிய நாயகி அண்ணா இவர் தெலுங்கில் நடித்த விண்னை தாண்டி வருவாயா எனக்கு றொமடப பிடிக்கும் நானும் ஒரு பதிவு இட்டேன் பார்க்கலயா சமந்தா பற்றி...//

அட செல்லமே... அண்ணி மேல அம்புட்டு பிரியமாடா உனக்கு...?

மயிலன் said...

அரசன் சே said...
//கோடி கண்கள் வேண்டுமையா இந்த கவிதையை படிக்க ,ச்சே இந்த கவிதையை ரசிக்க (நான் சமந்தாவை சொன்னேன்)//

நோ சைட்டிங்...

//அண்ணாச்சி வெண்பா எங்கே எழுதி இருக்கீங்க ...
பாக்கும் எடமெல்லாம் படமா கண்ண குளிரவைக்குது ...//

புள்ள அம்புட்டு சோக்காக்கீது....


//காஜலின் பகுதி நேர கிளை ஒன்று திறக்க உங்களின் ஆதரவும் , அனுமதியும் தேவை ...//

எந்த பகுதின்னு சொன்னீங்கன்னா மனு பரிசீலிக்க படும்...(single meaning only..)

மயிலன் said...

மனசாட்சி™ said...
//எலக்கியம்.....ரொம்பவே எலகி ஓடுது//

அது நம்மை போன்ற தமிழ் சான்றோர்க்கு மட்டுமே புரியும் ஒரு....ஒரு...ஒரு....ஹ்ம்ம்....ஒரு செம்ம மேட்டரு....

மயிலன் said...

கோவி said...
//அடடா.. இப்புடியும் கெளம்பியாச்சா.. சரித்தான்...//

கெளம்பல... கெளம்ப வைத்துவிட்டது இந்த தமிழ் பதிவு சமுதாயம்....

மயிலன் said...

வெளங்காதவன்™ said...
//குஷ்புவுக்குக் கோவில்கட் டிக்காத்த எம்தமிழன்
புஷ்டியின்றி பெண்கள்கண் செஞ்சீஈர்- பேணமாட்டார்
கச்சையின்றிப் பெண்களுண்டாம் சமந்தா போல
இச்சையில் லையிவ் வுலகே.

யாருகிட்ட? நாங்களும் எழுதுவம்லே!!!//

அட சொல்லவே இல்ல...
நீங்களும் அவ்வையார் ஆரம்ப பாடசாலைலதான் படிச்சீங்களா?
//நீ நடத்து ராசா!!!! இதுமாதிரி ஜொள்ளுறது இன்னும் கொஞ்ச காலம்தான்!!! அதுக்கு அப்புறம்....
ஹூம்.....//

அணையெல்லாம் கட்டி தடுக்க இந்த ஜொள்ளு கால்வாய் இல்லண்ணே... காட்டாறு...

devadass snr said...

சமந்தா கவிதைகளை அனைவரும் கலாய்த்து பின்னுாட்டம் எழுதி உள்ளார்கள்.
ஆனால் அந்த கவிதைகளில் உள்ள வரிகளைத்தான் பல முறை படித்தேன்.
பரவாயில்லை. நன்றாகவே உள்ளது.
வாழ்க வளமுடன்.
snr.DEVADASS

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாஸ்... இன்னைக்கு காலையில நான் வாசிச்ச மொத பதிவே இதுதான்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

வேணாம் பாஸ்... இனி உங்க பதிவை கடைசியாவே வாசிச்சுக்கறேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

யாருல மயிலனை தூண்டி விட்ட சுரேசு....?

ஏன்யா இப்படி?

ஜேகே said...

கம்பன் விழா முடிஞ்சு வீடு வந்தா நீக வெண்பா கலக்கியிருக்கீங்க தல.

தல பின்னியிருக்காப்ள! .. ஆங்காங்கே தளை தறிகெட்டுபோனாலும்(உதாரணம் ரஞ்சிநித்தி) சமந்தாவை கண்டால் புகழேந்திக்கே தளை விடும் .. மயிலன் எம்மாத்திரம்?!!!

மரபுக்காக கவித்துவம் கொஞ்சம் விடுபட்டுட்டு போல ..

நேரிசை வெண்பா எண்டு சொல்லிகொள்ளுங்க தல .. யாராவது ஆ ஊன்னா அப்புறம் பார்த்துக்கலாம்!

அடி தூள்!

சீனுவாசன்.கு said...

ஆத்தி!...

Unknown said...

ammaadi..

jeeva nandham said...

ippadiyuma kavithai:) valthkkal

Anguraj Chelladurai said...

வயிறு வலிக்க சிரிச்சுட்டேன்... பைதவே வெண்பா சும்மா 'நச்'...