சகித்தவர்கள்...

2 May 2014

பிரக்ஞை

சாலைமுனை
டீ கடைக்காரனின்
பல்லிளிப்பு
பக்கவாட்டு பார்வையில்
முறைக்கப்படுகிறது.
பல்ஸர்க்காரனின்
குறளிவித்தை
சமிக்ஞையின்றி
நிராகரிக்கப்படுகிறது.
மின்சார இரயிலில்
அக்கறையுடன்
மகளிர் பெட்டி
தேர்வுசெய்யப்படுகிறது.
ஷேர்-ஆட்டோக்கள்
புறக்கணிக்கப்படுகின்றன.
மிச்சம் சில்லறை
வாங்கும் வேளை
மிகக் கவனமாக
நடத்துனரின் விரல்கள்
தவிர்க்கப்படுகின்றன.
அலுவலகம் அடைந்ததும்
ஓய்வறை கண்ணாடியில்
துப்பட்டாவை மேலேற்றியும்
சுடிதாரை சற்றே கீழிழுத்தும்
அந்த ஓரங்குல மார்பிளவு
மீண்டும்
உறுதி செய்யப்படுகிறது
.

15 comments:

கோகுல் said...

survival of the fittest?

ஜே கே said...

பணத்தை வீண் விரயம் பண்ணக்கூடாது என்ற அக்கறை?

அனுஷ்யா said...

@கோகுல்

Precisely the point.... :)

அனுஷ்யா said...

@ஜேகே

ஆடையை
சொல்லல தல.. அணுகுமுறைய சொல்றேன்... :)

அரசன் சே said...

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பதம் இங்கு மிக சரியாக பொருந்தும் அண்ணாச்சி ...

நடனத்துக்கு முந்தி போர்த்தியிருக்கும் நடிகை ஷாட் ரெடின்னு சொன்னதும் ஆடை கலைந்து ஆடிவிட்டு பின் போர்த்திக் கொண்டு புனிதம் காப்பது போல் தான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது... (நடன உடைக்கு மேல் போர்த்தியிருக்கும் ஆடையை கலைவதை சொன்னேன், இல்லைன்னா நம்ம ஆட்கள் கொடி புடிச்சாலும் புடிப்பாங்க அண்ணாச்சி )

ஜே கே said...

அதைத்தான் சொன்னேன். பணம்(அழகு) .. அதை எங்கே எப்படி செலவழிக்கவேண்டும் என்ற பிரக்ஞை இருக்கவேணும் அல்லவா?

அனுஷ்யா said...

@அரசன்

யார் என்ன ஜி சொல்லபோறாங்க?

அனுஷ்யா said...

@ஜேகே

சரெண்டர்
:)

திவ்யா said...

அவிழ்ந்து விழும் நிலையில் இருக்கும் JEANS-ஐ ஏற்றிவிட்டு
பின்
சரியாய் உள்ளாடையின்
விளிம்பு மாத்திரம் தெரியுமளவிற்கு
அதை இறக்கி
பதமாய் அமர வைக்க
இந்த பசங்க படும் பாட்டை விடவா ??!!

அனுஷ்யா said...

கடைசி வரிக்கு மட்டுமான பதிலை எழுதியிருக்கிறீர்கள்.. ஆடை குறைப்பு என்ற பொருளில் நான் இதனை சொல்லவில்லை.. :)

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி

ஜீவன் சுப்பு said...

திவ்யா கமெண்டை எதிர்பார்த்தேன் .

//ஆடை குறைப்பு என்ற பொருளில் நான் இதனை சொல்லவில்லை.. :)//

தயை கூர்ந்து எம்மை போன்ற பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு கவிதைக்கு கீழேயும் சுருக்கமாகவேணும் பொருளுரை எழுதவும் .

ராஜி said...

வேலையை காப்பாற்றிக்கொள்ள இப்படியா!?

அனுஷ்யா said...

@ஜீவன் சுப்பு

திரும்ப திரும்ப பேசற நீ.. :)

அனுஷ்யா said...

@ராஜி அக்கா


:)