சகித்தவர்கள்...

11 Aug 2012

மாதவிடாய்


உனக்கு வேற தலைப்பே கெடைக்கலையா?

ஏன்? என்னாச்சு? இதுக்கு என்ன? பொருத்தமா இல்லன்னு நெனைக்கிறியா?

பொருத்தம், பொருத்தமில்ல... அதில்ல விஷயம்.. இது அபத்தமா இருக்கு... கட்டாயம் இதத்தான் வெக்கப்போறியா?

சார் வேற எதாவது suggest பண்ண போறீங்களா? k... come on sweetheart.. shoot..

stop teasing நர்மி.. try to be sensible....

என்ன பிரசாத்... எனக்கு புரியல... இதுல உனக்கு என்ன அப்படி ஒரு கஷ்டம்.. 

நல்லா யோசிச்சுதான் இந்த டைட்டில் வெச்சுருக்கியா? 

அடேய் சின்ன பையா....இந்த நாவல் எழுத எவ்வளோ யோசிச்சேனோ அதே அளவு இந்த தலைப்புக்கும் யோசிச்சிருக்கேன்.. 

எல்லாத்தையும் அலட்சியமா செய்யுற நர்மி நீ..  God.. இதுனால என்னென்ன ப்ரெச்சன வரும்ன்னு யோசிக்கவே மாட்டியா?

ஹே... ஹே... calm down...  என்னடா என்னனமோ சொல்ற?  See, இது என்னோட ரெண்டாவது நாவல்...எல்லாருக்குமே first shot நல்லாதான் இருக்கும்.. ஆனா நம்மள சுத்தி இருக்குறவங்க நம்மளோட ரெண்டாவது creationக்காகதான், அதுல நாம சொதப்பனும்ன்னுதான் வெயிட் பண்ணுவாங்க... எனக்கு அந்த பொறுப்பு இருக்காதா? you know right? கிட்டத்தட்ட எட்டு மாசமா நா அக்கறையா எழுதுன நாவல் இது ... ஒரு ப்ரெச்சனையும் வராது... stop worrying..

நா என்ன பேசிட்டு இருக்கேன்... நீ என்ன பேசுற?

இப்போ என்னதான் சொல்லவர்ற... pls, try to be frank...

k.. let me be frank... நீ நாளைக்கு எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ... i ve just meant that..

so what? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் பிரசாத்? writing is my passion... உனக்கு அது தெரிஞ்சுதானே என்ன லவ் பண்ணே...

என்னமோ எழுதிட்டு போ... பட் இந்த டைட்டில் வேணாம்...

இங்க பாரு பிரசாத்.. அப்படி என்ன உறுத்தல கண்டுபுடிச்சுட்டேன்னு இப்டி பேசுற...நாவல் விக்கணும்ங்கறதுக்காக சம்பந்தமே இல்லாம அந்தரங்க விஷயத்த தலைப்பா வைக்குற இந்த டைம்ல, நா வெச்சுருக்கறது என்ன பொருத்தவரைக்கும் ஒரு honest title...பட் நர்மி... புரிஞ்சுக்கோ... "என்னடா உன் ஆளு மேட்டர் பத்திலாம் எழுத ஆரம்பிச்சுட்டா போல..."ன்னு சுந்தர் கேக்குறான்... கேக்கவே அசிங்கமா இருக்கு... 

எது பிரசாத் அசிங்கமா இருக்கு உனக்கு ..? அவன friendன்னு சொல்லிக்கத்தான் நீ அசிங்கப்படனும்... its such an idiocy to speak like this...

சரி.. அவன விடு.. இப்போதான் எங்க வீட்ல நம்மள பத்தி பேச ஆரம்பிச்சிருக்கேன்... இந்த நேரத்துல போயி...

அதுனால... 

நீ இப்டி எழுதுனா அவுங்க என்ன நெனைப்பாங்க?

ஏன்? உங்க வீட்ல உங்க அம்மா அண்ணிக்கெல்லாம் இதெல்லாம் கிடையாதா...?

புரிஞ்சுக்க மாட்டியா நர்மி...எங்க வீட்ல... what to say.. தெல்லாம்...தெல்லாம்...ஒரு...தீட்டு.. எங்க அண்ணிலாம் பீரியட்ஸ் டைம்ல வீட்ல ஒரு ஓரமாதான் படுத்திருப்பா...ஒரு ஒலக்கைய வெச்சுக்கிட்டு... அவங்களுக்கு இதெல்லாம் அருவருப்பான சம்பவம்.. வீட்டுக்கு வரப்போற மருமக இப்படிலாம் எழுதுனா they ll feel really bad... please...சொன்னா கேளு...

என்ன பிரசாத் இது... சுத்த foolish ஆ இருக்கு...

உங்க  வீட்ல இருக்கறவங்க, உன்னோட friends யாருமே இதுக்கு ஒன்னும் சொல்லலையா?

சொன்னாங்க.. நல்லாருக்குன்னு சொன்னாங்க...

உன்ன மாதிரிதானே இருப்பாங்க உன்னோட ஃப்ரென்ட்ஸும்... எல்லாம் அதிகபிரசங்கிங்க....

உன்னோட logic சுத்தமா எனக்கு புரியல... சொல்லப்போனா... புடிக்கல... நீ ஃபுல் நாவல் படிச்சேல்ல... நீ இப்டி பேசுறது ஆத்திரமா வருது... சிவநேசன் சார் எப்படி பாராட்னாருன்னு பாத்ததானே...

அவன் பேசுவான்... அவன் வீட்டு பொம்பள இப்டி தலைப்பு வெச்சா பாராட்டுவானா? 

ச்சீ...stop it idiot... இப்டிதான் பேசுவியா?

ஹோ...உங்களுக்கு நா பேசுறதுதான் அசிங்கமா இருக்கு.. நீங்க பண்றதெல்லாம் பூஜை பண்றாப்லலே இருக்கு...

புரியுது பிரசாத்.. சுந்தர் சொல்றான், அம்மா சொல்வாங்க, அண்ணி சொல்லுவான்னு நீ பேத்துனது எல்லாம் உன்னோட views... அப்டிதானே...? 

நீ எப்டிவேணா எடுத்துக்கோ.. பட் நீ அந்த டைட்டில் வைக்க கூடாது...

மாத்த முடியாதுன்னா?

...........

சொல்லு பிரசாத்.. மாத்த முடியாதுன்னா?

நீ எதும் பேசாத.. மொதல்ல கெளம்பு இங்கிருந்து...

.........................fine.. thank u...thank u so much....

திரும்பியே பார்க்கவில்லை...அழுகையும் ஆத்திரமும் தொண்டையை அடைக்கிறது நர்மதாவிற்கு.. பிரசாத், சுந்தர், அம்மா, அண்ணி... இந்த மனிதர்கள் மீண்டும் மீண்டும் எண்ண அலைகளாய் வழி நெடுக்க அவளது உள்ளமைதியை குலைத்துக்கொண்டே பின் தொடர்ந்தனர்.... கீழுதட்டை மடக்கி கடித்து கொண்டு, மூச்சை இழுத்துப்பிடித்துகொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி வேகமாய் நடக்க தொடங்கினாள்... ஸ்டாப்பை நெருங்கியதும், ஏதோ யோசித்தவளாய், அருகிலிருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று, மூன்று நான்கு ஆண்களுக்கு மத்தியில் நின்று, கொஞ்சம் சத்தமாய்தான் கேட்டாள்...

"ஒரு WHISPER... "


முற்றும்


பின்குறிப்பு:  புத்தக அட்டை மாடல் கற்பனையே... )


43 comments:

ஹாரி பாட்டர் said...

N O C O M M E N T S

என்னணே இதெல்லாம்.. நான் ரொம்ப சின்ன பையன்.. ஹி ஹி

கதை நகர்வு சூப்பர்

கோவி said...

புத்தக தலைப்பை வைத்தே சிறுகதை... அருமை...

பிரேம் குமார் .சி said...

அருமை பாஸ் அந்த படமும் கலக்கல்

புத்தகம் விற்பதற்காக வைத்தார்களோ என்னவோ உங்களுக்கு இந்த பதிவின் மூலம் ஏகப்பட்ட பார்வைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு

சிறுகதை நடை அருமை பாஸ் கலக்குங்க

வீடு சுரேஸ்குமார் said...

யோவ்...!போய்யா....மாசம்..மாசம் மெடிக்கல் ஷாப்புல ஆண்கள்தான் வாங்குறாங்க..! பெண்களும் கூச்சப்படுவதில்லை...!புரிதல் இருந்தால் ஓகே!

safi said...

வீடு சுரேஸ்குமார் அண்ணன் சொன்னது சரியே

மனசாட்சி™ said...

ஒ.... இது தான் மேட்டரா - நான் என்னவோ ஏதோன்னு சரி - நல்லாத்தான் யோசிக்கிறீங்க.

Dr.SUKUMAR said...

nice story...

வரலாற்று சுவடுகள் said...

நம்ம ரெவெரி "எனது மார்பகம்"-ங்ர கவிதையில்.., நாம் நினைச்சே பார்க்காத நல்ல கருத்தை வியப்பான கவிதை நடையில் முன்மொழிந்திருப்பார்., அதற்க்கு பிறகு இப்போதுதான் உங்கள் இந்த பதிவில் ஒரு அருமையான கருத்து முன்மொழியப்பட்டுள்ளது!

மயிலன் said...

கோவி said...
// புத்தக தலைப்பை வைத்தே சிறுகதை... அருமை...//

அந்த புத்தகம்தான், நான் அமைத்திருக்கும் பிராதான கதாபாத்திரம்...

மயிலன் said...

பிரேம் குமார் .சி said...
//அருமை பாஸ் அந்த படமும் கலக்கல் //

முதலில் அந்த புத்தக அட்டைதான் டிசைன் செய்தேன்... பின்னரே கதை... :)

// புத்தகம் விற்பதற்காக வைத்தார்களோ என்னவோ உங்களுக்கு இந்த பதிவின் மூலம் ஏகப்பட்ட பார்வைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு //

ஹஹா... இந்த பார்வைக்கான பதிலையும் கதை உள்ளேயே எழுதிவிட்டேன்...:)

//சிறுகதை நடை அருமை பாஸ் கலக்குங்க //

நன்றி பிரேம்...

மயிலன் said...

ஹாரி பாட்டர் said...
//N O C O M M E N T S //

இந்த நிலைதான் மாறனும்...

//என்னணே இதெல்லாம்.. நான் ரொம்ப சின்ன பையன்.. ஹி ஹி//

அப்போ உங்களுக்குத்தான் நெறைய தெரியும்...

//கதை நகர்வு சூப்பர்//

நன்றி பாட்டர்...

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//யோவ்...!போய்யா....மாசம்..மாசம் மெடிக்கல் ஷாப்புல ஆண்கள்தான் வாங்குறாங்க..! //

அண்ணே... இங்கதான் தப்பு பண்றீங்க... நேப்கின் ஆண்கள் கடையில் சென்று வாங்குவதே பெண்கள் பெரும்பாலும் அதனை வெளிப்படையாய் கேட்டு வாங்கமுடியா சமூக இயலாமையே...

//பெண்களும் கூச்சப்படுவதில்லை...!//

அதை வரவேற்கணும்... ஆனால் அவர்களும் செய்திதாள்களில் மடித்து வாங்கி மறைத்து செல்லும் அவலமே தொடர்கிறது....

சீனுவாசன்.கு said...

அண்ணே...ஆண்களும் செய்திதாள்களில் மடித்து வாங்கி மறைத்து செல்லும் அவலமே தொடர்கிறது....ஆனால் அது விஸ்பர் இல்லை!

இரா.எட்வின் said...

கதையின் முடிவில் அவள் சற்று உரத்துக் கேட்பது கதையின் உச்சம். ஆச்சு மயிலன் இதோ இன்னும் ரெண்டு மூனு தப்படிதான் சிறுகதை வசத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். வாழ்த்துக்கள்.

மயிலன் said...

safi said...
//வீடு சுரேஸ்குமார் அண்ணன் சொன்னது சரியே//

அப்போ அவருக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்....:)

மயிலன் said...

மனசாட்சி™ said...
//ஒ.... இது தான் மேட்டரா - நான் என்னவோ ஏதோன்னு சரி - நல்லாத்தான் யோசிக்கிறீங்க.//

நன்றி மாம்ஸ்...

மயிலன் said...

வரலாற்று சுவடுகள் said...
// நம்ம ரெவெரி "எனது மார்பகம்"-ங்ர கவிதையில்.., நாம் நினைச்சே பார்க்காத நல்ல கருத்தை வியப்பான கவிதை நடையில் முன்மொழிந்திருப்பார்., அதற்க்கு பிறகு இப்போதுதான் உங்கள் இந்த பதிவில் ஒரு அருமையான கருத்து முன்மொழியப்பட்டுள்ளது! //

அவரின் அந்த கவிதையில் இருந்த கருத்தாழம் நிச்சயம் இதனில் இல்லை எனினும் உன் வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பா....

மயிலன் said...

Dr.SUKUMAR said...
//nice story...//

thank u...

மயிலன் said...

சீனுவாசன்.கு said...
// அண்ணே...ஆண்களும் செய்திதாள்களில் மடித்து வாங்கி மறைத்து செல்லும் அவலமே தொடர்கிறது....ஆனால் அது விஸ்பர் இல்லை! //

நீங்கள் ஆணுறையை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறன்... நீங்கள் அந்த பெயரைக்கூட உச்சரிக்காமல் தவிர்ப்பதும் அவலமே... ஆணுறை இச்சை பொருள் அல்ல... கருத்தடை சாதனம்... அதைப் பற்றி பேச வெட்க படுவோமாயின் நாடு வெளங்கிடும்...

ஒரு ஆபாச வசனமோ, நடமோ, காட்சியோ தொலைகாட்சியில் ஓடினால் கூட முகம் சுளிக்காதோர், கருத்தடை சாதனம், ஆணுறை, நாப்கின் பற்றிய விளம்பரம் வந்தால் 'ப்ச்' கொட்டும் நிலைதான் இன்றும் நம் வீடுகளில்...

மயிலன் said...

இரா.எட்வின் said...
//கதையின் முடிவில் அவள் சற்று உரத்துக் கேட்பது கதையின் உச்சம்.//

:)

// ஆச்சு மயிலன் இதோ இன்னும் ரெண்டு மூனு தப்படிதான் சிறுகதை வசத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். வாழ்த்துக்கள்.//

கடந்த மூன்று சிறுகதைகளாய் உங்கள் வாக்கின் படி அதே நிலையில்தான் ஐயா உள்ளேன்... எப்போ முன்னேற போறேன்னு தெரியல... :)

ஜே கே said...

"ஒரு WHISPER..." என்று முடித்தது பல அர்த்தங்கள் ... அருமையான முடிவு .. சில நேரம் அந்த முடிவை வைத்துக்கொண்டே மிகுதி கதையை பின்னியிருப்பீர்களோ என்ற சந்தேகம் வரவைத்த முடிவு!

வாழ்த்துக்கள் மயிலன்!

Seeni said...

mmmmm

ரேவா said...

மயிலன் மொத்தமாய் ஒரு பெண்ணின் பார்வைக்குப்பின்னான ஒரு ஆணின் பார்வை எப்படின்னு கதையோட்டம் சொல்லிருக்கு... கிட்டதட்ட இன்னைக்கு எழுத்துலகத்தில நடக்கிற விசயங்களை தான் கண்முன்னால நிறுத்துது கதை... தன் எழுத்தில் எதையும் எழுதிவிட்டு வேடிக்கை பார்க்கும் பலர், பெண்ணெழுத்தை ஒரு கட்டுக்குள் வைக்கத்தான் நினைக்கிறார்கள்...

எதார்த்தம் எதார்த்தம் எதார்த்தம் இதுவே என்னை மறுமொழியிட தூண்டியது, மாதவிடாய் நிச்சயம் மனத்தீட்டு... களையப்படவேண்டும் என்பதே என் ஆசை.... வாழ்த்துகள் மயிலன் சகோ :)

ரேவா said...

அதோட கதையின் முடிவு தன் கோபத்தை விஸ்பர் கேட்பதின் மூலம் எல்லாத்துக்கும் இயற்க்கை அழிக்கிற விசயங்களை நான் ஏன் மறைக்கணும்ங்கிறத தாண்டி, நான் இப்படித்தான் போடான்னு சொல்லுற மாதிரி இருந்தது... கிட்டதட்ட நிர்மலா எனக்கு தெரிந்த பலராய் தெரிகிறாள்... நான் உட்பட.....


ஆண்களில் பலரில் சிலரைத்தான் இங்கு குறிப்பிட்டேன், முக்கியமாய் என் எழுத்தின் வளர்ச்சிக்கு என் நண்பனே காரணம்... நட்பாய் இருக்கும் போது அங்கீகரிக்கின்ற மனம் ஆளுமைக்கு வந்தவுடன் அடங்கச்சொல்லும், இது இப்படித்தான் மாறப்போவதும் இல்லை, மாற்றம் வேண்டும் நாங்கள் ஓயப்போவதும் இல்லை.... அதோடு இந்த மறுமொழிக்கு பின்னால் கொஞ்சம் மன்னிப்புகளும், என் குமுறலுக்கு வடிகாலாய் வந்து விழுந்தது இந்த பதிவு அதனாலே கொட்டி தீர்ந்துவிட்டேன்..........

ஜீ... said...

அருமையா இருக்கு பாஸ்! கடைசில நச்!

NAAI-NAKKS said...

Nice...dr.
Super...

Uzhavan Raja said...

நல்ல கருத்துடன் கூடிய சிறுகதை சூப்பர்...அண்ணா

sathish prabu said...

அருமை..

ராஜி said...

என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் இன்னும் பெண்களே வெளில் சொல்ல கூச்சப்படும் ஒரு விசயத்தை கருவாக்கி ஒரு சிறுகதையை ஆண் எழுதியிருக்கார்னா இந்தியா வளருதோ?!

மயிலன் said...

ஜே கே said...
//"ஒரு WHISPER..." என்று முடித்தது பல அர்த்தங்கள் ... அருமையான முடிவு .. சில நேரம் அந்த முடிவை வைத்துக்கொண்டே மிகுதி கதையை பின்னியிருப்பீர்களோ என்ற சந்தேகம் வரவைத்த முடிவு! //

மிக்க நன்றி நண்பரே... முதலில் வேறொரு வகையில் முடிவு இருந்தது.... இதே கருத்துதான்... ஆனால் அதிக வார்த்தை பிரயோகத்துடன்... இரண்டு மூன்று மாற்றங்களுக்கு பிறகு இதுதான் சரியென பட்டது.. வைத்துவிட்டேன்... இதை கூட சிலர் விஸ்பருக்கு இவ்வளவு பெரிய விளம்பரமா என்று கேலி செய்தார்கள்...

மயிலன் said...

Seeni said...
//mmmmm//

mmmmm

மயிலன் said...

ரேவா said...
//மயிலன் மொத்தமாய் ஒரு பெண்ணின் பார்வைக்குப்பின்னான ஒரு ஆணின் பார்வை எப்படின்னு கதையோட்டம் சொல்லிருக்கு... கிட்டதட்ட இன்னைக்கு எழுத்துலகத்தில நடக்கிற விசயங்களை தான் கண்முன்னால நிறுத்துது கதை... தன் எழுத்தில் எதையும் எழுதிவிட்டு வேடிக்கை பார்க்கும் பலர், பெண்ணெழுத்தை ஒரு கட்டுக்குள் வைக்கத்தான் நினைக்கிறார்கள்... //எனக்கு தெரிந்த எழுத்துலகம் பற்றி நிறைய இடை செருகல் வைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்... நாடக தன்மை ஓங்கி விடுமோ என்று அஞ்சி விட்டுவிட்டேன்....//எதார்த்தம் எதார்த்தம் எதார்த்தம் இதுவே என்னை மறுமொழியிட தூண்டியது//:)//, மாதவிடாய் நிச்சயம் மனத்தீட்டு... களையப்படவேண்டும் என்பதே என் ஆசை.... வாழ்த்துகள் மயிலன் சகோ :)//நன்றி ரேவா....


//அதோட கதையின் முடிவு தன் கோபத்தை விஸ்பர் கேட்பதின் மூலம் எல்லாத்துக்கும் இயற்க்கை அழிக்கிற விசயங்களை நான் ஏன் மறைக்கணும்ங்கிறத தாண்டி, நான் இப்படித்தான் போடான்னு சொல்லுற மாதிரி இருந்தது... கிட்டதட்ட நிர்மலா எனக்கு தெரிந்த பலராய் தெரிகிறாள்... நான் உட்பட.....//அடடே... சூப்பர்...


//ஆண்களில் பலரில் சிலரைத்தான் இங்கு குறிப்பிட்டேன், முக்கியமாய் என் எழுத்தின் வளர்ச்சிக்கு என் நண்பனே காரணம்... நட்பாய் இருக்கும் போது அங்கீகரிக்கின்ற மனம் ஆளுமைக்கு வந்தவுடன் அடங்கச்சொல்லும், இது இப்படித்தான் மாறப்போவதும் இல்லை, மாற்றம் வேண்டும் நாங்கள் ஓயப்போவதும் இல்லை.... அதோடு இந்த மறுமொழிக்கு பின்னால் கொஞ்சம் மன்னிப்புகளும், என் குமுறலுக்கு வடிகாலாய் வந்து விழுந்தது இந்த பதிவு அதனாலே கொட்டி தீர்ந்துவிட்டேன்.........//.பெண்களுக்கு மட்டுமல்ல... இந்த தலைப்பில் சிறுகதை எழுதியதிர்காக என் நலம்விரும்பிகள் தனிப்பட்ட மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு இந்த கதையை நீக்க சொல்கிறார்கள்... 'பேர கெடுத்துக்காதே' என்பது அவர்களின் அட்வைஸ்...

மயிலன் said...

ஜீ... said...
//அருமையா இருக்கு பாஸ்! கடைசில நச்!//

மிக்க நன்றி ஜீ...

மயிலன் said...

NAAI-NAKKS said...
// Nice...dr.
Super...//

நன்றி நக்ஸ்

மயிலன் said...

Uzhavan Raja said...
//நல்ல கருத்துடன் கூடிய சிறுகதை சூப்பர்...அண்ணா//

நன்றி ராஜா...

மயிலன் said...

//sathish prabu said...
அருமை..//

ரேவா அனுப்பிய தோழர்... :) நன்றி சதீஸ்...

மயிலன் said...

ராஜி said...
//என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் இன்னும் பெண்களே வெளில் சொல்ல கூச்சப்படும் ஒரு விசயத்தை கருவாக்கி ஒரு சிறுகதையை ஆண் எழுதியிருக்கார்னா இந்தியா வளருதோ? //

இதை எத்தனை பேரால ஏத்துக்க முடியுதோ அதுலதான் அக்கா இருக்கு வளர்ச்சி...

திவ்யா @ தேன்மொழி said...

//அருகிலிருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று, மூன்று நான்கு ஆண்களுக்கு மத்தியில் நின்று சற்று சத்தமாய்த்தான் கேட்டாள்…
“ஒரு WHISPER...”//
கொடுமை என்னவென்றால், அந்த கூட்டத்தில் ஒன்றிரண்டு பெண்மணிகளும் இருந்திருந்தால், முதலில் திரும்புவது அவர்களது தலையாகத்தான் இருக்கும்..!! என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வீட்டிலும் எஜமானியம்மா தன் மனத்தீட்டை தலைமுழுகும் வரை, WHISPER will remain whispered..!!

மயிலன் said...

திவ்யா @ தேன்மொழி said...

//கொடுமை என்னவென்றால், அந்த கூட்டத்தில் ஒன்றிரண்டு பெண்மணிகளும் இருந்திருந்தால், முதலில் திரும்புவது அவர்களது தலையாகத்தான் இருக்கும்..!! என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வீட்டிலும் எஜமானியம்மா தன் மனத்தீட்டை தலைமுழுகும் வரை, WHISPER will remain whispered..!! //

அட்டகாசம் திவ்யா...
இப்படியான உன் கிளாசிக் கமெண்டை பார்த்து எத்தனை நாளாகிவிட்டது....
நன்றி...

விமலன் said...

இதி தவறாக நினைகிறவர்களுக்கு ஈதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை எனவே அர்த்தம்,இன்னும் சொல்லப்
போனால் தனது வயது வந்த பெண்ணின் பீரியட் டைம்களைப்பற்றிய அக்கறை எத்தனை தகப்பன் மார்களுக்கு இருகிறது இங்கு எனத்தெரியவில்லை.இன்றைய னடைமுறை வாழ்க்கையில் இதைப்பற்றிய அக்கறையும் விழிப்புணர்வும்,மிக அவசியம்
என்றே படுகிறது.

Athisaya said...

வணக்கம் சொந்தமே!!முகநூலில் தான் இதை பார்த்தேன்.இன்ற தான் தளம் வருகிறேன்.என்னவா இருக்கும் என யோசித்தேன்.என் ஊகம் சரியாக இருந்தது.வாழ்த்துக்கள் சொந்தமே!!எழுத்துக்கள் விடுதலை பெறுகின்றனஃஅருமை.

.வீட்டில் உள்ளவர்கள் புரிந்தால் நாட்டில் உள்ளவர்களும் புரிந்து கொள்வார்கள்.வாழ்த்துக்கள்.

அரசன் சே said...

வணக்கம் அண்ணாச்சி

அரசன் சே said...

இன்னும் கைப்பிடிக்குள் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் ஆரோக்கியமாக இருந்தும் அதை ஆதரிக்காமல் அவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து வாழ்வதும், எதை எதையோ ரசிக்கும் நாம், தேவையானதை மட்டும் மறைக்க முயல்வதும், வேதனை அளிக்கின்றது... சரியான பதிவும் நிதர்சன கருத்தும் கூட ... தங்களின் எழுத்துக்கு என் வாழ்த்துக்கள் ....

பி.கு. அண்ணாச்சி அஞ்சலிய பற்றி ... ஏதும் பதிவிருக்கா ?