சகித்தவர்கள்...

27 Aug 2012

கவியரங்க கசமுசா....

அன்பிற்குரிய விருப்பதாரர்களே,

உசேன் போல்ட்டும், ஒபாமாவும் காலையில் இருந்து கொடுக்கும் தொடர் நச்சரிப்பின் பேரில் நேற்று பதிவர் மாநாட்டு கவியரங்கில் நான் வாசித்த கவிதை(?)யை, இதோ உங்களுக்கு காட்சியாக்குகிறேன்... வீடியோவை ஆன்செய்துவிட்டு, பின்னர் pause செய்யவும்...முழுவதும் buffer ஆனதும் play செய்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்... (ரொம்ப மினக்கெட்டு இருக்கேன்யா...இந்த youtube எழவுல இத ஏத்த...)
இந்த கவிதையில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் கற்பனையல்ல....உண்மை 

கவி பாட வேண்டுமாம் 
நமக்கு கவிதையே தகிடதித்தோம்... இதில் பாட வேற வேண்டுமா?
இலக்கணமோ இலக்கியமோ எதிர்ப்பார்த்திருப்போர் 
தக்காளிகளையும் முட்டைகளையும் தயாராய் வைத்து கொள்ளுங்கள் 
காரணம்- நான் சத்தியமாய் அவனில்லை..
மிச்சமின்றி உங்கள் சகிப்பை சோதித்திட- மேடை 
அச்சம் மறைத்து துவங்குகிறேன்...
அவை பெரியோர்க்கும், ஆங்காங்கே தெரியும் சிறுசுகளுக்கும் வணக்கங்கள்...

அப்போது வயது மூன்றாம் எனக்கு...
எட்டரை மணியை அதிகாலையென கொண்டு 
பட்டனறுந்த சீருடையில் சிக்கி- அம்மா அப்பிவைக்கும் 
அரை இன்ச் பவுடர்,அரை கை எண்ணையோடு 
அரை நிஜார் சிறுவர்கள், எங்களை வைத்து நடத்தினார்கள் 
உண்மையான சிறை நிரப்பும் போராட்டம்- பள்ளிக்கூடமாம் அது.
ரிக்ஷா மணி கேட்ட பின்னான என் ஒத்துழையாமை இயக்கம்
சிறு எக்ளைர்ஸ் மிட்டாயில் தவிடு பொடியாகும் 
ஆச்சர்யம்! மிட்டாய் முடிந்தபின் அழுததில்லை நான்...
வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்- காரணம் வேறில்லை 
பக்கத்து சீட்டு பிரியாதான்... - இட பிரெச்சனையில்
சக்கலத்தன் ஸ்லேட்டை முழங்கால்சகிதம் 
சுக்குநூறாக்க....மறுநொடி விழுந்த முதுகு பூசையில் 
படுசிக்கலாகி போனது அந்த காதல் கதை...

அப்போது வயது பதிமூன்றாம் எனக்கு...
அதுவரை தொட்டுபேசியிருந்த தோழிகள் பூப்பெய்திவிட்டார்களாம் 
சட்டென தூரம் தேவைப்பட்டுவிட்டது...
முன்னிரண்டு பற்கள் தெரிய சிரிப்பதற்கும் 
முப்பத்திஇரண்டும் தெரிவதற்கும் வித்தியாசம் புரிய தொடங்கியது 
துப்பட்டாவின் வினையறிந்த நாளிலேயே அது துரோகியாகிபோனது 
அப்பட்டமாய் ஏதும் நடக்கவில்லை எனினும்- ஆங்காங்கே மனதினுள் 
தப்பட்டம் அடிக்கத்தான் செய்தது பட்டாம்பூச்சிகள்...
கன்னியவள் கண்டுதொலைத்தால்
கன்னத்தில் பரு முளைக்குமாம் 
சந்திரிக்கா சோப்பை நிறுத்திபார்த்தும்,
சண்டாள பருவிற்கு வழியேயில்லை...


நீ இல்லாம எப்படி செல்லம்...?


அப்போது வயது பதினெட்டாம் எனக்கு..
பூங்கா நகர் மின்சார இரயிலில் என்னோடு சேர்ந்து 
ஃபுட்போர்டு அடித்தது என் காதல் கனவுகள்...
இந்த பெருநகரின் பாரிமுனையில் 
கல்லூரியின் பாடாவதி வகுப்பறையில்  
ஜீவனுற்றது என் சிவப்பு சுடிதார் படலம் 
கதாநாயகி மூன்றாவது பெஞ்சின் முக்கத்தில் இருக்க 
கதையும் வசனமும் பக்கதிலிருக்க 
கதாநாயகத்தனம்தான் வசமில்லை நமக்கு...
'வாழும் கலை பயிற்சி' ரவிசங்கருக்கு பதிலாக 
'காதல் கலை பயிற்சி' தபூசங்கரிடம் சிக்கிக்கொண்டேன்...
தேவதையின் ஓர பார்வை பட்டாலே 
என் டைரி கதறி அழத்தொடங்கும் கவிதை பீதியில்...
"கொங்கு ஏரியா பொண்ணு, 
சங்கு ஊதிருவானுங்க" என்று நண்பர்கள் 
நங்கென கொட்டியதில் 
கண்றாவியாய் முடிந்தது 
கையாலாகா கல்லூரி வாழ்க்கை...

சமயம் பார்த்து சிக்கியது பாவப்பட்ட பதிவுலகம்...
தலைவகுடு, சரிகைமை,, குங்குமம், தாவணி,காட்டன் சேலை,
சந்தனக்கீற்று,முன்நெற்றி கற்றை முடி, கொசுவம்,சீருடை,
ஜியோமெட்ரி பாக்ஸ்,கோவில்,மார்கழி கோலம்,மழைவாசம், பனித்துளி,
என்ற என் காதல் கருக்களுக்கு காஜலையும் சமந்தாவையும் 
வாடகை தாயாக்கி, பதிவேற்றி கணினிமுன் காத்திருந்தால் 
வந்துசேரும் பெண்ணுலகின் கிளாசிக் கமென்ட் ஒன்று,
"அருமை சகோ" என்று...

இப்போது இந்த நொடி இருபத்தியாறு எனக்கு,
தாடி என் முகத்திற்கு ஆகாது 
பீடி என் உடம்பிற்கு ஆகாது
தேடி சலுத்தாயிர்று...
TUBELIGHT உம் பல்பும் பல இருந்தும் வீட்டில் 
விளக்குதான் ஏற்றவேண்டுமாம் அம்மாவிற்கு 
சரி...சிறியவனுக்கு வக்கில்லை என்று ஒருவழியாய் 
பெரியோர்களால் நிச்சயிக்கபட்டது திருமணமும்
எங்கேயோ தேடி என் ஒட்டு மொத்த தேடலையும் ஒன்றாய் நிறுத்தி...

மருத்துவச்சி இல்லை,
உயரம் சராசரிக்கு குறைவுதான்,
ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லை
அச்சசல் கிராமத்து வார்ப்பு...
சுருக்கமாய் எனக்கான தனி கவிதை...
அணுஅணுவாய் எனை ஆட்கொள்ள 
பிறந்தவளுக்கு பெயர் அனுஷ்யாவாம்...
அக்டோபர் கடைசி ஞாயிறு 
பட்டுக்கோட்டையில்தான்  திருமணம்- 
என் இல்லாளை கரம் பிடிக்கும் பொன்னாளில்
பல பொல்லாத காரணம் சொல்லி 
நீங்கள் இல்லாத குறை வேண்டாம்...
உங்களுக்கான காத்திருப்பில்... சி.மயிலன்

நன்றி: இதை பொறுமையுடன் படம்பிடித்து கொடுத்த நண்பர் அபி அவர்களுக்கு 


அபியும் நானும்...கூடவே கோவியும்...

பின்குறிப்பு 1:

இரண்டு முக்கியமான சந்தோஷங்கள் வீடியோவில் பார்த்திருப்பீர்கள்... ஒன்று பட்டுக்கோட்டை பிரபாகர் தாமாய் முன்வந்து கை குலுக்கியது... மற்றொன்று சுரேகாவின் வாழ்த்து... நெகிழ்ச்சியில் உண்மையில் உறைந்துதான் விட்டேன்... ஆனால் இவ்விரண்டையும் புறந்தள்ளி இந்த தருணம் வரை என்னால் சிலாகிக்க முடிவது, சற்றே முன்நெற்றி வழுக்கையோடு, எஞ்சியிருக்கும் மயிர்கள் நரைத்து, தளர்ந்த குரலில் ஒரு தள்ளாத வயதுக்கார பதிவர், நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு வந்து, "ரொம்ப யதார்த்தமா, வாசிச்சே தம்பி... நல்லா இருந்தது" என்ற கமென்ட்... ஐ.டி கார்ட் அணிந்திராத அவரிடம் "நீங்கள்?" என்று கேட்க ஏனோ தோணவில்லை...

பின்குறிப்பு 2:

நேரலையில் பார்த்த நண்பர்கள் பாதியே புரிந்ததாகவும், வரிகளை பிரசுரிக்குமாறும் சொல்லியிருந்தனர்... ஒளிபரப்பில் பிழையில்லை... சுரேகா சொன்னது போல கொஞ்சம் வேகமாய் வாசித்ததுதான் காரணம்... மேலும் கவியரங்கம் என்றால் பன்னிரண்டு வரிகளை மூன்று மூன்று முறை வாசித்து முப்பத்தி ஆறு வரிகளாய் மாற்றிடுவர்... நமக்கு வரிகள் அதிகம் என்பதாலும், அனுமதிக்கப்பட்ட நேரம் குறைவு என்பதாலும், கொஞ்சம் புரிதலில் கஷ்டம் ஏற்பட்டுவிட்டது... மன்னிக்கவும்...

பின்குறிப்பு 3:

நேரலை பார்த்த நண்பன் ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பினான்..."மச்சி, வாசிப்பு பார்த்திபன் ஸ்டைலில் இருந்தது என்று..." சுத்தமாய் மாடுலேஷனே இல்லாத அவரது பாணி எனக்கு அறவே பிடிக்காது என்பதால் அந்த கமென்ட் தலையில் உரக்க கொட்டியது...


நன்றியுடன்...சி.மயிலன்
108 comments:

ரஹீம் கஸாலி said...

நீங்கள் வாசித்த கவிதை அனைவர் மனதையும் கொள்ளை கொண்டது நிஜம்

ரஹீம் கஸாலி said...

இன்றைய என் பதிவில் உங்கள் கவிதைக்கான லிங்க் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்....
http://www.rahimgazzali.com/2012/08/blogger-meeting_27.html

Prabu Krishna said...

படிக்கிற மாதிரி எழுதி இருந்தார் என்று சுரேகா சொல்வது சூப்பர்...

கவிதையோடு திருமண அழைப்பையும் வைத்து விட்டீர்கள் அருமை.

ஹாரி பாட்டர் said...

அட கலக்குறிங்க மயிலு
//பக்கத்துக்கு சீட்டு பிரியாதான்// அடங்க கொக்க மக்கா

NHTG said...

வாழ்த்துக்கள்!!!!

Seeni said...

azhakaana kavi!

Seeni said...

kalyaanathirkku
advance vaazhthukkal!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இதுமுலமாகவே திருமணத்துக்கு அனைவரையும் அழைத்துவிட்டாயா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கவிதை அருமை ....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைவரையும் கொள்ளைக் கொண்ட கவிதை...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைவரையும் கொள்ளைக் கொண்ட கவிதை...

வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை அருமையாக உள்ளது.
பாராட்டுக்கள்

தங்களின் திருமணத்திற்கு
அட்வான்ஸ் வாழ்த்துகள்.

VGK

s suresh said...

கதை சொன்ன கவிதை அருமை! வாழ்த்துக்கள் நண்பா! கவிதைக்கும் கல்யாணத்திற்கும்!

இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

ரேவா said...

ரைட்டு ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி மூன்றிலிருந்து இப்பவரை நடந்த நிகழ்வுகளை அழகுற சொல்லியிருப்பது ரொம்ப அழகா இருக்கு மயிலன்... அதோட கல்யாணத்தைபற்றியும் சொன்னது கூடுதல் அழகுதான் போங்கோ சகோ :)

அ .கா . செய்தாலி said...

ம்ம்ம் ...
நேற்று நேரலையில் கண்டேன்
இன்று வரிகளில் வாசித்தேன் அருமை தோழரே

மோகன் குமார் said...

உங்கள் பாஸ் ஆகப்போகும் அனுஷ்யாவிற்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க

இந்த பதிவுக்கு கொஞ்சம் நல்ல அழகான பொண்ணு போட்டோ போட்டுருக்கலாம். இந்த கோதுமை மாவு பொண்ணு பிலாசபிக்கு மட்டும் தான் பிடிக்கும்னு நினைச்சேன். தமிழ் நாட்டில் நீங்கள் ரெண்டாவது ரசிகர் போல..

நமது இப்போதைய தலைவிகள் அனுஷ்கா, அஞ்சலி, காத்ரீனா கைப் (இப்ப சொல்லுங்க நான் யூத்தா இல்லியா?)

மோகன் குமார் said...

ஆபிசில் வீடியோ பார்க்க முடியலை நீங்கள் வாசித்து முடித்து இறங்கியதும் ஓடி வந்து கை கொடுத்தேன். அதுக்குன்னு தள்ளாத வயதானவர்னு எழுதிருக்கீங்களே அது நான்னு நினைச்சிக்க போறாங்க :)

கோவி said...

கலக்கல்.

வரலாற்று சுவடுகள் said...

கலக்கல் பாஸ்! அருமையான கவிதை!

"அருமை சகோ" ன்னு வர்ற கமெண்ட்டால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல தெரியுது! ஹி ஹி!

மனசாட்சி™ said...

நீ இல்லாமல் எப்படி செல்லம்....ம்ம் கவித கவித

வீடு சுரேஸ்குமார் said...

பதிவர் சந்திப்பை
புறக்கணித்தாலும்...
மருத்துவரின்
"வாழ்நாள் சிறை"
காண அழைக்காமலும்
வருவோம்..!அன்பு தம்பி!
ஆனால் அழைப்பிதலில்
மது அருந்துபவர்கள் வரக்கூடாது
என்ற வாசகங்கள் வைக்காத வரை!
:)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

மயிலன் said...

@கஸாலி:

மிக்க நன்றி நண்பரே... அந்த லிங்க் திறக்க நேரம் அதிகம் எடுப்பதால்தான் இந்த காணொளியை இணைத்தேன்...

மயிலன் said...

Prabu Krishna said...
//படிக்கிற மாதிரி எழுதி இருந்தார் என்று சுரேகா சொல்வது சூப்பர்... //

வீடியோவில்தான் நானும் கவனித்தேன்... பின்னாலிருந்து வாசித்திருக்கிறார்...:)

மயிலன் said...

நன்றி
ஹாரிபாட்டர்
NHTG
seeni
ராஜா சார்..

மயிலன் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
//அனைவரையும் கொள்ளைக் கொண்ட கவிதை..//

பல மென்மையான கவிதைகளுக்கு மத்தியில் உங்களின் சாட்டையடி சுரீரென்றது... பதிவிடுங்கள்...

மயிலன் said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//கவிதை அருமையாக உள்ளது.
பாராட்டுக்கள்

தங்களின் திருமணத்திற்கு
அட்வான்ஸ் வாழ்த்துகள்.//

மிக்க நன்றி சார்....

மயிலன் said...

மிக்க நன்றி
s suresh
அ.கா.செய்தாலி

மயிலன் said...

ரேவா said...
//ரைட்டு ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி மூன்றிலிருந்து இப்பவரை நடந்த நிகழ்வுகளை அழகுற சொல்லியிருப்பது ரொம்ப அழகா இருக்கு மயிலன்... அதோட கல்யாணத்தைபற்றியும் சொன்னது கூடுதல் அழகுதான் போங்கோ சகோ :)//

சகோ???????

திரும்ப திரும்ப பேசற நீ...

திரும்ப திரும்ப பேசற நீ...

திரும்ப திரும்ப பேசற நீ...

மயிலன் said...

மோகன் குமார் said...
//உங்கள் பாஸ் ஆகப்போகும் அனுஷ்யாவிற்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க //

sure sure... அவங்களே வாசிப்பாங்க...

//இந்த பதிவுக்கு கொஞ்சம் நல்ல அழகான பொண்ணு போட்டோ போட்டுருக்கலாம். இந்த கோதுமை மாவு பொண்ணு பிலாசபிக்கு மட்டும் தான் பிடிக்கும்னு நினைச்சேன். தமிழ் நாட்டில் நீங்கள் ரெண்டாவது ரசிகர் போல..//

பிரபா சென்னை மற்றும் சுற்றுவட்டார மன்றங்களை பார்த்துகொள்வார்... நான் டெல்ட்டா மாவட்ட மன்றங்களை....

கோதுமை மாவா...? பிரபா......................... கேட்டியா.......................? அவ்வளோ சாஃப்ட்டாம்.. ஹி ஹி...


//நமது இப்போதைய தலைவிகள் அனுஷ்கா, அஞ்சலி, காத்ரீனா கைப் (இப்ப சொல்லுங்க நான் யூத்தா இல்லியா?)//

நீங்க யூத்தோன்னு கொஞ்சம் டவுட்டு இருந்தது... its damn clear now... முறையே ஒரு மாமி, குலுப்பை, ஒரு ஆண்ட்டி... too bad is your taste lawyer sir...

//ஆபிசில் வீடியோ பார்க்க முடியலை நீங்கள் வாசித்து முடித்து இறங்கியதும் ஓடி வந்து கை கொடுத்தேன். அதுக்குன்னு தள்ளாத வயதானவர்னு எழுதிருக்கீங்களே அது நான்னு நினைச்சிக்க போறாங்க :)//

அவரு அவ்வளோ வயசானவரு இல்ல...:)

மயிலன் said...

நன்றி கோவி...
கிட்டத்தட்ட ஒரே சாயலில் காதலை எழுதுபவர்கள் நாம் நேற்று சந்தித்ததில் பேரு மகிழ்ச்சி...

மயிலன் said...

மனசாட்சி™ said...
//நீ இல்லாமல் எப்படி செல்லம்....ம்ம் கவித கவித//

ஹி ஹி... நன்றி,,,

மயிலன் said...

வரலாற்று சுவடுகள் said...

//"அருமை சகோ" ன்னு வர்ற கமெண்ட்டால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல தெரியுது! ஹி ஹி!//

நாங்க அதிரடி அறிக்கை விட மாட்டோம்... விடவும் தெரியாது....

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//பதிவர் சந்திப்பை
புறக்கணித்தாலும்...
மருத்துவரின்
"வாழ்நாள் சிறை"
காண அழைக்காமலும்
வருவோம்..!அன்பு தம்பி!
ஆனால் அழைப்பிதலில்
மது அருந்துபவர்கள் வரக்கூடாது
என்ற வாசகங்கள் வைக்காத வரை!//

நீங்கள் வராத வருத்தம் நீங்கள் கல்யாணத்துக்கு வந்தாதான் சரியாகும்...

மடக்கி மடக்கி...hmmmm :)

மயிலன் said...

திண்டுக்கல் தனபாலன் said...
//அருமை...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...//

நன்றி...:)

jeeva nandham said...

advance wishes for ur marriage

r.v.saravanan said...

கவிதை அருமை

மைந்தன் சிவா said...

கவிதை நல்லா இருக்கு தல..
பாராட்டுக்கு உரித்துடையவர்..வாழ்த்துக்கள்!

மைந்தன் சிவா said...

கவிதை நல்லா இருக்கு தல..
பாராட்டுக்கு உரித்துடையவர்..வாழ்த்துக்கள்!

பட்டிகாட்டான் Jey said...

உன் கவிதையும், சுரேகாவின் தொகுப்புறையும் கவியரங்கத்தின் கைலைட்ஸ்....
சூப்பர் மயிலன்..

கேரளாக்காரன் said...

கவிதை அருமை உங்கள் குரலும் என் குரலும் ஒரே மாதிரி இருப்பதாக ப்ரபல பதிவர் இரவுவானம் உங்களுக்கு க்ரெடிட்ஸ் வழங்கியிருக்கிறார்..... அவருக்கும் நன்றி தெரிவியுங்கள்

Prem Kumar.s said...

திருமண வாழ்த்துக்கள் அன்பரே

facebook இல் கணக்கில்லை என்றால் என்ன உங்கள் மன புக்கில் தான் கணக்கு ஆரம்பித்து விட்டாரே உங்களவர் !

வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யக் கவிதை. திருமணம் நிச்சயமாகி விட்டதா... அட்வான்ஸ் வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

மயிலிறகாய் அழகாய் கவிதை !

இனிய திருமண வாழ்த்துகள்!

விச்சு said...

நானும் நேரலையில் பார்த்தேன், புரியாத வரிகள் இப்போது புரிந்தது. நல்ல நகைச்சுவையாகவும் வாசிப்பதற்கு சுவராஷ்யமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்... திருமணத்திற்கும் சேர்த்துதான்...

கோவை நேரம் said...

எழுதிய..கவிதையை உங்கள் குரலில் கேட்க ஆசையாய் இருக்கிறது...வருகிறோம்..வாழ்த்து சொல்ல..

karthikkumar said...

அட அட அட! செம மயிலன்..திருமண வாழ்த்துகள் தல. :)

வேடந்தாங்கல் - கருண் said...

Nice.,

Uzhavan Raja said...

கவிதை நல்லாருக்கு..

திருமண வாழ்த்துகள் அண்ணா..

மோகன் குமார் said...

My family - total damage !!

மயிலன் said...

நன்றி
jeeva nandham

r.v.saravanan

மைந்தன் சிவா

மயிலன் said...

பட்டிகாட்டான் Jey said...
//உன் கவிதையும், சுரேகாவின் தொகுப்புறையும் கவியரங்கத்தின் கைலைட்ஸ்....
சூப்பர் மயிலன்.. //

நன்றி ஜி...
சுரேகாவின் கமெண்ட்ஸ் உண்மையில் மிரட்டியது...

குறிப்பாக- இராமன்/ பரதன் ஆட்சி, இட்லி சுட தெரிந்தவருக்கு தோசை.... வெகுவாய் இரசித்தேன்...

மயிலன் said...

கேரளாக்காரன் said...
//கவிதை அருமை உங்கள் குரலும் என் குரலும் ஒரே மாதிரி இருப்பதாக ப்ரபல பதிவர் இரவுவானம் உங்களுக்கு க்ரெடிட்ஸ் வழங்கியிருக்கிறார்..... அவருக்கும் நன்றி தெரிவியுங்கள்//

யோவ் மௌனகுரு... உங்க ரெண்டு பேரு அழிச்சாட்டியம் தாங்கலையா....

மயிலன் said...

நன்றி
Prem Kumar.s
ஸ்ரீராம்.
இராஜராஜேஸ்வரி
விச்சு said...

மயிலன் said...

கோவை நேரம் said...
//எழுதிய..கவிதையை உங்கள் குரலில் கேட்க ஆசையாய் இருக்கிறது...வருகிறோம்..வாழ்த்து சொல்ல.//

உங்கள் கோவை குழுமத்தையே எதிர்நோக்கி இருக்கிறேன் :) நிச்சயம் வரவேண்டும்...

மயிலன் said...

நன்றி....
karthikkumar
வேடந்தாங்கல் - கருண்
Uzhavan Raja

மயிலன் said...


மோகன் குமார் said...
//My family - total damage !!//

கம்பெனி பொறுப்பல்ல....:)

சீனுவாசன்.கு said...

அப்பாடி...மாட்னியா?
இப்போதான் சந்தோசமாகீது!

சீனுவாசன்.கு said...

அப்பாடி...மாட்னியா?
இப்போதான் சந்தோசமாகீது!

அபி said...

அதான் கல்யாணம் நிச்சியம் அகிடுச்சுல அப்புறம் என்ன
திரும்ப திரும்ப பேசற நீ...
'அபி'யோட லிங்கும் போட்டிருந்தால் நல்லாருந்திருக்கும்.

மதுமதி said...

மருத்துவர் மயிலாடுதுறை மயிலிறகு மயிலனுக்கு முதலில் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.அருமையான கவிதையை புதிய நடையில் வாசித்தீர்கள்.விழா முடிந்ததும் தனியே பாராட்ட இருந்தேன்.அதற்கு முன்னதாக நீங்கள் கிளம்பி விட்டீர்கள்.அனைவரையும் கவனிக்க வைத்துவிட்டீர்கள்..சபாஷ் மயிலன்..

guna said...

itha padikum pothu time 3.15 am,en thukam kalainthathu ,superசுரேகா said...

சூப்பர்...


மீண்டும் வாழ்த்துக்கள் மயிலன்..!!

கலக்குங்க!! மரு.கவி.மயிலன்னு ஆயிடுவீங்க போல இருக்கே..!!

பரு வரலைன்னு கவலை வேண்டாம்..
மரு. வந்திருக்கு!அப்புறம்..
கதாநாயகன்....கதானாயகனாயிருக்கு! பாருங்க!

விமலன் said...

கவிதை தெரியாது என ஒரு கதையே சொல்லி விட்டீர்களே,வாழ்த்துக்கள்,

எல் கே said...

உங்களை பதிவர் சந்திப்பில் பார்த்தேன். பேச இயலவில்லை.

நீங்கள் மருத்துவர்தானே ??

கோகுல் said...

வேறென்ன சொல்றது,நீங்க ரொம்ப நல்லா வருவீங்க.,

கோவை மு சரளா said...

வரி வரியாய்
புகட்டி சென்றாய்
இளமையின் வசந்தங்களை ........

சிரிப்புகளின் சப்தங்களில்
உணரமுடிந்தது
அவரவர் சென்று வருகிறார்கள்
பருவத்தின் வாசல்பக்கம் என்று .........

இளமையின் துடிப்பில்
வார்த்தைகளின் எதார்த்தத்தில்
வடித்து கொடுத்துவிட்டாய்
எளிதில் ஜீரனமாகிவிட்டது ..........

இன்னும் பசியோடு
காத்திருக்கிறேன்
உன் கவி உணவை உண்ண........

அருமை தொடருங்கள்

Sasi Kala said...

மாப்பிள்ளையாச்சே அதான் கவித கவித..வாழ்த்துக்கள் சகோ.

ராஜி said...

என்ன தம்பி இன்விடேஷன் பிரிண்ட் பண்ற செலவை மிச்சப்படுத்திட்டே போல.

ராஜி said...

இப்படிலாம் கூப்பிட்டா வந்துட மாட்டேன். வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு பூ, பழம், ஸ்வீட்ஸ், டிரெஸ்லாம் எடுத்து வந்து தட்டுல பணம் காசு வச்சாதான் அக்கா நான் வருவேன்

சமீரா said...

நன்றி மயிலன்... வீடியோ பிளஸ் வரிவடிவில் கவிதை-யை பகிர்ந்ததற்கு... மிகவும் ரசிக்கும் படி எதார்த்தமாக இருந்தது!!!

r.v.saravanan said...

கவியரங்கத்தில் கவிதை வாசித்த மயிலன் வார்த்தைகளை வலை போல் வீசி மொத்தமா எல்லோரது பாராட்டுக்களையும் அள்ளிட்டார் (ரொம்ப நல்லா இருந்துச்சு மயிலன் வாழ்த்துக்கள்)

தங்களை பற்றி என் தளத்தில் பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி

r.v.saravanan

ஜே கே said...

//உண்மையான சிறை நிரப்பும் போராட்டம்- பள்ளிக்கூடமாம் அது.
ரிக்ஷா மணி கேட்ட பின்னான என் ஒத்துழையாமை இயக்கம்
சிறு எக்ளைர்ஸ் மிட்டாயில் தவிடு பொடியாகும் //

கவியரங்குத்துக்கேயான தேர்ந்த உவமானங்கள். பல இடங்களில் அட போட வைத்து, முதல் முறை கேட்கும்போதே புரியம்படியான வரிகள். அரங்குக்கவிதைக்கு அதுவே ஆதாரம் என்று கவிஞன் நண்பன் ஒருவன் சொல்லுவான். அசத்தி இருக்கிறீர்கள்.

விமர்சனம் என்று ஒன்று செய்யவேண்டும் என்றால், காதலை சுற்றி சுற்றியே வராமல் கொஞ்சம் அப்பாலே போயிருக்கலாமோ( எனக்கு அந்த பிரச்சனை இல்லை, ஈழத்து தளம், கவிஞர்களுக்கு ஒரு கோகினூர்).

மற்றும்படி வாசிப்பில் இருந்த ஒரு வித அவசரம் சில இடங்களில் கவிச்செழுமையை உணரவிடாமல் தடுத்துவிட்டது.

ஆனால் தலை தலை தான் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

ஒக்டோபர் நிகழ்வுக்கு எப்போதும் என் வாழ்த்து கூடவிருக்கும்!

மயிலன் said...

சீனுவாசன்.கு said...
//அப்பாடி...மாட்னியா?
இப்போதான் சந்தோசமாகீது!//

:) நன்றி..

மயிலன் said...

அபி said...
//அதான் கல்யாணம் நிச்சியம் அகிடுச்சுல அப்புறம் என்ன
திரும்ப திரும்ப பேசற நீ...//

தம்பி.. இது வாலிப வயசு...


//'அபி'யோட லிங்கும் போட்டிருந்தால் நல்லாருந்திருக்கும். //

அவசரமாய் பதிவேற்றியது... தவறிட்டேன்...

மயிலன் said...

மதுமதி said...
//மருத்துவர் மயிலாடுதுறை மயிலிறகு மயிலனுக்கு முதலில் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.அருமையான கவிதையை புதிய நடையில் வாசித்தீர்கள்.விழா முடிந்ததும் தனியே பாராட்ட இருந்தேன்.அதற்கு முன்னதாக நீங்கள் கிளம்பி விட்டீர்கள்.அனைவரையும் கவனிக்க வைத்துவிட்டீர்கள்..சபாஷ் மயிலன்..//

மிக்க நன்றி நண்பரே... முதல்ல இந்த தாடி ஃபோட்டோவ எடுங்க...:) யாருமே நம்ப மாட்டாங்க... இது நீங்கதான்னு... உங்களின் விருந்தோம்பலுக்கு நன்றி...

மயிலன் said...

guna said...
//itha padikum pothu time 3.15 am,en thukam kalainthathu ,super//

கொய்யால...admission day பாக்காம நெட்டு...ஹ்ம்ம்...

மயிலன் said...

சுரேகா said...
//சூப்பர்...

மீண்டும் வாழ்த்துக்கள் மயிலன்..!!

கலக்குங்க!! மரு.கவி.மயிலன்னு ஆயிடுவீங்க போல இருக்கே..!! //

வீடியோ பார்த்த நண்பர்கள், உங்களின் வாழ்த்துரையில்தான் என் வரிகள் கொண்டாட பட்டது என்றார்கள்.. மிக்க நன்றி...

//பரு வரலைன்னு கவலை வேண்டாம்..
மரு. வந்திருக்கு!//

ஹஹா :)


//அப்புறம்..
கதாநாயகன்....கதானாயகனாயிருக்கு! பாருங்க!//

திருத்திவிடுகிறேன்... நன்றி...

மயிலன் said...

விமலன் said...
//கவிதை தெரியாது என ஒரு கதையே சொல்லி விட்டீர்களே,வாழ்த்துக்கள்,//

நன்றி அண்ணே...:)

மயிலன் said...

எல் கே said...
//உங்களை பதிவர் சந்திப்பில் பார்த்தேன். பேச இயலவில்லை.

நீங்கள் மருத்துவர்தானே ??//

ஆம் நண்பரே...

கூடுமான வரை அனைவரிடமும் நானே சென்று அறிமுக படுத்தி கொண்டேன்... இன்னொரு நிகழ்வில் சந்திப்போம்...

மயிலன் said...

//கோகுல் said...
வேறென்ன சொல்றது,நீங்க ரொம்ப நல்லா வருவீங்க.,//

நன்றி கோகுல்... விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...

Doha Talkies said...

மிக அற்புதமான கவிதை நண்பரே..
மிக அருமை..
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

மயிலன் said...

கோவை மு சரளா said...
//வரி வரியாய்
புகட்டி சென்றாய்
இளமையின் வசந்தங்களை .......//.

வசந்தம் மாதிரியா தெரிஞ்சுது அது?

//சிரிப்புகளின் சப்தங்களில்
உணரமுடிந்தது
அவரவர் சென்று வருகிறார்கள்
பருவத்தின் வாசல்பக்கம் என்று ........//

நாலு பேரு நல்லா இருக்காங்கன்னா எதுவுமே தப்பில்ல....

//இளமையின் துடிப்பில்
வார்த்தைகளின் எதார்த்தத்தில்
வடித்து கொடுத்துவிட்டாய்
எளிதில் ஜீரனமாகிவிட்டது ..........//

இரத்த பொறியல்... அதான்...:)

//இன்னும் பசியோடு
காத்திருக்கிறேன்
உன் கவி உணவை உண்ண........//

நன்றி தோழி... :) கவி வடிவில் ஒரு வாழ்த்து...

//அருமை தொடருங்கள்//

சகோன்னு சொல்லாம விட்டதுக்கு தனி நன்றி...

மயிலன் said...

Sasi Kala said...
//மாப்பிள்ளையாச்சே அதான் கவித கவித..வாழ்த்துக்கள் சகோ.//

நன்றி...
"சகோ" தமிழில் எனக்கு நெம்ப புடிச்ச வார்த்தை...

மயிலன் said...

ராஜி said...
//என்ன தம்பி இன்விடேஷன் பிரிண்ட் பண்ற செலவை மிச்சப்படுத்திட்டே போல.//

ஹி ஹி.. செம்ம கஞ்சன்னு தெரிஞ்சு போச்சா?
//இப்படிலாம் கூப்பிட்டா வந்துட மாட்டேன். வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு பூ, பழம், ஸ்வீட்ஸ், டிரெஸ்லாம் எடுத்து வந்து தட்டுல பணம் காசு வச்சாதான் அக்கா நான் வருவேன்//

ஹலோ....சரி...யா... கேக்....மாட்... ங்கு...து....

மயிலன் said...

சமீரா said...
//நன்றி மயிலன்... வீடியோ பிளஸ் வரிவடிவில் கவிதை-யை பகிர்ந்ததற்கு... மிகவும் ரசிக்கும் படி எதார்த்தமாக இருந்தது!!!//

நீங்க அந்த ஊக்குவிப்பவர் தானே... :) வாங்க வாங்க.. மிக்க மகிழ்ச்சி :)

அப்புறம் நன்றி, சகோன்னு சொல்லாம இருந்ததிற்கு... :)

மயிலன் said...

r.v.saravanan said...
//கவியரங்கத்தில் கவிதை வாசித்த மயிலன் வார்த்தைகளை வலை போல் வீசி மொத்தமா எல்லோரது பாராட்டுக்களையும் அள்ளிட்டார் (ரொம்ப நல்லா இருந்துச்சு மயிலன் வாழ்த்துக்கள்)

தங்களை பற்றி என் தளத்தில் பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி //

மிக்க நன்றி சார்... ஏற்கனவே அங்கு பார்த்து நன்றியும் சொல்லியாகிவிட்டது:)

மயிலன் said...

ஜே கே said...
//கவியரங்குத்துக்கேயான தேர்ந்த உவமானங்கள். பல இடங்களில் அட போட வைத்து, முதல் முறை கேட்கும்போதே புரியம்படியான வரிகள். அரங்குக்கவிதைக்கு அதுவே ஆதாரம் என்று கவிஞன் நண்பன் ஒருவன் சொல்லுவான். அசத்தி இருக்கிறீர்கள்.//

நன்றி நண்பரே... உங்களின் கமெண்டிர்க்காக காத்திருந்தேன்.... ஏற்கனவே உங்களின் பொங்கல் மற்றும் ஆடி கவியரங்க வீடியோகளை பார்த்திருக்கிறேன்... அதிலிருந்துதான் எனக்கும் இந்த ஆசை வந்தது... :) பேராசைதான்...:)


//விமர்சனம் என்று ஒன்று செய்யவேண்டும் என்றால், காதலை சுற்றி சுற்றியே வராமல் கொஞ்சம் அப்பாலே போயிருக்கலாமோ( எனக்கு அந்த பிரச்சனை இல்லை, ஈழத்து தளம், கவிஞர்களுக்கு ஒரு கோகினூர்).//

நீங்களே பதிலும் சொல்லிவிட்டீர்கள்... என்னவெனில், நான் இதையே உரைநடை மாதிரிதான் வாசித்தேன்... பிற கருத்துக்களை, முக்கியமாய் கொஞ்சம் சீரியஸ் விஷயங்களை கையாண்டால், சொற்பொழிவு மாதிரி ஆக்கியிருப்பேன்.. :)

//மற்றும்படி வாசிப்பில் இருந்த ஒரு வித அவசரம் சில இடங்களில் கவிச்செழுமையை உணரவிடாமல் தடுத்துவிட்டது.//

:) ஹ்ம்ம்....

//ஒக்டோபர் நிகழ்வுக்கு எப்போதும் என் வாழ்த்து கூடவிருக்கும்!//

மிக்க நன்றி ஜேகே...:)

மயிலன் said...

@Doha Talkies
நன்றி நண்பரே...

அ. வேல்முருகன் said...

இனிய வாழ்த்துக்கள்

ராஜி said...

மயிலன் said...

சமீரா said...
//நன்றி மயிலன்... வீடியோ பிளஸ் வரிவடிவில் கவிதை-யை பகிர்ந்ததற்கு... மிகவும் ரசிக்கும் படி எதார்த்தமாக இருந்தது!!!//

நீங்க அந்த ஊக்குவிப்பவர் தானே... :) வாங்க வாங்க.. மிக்க மகிழ்ச்சி :)

அப்புறம் நன்றி, சகோன்னு சொல்லாம இருந்ததிற்கு... :)
>>
அடப்பாவி மயிலா! அனுசுயாவிற்கு இந்த கமெண்டை காட்டவா?

சமீரா said...
This comment has been removed by the author.
விஜயன் said...

நன்றாக இருந்தது உங்கள் கவிதை..
பதிவர் திருவிழாவில் நீங்கள் வாசித்த இந்த கவிதை தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தது.

மயிலன் said...

அ. வேல்முருகன் said...
//இனிய வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே...

மயிலன் said...

ராஜி said...

//அடப்பாவி மயிலா! அனுசுயாவிற்கு இந்த கமெண்டை காட்டவா? //

நீங்கள் பார்பதற்கு முன்னே அவங்க பார்த்துடுவாங்க....:)

மயிலன் said...

விஜயன் said...
//நன்றாக இருந்தது உங்கள் கவிதை..
பதிவர் திருவிழாவில் நீங்கள் வாசித்த இந்த கவிதை தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தது.//

நெறைய நண்பர்களை பெற்று தந்த இந்த ஒரு கவியரங்கத்திற்கு நன்றிகள்...

அரசன் சே said...

அண்ணாந்து பாக்க வைக்கும் எங்கள் அன்பு அண்ணாச்சிக்கு என் நன்றிகள் ...
உங்களை சந்தித்ததில் மனம் மகிழ்ந்தேன்!
உங்களின் கவிதை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ...
நான் எடுத்த வீடியோ ரொம்ப கேவலமா தான இருந்துச்சு .. திட்டனும் என்றால் மனசுக்குள்ளே திட்டிக்கோங்க ..
அப்புறம் போகும் பொது சொல்லாம போய்ட்டிங்க ரொம்ப அவசரமோ ?
பாப்போம் அண்ணாச்சி மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய்டும் .. நன்றி

மயிலன் said...


அரசன் சே said...
//அண்ணாந்து பாக்க வைக்கும் எங்கள் அன்பு அண்ணாச்சிக்கு என் நன்றிகள் ...
உங்களை சந்தித்ததில் மனம் மகிழ்ந்தேன்!
உங்களின் கவிதை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ...
நான் எடுத்த வீடியோ ரொம்ப கேவலமா தான இருந்துச்சு .. திட்டனும் என்றால் மனசுக்குள்ளே திட்டிக்கோங்க ..
அப்புறம் போகும் பொது சொல்லாம போய்ட்டிங்க ரொம்ப அவசரமோ ?
பாப்போம் அண்ணாச்சி மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய்டும் .. நன்றி//

அந்த பயத்தில்தான் அபியையும் எடுக்க சொன்னேன்... ஹி ஹி...

நான் கிளம்பும் போது பிகேபி உரையாற்றி கொண்டிருந்தார்... சத்தம் போடாமல் பின் வரிசையில் இருந்தவர்களிடம் மட்டும் சொல்லிவிட்டு கெளம்பிட்டேன்.. உலகம் ரொம்ப சின்னது... மீண்டும் சந்திப்போம்

வரலாற்று சுவடுகள் said...

//
மயிலன் said...
ராஜி said...

//அடப்பாவி மயிலா! அனுசுயாவிற்கு இந்த கமெண்டை காட்டவா? //

நீங்கள் பார்பதற்கு முன்னே அவங்க பார்த்துடுவாங்க....:)
//

ஆமா ஏன்னா, இப்போதைக்கு டாக்டரோட blog, Facebook, Twitter இன்னபிற அக்கௌன்ட்களையெல்லாம் மெய்ண்ட்டெய்ன் பன்னுரதே அவங்கதானாம் # சமீபத்திய உளவுத்துறை அறிக்கை! :D :D

மயிலன் said...

வரலாற்று சுவடுகள் said...


//ஆமா ஏன்னா, இப்போதைக்கு டாக்டரோட blog, Facebook, Twitter இன்னபிற அக்கௌன்ட்களையெல்லாம் மெய்ண்ட்டெய்ன் பன்னுரதே அவங்கதானாம் # சமீபத்திய உளவுத்துறை அறிக்கை! :D :D//

MBA graduate,u know.....

R.Puratchimani said...

உங்கள் கவிதை ஒரு கமர்ஷியல் ஹிட்டு
அதுக்கு விழுந்தது பார் பலத்த கை தட்டு
இதைவிட ஒரு கவிஞனுக்கு என்ன வேணும் நீ மார் தட்டு
திருமண வாழ்க்கை இனிமையாக அமைய வாழ்த்துக்கள் :)

வரலாற்று சுவடுகள் said...

//
மயிலன் said...
MBA graduate,u know.....
//
sorry for the playful comment!

shortfilmindia.com said...

உங்க கவிதை அருமை. சக கவிஞன் என்கிற முறையில் என் பாராட்டுக்கள்.:)

தொழிற்களம் குழு said...

இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்லோ பின்னூட்டம் போட்டிருந்தாலும் அடுத்த முறை பின்னூட்டம் போட மாட்டோம் என்பதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம்,,,

வாழ்த்துகள் சகோ,,,

அருமையான வரிகள்.. கேட்கும் போதூம் படிக்கும் போதும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை,,,

தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் உங்கள் பதிவுகளை இணையுங்கள்

திவ்யா @ தேன்மொழி said...

பார்த்தேன்..
இரசித்தேன்..
வந்து ஒரு விசிலடிக்க முடியாமற் போய்விட்டதே என்ற வருத்தத்துடன்..!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி..!! :)

ezhil said...

கவியரங்கக் கவிதையை நேரலையில் பார்த்துதான் உங்கள் வலைப்பதிவை தேடிப்பிடித்து பின்னூட்டமிடுகிறேன் . அருமையான வரிகளை வாசித்த விதம் அருமை .வாழ்த்துக்கள் கவிதைக்கும் கவிதை போல் அமையவிருக்கும் அழகான வாழ்க்கைக்கும் நண்பா

ஏ.எ.வாலிபன் said...

நண்பர் மயிலனுக்கு, ஜேகே வழி இந்தக் கவிதை கண்ணுற்றேன். ஏலவே உங்களை பின்னூட்டத்தில் கண்டிருக்குறேன், நீண்டு தொடர்ந்து உங்களை இதுவரை வாசித்ததில்லை, நேரம் பொறுத்து தொடர அவா.

இந்தக் கவிதை நிச்சயமாய் ஒரு நல்ல கவிதை, ஆங்காங்கே அடடா போட வைத்தது. குறிப்பாய்:
பதின்மூன்றாம் வயது எபிசொட் மனதுக்குள் மத்தாப்பூ -
//முன்னிரண்டு பற்கள் தெரிய சிரிப்பதற்கும்
முப்பத்திஇரண்டும் தெரிவதற்கும் வித்தியாசம் புரிய தொடங்கியது // இந்த வரிசை மாறி வருவது இன்னமும் சிறப்பாய் இருக்குமோ என்று ஒரு சந்தேகம், இப்படி
//முப்பத்திஇரண்டும் தெரிவதற்கும் வித்தியாசம் புரிய தொடங்கியது
முன்னிரண்டு பற்கள் தெரிய சிரிப்பதற்கும்//

//என்னோடு சேர்ந்து
ஃபுட்போர்டு அடித்தது என் காதல் கனவுகள்...//
அருமை - உவமை,
உங்களுக்கும் உங்கள் காதல் கனவுகளுக்கும் உள்ளே புகுந்து இருக்கை பிடித்து சுகமாய் பயணிக்க வழியில்லை / வழி கிடைக்கவில்லை / தெரியாது.

//கதையும் வசனமும் பக்கதிலிருக்க
கதாநாயகத்தனம்தான் வசமில்லை நமக்கு...// செமை

திருமண நல்வாழ்த்துக்கள் நண்பரே, ஒரு நிலாக்கால குளிர் இரவில் நித்தியகல்யாணி பூக்களின் கமகமப்புடன், கணை அடுப்பின் கதகதப்புடன், சூடா மிடறு மிடற்றும் கோப்பி போல வாழ்வு ரசனையாய் அமையட்டும்.

srimathi said...

wow superb "TUBELIGHT உம் பல்பும் பல இருந்தும் வீட்டில்
விளக்குதான் ஏற்றவேண்டுமாம் அம்மாவிற்கு " super lines ... very nice...and hearty caongratulations for your wedding....