சகித்தவர்கள்...

5 Aug 2012

அந்த ஒரு டைரி பக்கத்தில்...
ஒரு மாலைவேளை
முதன்முறை வாகனத்தில்
உன் பின்னால் அமர்ந்து
பயணித்தபோது
ஒரு முத்தம் நம்மோடு
மூன்றாவதாய்
சேர்ந்து கொள்ள
உனக்கு பிடித்த மழையும்
நான்காவதாய்
வந்து சேர்ந்தது..அருகில் அமர்ந்து
என் செவியினுக்குள் 
சிரிக்கும் பொழுதுகளில் 
உன் கன்னம் வருடும் 
என் கையைத் 
தட்டிவிட்டு உடனே
பற்றி கோர்த்துகொள்ளும் 
இறுக்கத்தில் 
சில நொடி 
அப்போதே நான் 
இறந்திருக்கக்கூடும் 


கடற்கரை மணலில் 
நீ எங்கேயோ பார்த்து 
ஏதேதோ பேசி 
கவனமாய் 
என் நகத்தை கடிக்கும் 
வேளைகளில் 
அந்த வலியை
சிலாகித்து 
உன்னில் மட்டுமே 
உழன்று கொண்டிருப்பேன்...


பனி மூட்டம் மறைக்கும் 
மரங்கள் சூழ்ந்த 
விவரிக்க முடியா 
வெள்ளை நிற 
வீடொன்றின் பால்கனி 
இப்போதும் தாங்கி நிற்கும் 
உன்னுடனான 
ஒரு கோப்பை
தேநீருக்கான கனவுகளை..
இளையராஜாவின் 
பியானோவோடு..


என்றோ நம் பெயரை 
ஒன்றாய் சேர்த்து 
எழுதிவைத்து ரசித்து 
பின்னர்  
மறந்து போன 
டைரியொன்றில்
இன்று 
உன் பெயரை மட்டும் 
அழிக்கும் வன்மை பெரும் 
ஓர் கண்ணீர் துளி 


7 comments:

வரலாற்று சுவடுகள் said...

முதல் கவிதையும் கடைசி கவிதையும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது!

வீடு சுரேஸ்குமார் said...

இளையராஜா பியானோவில் என்ன ”காற்றில் உன் கீதமா....?” கவிதை அந்த பாடல் போலவே...!

பிரேம் குமார் .சி said...

//கடற்கரை மணலில்
நீ எங்கேயோ பார்த்து
ஏதேதோ பேசி
கவனமாய்
என் நகத்தை கடிக்கும்
வேளைகளில்
அந்த வலியை
சிலாகித்து //

ம்ம் நல்லாத்தான் இருக்கும் அந்த வலி

மனசாட்சி™ said...

கவித கவிதா நல்லா இருக்கு

Athisaya said...

பனி மூட்டம் மறைக்கும்
மரங்கள் சூழ்ந்த
விவரிக்க முடியா
வெள்ளை நிற
வீடொன்றின் பால்கனி
இப்போதும் தாங்கி நிற்கும்
உன்னுடனான
ஒரு கோப்பை
தேநீருக்கான கனவுகளை..
இளையராஜாவின்
பியானோவோடு.....

காதலால் கசிந்து உருகும் வார்த்தைகள்.இப்படி 1 முறை எழுத வேண்டுமென பேரவா..இன்று இதைப்படிக்கக்கிடைத்தது பெருமகிழ்ச்சி.வாழ்த்துக்கள் சொந்தமமே!சந்திப்போம்.

Uzhavan Raja said...

///என்றோ நம் பெயரை
ஒன்றாய் சேர்த்து
எழுதிவைத்து ரசித்து
பின்னர்
மறந்து போன
டைரியொன்றில்
இன்று
உன் பெயரை மட்டும்
அழிக்கும் வன்மை பெரும்
ஓர் கண்ணீர் துளி///


சூப்பர் அண்ணா..

வா.கோவிந்தராஜ், said...

மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!