சகித்தவர்கள்...

2 Sep 2012

நிவேதா முதல் நிவேதா வரை...


காட்சி-8
இடம்: புதிய (?)தலைமை செயலகம் எதிரே உள்ளே சிம்சன் சிக்னல் 
தேதி: 03/ 09/ 2012

முன்னாள் நின்று கொண்டிருக்கும் 32B பேருந்து மட்டும் நினைவு படுத்தவில்லை நிவேதாவை.. பக்கவாட்டில் காரோடு லேசாய் உரசி நிற்கும் பைக்கில் அதிகமாய் உரசிகொண்டிருக்கும் ஜோடி,கிழவி ஒருத்தி விற்கும் மல்லிகை பூ, லேசான மேகமூட்டம்...என ஒவ்வொன்றிலும் நிவி... ஒவ்வொரு காட்சியும் அவனை தரிசிக்கிறது... இல்லை...சபிக்கிறது ... இல்லை...வேறேதோ செய்கிறது... சிக்னல் பச்சை விழுந்ததும், லான்சர். விளம்பரத்தில் சொல்லப்படும் வேகத்தை பிடித்து பறக்கிறது...ஆர்மி குவாட்டர்ஸ் ஏரியாவை கடந்ததும், தனிச்சையாக வலது புறம் திரும்புகிறது... மெரீனா... கொஞ்சம் சுண்டல் ...நிறைய அசை... காட்சி- 7
இடம்: வேளச்சேரி, சத்யநாராயணனின் ஃபிளாட் 
தேதி-18/ 03/ 2012

செல்ஃபோனில், நோக்கியா ரிங்டோன்.. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவரையும், பொருள் தேடும் பந்தயத்தில் இருப்பவரையும், மிடுக்கான செல்வந்தர்களையும் இந்த ரிங்க்டோன் அடையாளப்படுத்திவிடும்...சத்யா இம்மூன்றில் எந்த வகையறா? அந்த விவாதம் இங்கு வேண்டாம்.. ஃபோனில்,அசோகசெட்டியார் (சாதி பெயர் பின்னால் சேர்ந்தால் 'ன'கர மெய் தொலைந்து போகும் புணர்ச்சிவிதி, தமிழ்தாய்க்கே வெளிச்சம்)

ஹலோ 

ஹலோ மாப்ள.. பொண்ணு பொறந்திருக்கு.. (அவசரவசரமாய் பேசுகிறார்)

எப்ப ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்க...நிவிக்கு 24th தானே டேட் ? (பதற்றமாய்)

இல்ல நேத்து ரொம்ப வலி... துடிச்சு போய்ட்டா... ஹாஸ்பிடல் வந்ததுமே மெம்ப்ரேன் ரப்ச்சர்...நைட்டு பத்தர மணிக்கு டெலிவரி ஆச்சு..

இப்ப சாயங்காலம் அஞ்சு மணி...இப்ப சொல்றீங்க...? கொழந்த எப்டி இருக்கு? எந்த ஹாஸ்பிடல்?

இல்ல மாப்ள, அது வந்து.... நிவி உங்களுக்கு ஃபோன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டா...


காட்சி- 6
இடம்: அசோகசெட்டியார் வீடு... நந்தம்பாக்கம்
தேதி-24/ 12/ 2011

காரில் இருந்து வேகமாய் வீட்டிற்குள் நுழைகிறாள் நிவி.. பின்னாலே நிதானமாய் அசோகன்.. வாசலில் வெறும்வாய்கள் சில அவல் தேடி கூடிநிற்கிறது...

அப்பா, எதுக்கு இப்போ இவ்வளோ பேர் இங்க நிக்குறாங்க...? 

சத்தம் போடாதம்மா.. அவங்களுக்கு கேட்ற போது....

காதுல விழுந்து மட்டும் திருந்த போகுதுங்களா? இது என்னோட லைஃப்.. only i ll decide things... இவுங்க என்ன இப்ப ஆறுதல் சொல்ல போறாங்களா? i really dont need any such bullshit...

நிவி, கொஞ்சம் பொறம்மா.. உன்னோட அம்மா இருந்திருக்கணும்... உனக்கு எடுத்து சொல்லியிருப்பா... எனக்கு... எனக்கு... அவ்வளவு வெவரம் பத்தல... (கலங்குகிறார்)

அப்பா, அம்மா இருந்திருந்தா இந்த முடிவ கொஞ்ச நாள் முன்னாடியே எடுத்திருப்பேன்... நல்லவேள.. அவனும் இதுக்கு ஒத்துக்கிட்டான்...i feel a big relief..

நீ ரொம்ப stress பண்ணதாலதான் ஒத்துக்கிட்டாரு... மாப்ளைக்கு இதுல துளியும் விருப்பமில்ல.. 

அதான் இன்னிக்கு divorce ஆயிடுச்சுல்ல... அப்பறம் என்ன இன்னும் மாப்ள...?


காட்சி- 5
இடம்: சத்யாவின் ஃபிளாட்
தேதி: 11/ 10/ 2011

நீண்ட நேர தொலைபேசி உரையாடல் முடியும் தருவாயில் இருக்கிறது,

so, என்னதான் சொல்லவர்ற நிவி...? 

divorce... அதான இவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன்... am just fed up with ur explanations and promises... போதும் சத்யா... நீயும் சந்தோஷமா இரு... நானும் ரொம்ப நிம்மதியா இருப்பேன்..

but nivi, you are a pregnant now... 

ஹோ...உனக்கு அதெல்லாம் வேற ஞாபகம் இருக்கா?

ஏன் நிவி இப்டி கொல்ற? ப்ளீஸ்.. கொஞ்ச நாள்.. கொஞ்ச நாள் அங்கேயே...உன் வீட்லயே இரு... ஒரு change இருக்கும்... இப்போ அவசரமா இந்த முடிவ எடுக்குற அளவுக்கு என்ன ஆச்சு?

என்ன ஆகல? disappointment... அத தாண்டி என்ன நடக்கணும்...? இப்டியே போச்சுன்னா கொஞ்ச நாள்ல நா suicide தான் பண்ணிக்கணும்... i just want to get out of this relationship...


காட்சி 4
இடம்: அதே ஃபிளாட் 
தேதி: 19/ 09 / 2011

கையிலிருந்த டம்ளரை ஓங்கி தரையில் அடிக்கிறாள் நிவி... அது ரெண்டு குதி குதித்து தரையில் விழுந்து, மின்விசிறியின் வழி நடத்தளுக்கு ஏற்ப முன்னும் பின்னும் அசைய தொடங்கும் வரை நிதானித்து மீண்டும்......

come on.. நிவி.. இப்ப ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற... என்னப்பத்திதான் உனக்கு தெரியும்ல... 

but, i expected you to change... atleast for me.. நீயும் ட்ரை பண்றேன்னு தானே சொன்ன... ஒரு வருஷம் ஆச்சு... போக போக இன்னும் மோசமாதான் போயிட்டு இருக்கு.. போதும்டா... என்னால முடியல... பேசி பேசி.. உன்கிட்ட கெஞ்சி கெஞ்சி... போதும்... நீ, உன்னோட profession, office, goal... என்ன விட்ரு..

இதெல்லாம் ஒரு விஷயமா நிவி...

அதான்டா... அதான் இங்க பிரெச்சன... நா உன்கிட்ட என்ன எதிர்ப்பாக்குறேங்கறதே உனக்கு தெரியல...இல்ல, இதெல்லாம் உனக்கு ஒரு விஷயமாவே படல... அதான் உண்ம..  இதுவரைக்கும் மூணு  check up போயிருக்கேன்... ஒரு தடவையாவது கூட வந்திருக்கியா...? வீட்ல பேசறதுக்கும் ஒருத்தர் இல்ல... உங்க அம்மாஅப்பாவயாவது ஊர்ல இருந்து இங்க வர சொல்லலாம்... அவங்களுக்கு சென்னை புடிக்காதுன்னு சொல்லிடுவ.. நா வேலைக்கு போறதும் உனக்கு பிடிக்காது... 

இப்போ என்ன வேலைக்கு போணுமா?

பாத்தியா...? இப்பவும் நீ எப்டி இத புரிஞ்சுக்கிற... போதும் சத்யா... please leave me...


காட்சி-3
இடம்: fortes மலர் மருத்துவமனை
தேதி: 31/ 07/ 2011

என்னம்மா.. மாப்ள ஃபோன் எடுக்குறாரா இல்லையா?

ரெண்டு தடவ ஃபுல் ரிங் போயிடுச்சுப்பா...attend பண்ணல.. திரும்பவும் ட்ரை பண்ணிட்டு.....    ஹலோ...எங்க இருக்கே?

office ல தான் நிவி... என்னடா இந்த நேரத்துல call ... ?

hospital வந்திருக்கேன்... 

என்னாச்சுடா ? யாருகூட போன? 

அப்பா வந்திருக்காரு... எல்லாம் நல்ல விஷயம்தான்... guess பண்ணு...

ஹே...u mean that? re..a...l..llll...y?

ஹ்ம்ம்...சந்தோஷமா? உண்மைலே?

என்னடா இப்டி கேக்ற..? love so much.... இப்பவே உன்ன பாக்கணும்... 

வா...நானும் பாக்கணும்...

ஒரு மீட்டிங் இருக்குடா... முடிச்சிட்டு சீக்ரம் வர்றேன்... 

ஹோ.. ஓகே... ஒகே... சீக்ரம் வர ட்ரை பண்ணு... 


காட்சி -2
இடம்: பொள்ளாச்சியில் சத்யா வீடு.. 
தேதி: 05/ 09/ 2010

ஹ்ம்ம்.. உனக்கு வெட்கப்படலாம் தெரியுமா நிவி...?

ஹேய்...

பின்ன... first night ங்கறதுக்காக எக்கச்சக்க பிரகாசம் தெரியுது மொகத்துல... கிட்ட வா...

எதுக்கு? ஹ்ம்ம்...

my lips are longing to kiss u... come closer nivi...

என்னமோ, இன்னைக்குதான் புதுசா மொத தடவ குடுக்குற மாதிரி... போடா..

அப்போ வேணாம்ல...? சரி தூக்கம் வருது....குட் நைட்...

ஏய்... you... idiot....


காட்சி-1
இடம்: 32B பேருந்து.. நடத்துனருக்கு முந்தைய சீட்...
தேதி: 02/ 02/ 2010

பேருந்தில் இருக்கும் சில விடலைகளின் கண்கள் நிவியை மேய்ந்து கொண்டிருக்க, அவளுக்கு பக்கத்தில் எந்த விரசமும் இல்லாமல் சத்யா...

இன்னும் எத்தன நாள் சத்யா இதெல்லாம்..?

எதெல்லாம்..?

போதும்... friends ன்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம்... வேற ஏதும் நமக்குள்ள இல்லையா?

பட் நிவி...

என்னடா பட்...? எனக்கு உன்கூட வாழனும்... உனக்கு அப்டி தோணலையா?

simply, i just dont want to get into a relationship at present.. நா அதுக்கு ஒத்துவரமாட்டேன்...yes... எனக்கு relationshipsஅ value பண்ண தெரியாது... சின்ன வயசுல இருந்தே career, success இதுக்கு பின்னாலேயே ஓடி பழக்க பட்டுட்டேன்... இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கே என்ன புடிக்காம போயிடும்...

ஏதும் பேசாதடா.. நீ என் lifeல இருக்கணும்...அவ்ளோதான்... என்ன உனக்கு புடிச்சுருக்கா இல்லையா?

கலங்கிய விழிகளுடன் இருக்கும் அவளை தோளோடு சாய்த்து கொள்கிறான்...


அதே காட்சி- 8 (இன்னொரு ஃபிரேமில்)
இடம்: அசோகசெட்டியார் வீடு..
தேதி: 03/ 09/ 2012

ஐந்து மாத குழந்தைக்கு பாலூட்டிகொண்டிருக்கும்போது,மொபைல் அழைக்கிறது...  "DONT ATTEND" என பதிவு செய்யப்பட்டுள்ள சத்யாவின் எண்ணிலிருந்துதான் அழைப்பு... கண் இமைக்கவே இல்லை... முழு அழைப்பொலியும் முடிந்துவிட்டது... மொபைல் திரையை மட்டும் வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்.. அழுகை அடைக்கிறது...

முற்றும்

32 comments:

பட்டிகாட்டான் Jey said...

மயிலன் இன்னியோட ரியலிட்டி இதுதானோ!!!???......

சோ சேட் :(

ராஜி said...

நல்லா இருக்கு. அட, நல்லா இருக்குப்பா. ஆனா, சோகமா இருக்கே ஏன்?

வீடு சுரேஸ்குமார் said...

ஒரு குறும்படமாக எடுக்கக் கூடிய காட்சி விஷவல்....முயற்சிக்கலாம்..!சில பிதாமகர்கள்!

Seeni said...

mmm

ஜே கே said...

//செல்ஃபோனில், நோக்கியா ரிங்டோன்.. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவரையும், பொருள் தேடும் பந்தயத்தில் இருப்பவரையும், மிடுக்கான செல்வந்தர்களையும் இந்த ரிங்க்டோன் அடையாளப்படுத்திவிடும்..//

இந்த வரிகளில் இருக்கும் ஆழம் புரிய வினாடி பிடித்தது.அட ஆற அமர ரிங் டோன் மாற்ற நேரம் கூட இல்லாமல் அலைபவர்கள்.. இது writing !

மிக சுவாரசியமான கதை.. கொஞ்சம் ஆழமாக போயிருக்கலாம் .. சுருக்கமாக இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டீர்கள் போல... நிவியை பற்றி இன்னமும் எனக்கு தகவல் வேணும் தலைவரே!

அதிக பிரசிங்கிதனம் இல்லையென்றால் ஒன்று சொல்கிறேன், இறுதி பத்திக்கு முதல் வரும் காதல் காட்சியோடு கதை முடிந்தது போல இருந்தது. மீண்டும் ஆரம்பத்தில் வந்து முடிக்க வேண்டுமா? arguable உங்கள் கருத்தறிய ஆர்வம்!

silver moon said...

Havesome story

மயிலன் said...

பட்டிகாட்டான் Jey said...
//மயிலன் இன்னியோட ரியலிட்டி இதுதானோ!!!???......

சோ சேட் :( //

அப்படியான்னு தெரியாது... சில குழப்பங்களை பெண் வடிவில் சந்தித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன்...

மயிலன் said...

ராஜி said...
//நல்லா இருக்கு. அட, நல்லா இருக்குப்பா. ஆனா, சோகமா இருக்கே ஏன்?//

ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, ரொம்ப சந்தோஷமான மூட்ல இருந்தா ஈசியா சோக கதை எழுதிருவேன்னு... அப்படியான ஒன்னுதான் இது...:)

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//ஒரு குறும்படமாக எடுக்கக் கூடிய காட்சி விஷவல்....முயற்சிக்கலாம்..!சில பிதாமகர்கள்! //

நன்றிண்ணே... நானே முயற்சிக்கிறேன்... :)

மயிலன் said...

Seeni said...
//mmm//

mmm

மயிலன் said...

ஜே கே said...
//மிக சுவாரசியமான கதை.. கொஞ்சம் ஆழமாக போயிருக்கலாம் .. சுருக்கமாக இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டீர்கள் போல... //

மிக்க நன்றி ஜேகே...பன்னிரண்டு காட்சிகள் இருந்தது...அதிக எடிட்டிங் வொர்க் பார்த்துவிட்டேன்... எனக்கே இப்போ படித்து பார்த்தால் சுருக் என்று முடிந்து விட்டது...

//நிவியை பற்றி இன்னமும் எனக்கு தகவல் வேணும் தலைவரே!//

அவள் ஒரு தொடர்கதை சுஜாதாவும், vtv ஜெஸ்ஸியும் தான் இதுவரை நான் அதிகம் இரசித்த தெளிவான குழப்பங்கள்... simply portrayals.. நிவியை யாரோ ஒருவளாய் மனதில் வைத்து எழுதிவிட்டேன்.. மனமேய்ச்சல் இருக்கும் ஓர் சராசரி பெண் என்பதைத் தாண்டி யாரோ ஒருவள், தீர்க்கமாய் முடிவு எடுக்கும் குழப்பவாதி, ego-antiego வால் தனக்குள் திண்டாடும் ஒரு திமிர்பிடித்த குழந்தை...தவறானவளாகவோ, infatuation என்ற அரிப்பில் முடிவெடுப்பவளாகவோ காட்டக்கூடாது என்று மட்டும்தான் முடிவு செய்துகொண்டேன்.. அதை ஓரளவு சரியாய் செய்துள்ளேன் என்றுதான் நினைக்கிறன்.. மற்றவை உங்கள் கற்பனைக்கு...:)

//அதிக பிரசிங்கிதனம் இல்லையென்றால் ஒன்று சொல்கிறேன், இறுதி பத்திக்கு முதல் வரும் காதல் காட்சியோடு கதை முடிந்தது போல இருந்தது. மீண்டும் ஆரம்பத்தில் வந்து முடிக்க வேண்டுமா? arguable உங்கள் கருத்தறிய ஆர்வம்! //

காட்சி 8 இல் துவங்கும்போது சத்யா பார்வையில் 'அசை'போடபடுகிறது மீதி ஏழு காட்சிகளும்... நிகழ்காலத்தில் இருந்து பொறுமையாய் பின்னே போகும் நினைவுகள்..காட்சி 1இல் அந்த பழைய 32Bயின் நினைவுகள் வந்ததும்...நிவிக்கு தொலைபேசிவிடுகிறான்...அதே மெரினாவில் இருந்து... காட்சி 8 இன்னொரு ஃபிரேமில் காட்டப்படுகிறது... முற்றியதா?ஹி ஹி...

மயிலன் said...

silver moon said...
//Havesome story//

:)thank u

ஜே கே said...

//அவள் ஒரு தொடர்கதை சுஜாதாவும், vtv ஜெஸ்ஸியும்//

அதை தான் கொண்டுவருகிறீர்கள் என்பது வாசிக்கும்போது ஓரளவுக்கு புரிந்தது. ஆனால் அவ்வளவு எண்ண அலைகள் எனக்குள் வாசிக்கும்போது ஓடவில்லை. என் வாசிப்பின் கோளாறாகவும் இருக்கலாம்.

// முற்றியதா?ஹி ஹி...//
makes sense .. screen play பாணியில் அமைந்த சிறுகதை என்பதை கவனிக்க தவறிவிட்டேன் ... நாங்கள் இப்படித்தான் ஏதாவது கிண்டி கிளறுவோம் ... கணக்கில எடுக்காதீங்க!

மயிலன் said...

ஜே கே said...
//அதை தான் கொண்டுவருகிறீர்கள் என்பது வாசிக்கும்போது ஓரளவுக்கு புரிந்தது. ஆனால் அவ்வளவு எண்ண அலைகள் எனக்குள் வாசிக்கும்போது ஓடவில்லை. என் வாசிப்பின் கோளாறாகவும் இருக்கலாம். //

presentationஇல் தான் கோளாறு...intenseஆக யோசித்த ஒரு கதாபாத்திரத்தை எழுத்தால் வடிவம் கொடுக்க இயலவில்லை..

//makes sense .. screen play பாணியில் அமைந்த சிறுகதை என்பதை கவனிக்க தவறிவிட்டேன் ... நாங்கள் இப்படித்தான் ஏதாவது கிண்டி கிளறுவோம் ... கணக்கில எடுக்காதீங்க! //

அட.. நாம எழுதுறத நாலு பேர் படிச்சாலே சந்தோஷ படற ஆளு நான்.. இதுல கவனிச்சு ஐயம் விளக்கலாம் சொன்னா தலைகால் புரியாது எனக்கு... :)

செய்தாலி said...

கதையும்
காட்சி அமைப்பு நல்ல இருங்குங்க

அரசன் சே said...

அண்ணாச்சி நான் புரடியுசர் ரெடி பண்றேன் ...
வாங்க இதை கொஞ்சம் மெருகேற்றி திரைப்படமாவே எடுத்திடலாம் ...
இயக்கம் , நடிப்பு - மின்னல் மன்னன் மயிலன் ...

அரசன் சே said...

மிகவும் நேர்த்தியாக பிண்ணப்பட்ட அழகிய பதிவு ..
ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்கொண்ட கவனம் எழுத்தில் உணர்ந்தேன் ..
என் உள்ளம் நிறை வாழ்த்துக்களும் , நன்றிகளும் ...

அரசன் சே said...

எவன் எவனோ சினிமா எடுக்குறேன் என்கிற பேர்வழியில் நம்மளை கொள்ள பாக்குராயிங்க ..
வாங்க நம்ம எடுத்து மக்களை காப்பாத்துவோம் .. அஞ்சலி தான் ஹீரோயின் ... டீலா நோ டீலா

Uzhavan Raja said...

ம்ம் கதை சூப்பர் அண்ணா...

ஏன் அண்ணே சந்தோசமான மூட்ல இப்படி எழுதுறீங்களே அப்போ சோகமா இருந்தால் ..!!

மயிலன் said...

செய்தாலி said...
//கதையும்
காட்சி அமைப்பு நல்ல இருங்குங்க//

நன்றி நண்பரே...

மயிலன் said...

அரசன் சே said...
//அண்ணாச்சி நான் புரடியுசர் ரெடி பண்றேன் ...
வாங்க இதை கொஞ்சம் மெருகேற்றி திரைப்படமாவே எடுத்திடலாம் ...
இயக்கம் , நடிப்பு - மின்னல் மன்னன் மயிலன் ...//

மின்னல் மன்னன் ...ஹி ஹி...
பாய்ஸ்...அடிச்சு கட் அவுட் ரெடி பண்ணுங்கடா...


//மிகவும் நேர்த்தியாக பிண்ணப்பட்ட அழகிய பதிவு ..
ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்கொண்ட கவனம் எழுத்தில் உணர்ந்தேன் ..
என் உள்ளம் நிறை வாழ்த்துக்களும் , நன்றிகளும் ...//

மிக்க நன்றி நண்பா.. உரையாடல் எழுதுவதுதான் கஷ்டமாக படுகிறது... வாழ்த்தில் நெகிழ்ச்சி...


//எவன் எவனோ சினிமா எடுக்குறேன் என்கிற பேர்வழியில் நம்மளை கொள்ள பாக்குராயிங்க ..
வாங்க நம்ம எடுத்து மக்களை காப்பாத்துவோம் .. அஞ்சலி தான் ஹீரோயின் ... டீலா நோ டீலா//

அப்புடியே அந்த காஜலு......

மயிலன் said...

Uzhavan Raja said...
//ம்ம் கதை சூப்பர் அண்ணா...//

நன்றி ராஜா...

//ஏன் அண்ணே சந்தோசமான மூட்ல இப்படி எழுதுறீங்களே அப்போ சோகமா இருந்தால் ..!!//

எழுதவே மாட்டேன்... :)

Philosophy Prabhakaran said...

யோவ்... எனக்கெல்லாம் சாதா கதையே புரியாது... இது வேற ஏதோ பெசல் சாதா கதை மாதிரி தெரியுதே...

Am just fed up with your story mayilan... fed up...

ஆனாலும் நோக்கியா ரிங்டோனை எந்தமாதிரி ஆட்கள் வைத்திருப்பார்கள் என்ற ஆராய்ச்சி பிடித்திருந்தது...

மயிலன் said...

என்ன நண்பா இப்புடி சொல்லிபுட்ட?
செம்ம சாதா கத தான்... கொஞ்சம் ஜிகினா வேல சேத்திருக்கேன்...அம்புட்டுதேன்...

அரசன் சே said...

அப்புடியே அந்த காஜலு......//

அஞ்சலி மாதிரி அழகு சிலை இருக்கும் போது அந்த மைதா மாவு எதுக்குங்குறேன் ..
(நோ நோ ...பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ் மீ பாவம் ...)

Gowripriya said...

super... nice writing... i loved the nokia tone fact :)

திவ்யா @ தேன்மொழி said...

இன்னும் சில வருட காலங்களில் விவாகரத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு பின் திருமணம் செய்துகொள்ளும் நிலை வந்தாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை,,, விவாகரத்தை சுதந்திரத்திற்கான டிக்கட் என்றே இன்று பலரும் (குறிப்பாக பெண்கள்) கருதுகின்றனர். மன உளைச்சளுக்கான ஃப்ரீ பாஸ் கூடவே சேர்த்தி.. அதில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஸ்பெஷல் போனஸாக திண்டாட்டம்.. ஒருவேளை திருமணத்திற்கு வயது வரம்பு வைத்ததைப் போல், விவாகரத்திற்கும் வயது வரம்பு வைத்தால், அவசர விவாகரத்தில் முடியும் பல அவசர திருமணங்கள் தவிர்க்கப்படலாமோ...!!??

ஜிகினா வேளை- மினுமினுப்பு..! :)

திவ்யா @ தேன்மொழி said...
This comment has been removed by the author.
srimathi said...

Interesting story ........

srimathi said...

Interesting story ........

கோவை ஆவி said...

//தீர்க்கமாய் முடிவு எடுக்கும் குழப்பவாதி,//

அழகான சொல்லாடல்.. ஐ லைக் இட்,

tamilandth said...

இந்த பொன்னுகளே அப்படித்தான் இது கதையாக இருந்தலும் நானும் நிவேதா என்னும் பென்னை நேசித்தேன் கடைசியில் இதன் என் நிலைமை,அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்