சகித்தவர்கள்...

2 May 2014

பிரக்ஞை

சாலைமுனை
டீ கடைக்காரனின்
பல்லிளிப்பு
பக்கவாட்டு பார்வையில்
முறைக்கப்படுகிறது.
பல்ஸர்க்காரனின்
குறளிவித்தை
சமிக்ஞையின்றி
நிராகரிக்கப்படுகிறது.
மின்சார இரயிலில்
அக்கறையுடன்
மகளிர் பெட்டி
தேர்வுசெய்யப்படுகிறது.
ஷேர்-ஆட்டோக்கள்
புறக்கணிக்கப்படுகின்றன.
மிச்சம் சில்லறை
வாங்கும் வேளை
மிகக் கவனமாக
நடத்துனரின் விரல்கள்
தவிர்க்கப்படுகின்றன.
அலுவலகம் அடைந்ததும்
ஓய்வறை கண்ணாடியில்
துப்பட்டாவை மேலேற்றியும்
சுடிதாரை சற்றே கீழிழுத்தும்
அந்த ஓரங்குல மார்பிளவு
மீண்டும்
உறுதி செய்யப்படுகிறது
.