சகித்தவர்கள்...

15 Apr 2014

நான் சிகப்பு... நார்கோலெப்சி... கடிதங்கள்.


அன்பின் மரு.,

என் நண்பன் ஒருவன் தன்னை மிக சீரிய சினிமா ரசிகன் என்று நினைத்துக்கொள்கிறான். நா.சி.ம. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் நார்கோலெப்சி என்ற பதத்தை தாங்கள் கமல்ஹாசனைப் போல மிக தெளிவாகவிவரித்த யுடியூப் காணொளியை பார்த்தவன் என்ற முறையில், நான் ஏதேனும் விவரிக்க முற்பட்டால், அவ்வாறான பார்வை இரசனைக்கு தேவையில்லை என்றும், லக்ஷ்மிமேனனது கீழிதழ் அம்முத்தக்காட்சியில் கவ்வப்பட்டதா? என்று அறிவதே நம் தேடலை விரிவாக்கும், எனவும் வாதிடுகிறான். அதுதான் இலக்கியத்தை நோக்கி நம்மை செலுத்தும் என்று தீர்க்கமாய் நம்புகிறான்.. நீங்கள் சொல்லுங்கள்.. இந்த படத்தை எப்படி உள்வாங்குதல் ஒரு ரசிகனுக்கு இலக்கிய தேடலில் கமா போடும்

அன்புடன்,
சிவகுமார்
ஓனர், மெட்ராஸ்பவன்.
உப-ஓனர், ஜில் மோர் நிலையம்.


அன்புள்ள சிவகுமார்,
முதலில் இப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது நார்கோலெப்சியே அல்ல என்று சொல்வேன். நார்கோலெப்சியின் நோய்குறியாக படத்தில் பகல் நேர உறக்கத்தை காட்டுகிறார்கள்.. நா.வில் காணப்படும் பகல் நேர உறக்கம் இரவில் நாம் உறங்கிய ஒன்றரை மணி நேரத்திற்கு பின், அடுத்த அரை மணி நேரத்திற்கு வரும் ஆழ்நிலை உறக்கம் போன்றது.. உக்கிரமான நித்திரை.. எளிதில் யாராலும் எழுப்ப முடியாத உறக்கநிலை..ஸ்தரமான கனவுகள் வரும் உறக்கநிலை. சமயங்களில் பகலுறக்கத்தில் இந்த நிலை முழுமையாய் கூட கிடைக்காது.. அந்த சொற்ப நிமிட உறக்கத்திற்கு பிறகு ஒரு தற்காலிக புத்துணர்ச்சி கிடைப்பது போல இருக்கும்.. மீண்டும் சிறிது நேரத்தில் தூக்கம் வரும்.. முக்கியமாக கவனிக்கவேண்டியது இந்த தூக்கத்தை வரவழைக்க டமார், டுமீல், அதிர்ச்சி எதுவும் தேவையில்லை.. சொல்லபோனால் இந்த உறக்கத்திற்கும் அதிர்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அதைவிட முக்கியமான ஒன்று சுற்றி என்ன நடக்கிறது என்று நோயாளிக்கு தெரிய சாத்தியமே இல்லை..

படத்தில் சொல்லியிருப்பது என்னவெனில் நா.வின் மற்றொரு நோய்குறியான கேட்டாப்லெக்ஸி’.. இலக்கியக்கூறுகளில் நாம் பேருணர்ச்சிகள் (emotions) என்று சொல்வோமே, அப்படியான கடுங்கோபம், பெருமகிழ்ச்சி, அதிர்ச்சி, புணருச்சநிலை போன்ற சமயங்களில் உடலின் தசைகள் தளர்ந்து செயலிழந்துவிடுதலே கேட்டாப்லெக்ஸி’.. கவனிக்கவும் இது உறக்கமில்லை.. இது பெரும்பாலும் உடலின் மிக சொற்ப தசைகளில் மட்டுமே காணப்படும்.. அரியநிலைகளில் கை,கால் தசைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் நோயாளி தொப்பென்று கீழே விழுவார்.. உறங்கியிருக்க மாட்டார்.. பார்வை தற்காலிகமாய் மங்கலாகலாம்.. சுற்றி நடப்பவை தெரியும்.. இதையும் பகல்நேர உறக்கத்தையும் போட்டு குழப்பி இயக்குனர் புது வியாதியை மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.. பெயர் இனிமேல்தான் வைக்கவேண்டும்.. இதற்கான, இப்படிப்பட்ட ஆய்வில் ரசனையில் நீங்கள் உங்களை செலுத்துவதே உண்மையான இலக்கியதேடல்..

லக்ஷ்மிமேனனுக்கு பதில் காஜல் அகர்வால் நடித்திருந்தால், நார்கோலெப்சியாவது நாகர்கோவிலாவது.. இலக்கியதேடலை அப்போது எங்கே தொடங்கவேண்டும் என்று பின்னொரு கடிதத்தில் விளக்குகிறேன்.. 

அன்புடன்,
அ.

##################################

ஹாய் பாஸ்,

படம் பாத்திருப்பீங்கன்னு நம்புறேன்.. தென்னிந்தியாவின் மிகமுக்கிய விமர்சகர் என்ற முறையில என்னோட வளர்ச்சிய எப்படி பாக்குறீங்க?
 


இப்படிக்கு,
விஷால்,
சீஃப் மெக்கானிக்,
விஷால் ஃபிலிம் ஃபாக்டரி.


அன்புள்ள விஷால்,

உங்களின் வளர்ச்சி சற்றே அதிகம்தான்.. ஆறடி நான்கு அங்குலம் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. மேலும் வளர்ந்து, உயரமான மரத்திலிருந்து கனிகளைப் பறிக்க வாழ்த்துகள்.. சூர்யாவெல்லாம் காம்ப்ளான் விளம்பரத்திற்கு வருகிறாராம்.. கொஞ்சம் என்னவென்று கவனியுங்கள்..

அன்புடன்,
அ.

##################################

அடேய் தம்பி,

படத்தோட பேர்ல சிவப்புங்கறத சிகப்புன்னு எழுதியிருக்கான் கவனிச்சியா?


அக்கறையுடன்,
தொல்காப்பியர்,
வெண்முரசு வாசகர் வட்டம்,
பரலோக கிளை.மேதகு தொல்காப்பியருக்கு,

தலைவரே, அவையிரண்டில் எது சரி என்று, ஏற்கனவே ஒருமுறை ஐயத்தின் உச்சத்திற்கே போயாகிவிட்டது.. இரண்டும் சரிதானாமே?
சிவப்பு சுடிதாரைக் கண்டபோதெல்லாம் சிவந்தேன் என்று என்னுடைய கவிதை தொகுப்பில் இடம்பெறும் வரி, ‘சிவப்புஎன்ற பிரயோகம்தான் சரி, என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.. இதைப் பற்றி தங்களின் தற்கால இன்கார்னேஷனாகிய ஜெயமோகனிடம் பேசவேண்டும்.

அடிபணியும்,
அ.

#########################

சீடா,

படத்தில் ஒரு ஜலமுயக்க நிலையிலான ஆன்மிக தேடலில் இறங்குகிறார்களாமே? தேறுமா?

ஆழத்தின் ஆழத்தில்,
நித்தி,
டெக்னிக்கல் ஹெட்,
spritual research institute.

வந்தனம் ஸ்வாமிஜி,

தமிழ் சினிமாவின் புணர்ச்சி விதிகளைத் துளியும் மீறாமல், மூக்கையும் மூக்கையும் உரசிக்கொண்டு, துப்பட்டாவை மட்டும் அகற்றிவிட்டு, கழுத்தை முகர்ந்து பார்த்து, விரல்களை இருக்கமாய் கோர்த்துக்கொள்ள ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... பொடனியில் கேமரா வைக்காதது மட்டும் விதிமுறை மீறல். ஒன்றுமே நடக்காத இந்த சீக்வென்ஸை முழுதாக நான்கு நிமிடத்திற்கு படுதிராபையான பின்னணி இசையுடன் ஸ்லோமோஷனில் காட்டி, உவ்வேக் ஆக்கியிருக்கிறார்கள்.. ஆயிரம் சொல்லுங்க, உங்களுக்கு போட்ட ஆர்.ஆர். மாதிரி வருமா? நகிரதனா தினனனா..

பரவச நினைவுகளுடன்,
அ.

################################

அருமையான அலசல்.. நன்றி..


தனபாலன்,
பின்னூட்ட பீரங்கி,
திண்டுக்கல் முகாம்.

ஐயோ சார், இன்னும் பதிவே முடியல...

நடுக்கத்துடன்,


############################## 

ஹே,

என்னப்பத்தி எதுவுமே சொல்லாம முடிச்சுறாதீங்க.. லாஸ்ட் டைம் சூனா.பானா விமர்சனுத்துல நீங்க என்னோட சீக்ல இருக்க ஸ்கார் பத்தி எழுதுனாலதான் நான் இன்னிக்கு இவ்ளோ பீக்ல இருக்கேன்..


வித் லவ்,
லக்ஷ்மி மேனன்..
சேலஞ்ச் டுடோரியல் சென்ட்டர்,
கும்பகோணம்..


லவ்வுள்ள லக்ஷ்மி,

அடுத்த முறையில் இருந்து கடிதவிளித்தலில் ச்சேட்டாஎன்று அழைத்தால் தன்யனாவேன்.. கும்கி'யில் வரும் காட்டிற்கு நீ ஓகே.. ஆனால் காட்டுவதற்கு நாட் ஓகே.. காட்டன் சேலை, தாவணி என்று கொஞ்ச நாள் ஒப்பேற்றினால் தேவயாணிக்கு வந்தது போல சின்னத்திரையில் சிக்குகோலங்கள்என்று மெகாவாய்ப்புகள் வரும்.. அப்படியே கொத்திக்கொண்டு செட்டில் ஆகிவிடலாம்.. அதைவிடுத்து சோனியா அகர்வால் மற்றும் சிம்ரனிடம் மட்டும் காப்புரிமை இருக்கும் துப்பட்டாவை தாடைக்கு கீழே அணியும் பாணியெல்லாம் அருள் கூர்ந்து அவாய்ட் செய்யவும்.. முடில்ல...

அன்புடன்,
அ.

####################################

வணக்கம் பாஸ்,

சுத்திவளச்சு பேசாம மேட்டருக்கு வாங்க.. படம் உங்களுக்கு புடிச்சிருந்துதா? இல்லையா? அடுத்த படம் ஆரம்பிக்கணும்.. செம்ம லைன்.. சோம்னாம்புலிசம்ன்னு தூக்கத்துல நடக்குற வியாதி விஷாலுக்கு...


வெற்றி களிப்பில்,
இயக்குனர் திரு,
c/o கிண்டி மெடிக்கல் லைப்ரரி.


திரு. திரு,

உங்களின் முந்தைய இரண்டு படங்களைப் பார்த்து உங்களின் பெயரை யாரும் நினைவில் வைத்திருந்தால், நிச்சயம் இந்த படத்திற்கு மழைக்காக கூட ஒதுங்க மாட்டார்கள்.. நல்லவேளை பெரும்பாலும் யாருக்கும் நினைவில்லை.. முதல் கடிதத்தில் சொல்லியிருப்பது போல நா.விற்கு நீங்கள் நியாயம் செய்யவில்லை எனினும் உங்களை அதற்காக குறை கூற விரும்பவில்லை.. குறிப்பிட்ட வியாதியை பற்றியான காட்சிகள், மருத்துவ கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் இவற்றில் துறை சார்ந்தவர்களுக்கு துளியும் இசையமுடியாதபடிதான் நீங்கள் இயக்கியுள்ளீர்கள்.. எனினும், அந்நியன், சந்திரமுகி, ஏழாம் அறிவு, 3 போல துறைசாரா பொதுமக்களும் எள்ளும் வகையில் நீங்கள் அபத்தமாக காட்சி படுத்தாமல் இருப்பது கைக்குலுக்களுக்குரியது.. மாற்றான் படத்தில் சூர்யா மிகுசிரத்தையோடு சயமீஸ் ட்வின்ஸாக காட்டப்பட்டதற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது போன்ற கேள்வியும் உங்கள் படத்தில் இல்லை.. அந்த குறிப்பிட்ட நோயுடன்தான் கதையை பிணைந்துள்ளீர். திருப்பங்கள், ஆச்சர்யங்கள், வேகமான திரைக்கதை என ஒருமுறை ரசித்துப்பார்க்கக்கூடிய திரைப்படம்.. வாழ்த்துகள். இதை நீங்கள் உங்களின் முதல் படம் என்றே சொல்லிக்கொள்ளலாம்.. 

ஆனாலும் வருத்தங்கள் இல்லாமல் இல்லை.. இப்படியான ஒரு அருமையான கருவை கையில் எடுத்த நீங்கள், முதல் பாதியின் கவித்துவத்தை கடைசி வரை கொண்டு சென்றிருக்கலாம்.. ஆக்ஷன் தேவையே இல்லை.. அதுதான் தண்ணீர் பட்டால் விழிப்பான் போன்ற லஜ்ஜையான சிந்தனைகளை உங்களை செய்யவைத்துள்ளது.. உறவுமுறை சிக்கல், சமூக ரீதியிலான பின்னடைவு, காதலின் மேன்மை என மகேந்திரன், வசந்தபாலன் பாணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய களம்.. இரண்டாம் பாதியில் படம் நன்றாகவே இருந்தாலும் எதையோ மிஸ் செய்து விட்டீர்கள் என்ற குறை.. விஷாலின் முதல் ஒன்பது ஆசைகளில் மட்டும் முழு படமும் பயணித்து இருந்தால் படம் ஒரு யுகம் கடக்கும் கவிதையாகியிருக்கும்.. அவரின் பத்தாவது ஆசையான தட்டி கேக்கணும்என்பதால்தான், ‘ரெயின்மேன்’, ‘தி பியூட்டிஃபுல் மைன்ட்போல மருத்துவம் சார்ந்த உளவியல் பற்றி பேசும் படங்களை, தமிழில் பார்க்கவேண்டும் என்ற என் ஆசை இன்னும் அடிக்கப்படாமலே கிடக்கிறது..

ஏக்கங்களுடன்,
அ.


###################################### 

ஹலோ மிஸ்டர்,

வழக்கம்போல இந்த படத்தையும் நாங்க பாக்கல.. பட், ப்ரொமோட் பண்லாமா வேணாமான்னு கன்ஃபியுஷனா இருக்கு.. என்ன செய்லாம்?


பரபரப்புடன்,
கோபிநாத்,
திரைப்படங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கடவுளின் பிராஞ்ச் ஆஃபிஸ் 
(விஜய் டிவி என்றும் சொல்லலாம்)


கோட்டாளர் அவர்களே,

சிவகார்த்திகேயன் எனும் ரஸ்ஸல் க்ரோவையும், அட்லி எனும் ஸ்பீல்பர்கையும் உலகறிய செய்த, ராஜாராணி எனும் காவியத்தை மணிக்குமணி கொண்டாடிய, ஏ.ஆர்.முருகதாஸின் ஒன்றுவிட்ட பெரியப்பா பேரன் நடிக்க வந்தால்க்கூட உங்களின் ஃபாக்ஸ் குழுமத்தின் பேரில் அந்த படத்தையும் 76921 முறை ஒளிபரப்பி அவரையும் சூப்பர்ஹீரோவாக்கும் உன்னதமான உங்களின் கலைப்பணி தொடரவேண்டும்... தடையற தாக்க, மௌனகுரு போன்ற படங்கள் வந்ததே உங்களுக்கு தெரியாதே. அந்த லிஸ்டில் இதையும் சேர்த்துவிடாமல், சீக்கிரம் காப்பீவித்து டிடியில் விஷாலை வைத்து லக்ஷ்மி மேனன் இடுப்பை (இருந்தால்) கிள்ள சொல்லுங்கள்.. ஐ யாம் வெயிட்டிங்கு...

மெய்சிலிர்ப்பில்,
அ.

####################################

தொடர்புடைய இடுகைகள்:
ஒரு எழவும் இல்ல...20 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

அடா! அடா! என்ன ஒரு விமர்சனம்! அசத்திட்டிங்க! வாழ்த்துக்கள்!

Prabu Krishna said...

இனியா,
நடிகை(வாகை சூட வா படத்தில் மட்டும்,
கேரளா.

என்னை பற்றி தாங்கள் ஒன்றும் சொல்லவில்லையே :-)

அன்புடன்,

RAJATRICKS - RAJA said...

ரொம்ப நாள் கழித்து எழுதினாலும் செம நக்கல் , செம நையாண்டி ... அடிகடி எழுதுங்கள் ....

கோவை ஆவி said...

நாரத்தங்கா+ கோலா+ பெப்சி = நார்கோலெப்சி... ;-)

சுவாமி நித்தியானந்தருக்கு நீங்க அளித்த பதில் திவ்யமாக இருந்தது பிரபோ!!

சீனு said...

ha ha ha :-)

ஜே கே said...

நாங்கல்லாம் கடல், விசுவரூபத்துடன் அலெர்ட் ஆன ஆக்கள் பாஸ். டிவிடி கூட பாக்கறது இல்ல. திண்டுகல் அண்ணே கொமெண்ட்தான் நம்மளது. நான் சிகப்பு மனிதன் ஒரிஜினல் படமே மொக்க தான். ரஜனியின் இளமை, பெண் மானே பாட்டு நடை பார்க்கவைத்தது. விஷால். ஆள விடுங்க. ஆனா வாரிய பாணி அழகு.

அனுஷ்யா said...

தளிர் ’ சுரேஷ்
RAJATRICKS - RAJA
கோவை ஆவி
சீனு

நன்றி :)

அனுஷ்யா said...

@prabhu krishna

இனிப்பான இனியாவிற்கு,

தங்கர் படத்தில் நடித்த பாதிப்போ என்னவோ சற்றே தொம்மலாக இருக்கிறீர்கள்.. 'திறமை' காட்ட ஸ்கோப் இருந்தும் தவறிட்டீங்கள்.. ஒன்றும் சொல்வதற்கில்லை

ஏமாற்றத்துடன்,

அனுஷ்யா said...

@ஜே கே

நாமளும் கொறச்சாசு தலைவரே.. ரெண்டு மாசத்துக்கு ஒரு படம் ங்கற ரேஞ்சுல போயிக்கிட்டு இருக்கு..

வெளங்காதவன்™ said...

ங்கொய்யால!!

ஜூப்பரு...

! சிவகுமார் ! said...

இவர்தான் தொல்காப்பியரா? இப்பத்தான் பாக்கறேன். அடுத்து நித்தியின் ஆன்மீக ஆராய்ச்சி குறித்து ரகசிய ஆலோசனை நடத்தப்படும். அழைப்பிதழ் விரைவில்!!

அனுஷ்யா said...

வெளங்காதவன்™

எல்லாம் தங்களிடம் பெற்ற யானைப்பால் மன்னா...

அனுஷ்யா said...

! சிவகுமார் !

வாஞ்சையோடு
வாயில் ஜலம் ஊற காத்திருக்கேன்....

அரசன் சே said...

நித்தி சூப்பரப்பு...
அப்புறம் வெண் முரசு பரலோகக் கிளை அட்டகாசம் அண்ணாச்சி

அரசன் சே said...

அடா! அடா! என்ன ஒரு விமர்சனம்! அசத்திட்டிங்க! வாழ்த்துக்கள்//

இதுக்கு ஒரு பதிவு எழுதணும்னு என் உள்மனசு துடிக்குது அண்ணாச்சி , நீங்க என்ன சொல்றீங்க ...

அனுஷ்யா said...

நன்றி அண்ணாச்சி..

உங்களுக்கு தோன்றத ஒடனே செஞ்சுபோடுங்க.. அடக்கி வைக்காதீங்க..

ஜீவன் சுப்பு said...

வித்தியாசமான படம்ன்னு சொல்வாங்கோ ... இத்து வித்தியாசமான விமர்சனம் போல ...!

//தமிழை ஆங்கிலத்தில் பதிவு செய்து இரண்டு மொழிகளையும் அசிங்கப்படுத்த வேண்டாம்..//

என்னாஜி மறந்துடீங்களா ?

அனுஷ்யா said...

உங்க கேள்விக்கான பதில் இரண்டாம் உலக விமர்சனத்துலேயே இருக்கே ஜி..

NHTG said...

ada poppaa....ellaa padathayum kazhuvi kazhuvi oothunaa epdi???? vikatan eh vida neenga mosam!!!! BTW தமிழை ஆங்கிலத்தில் பதிவு செய்து இரண்டு மொழிகளையும் அசிங்கப்படுத்த வேண்டாம்... - idhai kandum kaanaamalum ;)

அனுஷ்யா said...

கழுவவே இல்லையே... :)

உங்கக்கிட்ட எதையும் எதிர்பார்க்க முடியாதுங்கறதுதான் தெரியுமே...