சகித்தவர்கள்...

26 Aug 2012

பதிவர் சந்திப்பு- எனக்கொரு உண்ம தெரிஞ்சாவனுஞ் சாமி...
அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

சென்னையில் உலக தமிழ் வலைப்பதிவர் மாநாடு... கொஞ்ச நாட்களாகவே கிளம்பியிருந்த எண்ணம், ஆசை அல்லது ஏக்கம்.. இத்தனை நாட்களாய் நேரில் காணாமல் வெறுமனே வலை வழியே ஒருமையில் அழைத்து பேசும் அளவிற்கு நண்பர்களாகி போனவர்களை சந்தித்த, நினைவில் நீங்கா நாள்...இப்படியொரு பதிவு வேண்டாம் என்றுதான் நினைத்தேன்... ஓராண்டு பதிவுலகில் இருந்தமைக்கு ஓர் ஆத்மதிருப்தி... அதை கட்டாயம் பகிர வேண்டும் 


முக்கிய நிகழ்வுகள்-

முந்தைய நாள் மாலை ராமானுசம் ஐயா,சென்னை பித்தன் ஐயா, இருவரும் பல யூத்துகளுக்கு மத்தியில் விழா ஏற்பாடுகளில் அக்கறை காட்டிய விதம் மிரட்சி... (மதுமதியும், மோகன்குமாரும் யூத்தா?... என்னமோ போடா நாராயணா...) 

அப்போது  "மெட்ராஸ் பவன்" சிவக்குமார் அங்கு கொண்டுவந்த காராசேவ் பாக்கெட் ( யோவ்...இதுவும் முக்கிய நிகழ்வுதான்யா...)

காலை பத்து மணிக்கு ஆரம்பிப்பதாய் சொன்ன மாநாடு சரியாக பத்து மணிக்கு துவங்கப்பட்டது... ( அட...)

நேரடி ஒளிபரப்பு துல்லியமாய் வழங்கப்பட்டுள்ளது ( நம்ம வீட்டம்மா, அப்பப்போ லைவ் கமெண்டிங்...டிங்..டிங்...)

ஒரு போட்டோ க்ளிக் செய்யும் பொழுதிற்கும் குறைவான நேரத்தில் தன் அறிமுகத்தை முடித்துக்கொண்டார் பிலாசபி... (யோவ்..உனக்குத்தான் மணிரத்னத்த பிடிக்காதே..)

சேட்டைக்காரன் முகமூடி துறந்தார்...அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி... வயது ஐம்பத்து எட்டாம்... ( ஸ்ரேயா கவனத்திற்கு.. )

ஆரூர்- ஆஷிக் கட்டிபிடி வைத்தியம்... (தைரியம் இருந்தா எங்க நக்ஸ கட்டிபுடியா பாக்கலாம்...)

எனக்கு சாகித்ய அகாடமி சார்பில் 'வாழும் சுஜாதா' என்ற பட்டம் கொடுத்த "உண்மையை" மேடையில் உலகத்திற்கு சொல்லிவிட்டேன்.. ( ஆரம்பிச்சுட்டான்டா.. )

மதியம் உண்மையிலேயே மிக நல்ல சாப்பாடு போட்டார்கள்... ஆமா.. ஊறுகா வெச்சாங்களா? (டேய் அதெல்லாம் தொட்டு சாப்டனும்... கொழச்சு அடிக்கக்கூடாது )

அந்த ஏரியாவில் பார்ப்பவர்கள் எல்லாம் பதிவர்களாக இருக்க,அதே நினைப்பில் அருகில் இருந்த டாஸ்மாக்கில் இருந்து வெளியே வந்தவரிடம், "நீங்க எந்த ப்ளாக் வெச்சிருக்கீங்க"ன்னு அஞ்சாசிங்கம் கேட்க, "அஞ்சு ரூபா இருந்தா கொடேன்" என்று அவர் கப்படித்தார்... ( ஏய்... யாருகிட்ட? ) 

சாப்பாட்டிற்கு பின்பு தூங்கவிடாத சுரேகாவின் தொகுத்துவழங்கும் உத்தி... ( 'கை தட்டினால் ஏற்படும் நன்மைகள்'ன்னு சார் ஒரு தனி புக்கே போடலாம்...)

மூத்த பதிவர்களுக்கான பாராட்டுவிழா... அந்த நேரம் கூட்டத்தில் சலசலப்பு இல்லாமல் வீற்றிருந்த அமைதி அவர்களுக்கான மரியாதை... (இன்னொரு 34 வருஷம் கழிச்சு எனக்கும் தருவாங்க... )

"தென்றலின் கனவு" புத்தக வெளியீடு.. ( தென்றல் அக்கா ரொம்ப நல்லவங்க... இலவசமா எல்லாருக்கும் ஒரு காப்பி...)

கவியரங்கத்தில் ஒரு கலவரம்.. வேற யாரு? நான்தான்.. (அடிவாங்காம ஊரு வந்து சேந்தது எம்புட்டு பெரிய கஷ்டம்)

பட்டுகோட்டை பிராபகர்- சிறப்பு விருந்தினர் உரை.. அந்த காலத்தில் இருந்த "கையெழுத்து" பத்திரிகை பற்றிய பேச்சு... சுஜாதாவும் ப்ளாக் என்பதை அதோடுதான் ஒப்பிட்டு இருப்பார்.. (பெரிய மனுசய்ங்க பெரிய மனுசய்ங்கதான்)

வருத்தம்-

எதிர்பார்த்திருந்து வராமல் போன "வீடு" சுரேஸ்குமார், "இரவு வானம்" சுரேஷ், "ராஜப்பாட்டை" ராஜா, "தேன்சிட்டு" தேன்மொழி 

நேரமின்மை காரணமாய் விழா முடியும் முன்னரே கிளம்ப வேண்டியதானது..

இன்னும் இதுவரை சந்திக்காத, உரையாடாத எட்வின் ஐயா, ஹரணி ஐயா, நண்பர் ஜேகே... (பதிவர் சந்திப்புகளில் அது சாத்தியப்படாது )

வழக்கமாய் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தாலே போட்டோ போட்டு கமென்ட் போடுவார்கள்... கிளிஷேவாக இருந்தாலும் இருந்து தொலைக்கட்டும்... என் பங்கிற்கு நான் 

அடையார் அஜித்தும், ராமானுஜம் ஐயாவும்

சேட்டைக்காரனுடன்.... வேற வேற வேற....வேட்டைக்காரன்... 

பி.பி கள்... ஜாக்கி, கண்ணாடி போடாமல் சிபி, கேபிள்

அரசன், ஆரூர் மூனா, பிரபா, செல்வின்

"நீங்க என்ன ப்ளாக் வெச்சிருக்கீங்க" சம்பவிதிற்கு பின் அஞ்சாசிங்கம்

"வீட்டுக்காரம்மாவுக்கு ஒரு பார்சல் கட்டுய்யா"... 
ராஜுடன் பட்டிக்காட்டான் 

"யோவ்.. ஏன்யா இங்க வந்து...?" 
பட்டிகாட்டானிடம் மன்றாடும் மெட்ராஸ்பவன்


நாளைய இயக்குனர்ஸ்... 
அனந்து,கேபிள்

"யோவ்.. தமிழ்த்தாய் வாழ்த்த பாதியில மறந்துட்டேங்கறதுக்காக 
இப்புடி வெறும் இலைய போடறது எல்லாம் அநியாயம்யா.." - மதுமதி 

"சித்தப்பா... போட்டோ போட்டோ..." 
வீடு திரும்பல் with தமிழ்வாசி 

தென்றலின் கனவு நனவாகிறது...பட்டுக்கோட்டை to சேட்டை 
கூடவே கணக்காயன் ஐயாவும், 'தென்றல்' சசிகலாவும்

"எனக்கொரு உண்ம தெரிஞ்சாவனுஞ் சாமி..." 
ஆண்கள் கழிவறையில் எப்படி வந்தது இந்த கோபுரம் பூசுமஞ்சள் தூள்...


நான்கு சுவற்றிற்குள் நடந்த ஒரு அசம்பாவிதம் நாளை உலகம் முழுதும்... காத்திருங்கள்...நன்றியுடன்... சி.மயிலன்


32 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நான்தான்ய்யா முதல் ஆளு....!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகனும் சாமியோவ்....!

கோவி said...

ஊர் வந்து சேர்ந்தாச்சு மாப்பு..

மோகன் குமார் said...

மயிலன் உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. எழுத்தில் நகைச்சுவை விளையாடுது. உங்கள் கவிதை அனைவரையும் கவர்ந்தது மகிழ வைத்தது. PKP சிரித்தது உங்கள் ஒரு கவிதைக்கு மட்டும் தான் மயிலன் என்கிற நல்ல நண்பரை பெற்ற மகிழ்ச்சி எனக்கு ! தொடர்பில் இருப்போம்

மோகன் குமார் said...

I am your blog's follower from today.

வீடு சுரேஸ்குமார் said...

மயிலன் உங்க கவிதைக்கு கைதட்டல் அதிகமா இருந்ததால சரியா புரிஞ்சுக்க முடியலை லின்க்/பதிவில் போடவும்..!

வீடு சுரேஸ்குமார் said...

வருத்தம்....!/ மன்னிச்சூ! சில பல ஆணிகள் புடுங்கவேண்டியிருந்ததால்.........

கோவை நேரம் said...

வணக்கம் மயிலன்...உங்களின் கவிதை தொகுப்பு (அரங்கில் வாசித்த ) நன்று...வாழ்த்துக்கள்...

பட்டிகாட்டான் Jey said...

மயிலன் சந்தித்ததில் சந்தோசம், பல நண்பர்களிடம் தனியாக நேரம் செலவிடமுடியாமல் ஆகிவிட்டது.
அடுத்தமுறை உம்மைப் போல் 7 அடி உசரம் இருக்கிறவங்களுக்காகவாவது சீலிங் கொன்சம் உசரமா இருக்கிற மேடை பாக்கனும், பாவம் குனின்சிகிட்டே கவித வாசிச்சது மனசுக்கு கொன்சம் கஷ்டம்!!!!

ஆனால் கவிதை செம கலக்கல்...

Prem Kumar.s said...

ம்ம் கலக்குங்க பாஸ்

Anonymous said...

நேற்று பதிவர் சந்திப்பில் கலக்கீட்டிங்க! கவிதை அருமை, ஆனா திரும்பவும் படிக்கனும்!

அபி said...

யோவ் எங்க இருந்துயா உங்களுக்கெல்லாம் உடனே போஸ்ட் போடா டைம் கிடைக்குது.

ராஜ் said...

முகம் பார்க்காத பல நண்பர்களை இந்த சந்திப்பின் முலம் அறிய கண்டேன். நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க . அப்புறம் உங்க கவிதை ரொம்ப நல்லா இருந்திச்சு .. :):)

Robert said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக இருந்தது என்பதை இப்பதிவில் தெரிகிறது வாழ்த்துக்கள்.

(அப்போ அந்த அந்த தக்காளி, முட்டை எல்லாம் கிடைக்கலையா? ஆம்லெட் போச்சே!!!!!!!)

சீனு said...

உண்மையச் சொல்ல வேண்டுமென்றால்...உங்கள் கவிதைகளை நான் கேட்க முடியாமல் போய்விட்டது... அனைவரும் அருமை என்று சொன்னார்கள்... முடிந்தால் அதை தனியொரு பதிவாக இட வேண்டுமென்ற கோரிக்கையை வைக்கிறேன்....


I am your blog's follower from today. என்று மோகன் குமார் சார் சொன்னதை நானும் கூறிக் கொள்கிறேன்...

படங்களும் கமெண்டுகளும் ரசித்தேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

மயிலனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....


அந்த பதிமூன்று வயது என்கிற வரிகளில் எல்லோரையும் உங்களை கவனிக்க வைத்து விட்டீர்கள்...


செம கவிதை மயிலா....

ஹாரி பாட்டர் said...

நீங்க கதைச்சதை நேரலையில் பார்த்தேன் கலகிட்டிங்க டாக்டரே

வரலாற்று சுவடுகள் said...

நீங்க கவிதை வாசிச்சதை நேரலையில் பார்க்க முடியலை அன்நேரத்திர்க்கு வேலை இருந்ததால்!!! வாசிச்ச கவிதையை இங்கே ப்ளாக்கில் போடவும்!

//அடையார் அஜித்///

ஹா ஹா ஹா கலக்கல் !

அஞ்சா சிங்கம் said...

விழாவில் பட்டுகோட்டை பிரபாகர் கைகுடுத்து பாராட்டிய ஒரே கவிஞ்சர் நீர்தான் . இருந்தாலும் இந்த தன்னடக்கம் கொஞ்சம் ஓவர்தான் .........

r.v.saravanan said...

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மயிலன் கூடவே தங்கள் கவிதைக்கும் ஒரு ஷொட்டு

r.v.saravanan said...

காஞ்சனா வந்திருக்குமோ ( முனி பார்ட் II)

கோகுல் said...

மயிலன்,அங்கே படிச்ச கவிதையை பதிவா போடுங்க

Sasi Kala said...

தம்பிய சந்திச்சி பேச நேரம் கிடைக்கவில்லை என்றாலும் கவிதையால எல்லோருடனும் பேசியது போன்ற உணர்வு சிறப்பு பா.

! சிவகுமார் ! said...

கோபுரம் மஞ்சள் தூள்!! என்ன ஒரு பொக்கிஷ புகைப்படம்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

திடிரென parents Meeting வைத்துவிட்டார்கள் .. அதான் வர முடியவில்லை . I miss lot of fun

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று
இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....

ராஜி said...

இந்த அக்காவை சந்திச்சதை பத்தி ஒரு வார்த்தையும் சொல்லலை பார்த்தியா?! சோ, நான் கோச்ச்ச்ச்ச்ச்சிக்கிட்டு உன்வலைப்பூவை விட்டு போறேன்ப்பா, உன் பேச்சு க்க்க்க்க்காஆஆஆஆ.....

ராஜி said...

நேரமின்மையினால உங்க கவிதை வாசிப்பை கேட்க முடியலை. எனக்காக மயிலா உன் கவிதையை பதிவா போடேன் ப்ளீஸ்

Paramesdriver said...

மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.வலைப்பதிவர்களிலேயே! தாங்கள்தான் நிறைய்ய்ய்ய்யய.....வித்தியாசமாகத்தெரிந்தீர்!.எமது எண்ணங்களுக்கும்& கண்களுக்கும் தங்களது கருத்தால் அல்ல,அல்ல கவிதையால்!!!.தங்களது யதார்த்தத்தை வரவேற்கிறேன்.வாழ்த்துகிறேன்.நன்றிங்க! என PARAMESWARAN.C - DRIVER - konguthendral.blogspot.com

அ .கா . செய்தாலி said...

சுவராசியமான பதிவு
நேரலையில் எல்லா தோழமைகளையும் கண்டத்தில் மகிழ்ச்சி

சமீரா said...

//மயிலன் உங்க கவிதைக்கு கைதட்டல் அதிகமா இருந்ததால சரியா புரிஞ்சுக்க முடியலை லின்க்/பதிவில் போடவும்..!// - உங்க கவிதை மயிலிறகாகவே வருடியது ஆனாலும் முழுமையாக கேட்க விடவில்லை உங்க ஆதரவாளர்கள்!!!! அதனால் உங்க கவிதையை பதிவில் போடவும்....

சேட்டைக்காரன் said...

//சேட்டைக்காரன் முகமூடி துறந்தார்...அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி... வயது ஐம்பத்து எட்டாம்... ( ஸ்ரேயா கவனத்திற்கு.. )//

ஐயா சாமீ டாக்டரு! என் கூட போட்டோ எடுக்கும்போது வயசைக் கேட்டா சொல்லியிருப்பேனில்லை? :-)

என் வயசு 51 தாஞ்சாமீ! வீணா ரிட்டயர் ஆக்கிப் பென்சன் கொடுக்கவா பார்க்கறீங்க? :-))