சகித்தவர்கள்...

14 Sep 2012

சுந்தரபாண்டியன் அவர்களுக்கு...


சுந்தரபாண்டியன்- மினிமம் கேரண்டிக்கு தேவையான அத்தனை சமாச்சாரங்களும் படத்தில் இருக்கு... அழகாய் ஒரு கிராமம், மிக அழகாய் கதாநாயகி (கன்னத்தின் தழும்பிலேயே மனசு கெடந்து தளும்புது), வட்டார வழக்கில் ஒரு காமடி ட்ராக் (ஆனா மீண்டும் மதுரைதான்), உறுத்தாத இசை,இடைவேளைக்கு முன் ஒரு ட்விஸ்ட், பர பர திரைக்கதை...என அத்தனையும்... இரண்டரை மணி நேரம் மிக திருப்தியாய் போகும்... பொழுதுபோக்கை விரும்பும் பெரும்பாலானோருக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. ஏற்கனவே ஹிட்டடித்த காதல், நட்பு, துரோகம் இந்த சசிகுமார் கம்பெனி கலவைகள் இந்த முறையும்  நிச்சயம் நல்லா ஓடும்.. விகடனும் 43 அல்லது 44 போடும்... என்னுடைய வருத்தம் சசிகுமார் என்ற நடிப்பு தோல் போர்த்திய இயக்குனர் மீதுதான்.. தூரத்தில் சசிகுமார் சரமாரியாக வெட்டப்படும் கோரம் திரையின் ஒரு ஓரத்தில் out of focusஇல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கஞ்சா கருப்பு குற்ற உணர்ச்சியில் எச்சிலை தொண்டை பிதுங்க பிதுங்க விழுங்கி கொண்டு நடந்து வந்து பொத்தென ஒரு மூச்சுடன் உட்காரும் சுப்ரமணியபுரம் பட காட்சி அந்த பட கிளைமாக்ஸ் முடிந்தும் இருக்கையை விட்டு எழும்ப முடியாமல் மனதை பிசைந்தது... மனித மனங்களை வாசிக்கும் அது போன்ற படங்கள் எத்தனை ரத்தம் இருந்தாலும் கொண்டாடத்தான் படுகின்றன... 'இயக்குனர் சசிகுமார்' என்பது ஒரே படத்தில் அமைந்து போன ஒரு brand ... ரியல் ஸ்கிரிப்ட் எழுதும் வெகு சிலரில் ஒருவர்,. 

ஈசன் சறுக்கியதுதான்.. திரைக்கதை சீரோட்டத்தில் ஏதோ குளறுபடி, மிக சாதாரண கதை, நகரம் என்பதன் மீது அவருக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பை நிலைநிறுத்தும் கருத்துத்திணிப்புதான் அதில் அதிகம் தெரிந்தது... ஆனாலும் அதன் பின்னர் மீண்டும் சுப்ரமணியபுரம் பார்த்தால் இந்த மனிதரின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் குறையவே இல்லை... 

நடிப்பு இவருக்கு பொருந்துகிறதா? இயக்குனராய் இவர் மீது செட் ஆகிப்போன ஒரு மதிப்பே இவர் என்ன செய்தாலும் நம்மை சகித்து கொள்ளவைக்கிறதா? சரி நடனம் வரவல்லை,ரொம்ப பெரிய நடிகரெல்லாம் இல்லை.. தமிழ் சினிமா நடிப்பு என்ற வஸ்துவை எதிர்ப்பார்ப்பதும் இல்லை.. இவருக்கு இது மட்டும்தான் தெரியும் என்றால் ஏதோ ஆசைக்கு செய்துட்டு போகிறார் என்று வைத்து கொள்ளலாம்.. attention to details உள்ள வெகு சில நேர்த்தியான படைப்பாளியில் ஒருவர் எதற்கு அதை பணையம் வைத்து இதை செய்ய வேண்டும்?

இயக்குனர் சார், சுந்தரபாண்டியனில் நடிக்க ஆயிரம் பேர் இருக்காங்க.. ஆனா சுப்ரமணியபுரம் மாதிரி படைப்புகளுக்கு உங்களமாதிரி கொஞ்சம் பேர்தான் இருக்கீங்க.. அதன் making தான் உங்களின் அடையாளமே தவிர, நட்புக்கும் காதலுக்கும் குரல் கொடுப்பவராகவும், இரத்தம் சொட்ட சொட்ட துரோகத்தில் முடங்குபவராகவும் இருப்பது உங்களின் அடையாளம் அல்ல.. "நண்பன்" அல்லது "நட்பு" என்கிற வார்த்தைகளை வைத்து கோர்த்த வசனங்களை கேட்டாலே தியேட்டரில் கைத்தட்ட ஒரு பெருங்கூட்டம் உண்டுதான்.. ஆனால் அந்த வசனங்கள் பேச நீங்கள்தான் தேவை என்றில்லை.. உங்களின் முதல் படைப்பு ஒரு trend setter.. நீங்கள் அடுத்த நிலைக்கு பயணியுங்கள்.. உங்கள் பாணியில் பிறர் எடுக்கும் கதைகளுக்கு உங்களுக்குள் இருக்கும் படைப்பாளி ஊறுகாய் ஆகவேண்டாம்...

நன்றியுடன்...சி.மயிலன்


22 comments:

ஸ்கூல் பையன் said...

அருமையான விமர்சனம். இயக்குநருக்கு இன்னும் சுப்ரமணியபுரத்தின் தாக்கம் இன்னும் இருக்கிறதென்று தெரிகிறது. வாழ்த்துக்கள்...

r.v.saravanan said...

சுப்ரமணியபுரம் ஒரு அருமையான படம் எனக்கு கூட சசிகுமார் என்ற இயக்குனரை ரொம்ப பிடிக்கும்

விமர்சனத்திற்கு நன்றி
இந்த ஞாயிறு படம் பார்க்கிறேன்

சமீரா said...

ஹாய்!! ஹ்ம்ம்ம் கொஞ்சம் வித்யாசமான விமர்சனம் நல்லா இருக்கு... இது சுந்தரபாண்டியன் பற்றிய விமர்சனமா இல்லை சசிகுமார் பற்றிய விமர்சனமா?? எதுவா இருந்தாலும் விமர்சனம் நல்லா இருக்கு...
சசிகுமார் படத்துல எப்பவுமே வெட்டு காயம் ரத்தமா இருக்கும்.. படம் பிடிச்சாலும் அதுலா கொஞ்ச allergy - யா இருக்கும்....
//மிக அழகாய் கதாநாயகி (கன்னத்தின் தழும்பிலேயே மனசு கெடந்து தளும்புது), // - சசிகுமார் படம் பகிர்ந்துவிட்டு கதாநாயகிய நினைச்சி கற்பனைல மேதகறீங்க... பகிரமுடியாத அளவுக்கு அவ்வ்வ்ளோ அழகா????

வரலாற்று சுவடுகள் said...

ஒரு நல்ல படைப்பாளி திரைக்கு பின்னால் இருந்தும் புகழின் உச்சியில் இருக்கலாம் என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் "ஷங்கர்".. அது ஏன் சசிக்கு புரியவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி?

//கன்னத்தின் தழும்பிலேயே மனசு கெடந்து தளும்புது//

:) :) :)

ராஜி said...

சினிமாக்கும், எனக்கும் ரொம்ப தூரம்ம்ம்ம்ம்ம்ம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த படம் Trend மாறலாம் என்று நினைக்கிறேன்...

வீடு சுரேஸ்குமார் said...

சசிகுமாருக்கு எழுதிய கடிதம்....
என்ன மானே...!தேனே போடலை..!போட்டு படிச்சிட்டேன்!

மோகன் குமார் said...

நல்லா எழுதுறீங்க. எப்பவும் படைப்பாளியா இருப்பது கஷ்டம் நடிப்பது comparitively ஈசி

மகேந்திரன் said...

சுந்தரபாண்டியன் தங்கள் விமர்சனத்தில் மிளிர்கிறான்...
தட்டிக்கொடுப்பதுடன் விட்டுப்போனதை நினைவுபடுத்தவும்
நீங்கள் தவறவில்லை...
நன்று...

சீனு said...

ஒருவேளை சினிமா விமர்சனமோ என்று படிக்காமல் விடுவதாய் இருந்தேன்.. இருந்தும் வந்து பாப்போம் என்று கமெண்டுகளை பார்த்தேன்.. படத்தின் கதையை எழுதவில்லை என்பது புரிந்ததன் பின் தான் பதிவை படிக்க ஆரம்பித்தேன்....

இனி தான் படம் பார்க்க வேண்டும்... சசி குமார் பற்றி நண்பர்களுக்குள் இன்று பேசிய கருத்துகளை உங்கள் பதிவில் காண முடிந்தது...

//நீங்கள் அடுத்த நிலைக்கு பயணியுங்கள்.. உங்கள் பாணியில் பிறர் எடுக்கும் கதைகளுக்கு உங்களுக்குள் இருக்கும் படைப்பாளி ஊறுகாய் ஆகவேண்டாம்...// உண்மை

Prem Kumar.s said...

// தூரத்தில் சசிகுமார் சரமாரியாக வெட்டப்படும் கோரம் திரையின் ஒரு ஓரத்தில் out of focusஇல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கஞ்சா கருப்பு குற்ற உணர்ச்சியில் எச்சிலை தொண்டை பிதுங்க பிதுங்க விழுங்கி கொண்டு நடந்து வந்து பொத்தென ஒரு மூச்சுடன் உட்காரும் சுப்ரமணியபுரம் பட காட்சி அந்த பட கிளைமாக்ஸ் முடிந்தும் இருக்கையை விட்டு எழும்ப முடியாமல் மனதை பிசைந்தது..///

உண்மை தான் நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சி என்னையும் ஏதோ செய்தது ..

பால கணேஷ் said...

கன்னத் தழும்பில மனசு தளும்புதா...? உங்க வயசு அப்படி! சசிகுமார் என்ற கிரியேட்டருக்கு உங்களைப் போல நானும் விசிறிதான். நீங்கள் எழுதியிருக்கும கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன் தம்பி. நன்று.

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - சுந்தர பாண்டியன் - பட விமர்சனம் - அல்ல அல்ல - சசிகுமாரினைப் பற்றிய ஆய்வு - சரியான ச்நிதனை தான் - இருப்பினும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் திரையில் இயல்பான பாத்திரங்களுடன் தோன்ற வேண்டும் என நினைக்கிறார். அவ்வளவே ! படைப்பாளி - இயக்குனர் சுய ரூபம் காட்டி தொடருவார் என நினைக்கிறேன்.

படம் பார்த்தவர்களில் - கதா நாயகியின் கன்னத் தழும்பினால் பாதிக்கப்படாதவர்களே இல்லை,

நல்வாழ்த்துகள் மயிலன்
நட்புடன் சீனா

Raghavan Kalyanaraman said...

விஷயமுள்ள விமர்சனம்.

ரேகா ராகவன்.

Tamilraja k said...

attention to details உள்ள வெகு சில நேர்த்தியான படைப்பாளியில் ஒருவர் எதற்கு அதை பணையம் வைத்து இதை செய்ய வேண்டும்?

இந்த கவலை நிறையப் பேருக்கு இருக்கு. ஒரு தலை ராகம் பார்த்த அந்த காலத்து ரசிகர்கள் கூட விஜய டி.ஆரைப் பற்றி இதுப் போன்ற ஆதங்கத்தைப் பதிவு செய்துக் கொண்டு தானிருக்கின்றனர்.
என்ன செய்வது கலை என்பது நீரோடைப் போல நாம் கையில் எடுத்த நீரின் துளிகளை எத்தனை முயன்றாலும் மீண்டும் எடுக்க முடியாது.

சுப்ரமணியபுரம் அப்படி சில துளிகள் தான்.

ராஜ் said...

ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க...சுந்தரபாண்டியனுக்கு கண்டிப்பாய் சசி தேவை இல்லை தான்...

ஸ்ரீராம். said...

அப்படியா சொல்கிறீர்கள்?
இந்தப் படம் அவர் தனது சிஷ்யனுக்கு வேறெங்கும் வாய்ப்புகள் மறுக்கப் பட்ட நிலையில் செய்து கொடுத்த படம் என்று படித்த நினைவு. பாசத்தினால் சறுக்கியிருக்கலாம்! அந்தக் கதாநாயகி படத்தையும் ஒன்று போட்டிருக்கக் கூடாதோ...!

Karthik Somalinga said...

ஒருவேளை, அடுத்த படத்துக்கான கதையை (ரொம்ப ஸ்லோவாக) ரெடி பண்ணிக் கொண்டிருப்பாரோ?!

பால.சரவணன் said...

சரியாய் சொன்னீர்கள்

Anbazhagan Ramalingam said...

what a wonderul prediction. ? ananda vikatan put 44 marks

Anbazhagan Ramalingam said...

what a wonderful prediction! ananda vikatan gave 44 marks.

srimathi said...

சுப்ரமணியபுரம் , நாடோடிகள் இந்த திரைப்படங்களில் இவரின் நடிப்பு பிரமாதம் என்றே சொல்லலாம் ஆனால் சுந்தரபாண்டியன் படத்தில் இவர் இன்னும் நன்றாக நநடித்திருக்கலாம் மற்றும் நடோடியாகளின் கிளைமாக்ஸ் போலவே அமைந்ததால் படம் மனதில் ஒரு பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தவில்லை .........