சகித்தவர்கள்...

1 Sep 2012

முகமூடி- சூப்பர் ஜீரோ


தலைப்பு முழுக்க ஆங்கிலத்தில்தான் போட்டார்கள்...படம் முடிந்தபின்னர் வரும் பட்டியலாவது தமிழில் வருமென எதிர்பார்த்தேன்..ம்ஹும்ம்.. கும்மிருட்டு, தரையோடு உருண்டோடும் லோ ஆங்கிள் ஷாட்ஸ், சடார் சடார் எடிட்டிங், மென்மையாய் தொடங்கி பின்னர் தொடர்ச்சியாய் செவித்திரையை பதம் பார்க்கும் பின்னணி இசை, ஒரு டாஸ்மாக் ஆட்டம்...மழையில் மஞ்சள் புடவைமட்டும் காயவில்லை போலும்... உலகப்படம் அது இது என்று இனிமேல் பேட்டிகளில் பேசுவதை மிஷ்கின் நிறுத்திகொள்வது நலம்...ஏற்கனவே சரக்கு தீர்ந்துபோய்தான் கொரிய டிவிடியை நந்தலாலா ஆக்கினார்.. குறைந்தது எதாவது ஒரு சூப்பர் ஹீரோ படத்தை அப்படியே உல்டா செய்திருக்கலாம்...மூன்று மணிநேரத்திற்கும், என்பது ரூபாய்க்கும் சமீப நாட்களில் நான் இவ்வளவு வருந்தியதில்லை.. 
சூர்யா தன்னுடைய வெற்றிக்கு காரணம் சரியான கதை தேர்வுதான் என்று அடிக்கடி செய்யும் சுயபிதற்றல் இந்த படத்தை அவர் தவிர்த்திருப்பதில் இருந்தே நிரூபணம் ஆகிறது...ஜீவாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. கற்றது தமிழில் வாழ்ந்தவருக்கு இதெல்லாம் சாபக்கேடு...அவரது கேரியரில் கச்சேரி, ரௌத்திரம்,வந்தான் வென்றான் படங்கள் என்ன மாற்றம் கொண்டு வந்தனவோ அதை அப்படியே கொண்டுவரும் வன்மை உண்டு முகமூடிக்கும்...பதிமூன்று கிலோ எடை உள்ள அங்கிகளை மாட்டிவிட்டு அவரை தேமே என்று ஓடவிட்டிருப்பது, மணிக்கூண்டு, கட்டிமுடிக்க படாத வீட்டின் காங்க்ரிட் பில்லர், இன்னபிற உயரமான கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது முதுகில் ஜமுக்காளம் படபடவென காற்றில் அசைய நிற்க விட்டிருப்பது...எல்லாம் பார்க்க பரிதமாய் இருக்கிறது... பின்னால் பொன்வசந்தம் வருகிறது என்று நம்பியிருக்கிறார் போல.. நானும்...

கந்தசாமியிலாவது ஸ்ரேயா, அப்படியே அல்லேக்ரா, மியாவ் மியாவ் உபயங்களில் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது.. இதில் ஒரு பாடாவதி ஹீரோயின்...காயத்ரி ரகுராம் சற்று மெலிந்தால் எப்படி இருப்பாரோ அப்படி...பெயர் ஏதோ பூஜா ஹெக்டேவாம்.. இந்த கதாபாத்திரத்திற்கு, இந்த நடிப்பிற்கு, இந்த வளைவுநெளிவுகளுக்குகூடவா தமிழ்நாட்டில் ஆள் இல்லை.. அஞ்சாதேவில் இரசித்த விஷயங்களில் விஜயலட்சுமியும் ஒருவர்..இந்த படத்தில் இவருக்கு அமைக்க பட்டிருந்த அறிமுக காட்சி உலகத்தரம்... ஒரு பாடலுக்கு தொப்புள் காட்ட வேண்டிய தலையாய கடமையை செவ்வனே செய்துவிட்டு காணாமல்போய், சூப்பர் ஹீரோ படங்களில் ஹீரோவின் முகத்தை தடவி பார்க்கும் கடைசி காட்சியில் பின்னர் மீண்டும் ஆஜராகிறார்...

யாவரும் நலம்,கந்தசாமி படங்களுக்கு பிறகு மீண்டும் சுத்தியலுக்கு வேலை.. தூக்கி கொண்டு திரிவது நரேன்...பொதுவாக ஹீரோவை வில்லனாக்கினால் அந்த கேரெக்டர் செதுக்க பட்டிருக்கும். இங்கே மிஷ்கினின் உளி படுமொக்கையாக இருந்திருக்கிறது...இந்த பாத்திர படைப்பைப் பற்றி மிஷ்கின் கொடுத்திருந்த பேட்டியை வைத்து வேட்டையாடு விளையாடு அமுதன் அளவிற்கு எதிர்பார்த்தால்,முன்சீட்டில் மோதிக்கொண்டு சாகலாம் என்ற வகையில் இருக்கிறது..அதிலும் கிளைமாக்ஸ் உச்சம்... குங்ஃபூ ஆக்ஷனில் அவர் கையை நீட்டிகொண்டு சண்டைக்கு தயாராவதைப் பார்த்தால் ஒருவேளை சோற்றிற்கு யாசிப்பது போல இருக்கிறது...

நாசர், கிரிஷ்கர்னாட் போன்றவர்கள் எப்படி இந்த அமெச்சூரான கதாபாத்திரங்களுக்கு ஒப்புகொண்டார்கள் என்பதுதான் ஆச்சர்யம்...மாஸ்டராக வரும் செல்வா கொஞ்சம் ஆறுதல்...கூன் விழுந்த முதுகுடன் வரும் ஒரு கேரக்டர்,அஞ்சாதேவில் வரும் கையில்லாதவரை மிமிக் செய்ய முயன்று வெறுப்பேற்றுகிறார்.. சூப்பர் ஹீரோ படம் என்றால் 'அவர் எப்போ வருவார்' என்று கேட்க இரண்டு அதிக பிரசங்கி குழந்தைகள் வேண்டுமல்லவா? இருக்கிறார்கள்.. அப்புறம் தமிழ்நாட்டு போலீஸ் பெருமையை மலையாள நெடியில் சொல்லும் கமிஷ்னர், முதல் காட்சியிலேயே இவன்தான் எட்டப்பன் என்று புரியுமளவில் ஒரு போலீஸ் கேரக்டர், தன் பிள்ளைதான் படத்தின் ஹீரோ என்று தெரியாமல் எந்நேரமும் திட்டும் ஒரு அப்பா...என இதுவரை உலகபடங்களில் வராத கதாபாத்திரங்களை உட்கார்ந்து யோசித்திருக்கிறார்..
இன்னும் ஓரிரு நாட்களில் திரையங்கிற்கு வரும் குழந்தைகளுக்கு முகமூடி இலவசம் என்ற பாவச்செயல் நடந்தாலும் ஆச்சர்யமில்லை...

இதுபோன்ற படங்களில் லாஜிக் எதிர்பார்க்க கூடாது என்பது விதியாம்... காட்சிக்கு காட்சி இருக்கும் லாஜிக் பொத்தல்களை எல்லாம் விட்டுவிடுவோம்... சூப்பர் ஹீரோவாக இருந்து அவர் என்ன சாதித்தார்? எதற்காக ஒரு சாகசமும் செய்யாத,அப்படியே செய்திருந்தாலும் அதை யாருமே பார்த்திடாத சூப்பர் ஹீரோவை எல்லோரும் கிளைமாக்சில் எதிர்பார்கிறார்கள்? என்று வேலாயுதம் படத்தில்கூட விடையிருந்த இந்த இரண்டு கேள்விகளை கூட நாங்கள் கேட்க கூடாது என்றால், "தமிழ் நாட்டில் எவனுக்கும் நல்ல படங்களை இரசிக்க தெரியல, கொண்டாட தெரியல... " என்று இரசிகனைக் குறை கூறும் மிஷ்கின், படத்தில் ஹீரோயின் காரி துப்பும் ஒரு காட்சியில் தன் முகத்தை ஸ்க்ரீனோடு ஒட்டி வைத்து கொள்வாராக...
நன்றியுடன்...சி.மயிலன்

27 comments:

வரலாற்று சுவடுகள் said...

சொந்த காசில் சூனியம் வச்சுக்காதீங்கப்பா என்று சொல்வது போல் இருக்கு உங்க விமர்சனம்!

BTW, இன்டலி ஓட்டு பட்டையை இன்டலி திரட்டி சரியாகும் வரை எடுத்துருங்க பாஸ், தளம் திறக்க ரொம்ப லேட்டாகுது..!

மயிலன் said...

அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே...

என்னுடைய அறிவுரையையும் தாங்கள் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்... ஹி ஹி...

Raghavan Kalyanaraman said...

நல்ல விமர்சனம்.

ரேகா ராகவன்.

சேட்டைக்காரன் said...

//கந்தசாமியிலாவது ஸ்ரேயா, அப்படியே அல்லேக்ரா, மியாவ் மியாவ் உபயங்களில் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது..//

அப்படிப்போடுங்க அருவாளை! :-))

படம் ஊத்திக்கிச்சா அப்போ?

r.v.saravanan said...

முகமூடியை சும்மா போட்டு துவைச்சு எடுத்திட்டீங்க மயிலன்

r.v.saravanan
kudanthaiyur.blogspot.in

ஜீ... said...

சூப்பருங்கோ! டாக்டர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கார் போல்! :-)

//சூப்பர் ஹீரோ படம் என்றால் 'அவர் எப்போ வருவார்' என்று கேட்க இரண்டு அதிக பிரசங்கி குழந்தைகள் வேண்டுமல்லவா? இருக்கிறார்கள்..//

இருக்கணுமில்ல!

அப்புறம் பப்ளிக் கிட்ட டி.வி. காரனுங்க கருத்து கேட்கிற காட்சி வரலியா?

கோவை நேரம் said...

விமர்சனம் ரசிக்க வைக்கிறது...படம் பார்ப்போம்....?

Prem Kumar.s said...

//ஜீ... said...அப்புறம் பப்ளிக் கிட்ட டி.வி. காரனுங்க கருத்து கேட்கிற காட்சி வரலியா?//

நல்ல கேள்வி ஜீ நானும் கேக்கணும்னு நினைச்சேன்

Prem Kumar.s said...

//இந்த வளைவுநெளிவுகளுக்குகூடவா தமிழ்நாட்டில் ஆள் இல்லை.. //

NOTE THIS POINT இயக்குனர்களே !

வீடு சுரேஸ்குமார் said...

குங்ஃபூ ஆக்ஷனில் அவர் கையை நீட்டிகொண்டு சண்டைக்கு தயாராவதைப் பார்த்தால் ஒருவேளை சோற்றிற்கு யாசிப்பது போல இருக்கிறது...
/////////////////////////////
என்னா எள்ளல்...!
மிசுக்கினு ஒலகப்படம் எடுப்பாருன்னு சொன்னாய்ஙக...!ஓடாத படம் எடுப்பாரு போல...!

மனசாட்சி™ said...விமர்சனம்....ம்

அரசன் சே said...

எப்பாடா என் பணமும் , நிம்மதியும் தப்பிச்சது மயிலன் அண்ணாச்சி புண்ணியத்துல ...
நாளைக்கு போலாம்னு இருந்தேன் என்னை காப்பாற்றிய உங்களுக்கு இன்னைக்கு உங்க கனவுல காஜல் வரட்டும் ...

அரசன் சே said...

நிறைய இடங்களில் நின்னு விளையாடி இருக்கீங்க எழுத்தில் இதை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன் அண்ணாச்சி

மயிலன் said...

Raghavan Kalyanaraman said...
//நல்ல விமர்சனம். //

நன்றி சார்

மயிலன் said...

சேட்டைக்காரன் said...

//அப்படிப்போடுங்க அருவாளை! :-))

படம் ஊத்திக்கிச்சா அப்போ?//

200%

மயிலன் said...

r.v.saravanan said...
//முகமூடியை சும்மா போட்டு துவைச்சு எடுத்திட்டீங்க மயிலன்//

மூணு மணி நேரம் என்னதான் துவச்சு துவம்சம் பன்னிட்டானுங்க....:)

மயிலன் said...

ஜீ... said...
//அப்புறம் பப்ளிக் கிட்ட டி.வி. காரனுங்க கருத்து கேட்கிற காட்சி வரலியா?//

இவரு ஒலக பட இயக்குனர் என்பதால் அந்த காட்சி இல்லை...

மயிலன் said...

கோவை நேரம் said...
//விமர்சனம் ரசிக்க வைக்கிறது...படம் பார்ப்போம்....?//

அது....:)

மயிலன் said...

Prem Kumar.s said...
//NOTE THIS POINT இயக்குனர்களே !//

இதபத்தி ஒரு தனி பதிவே எழுதலாம் பிரேம்....

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...

//மிசுக்கினு ஒலகப்படம் எடுப்பாருன்னு சொன்னாய்ஙக...!ஓடாத படம் எடுப்பாரு போல...!//

ஒலக படமா? இது ஓ....படம்...

மயிலன் said...

மனசாட்சி™ said...


//விமர்சனம்....ம்//

ம் :)

மயிலன் said...

அரசன் சே said...
//எப்பாடா என் பணமும் , நிம்மதியும் தப்பிச்சது மயிலன் அண்ணாச்சி புண்ணியத்துல ...
நாளைக்கு போலாம்னு இருந்தேன் என்னை காப்பாற்றிய உங்களுக்கு இன்னைக்கு உங்க கனவுல காஜல் வரட்டும் ...//

கனவுல காஜல்......இதெல்லாம் என்ன பெருமையா? கடம......


//நிறைய இடங்களில் நின்னு விளையாடி இருக்கீங்க எழுத்தில் இதை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன் அண்ணாச்சி//

நிச்சயம் எழுதியிருக்க மாட்டேன்... எவனுக்கும் இரசனை இல்லை என்ற மிஷ்கினின் பொன்மொழிதான் இந்த பதிவிற்கு வித்து...

மோகன் குமார் said...

:)))


:(((

Uzhavan Raja said...

நல்லாருக்கு அண்ணா விமர்சனம்..

//இதுபோன்ற படங்களில் லாஜிக் எதிர்பார்க்க கூடாது என்பது விதியாம்...// ஹி ஹி..

திண்டுக்கல் தனபாலன் said...

(படம் பார்த்த என் நண்பர் : ...ம்... குழந்தைகளை வீட்டிலேயே தூங்க வைச்சி இருக்கலாம்...!)

இதுக்கு மேலே யாராவது படத்துக்கு போவார்களா...?

Ranjani Narayanan said...

அன்பு மயிலன்,
பதிவர் சந்திப்பில் நீங்கள் வாசித்த கவிதைக்கு என் reaction வாசிக்க என் தளத்திற்கு வரவும்.
உங்களுடன் பேசமுடியவில்லை. திருமணத்திற்கு வாழ்த்துக்கள்!
reaction - பதிவர் திருவிழா புகைப்படங்கள் என்ற பதிவில்!
அன்புடன்,
ரஞ்ஜனி

சுரேகா said...

ஸாரி...இன்றுதான் படித்தேன்..!

எண்பது ரூபாய் இனிமேலாவது செரிக்கட்டும்..!! :)))


சூப்பரா கழுவி ஊற்றியிருக்கீங்க டாக்டர்!